Monday 25 March 2013

தோன்றின் புகழோடு  தோன்றுக 

"அடிமட்ட மக்களுக்கெதிரான அநீதியைத்  தட்டிக் கேட்பவர்  அனைவரும் என் தோழர்களே"  எனறார் புரட்சியாளர் சே  குவேரா.

அடிமட்ட ஊழியர்களுக்கெதிரான அநீதியைப்  போராடி அகற்றினார் அருமைத்தோழர் குப்தா.

அடிமட்ட ஊழியர்களுக்காகவே வாழ்ந்து மறைந்தார் 

அன்புத்தோழர் ஜெகன்.

அடிமட்ட ஊழியர்களைத்தன் அன்பால் அரவணைப்பால் வசப்படுத்தினார் 

அய்யர் என்று அழைக்கப்பட்ட அருமைத் தோழர் வெங்கடேசன்.

உலகப்புரட்சியாளர்களின் சிந்தனைக்கும் செயலுக்கும்

சற்றும் குறைவில்லாதவர்கள்
நமது இயக்கத்தை நடத்திச் சென்ற தலைவர்கள். 
எனவேதான் ஆண்டுகள் பல ஆயினும்
கம்பீரம் குறையாமல், உணர்வு மங்காமல்
வெற்றி   என்றால் துள்ளாமலும் 
தோல்வி என்றால் துவளாமலும் NFTE  
என்றும் உயிர்ப்புடன் நடைபோடுகின்றது.

மரித்தலும், உயிர்த்தலும்  ஏசு பிரானுக்கு மட்டுமல்ல 
NFTE போன்ற மாபெரும் இயக்கத்திற்கும் பொருந்தும்.

எனவே NFTEல் பணி செய்வதில் 
அனைவரும்  பெருமை கொள்கின்றோம் .

இணையதள சேவை இன்று 

இன்றியமையாத சேவையாக மாறி வருகின்றது.
ஏப்ரல் 16.. 
அநீதிக்கெதிரான போராட்டம். 
எட்டாண்டு கால துயர் துடைப்பதற்கான போராட்டம்.
தொழிற்சங்க மரபு மாண்பு  மரியாதை 
அனைத்தும் மண்ணோடு மண்ணாகி
எல்லாம்   இழந்து   ஊழியர் மனம்  புண்ணாகிய நிலை.
இந்த அ(லி)ழிநிலையை, இழிநிலையை 
அவசியம் மாற்ற வேண்டிய கடமை  ஏப்ரல் 16ல் காத்திருக்கின்றது.

அணில்களே அநீதிக்கெதிராக போராடி இருக்கும்போது 
அணிகள் சும்மா இருக்கலாமா?
எனவேதான் இதயத்து உணர்வுகளை இசைபட ,
வம்புக்கு இழுத்தால் வசைபடக் கலந்து 
இணையத்தில் விதைத்திட ஆசை பிறந்தது.

இலவசங்களை நாங்கள் இதுவரை அனுபவித்ததில்லை.

முதன்முறையாக  இணையத்தில் இலவசத்தை அனுபவிக்கின்றோம்.
bloggerக் கு நன்றி.

தொடர்ந்து சந்திப்போம்! சிந்திப்போம்! தோழர்களே!
 -காரைக்குடி மாவட்டச் சங்கம் -



11 comments:

  1. ஆரம்பமே அமர்க்களமாய் உள்ளது ....குடந்தை இணையம் இனி கூடுதலாக சுறு சுறுப்பாய் பணியாற்ற வேண்டும் ...என்ற கட்டாயம் உருவாக்கப்பட்டுள்ளது.எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் .... காரைக்குடி இணையம் தொடக்கம் கண்டே .... வரும் தேர்தலில் முத்திரை வாக்குகளில் மட்டுமல்ல .. இணையத்திலும் தனி முத்திரை பதிக்க வாழ்த்துக்கள்
    ம.விஜய் ஆரோக்யராஜ் - குடந்தை

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்! தொடரட்டும் பணி இயக்கத்தில் மட்டுமல்ல இணையத்திலும். கு.முருகேசன்,மதுரை

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்! தொடரட்டும் பணி...............

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்! தொடரட்டும்........C.BALAKUMAR , SALEM.

    ReplyDelete
  5. காரைக்குடியின் புதிய இணைய தளத்திற்கு தஞ்சை இணைய தளத்தின் வாழ்த்துக்கள். NFTE என்றாலே அழகும் துடிப்பும்தான். அந்த அழகும் துடிப்பும் தங்கள் தளத்தை தலைமை தாங்குவது எமக்கு பெரு மகிழ்வைத் தருகிறது. சே யைக் கூட அழகுபடக் காண்பித்திருக்கிறீர்கள். தளத்தின் துவக்க முகப்பில் ஜெகனையும், குப்தாவையும் நினைவுபடுத்தியிருக்கிறீர்கள். மிக்க நன்றி! வாழ்வளித்த தலைவர்களை மறந்த காரணம்தான் இன்றைக்கு BSNL லையே கேள்விக்குறியாக்கி இருக்கிறது. ஏப்ரல் 16 வெற்றிக்கு தங்கள் தளமும் முக்கியப் பங்காற்றும் என்பதை உணர்ந்து காரைக்குடி தளத்தை வணங்கி வாழ்த்துகிறேன். நன்றி மாரி! தொடர்ந்து நாம் சிந்திப்போம்!

    அன்புடன்,
    எஸ். சிவசிதம்பரம்,
    பட்டுக்கோட்டை.

    ReplyDelete
  6. வள்ளுவரின் வரிகளோடு தொடங்கப் பட்ட இந்த இனையதளம் வரலாற்றிலும் இடம் பிடிக்கும் என்பதில் சந்தேகமில்லை தொழிலாளர்களின் எண்ணங்களையும் தோழர்களின் கருத்துகளையும் பதிவு செய்ய கிடைத்த அற்புதமான தளம். நமது தலைவரின் (மாரி) கருத்துக்களும் செயலும் எப்பொழுதும் தொலைநோக்கு பார்வையுடன் தான் இருக்கும் இதற்கு NFTEயின் இளைஞர் மாநாடே சாட்சி. NFTE யின் வளர்ச்சிக்கு( வெற்றிக்கு) இந்த தளமும் ஒரு களமாக அமையும் . நீண்ட நாள் எதிபார்ப்பைப் பூர்த்தி செய்த எமது மாவட்ட தலைமைக்கு நன்றிகள் பல.
    என்றும் தோழமையுடன்!!..
    தலைவரின் பாதையில் பயணிக்கும்
    முதுகுளத்தூர் கிளை தோழர்கள்!!.
    சிறப்பாக சிந்தியுங்கள் செயல் படுத்த நங்கள் இருக்கிறோம் !!.

    ReplyDelete
  7. பாராட்டுகள் பட்டாபி

    ReplyDelete
  8. துவக்கம் அமர்க்களம்!
    நல்ல நடை!
    சொல்ல வேண்டியவற்றை,
    சுற்றி வளைக்காமல்
    நேரிடையாக, சுவாரஸ்யமாக
    சொல்வதுதான் - வாசிக்க வைக்கும்.
    பணி தொடர வாழ்த்துக்கள்!
    -இரா. பலராமன் -கடலூர்

    ReplyDelete
  9. vazthukkal ungal pani sirakka

    t.s. murali RGM TTC (CTTC) meenambakkam

    ReplyDelete
  10. நேற்றைய வரலாற்று நிகழ்வுகளைச் சரியாக
    தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியாத ஒருவனால்
    வருங்காலத்தை சரியாக பயன் படுத்த முடியாது
    எதிர்காலத்தை சரியாக திட்டமிடவும் முடியாது

    வரிகள் தோறும் வரலாறு கூறுகின்றன

    கடலூர் இளங்கோ

    ReplyDelete