Tuesday, 31 December 2013

இனிய 
புத்தாண்டு மலர்க..


உரமோடு உழைத்திடுவோம் 
 உரிமைகளை வென்றிடுவோம்..

சோராமல் நிமிர்ந்திடுவோம்..
நூறாண்டு நிலைத்திருப்போம்..

அனைவருக்கும் 
இனிய 
ஆங்கிலப்புத்தாண்டு 
நல்  வாழ்த்துக்கள் 
 ஜனவரி 2014  IDA உயர்வு 

01/01/2014 முதல்  IDA 

5 சதம்  உயர்ந்துள்ளது.

இத்துடன் மொத்த IDA  90.5 சதம் ஆகும்.

நூற்றுக்கு இன்னும்  9.5 சதமே பாக்கி.

Monday, 30 December 2013


அன்பைப்  பொழிந்த பூபதிக்கு 
அம்பை இராமனின் வாழ்த்து மடல் 

வாழிய பூபதி..


கொள்கை அணைத்தொரு கொடியைப்பிடித்தவன் 
சாதியை மறுத்தொரு  சந்திர ஒளியை தனக்கென ஆக்கியவன்..

பூவின் மணத்தொரு நேசம் நிறைந்த பாசத்தலைவனவன்..
சத்திய வேதம் சமத்துவ நிலையை 
நித்தமும் வேள்வி செய்கிற வீரனவன்..

கற்பது கற்றபின் அதன் வழி நிற்கின்ற ஞானியவன் 
என்போல் ஏழைமை மிக்கோர் ஏதிலர் மீது 
தோழமை செய்தே துன்பம் துடைக்கிறவன்..

இராமனின் தம்பியர் குகனோடு ஐவராம்..
காரை இரா.பூபதி இளவல்கள் எத்தனையோ 

வேறு நிறத்தோடு வேகம் நிறைத்தொரு 
மாந்தனைக்கண்டுவிட்டால் 
வாரி அணைத்தவன் ஞானம் அறிந்திடுவான்..
பொதுமை புகுத்திடுவான்..

ஏட்டினில் அடங்கா   அவனது நன்னெறி..
வீட்டினில் முடங்கா அவனது செயல்வழி..

நடமாடும் அறிவுக்களஞ்சியமவன் 
சிந்துவின் தந்தையவன்..
பிரகாசனைப்பெற்ற எந்தையவன்..
ஜீவா வழியில் இலக்கியப்பயணத்தில் 
என் போல் எண்ணிலரை சேர்த்தவன்..

பெரியாரை மதித்தவன்..
பாரதியை வரித்தவன்.. 

அகவைகள் அறுபது  இன்று     இவனுக்கு..
அகவைகள் ஆயிரம் இன்னும் இவனுக்கு..

பொதுமை வேல் எடுத்து படை திரட்டிட்ட 
பூபதியின் பால் வாழ்கின்ற நானும் பாட்டிசைத்தேன்..
பூபதி போல் வாழ்ந்திட மனமிசைந்தேன்..

இவன் தமிழ் முழக்கம் எங்கணும் எழுக..
வாழிய பூபதி..
வாழிய நெடுந்தமிழ்..

வாழ்த்துக்களுடன்..
இரா. கணபதிராமன் 
காரைக்குடி NFTE முன்னாள் மாவட்டச்செயலர்
அம்பாசமுத்திரம்.
வாழ்க.. நலமுடன்.. 

ஜனசக்தியில்
பணியாற்றிய பெருமையுடைய 
விருதுநகர் முன்னாள் மாவட்டத்தலைவரும் 
அருமைத்தோழருமான

T.ஜெபக்குமார் 
அவர்கள் 
இன்று 31/12/2013 
பணி நிறைவு பெறுகின்றார்.
நமது அன்பான வாழ்த்துக்கள்.
வாழ்க.. வளமுடன்..

இன்று 31/12/2013 
காரைக்குடி மாவட்டத்தில் 
 பணி நிறைவு பெறும்
 அன்புத்தோழர்கள் 

இரா. பூபதி SDE 

தேவகோட்டை. தெ.நாகசுந்தரம் TM
தேவகோட்டை. கூ. கந்தசாமி, STS 
ஒக்கூர் ப. பாஸ்கரன், TM

ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க 
வாழ்த்துகின்றோம்.
வாழ்க.. பல்லாண்டு..

இன்று 31/12/2013 
பணி நிறைவு பெறும் 

BSNLEU பொதுச்செயலர் 
அருமைத்தோழர். 
P. அபிமன்யு 

அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்கிட 
எல்லைகள் விரிந்திட 
உளமார  வாழ்த்துகின்றோம்.
அஞ்சலி 

மண்ணுக்கேத்த விவசாயம் 
மரபு சார்ந்த விவசாயம் 
என்பதை தம் வாழ்நாள் முழுக்க 
வலியுறுத்திய 
இயற்கை விஞ்ஞானி 

ஐயா. நம்மாழ்வார் 

அவர்களின் மறைவிற்கு 
நமது இதய அஞ்சலி.

Sunday, 29 December 2013

செய்திகள் 

தந்தி மூன்றாம் பிரிவின் மாநிலச்செயலராகப்பணி புரிந்த தோழர்.TS.இராஜன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார். நமது அஞ்சலியை உரித்தாக்குகின்றோம். அவரது உடல் மும்பையில் உள்ள MGM மருத்துவமனைக்கு மாணவர்களின் படிப்பு ஆராய்ச்சிக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இறந்தும் பயன் தரும் தோழர்.இராஜன் புகழ் வாழ்க..

SR. TOA தகுதித்தேர்வு 30/03/2014ல் நடைபெற உள்ளது. 
01/07/2013 அன்று 4 ஆண்டுகள் பணி முடித்த TOA தோழர்கள் பங்கு கொள்ளலாம். +2 கல்வித்தகுதி உள்ளவர்கள் நேரடியாக  
WALK IN GROUPல் நியமனம் பெறுவார்கள். 
+2 கல்வித்தகுதி இல்லாத தோழர்கள் தேர்வு எழுத வேண்டும். 
விண்ணப்பிக்க கடைசி நாள்: 20/01/2014.

தமிழக JCM குழுக்கூட்டம் 28/12/2013 அன்று JCM தலைவர் தோழர்.பட்டாபி செயலர். தோழர்.செல்லப்பா ஆகியோரின் பங்களிப்பில் மிகச்சிறப்பாக நடைபெற்றுள்ளது. ஊழியர் பிரச்சினை தீர்வில் இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுக்கிடையே இணக்கமும் ஒன்று பட்ட சிந்தனையும் தேவை என்பதை அகில இந்திய JCM கூட்டமும் தமிழக கூட்டமும் நமக்கு எடுத்துரைத்துள்ளன.

2006க்கு முன் ஓய்வு பெற்ற தோழர்களின் ஓய்வூதிய திருத்தம் 15/01/2014க்குள் முடிக்கப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைப் பணித்துள்ளது. 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமான கோப்பு செலவின இலாக்காவிற்கு 
DEPARTMENT OF EXPENDITUREக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Friday, 27 December 2013


அகில இந்திய BSNL 
ஓய்வூதியர் நலச்சங்கம் 
காரைக்குடி மாவட்டம்.

மாவட்ட  மாநாடு 
28/12/2013 - சனிக்கிழமை - காலை 10 மணி 
SV மகால் - சிவகங்கை 

சிறப்புரை : தோழர்கள் 
S. அருணாச்சலம் 
K. முத்தியாலு 
D.கோபாலகிருஷ்ணன் 
V . இராமாராவ் 
மற்றும் தோழமை தொழிற்சங்கத்தலைவர்கள்

தோழர்களே.. வருக..

K. சண்முகநாதன்                                                                   P.முருகன் 
மாவட்டத்தலைவர்                                                     மாவட்டச்செயலர் 
மணிவிளக்கு 
இருள் போக்கிடும் ஒளிவிளக்கு 
வழி காட்டிடும் கைவிளக்கு
தமிழ் பேசிடும் மொழி விளக்கு 
ஊழியிலும் அணையா விளக்கு 
அடக்கம் நிறைந்த அகல் விளக்கு 
ஐம்பதாண்டு மணிவிளக்கு 

காகிதத்தில் ஓர் காவியம்..
NFTEன் ஆயுதம்...
ஒலிக்கதிரின் பெருமை போற்றுவோம்..

கடலூரில்.. ஜனவரி 6ல் கூடுவோம்..

Thursday, 26 December 2013

MTNL ஓய்வூதியம் 

ஏறத்தாழ 43000 MTNL ஊழியர்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான BSNLக்கு இணையான ஓய்வூதியம் என்பது தற்போது மத்திய அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 

BSNL போலவே DOT மற்றும் MTNLலில் பணிபுரிந்த மொத்த சேவைக்காலத்திற்கும் COMBINED SERVICE 
ஓய்வூதியம் வழங்கப்படும். 

ஓய்வூதியப்பங்களிப்பு PENSION CONTRIBUTION என்பது 31/12/2005 வரை IDA சம்பளத்தின் அதிகபட்சத்திலும் 01/01/2006க்குபின் ACTUAL PAY உழியர்கள் வாங்கிய சம்பளத்தின் அடிப்படையிலும் கணக்கீடு செய்யப்படும்.

இதற்காக ஓய்வூதிய விதி RULE 37Aல் 3 மாதங்களுக்குள் 
திருத்தம் கொண்டு வரப்படும். 

இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 500 கோடி செலவாகும். 

இந்த ஓய்வூதியப்பலனை பெற MTNL ஊழியர்கள் தங்களது சம்பளத்தைக் குறைத்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL உருவாக்கத்தின் போது தோழர். குப்தா, ஓய்வூதியத்தை மட்டும் வாங்கி விட்டு MTNL போல உயர் சம்பளம் வாங்கத்தவறி விட்டார் என்ற குற்றச்சாட்டு பலமாக ஒலித்தது. ஆனால் உயர் சம்பளம் வேண்டாம் ஓய்வூதியமே போதும் என MTNL ஊழியர்கள் சரியான நிலை எடுத்து தங்களது கோரிக்கையை வென்றுள்ளனர். 

MTNL ஊழியர்களுக்கு நமது வாழ்த்துக்கள். 

எங்கும், எப்போதும்,எதிலும் தீர்க்கமாக 
முடிவெடுத்த தோழர்.குப்தாவிற்கு 
நமது வணக்கங்கள். 

Tuesday, 24 December 2013

இனிய 
கிறிஸ்துமஸ் 
நல் வாழ்த்துக்கள் 
ஏசு பிறந்தார்..
எங்கும் அமைதி பிறந்தது..
ஏசு பிறந்தார்..
எங்கும் சமத்துவம் பிறந்தது..

அனைவருக்கும் 
இனிய 
கிறிஸ்துமஸ் 
நல் வாழ்த்துக்கள் 

Monday, 23 December 2013


NATIONAL  JCM
 தேசியக்குழு கூட்ட முடிவுகள் 

புதிய அங்கீகார விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்ட பின் 
முதன்முறையாக NFTE -BSNLEU இணைந்த JCM தேசியக்குழு கூட்டம் 23/12/2013 அன்று சிறப்புடன் நடைபெற்றது.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

 • ஊழியர்களின் தேக்கநிலை நீக்கம் STAGNATION பற்றி விரிவான விவாதம் நடத்தப்பட்டாலும் முடிவுகள் எட்டப்படவில்லை. நான்கு  கட்டப்பதவி உயர்வின் போது 3 சத ஆண்டு உயர்வுத்தொகை அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சினை மேலும் விவாதிக்கப்படும்.
 • போனஸ் வழங்குவது பற்றி அதற்கான குழு ஆராய்ந்து வருகின்றது. 
 • ஓய்வூதியர்களுக்கான 78.2 சத இணைப்பு மற்றும் நிலுவை சாதகமாக முடிக்கப்படும்.
 • 78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் அனைத்துப்படிகளும் வழங்குவதும், LTC, மருத்துவப்படிகள் வழங்குவதும் BSNL நிறுவனத்தின் நிதி நிலை மேம்பாட்டிற்குப் பிறகு பரிசீலிக்கப்படும்.
 • 4 கட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள் அதற்கென அமைக்கப்பட்டுள்ள குழு முடிவின்படி சரி செய்யப்படும்.
 • BSNLலில் நேரடி நியமனம் பெற்ற தோழர்களின் ஓய்வூதியப்பிரச்சினை விவாதம் செய்யபட்டது. நிர்வாகத்தின் 2 சத பங்களிப்பு என்பது நம்மால் ஏற்கப்படவில்லை. பிரச்சினை மேலும் விவாதிக்கப்படும்.
 • பதவிகள் இல்லாததால் TM பதவி உயர்வு பெற இயலாத தோழர்களின் பிரச்சினை பற்றி கூடுதல் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன.
 • சிறிய மாவட்டங்களில் JCM அவசியமில்லை என்ற நிர்வாகத்தின் கருத்து ஊழியர் தரப்பால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் ஒரேயொரு சங்கம் உள்ள இடங்களில் அந்த சங்க உறுப்பினர்கள் மட்டும் கொண்ட JCM நடத்த முடிவெடுக்கபட்டுள்ளது.
 • கருணை அடிப்படையில் வேலை என்பதற்குப்பதிலாக நட்ட ஈடு வழங்கும் முறை என்பதை ஊழியர் தரப்பு நிராகரித்து விட்டது. தற்போதுள்ள முறையை செழுமைப்படுத்த வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
 • ஒழுக்க விதிகளைக் கடைப்பிடிப்பது, பணிக்கலாச்சாரத்தை  மேம்படுத்துவது என்பது நடைமுறைப்படுத்தப்படும்.
டிசம்பர் 24
தந்தை பெரியார் 
மக்கள் திலகம் MGR 
நினைவு நாள் 

குருடர்கள் விழித்திட.. 
கூனர்கள் நிமிர்ந்திட ..
எளியோரை வலியோராக்கிட ..
சிறியோரைப் பெரியோராக்கிட ..
தம் வாழ்நாள் செலவிட்ட ..
தந்தைப்பெரியார் 
மக்கள்திலகம் MGR 
நினைவைப்  போற்றுவோம்..

Sunday, 22 December 2013

டிசம்பர் - 23
தோழர்.வெங்கடேசன் 
முதலாமாண்டு 
நினைவஞ்சலி தினம் 

தாயாய் தந்தையாய் 
தோழனாய் தலைவனாய் 
நண்பனாய் நற்குருவாய் 
எங்களை வழிநடத்தி 
அற்பங்களை சிற்பங்களாக்கிய 
அற்புதத்தலைவர் ..
இயக்கத்தை 
வளமாக்கிய  வலுவாக்கிய 
அன்புத்தோழர்.
அய்யரின் நினைவில் 
கண்களை குளமாக்குகின்றோம்.

நினைவஞ்சலி 
சிறப்புக்கூட்டம் 

23/12/2013 - திங்கள் - மாலை 5 மணி 
NFTE சங்க அலுவலகம் 
காரைக்குடி.
நினைவஞ்சலி உரை 
தோழர். பழ. இராமச்சந்திரன் 
தலைவர் - AITUC 
மற்றும் தோழர்கள்.

காரைக்குடி மாவட்டச்சங்கம்.

Friday, 20 December 2013

காரைக்குடி 
தோழர். இரா. பூபதி  
SDE அவர்களின்   
பணி நிறைவு விழா  
மற்றும் மணி விழா 
22/12/2013 - ஞாயிறு
காலை 10 மணி
அமராவதி மகால் - காரைக்குடி 

தலைவர்கள் மற்றும்
தோழர்கள் பங்கேற்பு 

தோழர்களே .. வாரீர்..

Thursday, 19 December 2013

தமிழ் மாநில 
சேமநலநிதிக்கூட்ட முடிவுகள்

தோழர்களே...
நமது தமிழ் மாநில சேமநலநிதிக் கூட்டம் 29/11/2013 அன்று சென்னையில் புதிய மாநில அலுவலகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. நமது சங்கத்தின் சார்பில் கடலூர் மாவட்டச்செயலர் தோழர். ஸ்ரீதர் கலந்து கொண்டார். 

கூட்ட  முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

 • ஓய்வு பெறும் தோழர்களுக்கு வழங்கப்படும் பரிசுக்காசோலை ரூ.1200ல் இருந்து ரூ.2000/= ஆக உயர்த்தப்படும்.
 • மூக்கு கண்ணாடிக்கு வழங்கப்படும் தொகை ரூ.400ல் இருந்து 800 ஆக உயர்த்தப்படும்.
 • சேமநலநிதி பகுதியில் பணி புரியும் தோழர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தப்படும். பொருளருக்கும், எழுத்தருக்கும்  250ல் இருந்து 500 ஆகவும், காசாளருக்கும், GR'D ஊழியருக்கும் 125ல் இருந்து 250 ஆகவும் மதிப்பூதியம் வழங்கப்படும்.
 • ஊழியர் சந்தா மாதம் ரூ. 50/= அனைத்து மாவட்டங்களிலும் பிடித்தம் செய்ய அறிவுறுத்தப்படும்.
 • அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுடன் பேசி அந்தந்த மாவட்டங்களில் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்படும்.
 • திருமணக்கடன் சில மாவட்டங்களில் 50 ஆயிரம் வழங்கப்படுகின்றது. இது அனைத்து மாவட்டங்களிலும் அமுல்படுத்தப்பட  அறிவுறுத்தப்படுகின்றது.
 • அனைத்துக்கடன் தொகையும் நேரடிப்பட்டுவாடா RTGS/NEFT முறை  மூலம் வழங்கப்படும்.
 • வங்கிக்கடன் பெறுவோருக்கு காப்பீடு செய்வது பற்றி CORPORATE அலுவலகத்திற்கு எழுதப்படும்.

 • கல்வி உதவித்தொகை, புத்தக விருது ஆகிய உயர்வு பற்றியும், மகளிருக்கு இரண்டாவது முறை மருத்துவ சோதனை செய்து கொள்ளும் வசதி பற்றியும்  அடுத்த கூட்டத்தில் விவாதிக்கப்படும். 
BSNLன் 
புதிய CMD 

19/12/2013 அன்று நடந்த நேர்காணலில் 
திரு.அனுபம் ஸ்ரீவத்சவா, 

தற்போதையை DIRECTOR(CM)  
BSNL ன் முதன்மை மேலாண்மை இயக்குநர் 
CMD பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். 

தற்போதைய CMD பதவியேற்பின் போது 
மிக்க எதிர்பார்ப்பு இருந்தது. 
ஆனாலும் வழக்கமான செயல்பாடுதான் தென்பட்டது. 
புதியவரின் செயல்பாட்டையும் 
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Wednesday, 18 December 2013

BSNL மற்றும் MTNL 
நிறுவனங்களின் செயல்பாடு 

18/12/2013 அன்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் 
பதில் அளித்த நமது இலாக்கா அமைச்சர் திரு. கபில் சிபல் 
BSNL மற்றும் MTNL  நிறுவனங்களின் செயல்பாடு 
தொடர்ந்து  கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்நிறுவனங்களின் நிதி நிலையை மேம்படுத்துவதற்காக 17/04/2013 அன்று அமைச்சர் குழு நியமிக்கபட்டதாகவும் 
அக்குழு 12/06/2013, 01/08/2013 மற்றும் 12/09/2013 ஆகிய தேதிகளில் கூடி கீழ்க்கண்ட முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அமைச்சர் குழு முடிவுகள் 

 • MTNL ஊழியர்களுக்கு BSNL ஊழியர்களுக்கு இணையான ஓய்வூதியம் வழங்குதல்.
 • BSNL க்கு 6 மாநிலங்களிலும், MTNLக்கு மும்பை மற்றும் டெல்லி பகுதிகளிலும் BWA - அலைக்கற்றை கட்டணத்தை திருப்பித்தருதல்.
 • BSNL உருவாக்கத்தின் போது முதலீட்டிற்காக வழங்கப்பட்ட 7500 கோடி கடனில் திருப்பிச்செலுத்தாத கடனை வட்டியுடன் சேர்த்து தள்ளுபடி செய்தல்.


தங்களது செயல்பாடு மற்றும் நிதிநிலை மேம்பாட்டிற்காக 
BSNL  மற்றும் MTNL  நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிய கட்டண விகிதங்களை அறிவித்தல், புதிய தொழில் நுட்பங்களை புகுத்துதல், புதிய தலைமுறை வலைப்பின்னலை பயன்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

இரங்கல் 


கடலூர் மாவட்ட சங்க  முன்னோடியும் 
முன்னாள் தமிழ் மாநிலச்சங்க நிர்வாகியும் 
மகளிர் அணி உருவாக்கத்தில் 
பெரும் பங்கு வகித்தவருமான 
தோழியர்
K .விஜயலட்சுமி 
அவர்களின் மறைவிற்கு  
நமது இதயங்கசிந்த 
அஞ்சலியை 
உரித்தாக்குகின்றோம். 

Tuesday, 17 December 2013

JCM 
தேசியகுழுக்கூட்டம் 
விவாதப்பொருள்

அகில இந்திய JCM 23/12/2013 அன்று டெல்லியில் கூடுகின்றது. மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்கள் பங்கேற்கின்றார். 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட உள்ளன.

ஊழியர் தரப்பில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் 

 • RM, GRD பதவிகளில் STAGNATION  தேக்க நிலை தீர்த்தல் 
 • அனைவருக்கும்  போனஸ் வழங்குதல் 
 • 78.2 சத IDA இணைப்பு நிலுவை வழங்குதல்.
 • ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குதல்.
 • 78.2 சத IDA இணைப்புக்கேற்ப அனைத்துப்படிகளும் வழங்குதல்.
 • நாலுகட்டப்பதவி உயர்வை முறைப்படுத்துதல்.
 • SC/ST தோழர்களுக்கு இலாக்காத்தேர்வுக்கான தகுதி மதிப்பெண்களை தளர்த்துதல்.
 • LTC,மருத்துவப்படி மற்றும் LTCயில் விடுப்பை காசாக்கும் வசதிகளை அமுல்படுத்துதல்.
 • BSNLலில் பணி நியமனம் செய்யப்பட்ட தோழர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வகுத்தல்.
 • TM பயிற்சி முடித்து பதவி இல்லாததால் காத்திருப்போருக்கு பதவி உயர்வு வழங்குதல்.

நிர்வாகத்தரப்பில் எழுப்பப்பட்டுள்ள பிரச்சினைகள் 

 • மாநில,மாவட்ட மட்ட JCM குழு உருவாக்கத்தில்  உள்ள பிரச்சினைகள் தீர்த்தல்.
 • JCM  மாநில, மாவட்டக்குழு எண்ணிக்கையை முறைப்படுத்துதல்.
 • கருணை அடிப்படை வேலைக்குப்பதிலாக புதிய இழப்பீட்டு முறை உருவாக்குதல். 
 • BSNL நிறுவனத்தின் பணிக்கலாச்சாரம் மற்றும் ஒழுக்கத்தை மேம்படுத்துதல்.
டிசம்பர் 18
வங்கி ஊழியர் 
நாடு தழுவிய வேலைநிறுத்தம் 

ஆண்டு ஒன்றுக்கு மேல் ஆகியும் 
ஊதிய உடன்பாடு 
அமுல்படுத்தப்படாததைக் 
கண்டித்து நாடு முழுவதும் 

இன்று 18/12/2013 
வங்கி ஊழியர்கள் 
வேலை நிறுத்தம்.

போராடும் தோழர்களுக்கு 
நமது வாழ்த்துக்கள்..

Monday, 16 December 2013

டிசம்பர் 17
ஓய்வூதியர் தினம் 
குப்தாவைக் கும்பிடுவோம்.

வாழ்நாளெல்லாம் மக்களுக்காக, தேசத்திற்காக, தான் பணி புரிந்த நிறுவனத்திற்காக உழைத்து ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள்  இன்று டிசம்பர் 17 தினத்தை ஓய்வூதியர் தினமாக போற்றுகின்றனர். 


ஓய்வு பெற்றவர்களை ஒரு குறிப்பிட்ட தேதியின் அடிப்படையில் தரம் பிரிக்க கூடாது, அவர்களது கடந்த கால சேவையைக்கணக்கில் கொண்டு அனைவருக்கும்  ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற 
உச்ச நீதிமன்ற தீர்ப்பைக் கொண்டாடும் விதமாக
 இன்றைய தினம் போற்றப்படுகின்றது.

சில மாதங்களுக்கு முன் இராமநாதபுரத்தில் இராமு என்ற TM தோழர் பணியில் இருக்கும் போது  இறந்தார். அவரது குடும்பத்திற்கு பணிக்கொடையாக 10 லட்சம், குடும்ப ஓய்வூதியமாக மாதம் 18 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. இங்குதான் தோழர். குப்தாவை 
நெஞ்சம் நிறைய நினைத்துப் பார்க்கின்றோம்.

BSNL என்ற நிறுவனத்தை உருவாக்க மத்திய அரசு மிக மூர்க்கமாக முடிவெடுத்த போது மிக தீர்க்கமாக போராடி நமது ஓய்வூதியத்தை உறுதிப்படுத்தியவர் தோழர். குப்தா.

BSNL தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டாலும் அவனது DOT கால சேவைக்கு ஓய்வூதியம் உண்டு என்ற அற்புதத்தை நிகழ்த்திக்காட்டியவர் தோழர். குப்தா.

ஒரு அடிமட்ட தொழிலாளி இறந்து விட்டால் அவனது குடும்பத்திற்கு அதிக பட்ச பணிக்கொடையும் ஓய்வூதியமும் கிடைத்திருப்பதில் 
தோழர். குப்தாவை இருகரம் கூப்பி கும்பிடுகின்றோம்.

தோழர்களே..
ஓய்வூதியம் தொழிலாளர்களின் வாழ்நாள் உரிமை ஆகும். 
ஆனால் திட்டமிட்டே அது இந்த அரசால் பறிக்கப்பட்டு விட்டது. 

2004க்குப்பின் ஓய்வூதிய முகம் சிதைக்கப்பட்டு விட்டது. 
2000க்குப்பின் BSNLலில் பணியமர்ந்த தோழர்களுக்கு 
இன்னும் புதிய ஓய்வூதிய திட்டம் அமுலாக்கப்படவில்லை.

மிக நீண்ட போராட்டத்திற்குப்பின்...
20 ஆண்டுகள் சேவைக்கு முழு ஓய்வூதியம் என்ற நிலையை அடைந்துள்ளோம். ஆனாலும் 33 ஆண்டுகள் பணி செய்தால்தான் 
முழு பணிக்கொடை GRATUITY வழங்கப்படுகின்றது. 

ஓய்வூதியம் போலவே 20 ஆண்டுகள் சேவைக்கு 
முழு பணிக்கொடை வழங்கப்பட வேண்டும்.

தற்போது அதிகபட்சமாக 10 லட்சம் மட்டுமே பணிக்கொடையாக வழங்கப்படுகின்றது. இந்த உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்.

ஓய்வூதிய முன்பணம் COMMUTATION  வழங்கப்படுவதற்கான 
கணக்கீடு மாற்றப்பட வேண்டும். 

தற்போது 80வது வயதில் ஓய்வூதிய உயர்வு அளிக்கப்படுகின்றது. 
இது ஓவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் வழங்கப்பட வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே உயர் விகிதத்தில் வழங்கப்படுகின்றது. இது 20 ஆண்டுகளாக உயர்த்தப்பட வேண்டும்.

இது போல்.. ஓய்வூதியர்களுக்கு இன்னும் எத்தனையோ பிரச்சினைகள் உண்டு. இவைகளை போராடி போராடியே   நாம் பெற வேண்டும்.

இன்றைய ஓய்வூதிய தினத்தில் 
நமக்கு ஓய்வூதியத்தை உறுதிப்படுத்திட்ட 
நமக்கு இறுதிக்கால பாதுகாப்பை தந்திட்ட 
நமது ஓய்வூதிய தந்தை 
தோழர். குப்தாவை நன்றியுடன் நினைவு கூர்வோம்..
செய்திகள் 

BSNLன்  தற்போதைய CMD திரு.உபாத்யாய் 
பணி ஓய்வு பெற இருப்பதால் 
புது முதன்மை மேலாண்மை இயக்குநர்  CMDக்கான தேர்வு 
19/12/2013 அன்று டெல்லியில் நடைபெறுகின்றது. 
9 அதிகாரிகள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளரின் தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நோக்கில் அனைத்து வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் ஒற்றைச்சாளர முறை SINGLE WINDOW SYSTEM  கட்டாயமாக அமுல்படுத்தப்பட வேண்டும் எனவும் வாடிக்கையாளர் சேவை மையங்களின் முன்பு BSNLன் சேவைக்கட்டண விகிதங்கள் மற்றும் சேவைத்திட்டங்கள் அனைத்தும் விளம்பரப்படுத்தப்பட வேண்டும் எனவும்  BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. நவம்பர் 30 அன்று BSNL நிர்வாகம் அனைத்து தொழிற்சங்கங்களுடன் நடத்திய விழிப்புணர்வு கூட்ட முடிவுகளின் அடிப்படையில் மேற்கண்ட உத்திரவு இடப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும் உடனடியாக JCM தலமட்டக்குழு மற்றும் WORKS COMMITTEE கூட்டங்களை கூட்ட வேண்டும் என BSNL நிர்வாகத்தை நமது மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
வாழ்த்துக்ள்

இன்று 17/12/2013 நடைபெறும்
புதுச்சேரி மாவட்ட
NFTE சங்க அலுவலகத் திறப்புவிழா
பொலிவோடு, வலிவோடு 
எழிலோடு, ஏற்றமோடு  
 நடைபெற நமது வாழ்த்துக்கள்.

சங்க அலுவலகம் 
சகலருக்குமான அலுவலகமாக 
உழைத்த தோழர்கள் ஒன்று கூடும் இடமாக
களைத்த பறவைகள் களிக்கும் கூடமாக 
விளங்கிட  வாழ்த்துகின்றோம்..

BSNL
சாய்ந்து வரும் கோபுரம் 
2010ல் செல் கோபுரங்களை தனியாருக்கு வாடகைக்கு  விடுவது என BSNL முடிவெடுத்திருந்தாலும் BSNLன் வழக்கமான மெத்தனம் காரணமாக தனது வலைப்பின்னலை சரிவர பயன்படுத்தவில்லை என DOT கருதுகின்றது. 
எனவே  NETWORK எனப்படும் வலைப்பின்னல் அமைப்பை 
தனி நிறுவனமாக மாற்றுவதற்கு   மத்திய அமைச்சரவையின் அனுமதியைக்கோரி DOT குறிப்பு அனுப்பியுள்ளது. 

தற்போது BSNLலில் ஏறத்தாழ 62 ஆயிரம் செல் கோபுரங்கள் உள்ளன. இந்தியாவின் இரண்டாவது பெரிய வலைப்பின்னல் வசதி நமது நிறுவனத்திடமே உள்ளது. இந்த செல் கோபுரங்கள் மூலம்  
ஆண்டுக்கு 1000 கோடி வியாபாரம் செய்ய இயலும் என DOT கருதுகின்றது. இன்னும் 10 ஆண்டுகளில் 2500 கோடி வியாபாரம் செய்ய வாய்ப்புள்ளதாக DOT கணக்கிட்டுள்ளது. இன்னும் 5 ஆண்டுகளில் ஏறத்தாழ ஒரு லட்சம் கோபுரங்களை எட்ட  இயலும் என்றும், இதன் மூலம் தனியார்களுக்கு வாடகைக்கு விட்டு வருமானம் பெருக்க இயலும் என்றும் 
DOT திட்டமிட்டுள்ளது.

புதிய நிறுவனம் ஏறத்தாழ 7300 கோடி முதலீட்டில் ஆரம்பிக்கப்படும். அசையா சொத்துக்கள் மட்டும்  6500 கோடி இருக்கும். சுமார் 3000 ஊழியர்கள் இதன் பணிக்கு தேவைப்படுவர்.   புதிய நிறுவனத்தின் சொத்துக்கள் மாற்றம் மற்றும் பத்திர பதிவிற்காக  475 கோடி  செலவாகும். இதனை தள்ளுபடி செய்ய டெல்லி அரசை DOT கேட்டுக்கொண்டுள்ளது. BSNL நிறுவனத்திடமிருந்து சுமார் 2500 கோடி 
12 சத வட்டியில் கடனாகப்  பெறப்படும். 

தோழர்களே..
நமது மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி அவர்கள் நமது தொழிற்சங்க கூட்டங்களில் தொடர்ந்து இந்த பிரச்சினையை கூறி வந்தார்.  
வராத போனசுக்கு வருத்தப்படவும், தலைவர்களை வறுத்தெடுக்கவும் தெரிந்த நமக்கு வரக்கூடிய அபாயத்தை புரிந்து கொள்ள இயலவில்லை. ஏற்கனவே BBNL என்ற நிறுவனம் அகன்ற அலைவரிசை பணிக்காக  ஆரம்பிக்கப்பட்டு விட்டது. தற்போது செல் கோபுரங்களும் நம்மை விட்டு சென்று விட்டால் 
வெறும் தரைவழி இணைப்புக்கள் மட்டுமே நமது வசம் இருக்கும். 

நமது சிறகுகள் திட்டமிட்டு வெட்டப்படுகின்றன. 
நம்மைச்சுற்றி நடப்பதை சரியாகப்புரிந்து கொள்ள வேண்டிய 
நிலையில் நாம் உள்ளோம்.  ஆனால் நாம் இன்னும் நமக்குள்ளேயே உழன்று வருகின்றோம். 

BSNL என்னும் வானளாவிய கோபுரம் 
திட்டமிட்டு சிறிது சிறிதாக சாய்க்கப்படுகின்றது. 
தொழிற்சங்கங்கள் என்ற முறையில்.. 
நமது பணி என்ன? பாதை என்ன?  
என்பதுதான்.. இன்றுள்ள கேள்வி.. 
சிந்திப்போம்.. தோழர்களே.. 

Sunday, 15 December 2013

செய்திகள்

OFC  வழித்தடங்களில் ஏற்படும் பழுதுகளை உரிய நேரத்தில் நீக்கவும், OFC செயல்திறனை அதிகப்படுத்தவும்  உரிய ஏற்பாடுகளை செய்யக்கோரி மாநில முதன்மைப் பொதுமேலாளர்களுக்கு CORPORATE அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது. தேவையெனில் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கும் பணியை தனியாருக்கு விடுவது OUTSOURCING பற்றியும் திட்டமிட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

 BSNL ஊழியர் குடியிருப்புக்களின் மாத வாடகை உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச உயர்வு ரூ.10/=. அதிகபட்ச உயர்வு  ரூ.605/= . 
01/07/2013ல் இருந்து வாடகை உயர்வு அமுலுக்கு வரும். 
உத்திரவு தேதியான 11/12/2013க்கு முன் குடியிருந்து 
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு இது பொருந்தாது.

சென்ற நிதியாண்டில் 2012-13ல் 
நமது நிறுவனத்தின் மொத்த வருமானம் 27128 கோடி. 
இதில் ஊழியர் சம்பளம் 13758 கோடியாகும். 
மொத்த வருமானத்தில் 50 சதம் சம்பளமாக செல்கின்றது.   
நிர்வாகச்செலவு 8780 கோடியாகும். 
1623 கோடி பராமரிப்புச்செலவாகும். 
மின்சாரம் மற்றும் எரிபொருள் செலவு 2533 கோடி. 
IUC செலவு 2259 கோடியாகும். 
 மொத்தத்தில்  7773 கோடி நட்டம் என காட்டப்பட்டுள்ளது. 
ஆனால் தேய்மானச்செலவு மட்டும் 8336 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. 
BSNLலில் வருமானம் தேய்ந்து வருகின்றது. 
ஆனால் தேய்மானம் வளர்ந்து வருகின்றது. 

JAO தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தும் காலியிடங்கள் இல்லாததால் 
பதவி உயர்வு அடைய முடியாத தோழர்கள் காலியிடங்கள் உள்ள மற்ற மாநிலங்களுக்கு செல்ல  தயாராக இருந்தனர். ஆனால் அவர்களது  கோரிக்கை நிறைவேறுவதற்கான வாய்ப்பில்லை 
என மாநிலச்சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழகம் உள்ளிட்ட  8 மாநிலங்களில் மட்டும் இன்னும் 
JTO 35 சத காலியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. தமிழகத்தில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்  தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் தாமதம் நிலவுவதாக BSNL நிர்வாகம் கடிதம் மூலம் நமது மத்திய சங்கத்திற்கு தெரிவித்துள்ளது.

Wednesday, 11 December 2013

மத்திய சங்க செய்திகள் 

10/12/2013 அன்று டெல்லியில் 
அகில இந்தியத்தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது
 அவர்கள் தலைமையில் நமது மத்திய சங்க 
வழிகாட்டும் குழுவின் கூட்டம் நடைபெற்றது. 

தமிழ் மாநிலச்செயலர் தோழர்.பட்டாபி, 
அகில இந்திய அமைப்புச்செயலர் தோழர்.கோபாலகிருஷ்ணன், 
புதுவை மாவட்டச்செயலர் தோழர்.காமராஜ் ஆகியோர்
 தமிழகத்தில் இருந்து கலந்து கொண்டனர்.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.


 • அகில இந்திய மாநாட்டை ஏப்ரல் 2014 முதல் வாரத்தில் மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூர்  நகரில் நடத்துவது.
 • அனைத்து மாவட்டங்களிலும் JCM தலமட்டக்குழு கூட்டங்களை விரைந்து நடத்துவது.
 • WORKS COMMITTEE - பணிக்குழு கூட்டங்களை பயனுள்ள வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தவறாமல் நடத்துவது.
 • மாநில, மாவட்ட மாநாடுகளை 2014க்குள் சிறப்புற நடத்துவது.
 • ஜனவரி 2014க்கான புதிய உறுப்பினர் சரிபார்ப்பை முழு மூச்சுடன் புது வீச்சுடன் மேற்கொள்வது. NFTEன் பலத்தை உரமாக்குவது.
 • தோழர்கள். கோபாலகிருஷ்ணன், சேஷாத்ரி ஆகியோர் மத்திய சங்கத்தின் சார்பாக கேரள மாநிலத்திற்கு பொறுப்பாளர்களாக செயல்படுவது.

Tuesday, 10 December 2013

டிசம்பர் 11
மகாகவி பாரதி 
பிறந்தநாள் 
மன்னனைப்பாடிய கவிதையை 
மானுடம் பாட வைத்த
மகாகவி பாரதி வழி நடப்போம்..
விடுதலை உரமூட்டி 
தேச உணர்வூட்டி 
உலகத்தைப் பார்க்க வைத்த 
உன்னதக்கவிஞன்..
பாரதியைப் போற்றுவோம்..

Sunday, 8 December 2013

டிசம்பர் 12
பாராளுமன்றம் 
நோக்கிப்பேரணி 

 • குறைந்தபட்சக்கூலி ரூ.பத்தாயிரம் கேட்டு 
 • தொழிலாளர் நலச்சட்டங்களை அமுல்படுத்தக்கோரி 
 • தொழிற்சங்க உரிமைகளை நடைமுறைப்படுத்தக்கோரி 
 • வேலை வாய்ப்புக்களை உருவாக்கக்கோரி 
 • அனைத்து தொழிலாளருக்கும் ஓய்வூதியம் வழங்கக்கோரி 
 • பொதுத்துறைகளின் பங்கு விற்பனையை எதிர்த்து 
 • விஷம் போல் ஏறும்  விலைவாசி உயர்வைக் கண்டித்து 

டிசம்பர் 12ல்.. 
தலைநகர் டெல்லியில் 
பத்து அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 
அனைத்து மத்திய சங்கங்களின் 
ஒன்றுபட்ட பேரணி..

NFTE பங்கேற்பு 
தலமட்டங்களில் ஆர்ப்பாட்டம்..
பங்கேற்பீர்.. தோழர்களே..

Friday, 6 December 2013

ஒப்பந்த ஊழியருக்கு 

அடையாள அட்டை வழங்கக்கோரி 

குறித்த தேதியில் சம்பளம் வழங்கக்கோரி 

சேமநல நிதி EPF கணக்கை துவக்கக்கோரி 

மருத்துவ வசதி ESI  அட்டை வழங்கக்கோரி 

மாதம் ஒரு நாள் சிறுவிடுப்பு CL வழங்கக்கோரி 

ஆண்டுதோறும் போனஸ் வழங்கக்கோரி 

இன்று 07/12/2013  
சனிக்கிழமை மாலை 5 மணிக்கு 

இராமநாதபுரம் மற்றும் பரமக்குடி 
தொலைபேசி நிலையங்கள்  முன்பாக 

ஆர்ப்பாட்டம் 

தோழர்களே... வாரீர்... 

Thursday, 5 December 2013

கருப்புச்சூரியன் 
மறைந்தது..

இனவெறி இருளைக் கிழித்த கதிரவன் 
அடிமை விலங்கை உடைத்த ஆதவன் 

தென்னாப்பிரிக்க மக்களின்  பகலவன் 
எந்நாட்டு மக்களுக்கும் இனியவன் 

வெள்ளைக்கு  விடை கொடுத்தவன் 
கருப்புக்கு கௌரவம் தந்தவன் 

நெல்சன்  மண்டேலா 
மறைவிற்கு 
நமது செங்கொடி 
தாழ்த்திய அஞ்சலி..
டிசம்பர் - 6 - 
அண்ணல் அம்பேத்கார் 
நினைவு நாள் 

வலுத்தவன்  காலுக்கு செருப்பாய் நடந்தவனை 
அவன் தன் காலுக்கு செருப்பிட வைத்தவர்..

துயரத்தில்  மாடாய் உழைத்தவனை 
உயரத்தில் மேடாய் உட்கார வைத்தவர் ..

தலையைச்  சொறிந்த கரங்களை 
தலைக்கு மேலே  உயர்த்த வைத்தவர்..

விட்டத்தைப்  பார்த்து வெறித்தவனுக்கு 
சட்டத்தை  சமதர்மத்தைப் போதித்தவர்..

அமைதி புத்தத்தை தழுவியவர்...
அடிமை பித்தத்தை போக்கியவர்.. 

சாதிப்பள்ளத்தை சரிநிகராய் மேவியவர்...
சேரிக்கு சரஸ்வதியை செல்ல வைத்தவர்...

எளிய மக்கள்  உள்ளத்தில் நிறைந்தவர்...
அண்ணல் அம்பேத்கார் 
நினைவைப் போற்றுவோம்..
EXCELLENT BSNL

2012-13ம் ஆண்டிற்கு 
செயல் திறன் அடிப்படையில் 
BSNL நிறுவனத்திற்கு 
27/11/2013 தேதியிட்ட DPE கடிதத்தின் படி  
EXCELLENT  GRADE 
அளிக்கப்பட்டுள்ளது. 

EXCELLENT கிட்டியது சாதனை .. 
EXCELLENTஐ எட்டியும் 
போனஸ் கிட்டாதது வேதனை..

Wednesday, 4 December 2013

TM தேர்வு முடிவுகள்

11/08/2013 அன்று நடந்த போன் மெக்கானிக் போட்டித் தேர்வின்  
முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
தமிழகத்தில் மொத்தம் 14 தோழர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 
தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்றோர் விவரம்.

கோவை
1. C. ஜான் பிரிட்டோ,  RM
2. R. விவேகானந்தன்,  RM
3. I . அந்தோணி இளங்கோ, RM
4. N. மூர்த்தி, RM
5. M . மதன், RM

கடலூர்
1. P. மணிகண்டன், RM

ஈரோடு
1. M. இராஜேஷ் கண்ணா, RM

தஞ்சை
1. J . அமர்நாத்  ராவ், RM
2. L . கலையரசன், RM

திருச்சி
1. A .அப்துல் நசீர், RM

தூத்துக்குடி
1. S . நாகராஜன், GR' D

வேலூர்
1. A.மனோன்மணி, RM 

விருதுநகர் 
1. B. செந்தில்பாபு, RM 
2. M. இராமலட்சுமி, RM 

கோவை S.இராஜுமணி, RM  என்ற  
தோழரின் தேர்வு முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.