Sunday 31 March 2013


விலைவாசிப்படி 

ஏப்ரல் 1 - 2013 முதல் விலைவாசிப்படி 
IDA  3.4 சதம்  கூடியுள்ளது. 
மொத்தப்புள்ளிகள் 74.9 சதம்.


SENIOR  78.2 IDA  வருவது ஒருபுறம் இருக்கட்டும்.
மற்றுமோர் ..
JUNIOR  78.2 IDA வருவதற்கு இன்னும் 3.3 சதமே  பாக்கியுள்ளது.


மூன்று மாதத்திற்கு ஒரு விலைவாசிப்படி 
யாரையும் கேட்காமல் ஊழியர் கரங்களில் முழுதாய் கிடைக்கின்றது
நல்ல வேளை...
அபியின் ஆகாய சாதனைகளில் இன்னும் இது சேரவில்லை. 

நிற்க..
01/10/2011 முதல் IDA  50 சதத்தை தாண்டி விட்டது.

ஏறத்தாழ இரண்டு வருடங்கள் ஓடி விட்டன.
இன்னும் 50 சத IDA  இணைப்பு என்னும் கருத்து வலுப்பெறவில்லை.
அடுத்த ஊதிய உடன்பாடு நம்பூதிரி மீது சத்தியமாக 2017ல்தான்.

பாவம்... அபி வகையறாவிற்கு 
IDA  இணைப்பு பற்றியெல்லாம் நினைக்கவே   நேரம் இருக்காது.
எனவே 50 சத IDA  இணைப்பு என்னும் கோரிக்கையை 
நமது சங்கத்தின் சார்பாக உரமேற்ற வேண்டும்.


78.2 சத IDA  இணைப்பில் 
தும்பை விட்டோம்.  
இப்போது 
வாலைப்பிடித்து தொங்குகின்றோம.

இம்முறையாவது  
50 சத  IDA இணைப்பில் 
வாலைப்பிடிக்காமல்...  
தும்பைப்  பிடிப்போம்...
அதையும்
துரிதமாகப் பிடிப்போம்.

Saturday 30 March 2013


நன்றி...  தோழர்களே... 


கடைசியில் நாங்களும் "வலையில்" விழுந்து விட்டோம்.
"பின்னப்பட்ட வலையில் பிழை இருக்கின்றதா" ? என 
கும்பகோணம் இளையவர் விஜயிடம் 
சும்மா ஒரு குத்து மதிப்பு கேட்டிருந்தோம் . 
அவரோ மதிப்பான முத்திரையைக் குத்தி 
ஆகாய வலையில் எங்களை மிதக்க விட்டார். 
அவரே எங்களின்  வெளியீட்டாளர். 
அவருக்கு எங்களின் முதல் நன்றி.

விமர்சனம் என்ற வேப்பங்காய்க்கு "ஏகடியம்" என்பதே இனிப்புத்தடவல்.
இதைச்சரியாகவே  சொல்லி நல்ல தமிழ் எழுத
 எங்களை வாழ்த்தினார் மாநிலச்செயலர்.
ஆனால் ஏகடியத்தில் அவரை மிஞ்ச முடியாது. 
பலருக்கு அது புரிவதில்லை.
எங்களைப்  பொருத்தவரை ஏகடியம் இரண்டாம் பட்சமே.
நற்சொல் நன்னடை நற்கருத்து இவைகளுக்கே முதலிடம்.

வலையில் முதிய சிவசிதம்பரம், முருகேசன்,பலராமன்,பாலகுமார்   மற்றும் பல தோழர்கள் அடித்த உற்சாக விசிலுக்கு எங்களது நன்றிகள்.

ஆனால் மார்ச் 30 இரவு 10 மணிக்கு சிவசிதம்பரம் கேட்டார்.  
என்ன  தோழர்!
முதல் செய்தியிலேயே முழங்கால் இட்டுக் கிடக்கின்றீர்களே? 
அடுத்த செய்தி எங்கே?  என்று.  
அப்போதுதான் புரிந்தது இந்த வலைப்பிசாசை 
தொட்டால் தொடரவேண்டும் என்பது.

என்ன செய்வது?
(வேலூர்)       மதி போல இருக்க நம்மால் முடியாது.
(தர்மபுரி)       மணி போலவும் இருக்க கூடாது. 

களப்பணி முதல்..  சகலப்பணிகளையும் 
நாமே  செய்ய வேண்டியுள்ளதால் 
வாய்ப்புக்கிடைக்கும்  போது மட்டுமே 
வலையில் சந்திப்பை நடத்த வேண்டியுள்ளது . 

கடைசியில் ஒருவருக்கு கட்டாயம் நன்றி சொல்லியே ஆக வேண்டும்.
கண்ணிலே  கசடு இருந்தும், 
கணிணியின் பால் காதல் கொண்ட,
தள்ளாத வயதிலும் 
புதிய தொழில்நுட்பங்களைத் தள்ளாத, 
ஏடுகளில் அடங்கிப்போன சங்கச் செய்திகளை 
இணையத்தில் வெளியிட்டு, உலகெங்கும் பரவ விட்டு, 
சங்க நடைமுறையில் புதிய அடி பதித்த, 
ஈரோட்டுத் தலைவர் தோழர்.மாலி அவ்ர்களுக்கு 
எங்களின்   மனங்கனிந்த நன்றி...

தொடர்ந்து சந்திப்போம்.

காரைக்குடி மாவட்டச்சங்கம்   







Monday 25 March 2013

தோன்றின் புகழோடு  தோன்றுக 

"அடிமட்ட மக்களுக்கெதிரான அநீதியைத்  தட்டிக் கேட்பவர்  அனைவரும் என் தோழர்களே"  எனறார் புரட்சியாளர் சே  குவேரா.

அடிமட்ட ஊழியர்களுக்கெதிரான அநீதியைப்  போராடி அகற்றினார் அருமைத்தோழர் குப்தா.

அடிமட்ட ஊழியர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார் 

அன்புத்தோழர் ஜெகன்.

அடிமட்ட ஊழியர்களைத்தன் அன்பால் அரவணைப்பால் வசப்படுத்தினார் 

அய்யர் என்று அழைக்கப்பட்ட அருமைத் தோழர் வெங்கடேசன்.

உலகப்புரட்சியாளர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும்

சற்றும் குறைவில்லாதவர்கள்
நமது இயக்கத்தை நடத்திச் சென்ற தலைவர்கள். 
எனவேதான் ஆண்டுகள் பல ஆயினும்
கம்பீரம் குறையாமல், உணர்வு மங்காமல்
வெற்றி   என்றால் துள்ளாமலும் 
தோல்வி என்றால் துவளாமலும் NFTE  
என்றும் உயிர்ப்புடன் நடைபோடுகின்றது.

மரித்தலும், உயிர்த்தலும்  ஏசு பிரானுக்கு மட்டுமல்ல 
NFTE போன்ற மாபெரும் இயக்கத்திற்கும் பொருந்தும்.

எனவே NFTEல் பணி செய்வதில் 
அனைவரும்  பெருமை கொள்கின்றோம் .

இணையதள சேவை இன்று 

இன்றியமையாத சேவையாக மாறி வருகின்றது.
ஏப்ரல் 16.. 
அநீதிக்கெதிரான போராட்டம். 
எட்டாண்டு கால துயர் துடைப்பதற்கான போராட்டம்.
தொழிற்சங்க மரபு மாண்பு  மரியாதை 
அனைத்தும் மண்ணோடு மண்ணாகி
எல்லாம்   இழந்து   ஊழியர் மனம்  புண்ணாகிய நிலை.
இந்த அ(லி)ழிநிலையை, இழிநிலையை 
அவசியம் மாற்ற வேண்டிய கடமை  ஏப்ரல் 16ல் காத்திருக்கின்றது.

அணில்களே அநீதிக்கெதிராக போராடி இருக்கும்போது 
அணிகள் சும்மா இருக்கலாமா?
எனவேதான் இதயத்து உணர்வுகளை இசைபட ,
வம்புக்கு இழுத்தால் வசைபடக் கலந்து 
இணையத்தில் விதைத்திட ஆசை பிறந்தது.

இலவசங்களை நாங்கள் இதுவரை அனுபவித்ததில்லை.

முதன்முறையாக  இணையத்தில் இலவசத்தை அனுபவிக்கின்றோம்.
bloggerக் கு நன்றி.

தொடர்ந்து சந்திப்போம்! சிந்திப்போம்! தோழர்களே!
 -காரைக்குடி மாவட்டச் சங்கம் -