Friday 28 June 2013

வாழ்க.. வளமுடன்..


இன்று 29/06/2013 பணி நிறைவு பெறும் 
சம்மேளன துணைப்பொதுச்செயலர் 

அருமைத்தோழர். 
C.K. மதிவாணன்
அவர்கள் 

எல்லா வளங்களும் 
பெற்றிட வாழ்த்துகின்றோம்...
வாழ்த்துக்கள் 

30/06/2013 பணி நிறைவு பெறும் தோழர்கள் 
முன்னாள் மாநில உதவித்தலைவர் 
பரமக்குடியின் படைத்தளபதி 
P. இராமசாமி, TM 

NFTE இயக்கத்தூண் 
S . துரைப்பாண்டியன், TM 

அமைதியின் சிகரம் 
P. நயினான், TSO 

அடக்கத்தின் உருவம் 
A . சேகரன், TM  

நட்பின் இலக்கணம் 
M . கணபதி, SDE 

FNTO மாநில உதவித்தலைவர் 
S . குருவன், TM 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் ..
78.2ஐ அடைந்தது போலவே ..
எல்லா நலமும் பெற்று...
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்...
இதோ.. இரண்டாவது 78.9

2013 மே மாத விலைவாசிக்குறியீட்டெண் உயர்வு அடிப்படையில் 
01/07/2013 முதல் விலைவாசிப்படி IDA  4 சதம் உயர்கின்றது. 
தற்போதையை DA 74.9 சதம் ஆகும்.
01/07/2013 அன்று மொத்தப்புள்ளிகள் 78.9 சதம் ஆகும்.

முதல் 78.2ஐ அடைந்து விட்டோம். 
இரண்டாவது 78.2ஐத் தாண்டி விட்டோம்.
2017ல்தான் அடுத்த ஊதிய உடன்பாடு . 
எனவே 50 சத IDA இணைப்பிற்காக குரல் கொடுக்கும் நேரம் இது..




Thursday 27 June 2013

அனைத்து தொழிற்சங்க கூட்ட முடிவுகள் 

26/06/2013 அன்று NFTE அகில இந்தியத்தலைவர் 
தோழர். இஸ்லாம் அஹமது தலைமையில் 
அனைத்து தொழிற்சங்கக்கூட்டம் நடைபெற்றது.
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

  • உத்தர்கண்ட் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட BSNL ஊழியர்கள் ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதியாக வழங்குவது..
  • தன்னுயிர் பொருட்படுத்தாமல் மக்கள் உயிர் காத்திட்ட இராணுவ வீரர்களுக்கும், BSNL சேவையை சீரமைத்திட உழைத்திட்ட ஊழியர்களுக்கும் கூட்டமைப்பு மிகுந்த பாராட்டுதலை உரித்தாக்குகின்றது.
  • பாதிக்கப்பட்ட BSNL ஊழியர்களுக்கு நிர்வாகம் உரிய உதவிகள் செய்திட வேண்டும்.
  • BSNL சேவையை சீரமைக்க DOT  உரிய நிதி உதவி அளித்திட வேண்டும்.
  • டெல்லியில் 03/08/2013 அன்று அகில இந்தியக் கருத்தரங்கம் சீரிய முறையில் நடத்துவது .


JCM உறுப்பினர் நியமனம் 

கேரள உயர்நீதிமன்றத்தில் FNTO  தொடுத்த வழக்கில் 
நீதிமன்றம் வழங்கிய 
இடைக்கால உத்திரவின் அடிப்படையில் 
அங்கீகரிக்கப்பட்ட NFTE, BSNLEU சங்க உறுப்பினர்கள் மட்டுமே 
JCM உறுப்பினராக தகுதி உடையவர்கள் என்றும் 
ஏனைய சங்க உறுப்பினர்கள் JCM உறுப்பினராக இயலாது என்றும் CORPORATE அலுவலகம் இன்று 27/06/2013 உத்திரவிட்டுள்ளது.


எனவே TEPU, KHOLI, BSNLMS, FNTOBEA போன்ற 
உதிரிகள் JCMல் பங்கேற்க இயலாது.

Wednesday 26 June 2013

மதி மயக்கம் 

தோழர்களே..
மதுரை மாநில மாநாட்டிற்குப்பின் 
ஆறாவது தேர்தலுக்குப்பின்
எட்டாண்டுகழித்து  அங்கீகாரம் அடைந்தபின்
எல்லோரும் இணைந்து 78.2ஐ பெற்ற பின்..

ஏற்றமுடன்.. கொடியேற்றமுடன்..
வேலூரில் நமது மாநில செயற்குழு கூடியது..

நடுக்கடல் படகாய்  BSNL நிறுவனம்..
கரையில் காத்திருக்கும் பெண்களாய் ஊழியர்கள்..
ஏராள ஊழியர் பிரச்சினைகள்...
தாராளமாய் செயற்குழு விவாதிக்கும்.. 
தமிழகம்.. கலங்கரை விளக்காய் ஒளி தரும் என்று 
நம்பிக்கையாய் நமது தோழர்கள் கலந்து கொண்டனர்..

காலம் முழுவதும் தோளில் ஜோல்னாப்பையுடன்
கடைநிலைத்  தொண்டனாய் சங்கப்பணி செய்த தோழர்.சேது 

இன்சொலன் ஆனேன் நான்..
இன்சுலினால் வாழ்வேன் நான்.. 
இதயம் இயங்கு மட்டும்..
இயக்கத்தை மறவேன் நான்..
என்று வாழும் தோழர்.ஜெயபால் 

ஆகிய தோழர்களை சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்தது 
தவறு என்று தவறாக வாதிட ஆரம்பித்தது 
தவறாக வழி நடத்தப்படும் ஒரு கூட்டம்.

ஆர்ப்பரித்தார்கள் .. தலைமையை அவமதித்தார்கள்..
அடிமட்ட ஊழியரின் உணர்வை மறுத்தவர்கள் 
தங்கள் உணவையும் மறுத்தார்கள்..
இறுதியில் அவையின் வெம்மை கண்டு 
வெளிநடப்பு செய்தார்கள்..

ஒரு குடம் பாலில் 
ஒரு துளி விஷம் என்பார்கள் 
இங்கோ 9 துளிகள் ..

இத்தனை இன்னல்களுக்குப்பின்பும் 
என் கடன் பணி செய்வதே என 
செயற்குழு தன் விவாதம் தொடங்கியது..
அமைப்புநிலையை அலசியது..
ஊழியர் பிரச்சினைகளை முன்வைத்தது..
வருங்காலக்கடமைகளை வகுத்தெடுத்தது..
நிறைவுடன் தன் பணி முடித்தது..

தோழர்களே..
NFTE  மாபெரும் இயக்கம்..
சீர்குலைவுகள்,நம்பிக்கை துரோகங்கள்,
எதிர்ப்புக்கள்,ஏளனங்கள் என 
எல்லாவற்றையும் தாங்கி, தாண்டி நடைபோடும் இயக்கம்..

மதிமயக்கத்தால் 
இதன் மாண்பை சீர்குலைக்கும் தோழர்கள் 
இதனின்றும் விடுபட வேண்டும்..
இயக்கத்தை மிஞ்சியவர் என எவரும் இருக்க முடியாது..
இயக்கத்தைக் காத்திடுவோம்.. அதன் 
இயக்கத்திற்கு இடையூறு இல்லா வண்ணம் செயல்படுவோம்..


வாழ்க... NFTE... 

Sunday 23 June 2013

காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு தீர்மானங்கள்

BSNL  நிர்வாகமே...

  • செல் சேவையில் தனியார் நிறுவனங்களுக்கு இணையான கவர்ச்சிகரமான கட்டண விகிதங்களை அமுல்படுத்து..
  • ஏற்கனவே உள்ள தரமான  சலுகைகளை உரிய முறையில் விளம்பரப்படுத்து..
  • தனியார் நிறுவனங்கள் அளிப்பது போல் TOP UP செய்வோருக்கு முழுத்தொகைக்கும் பேச்சு  நேரம் TALK TIME அளித்திடு..
  • தேக்கநிலை ஆண்டு உயர்வுத்தொகை STAGNATION INCREMENT  முறையினை அகற்று..
  • 01/01/2007க்குப்பின் பணியமர்ந்த TTA உள்ளிட்ட தோழர்களின் அடிப்படைச்சம்பளத்தை உயர்த்து..
  • போன்மெக்கானிக் இலாக்கா தேர்விற்கான கல்வித்தகுதியை தளர்த்து..
  • அடிப்படைச்சம்பளம் 78.2ல் நிர்ணயிக்கப்பட்ட பின் 68.8ல் HRA என்னும் நிலை மாற்று..

மாநில நிர்வாகமே...
  • மறுக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மருத்துவ பில்களை மனிதாபிமானத்துடன் மறு பரிசீலனை செய்..
  • JTO தேர்வு வினாத்தாள்,விடைத்தாள் குளறுபடிகளை சரி செய்..

மாவட்ட நிர்வாகமே..
  • வாடிக்கையாளர்கள் சேவை மையங்களில் சுத்திகரிக்கப்பட்ட  குடிநீர் வசதி செய்து கொடு..
  • மண்டபம் பகுதியில்  இலாக்காப்பொருட்களைக்  கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடு..
  • இராமநாதபுரத்தில் 198 சேவையை முறைப்படுத்து...
  • அனைத்து அலுவலகங்களிலும் கணிணி வசதி செய்து கொடு...
  • TM, TTA கேடர்களில் விருப்ப மாற்றலை அமுல்படுத்து...
  • விடுபட்ட தோழர்களுக்கு 4கட்டப்பதவி உயர்வை வழங்கு..

Friday 21 June 2013

ஓய்வூதியம் 

2006க்கு முன் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி 2006ல் இருந்து  ஓய்வூதிய உயர்வு அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2012ல் இருந்துதான் உயர்வு அளிக்க முடியும் என்ற அரசின் வாதம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

78.2 சத இணைப்பு தங்களுக்கும்  கிடைக்குமா? என 
பல ஓய்வு பெற்ற தோழர்கள்  கேள்வி எழுப்புகின்றனர். தற்போதைய உத்திரவின்படி இம்மாதம் பணியில் உள்ளவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.  ஓய்வு பெற்றவர்களுக்கென DOT தனியாக உத்திரவிட்டால் மட்டுமே அவர்களுக்கும் இந்த பலன் கிடைக்கும்.

ஓய்வூதியர்களின் சங்கங்கள் DOTயிடம் 78.2 இணைப்பை 
அவர்களுக்கும் வழங்க கோரிக்கை விடுத்துள்ளன.

78.2.... கைக்கெட்டியது...

இம்மாத சம்பளத்தில் 78.2 சத இணைப்பை அமுல்படுத்தும் பணியில் காரைக்குடி கணக்கு அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு 
சம்பள நிர்ணய பணியை முடித்துள்ளனர். 

ஆனால் சற்று பொறுக்குமாறு HRMSல் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. எனவே இம்மாதம் 78.2 இணைப்பை அமுல்படுத்துவது தாமதமாகலாம். 

சேர்ந்தே இருப்பது 78.2ம், தாமதமும்  என்றாகிவிட்டது.  அடுத்த மாதம்  78.2 அமுல்படுத்தப்படும். கூடவே 21 நாள் நிலுவையும் கிடைக்கும். 
இதன் மூலம் நிலுவை இல்லையே என்ற கவலையும்  தீர்ந்துள்ளது 


Tuesday 18 June 2013

வங்கிக்கடன் 

ORIENTAL BANK OF COMMERCE வங்கியுடன் 
BSNL ஊழியர்களுக்கு பல்வேறு கடன்கள் வழங்குவதற்கு 
ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
05/04/2014 வரை ஒப்பந்தம் அமுலில் இருக்கும்.

தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 12.75 சதம் ஆகும்.

தோழர்கள் துணிந்து கடன் வாங்கலாம்.
 இருக்கவே.. இருக்கு.. 78.2 

Monday 17 June 2013

செய்திகள் 

நமது சங்க மாதச்சந்தா  ரூ.15/=  ஆக உயர்த்தப்பட்டு 
ஜூன் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்ய 
BSNL நிர்வாகம்  17/06/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.
அகில இந்திய சங்கம் ரூ. 5, மாநிலச்சங்கம் ரூ.4, 
மாவட்டசங்கம் ரூ.6(இதில் கிளைச்சங்கம் ரூ.3) என பிரித்தளிக்கப்படும்.

HRA உள்ளிட்ட அனைத்துப் படிகளும் 78.2 சத IDA 
நிர்ணயப்படியே  வழங்க வேண்டும் எனவும், 
01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த தோழர்களின் சம்பள விகிதம் மாற்றியமைக்கப்பட வேண்டும் எனவும் 
மத்திய சங்கம் BSNL  நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

TTA தேர்வில் வெற்றி பெற்ற 64 தோழர்களுக்கு 24/06/2013 முதல் 
சென்னை மீனம்பாக்கம் பயிற்சி நிலையத்தில்
 இரண்டு வகுப்புகளாக பயிற்சி தொடங்குகின்றது.

தந்தி சேவையில் 2011-12ம் ஆண்டில் 13 கோடி வருமானமும், 150 கோடி செலவும் ஆகியுள்ளதாக BSNL நிர்வாகம் வெளியிட்ட செய்திக்கு 
நமது சங்கம்  இது தவறான செய்தி என்றும் வேறு பல செலவுகள் தந்திக்கணக்கில் தவறுதலாக எழுதப்படுவதால் உண்டானது என்றும் கடிதம் மூலம் கருத்து தெரிவித்துள்ளது.

01/07/2013 முதல் ROAMING கட்டணம் குறைக்கப்படுவதாக TRAI அறிவித்துள்ளது. ஆனால் இப்போதைக்கு இலவச ரோமிங் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

AIRCEL நிறுவனம் ஊழலிலும், 24000 கோடி கடனிலும் சிக்கித்தவிக்கின்றது.

Sunday 16 June 2013

78.2
மறுக்கப்படும் நியாயம் 

78.2 இணைப்பு பலன் ஊழியர்களின் சம்பளத்தில் கிடைப்பதற்கு  மாவட்டங்களில் மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்த பலன் கிடைக்காத தோழர்களை நினைக்கும்போது இப்பலனை  அனுபவிப்பதில் 
நமக்கு சங்கடம் நேருகின்றது.

01/01/2007க்குப்பின் பணியில் வந்த தோழர்களுக்கு குறிப்பாக 
TTA தோழர்களுக்கு 78.2 இணைப்புக்கு எற்ப  அவர்களது அடிப்படைச்சம்பளம் உயர்த்தப்படவில்லை. அடிப்படைச்சம்பளம் ரூ.16450/= என்று நிர்ணயிக்கப்படவேண்டும்.
அல்லது கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட வேண்டும்.

GR'D, RM  தோழர்களில் பலருக்கு STAGNATION  வந்து விட்டது. 
அவர்களது சம்பளத்தின் அதிகபட்சம் - MAXIMUM உயர்த்தப்பட வேண்டும்.
இல்லையேல் அவர்களுக்கு 78.2 இணைப்பின் பலன் கிடைக்காது. 
STAGNATION  என்பது அடிமட்டத் தொழிலாளிக்கு இழைக்கப்படும் அநீதி.

 மத்திய, மாநில சங்கங்கள் உரிய நடவடிக்கை 
எடுத்திட வேண்டுகின்றோம்.

Saturday 15 June 2013

செவ்வணக்கம் 

தோழர்.சத்யபால் டாங் 

ஆடம்பர பங்களா அமராத அமைச்சர்.. 
சைக்கிள்  மிதித்த சட்ட மன்ற உறுப்பினர்.. 
ஏழைகளுக்கு உணவு கிட்ட 
எந்நாளும் உழைத்த தோழர்.. 
பஞ்சாப் சிங்கம் 
தோழர்.சத்யபால் டாங் 
 அவர்களின் மறைவிற்கு 
நமது அஞ்சலி..
சிறந்த சிவந்த கலைஞர் 
மணிவண்ணன் 
அவர்கள் மறைவிற்கு நமது அஞ்சலி.


இடதுசாரிகளில் நடிகர்கள் உண்டு...
நடிகர்களில் இடதுசாரியாக 
சிந்தனை கொண்ட 
தோழர்.மணிவண்ணன்
நினைவைப் போற்றுவோம்.

Friday 14 June 2013

செய்திகள் 

தொலைத்தொடர்பில் தற்போதுள்ள 74 சத அந்நிய நேரடி மூலதனத்தை 
100 சதமாக உயர்த்த அரசு பரிசீலனை.

03/08/2013 அன்று டெல்லியில் BSNL மறுமலர்ச்சி பற்றி 
அனைத்து தொழிற்சங்க கருத்தரங்கம். 
மாநில, மாவட்ட மட்டங்களிலும் நடத்த முடிவு.

தந்தி சேவையை மூடுவதற்கு பல பகுதிகளிலும் இருந்து எதிர்ப்பு.


Thursday 13 June 2013

ஜூன் 14 
மாமனிதன் 
சேகுவேரா பிறந்த நாள் 

எங்கோ பிறந்தான்.. 
எங்கோ பயணித்தான்.. 
எங்கோ மறைந்தான்... 
ஆனால் மக்கள் மனதில்.. 
எங்கும் நிறைந்தான்..
-----------------------------------------------------------------
அடிமையாக வீழ்ந்து கிடப்பதை விட 
எழுந்து நின்று உயிர் துறப்பது மேல் 

HRA - 68.8 


78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்தினாலும் கூட 
HRA, MEDICAL REIMBURSEMENT, 
PROFESSIONAL UP GRADATION 
ஆகிய படிகள் 
68.8 சத ஊதிய நிர்ணயத்தின்படிதான் வழங்கப்பட வேண்டும் என BSNL 13/06/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.

Wednesday 12 June 2013

BSNL - MTNL 
சீரமைப்பு குழுக்கூட்டம் 

12/06/2013 அன்று மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட 
BSNL MTNL சீரமைப்பு குழுக்கூட்டம் நடைபெற்றது.
  • 12846 கோடி அலைக்கற்றைக் கட்டணத்தைத் திருப்பித்தருதல் 
  • MTNLன் 7500 கோடி ஒய்வூதியச் சுமையை ஈடு செய்தல் 
  • BSNL -  MTNL இணைப்பு 
  • GSM, CDMA சேவைகளுக்காக 10117 கோடி  நிதியுதவி 

போன்ற பிரச்சினைகள் DOT யால் முன்வைக்கப்பட்டு  
சுருக்கமாக விவாதிக்கப்பட்டன. 
முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை.
அடுத்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

78.2 சத IDA  இணைப்பு 
உடன்பாடும்... உத்திரவும்...

ஜூன் 2012 உடன்பாடு சரியாக ஓராண்டு கழித்து 
ஜூன் 2013ல் உத்திரவாக வெளிவந்துள்ளது.

ஜூன் 2012 உடன்பாட்டில் 
நிலுவைக்கான வாய்ப்பு இருந்தது.
ஆனால் ஜூன் 2013 உத்திரவில் 
நிலுவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

வீட்டு வாடகைப்படிHRA , MEDICAL REIMBURSEMENT, PROFESSIONAL UP GRADATION ALLOWANCE ஆகியவை  68.8 சத IDA இணைப்பின் அடிப்படையிலேயே இருக்கும்  என்று உடன்பாடு  கூறியது.

தற்போது  நம்பூதிரி சங்கம் 78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் HRA வழங்க வேண்டும் என்று BSNL நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

ஆனால் தற்போதைய உத்திரவில் 
01/01/2007 முதல்  FITMENT FORMULAவில் 
68.8 சத IDA இணைப்பிற்குப் பதிலாக 
78.2 சத IDAவை இணைக்க வேண்டும் 
என்று BSNLன்  07/05/2010 ஊதிய உத்திரவிற்கு 
திருத்தம் அளித்து மட்டும் உத்திரவிட்டுள்ளது.

68.8 சத இணைப்பிற்குத்தான் HRA வழங்க வேண்டும் 
என்று உத்திரவில் எந்தக்குறிப்பும் இல்லை.

எனவே  தற்போதைய உத்திரவுப்படி 
HRA 78.2 இணைப்பிற்கே வழங்கப்பட  வேண்டும். 

காரைக்குடி மாவட்டத்தில் 
ஜூன் 2013 மாத சம்பளத்தில் 
78.2 இணைப்பை அமுல்படுத்தும் பணியில் 
JAOக்கள் ஒரு குழுவாகவும், AOக்கள் ஒரு குழுவாகவும் 
களத்தில் இறங்கியுள்ளனர். 

Tuesday 11 June 2013

தந்தி சேவை மூடு விழா 
கட்டு... கட.... கட....

பாரம்பரியம் மிக்க தந்தி சேவைக்கு  15/07/2013 முதல் மூடுவிழா நடத்துவதற்கு BSNL நிர்வாகம் இன்று 11/06/2013 உத்திரவிட்டுள்ளது. 

இதன்படி வாடகைக்கட்டித்தில் இயங்கும் தந்தி அலுவலகங்கள் உடனடியாக காலி செய்யப்பட  வேண்டும். 

தந்தி சம்பந்தப்பட்ட அனைத்து குறிப்புகளும் 
குறிப்பிட்ட காலம் வரை பாதுகாக்கப்பட வேண்டும்.

தந்தி அலுவலகத்தில் தற்போது  பணிபுரியும் தோழர்கள் மற்ற பகுதிகளுக்கு மாற்றம் செய்யப்படுவார்கள்.

78.2 இணைப்பை தொடர்ந்து சிக்கன நடவடிக்கையில் 
BSNL இறங்கி விட்டது போலும்.

மனசு இனி  தந்தி அடிக்காது... 
SMS  அடிக்கும் ..
தந்தி போல் பாவித்து.. என 
இனி தந்தைகள் பிள்ளைகளுக்கு 
எழுத வேண்டியதில்லை..

தந்தி என்ற   தமிழ் வார்த்தைக்கு 
 பொருள் இனி  புரியாது.

78.2 
BSNL உத்திரவு 

78.2 சத IDA இணைப்பிற்கான 
BSNL உத்திரவு 
இன்று 11/06/2013 
அதிகாரிகளுக்கும் , ஊழியர்களுக்கும்  
தனித்தனி  உத்திரவாக 
வெளியிடப்பட்டுள்ளது.

Monday 10 June 2013

78.2 IDA இணைப்பு 
வாராது வந்த மாமணி

இன்று 10/06/2013  BSNL  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 
78.2 சத IDA இணைப்பிற்கு ஒப்புதல்  அளித்து DOT  உத்திரவிட்டுள்ளது. 

01/01/2007 ஊதிய நிர்ணயத்தில் 68.8 சத IDA என்பதற்குப்பதிலாக 78.2 சத IDA என்பது கணக்கில் எடுக்கப்பட்டு ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.

உத்திரவு தேதியான 10/06/2013ல் இருந்து இது அமுலுக்கு வரும்.

 நிலுவை வழங்கப்பட மாட்டாது.
BSNL தனது சொந்த நிதியில் இருந்து இந்த நிதிச்சுமையை ஏற்கவேண்டும்.
 இது சம்பந்தமாக நிதி உதவி வழங்கப்பட  மாட்டாது.

கால தாமதம் ஆனாலும் 
78.2 சத இணைப்பைப் பெறுவதற்கு 
உறுதியுடன் இணைந்து செயல்பட்ட 
அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் 
நமது வாழ்த்துக்கள்.
-------------------------------------------------------
தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் 
மெய்வருத்தக்  கூலி  தரும்.

Saturday 8 June 2013

துருப்பிடித்த வாள் 

இப்போதெல்லாம் இரவில் ஆழ்ந்த உறக்கம் ஏனோ வருவதில்லை. 
மதுரை மாநாட்டில் இருந்தே இதே நிலைதான்.

சரிதான் மருத்துவரை  அணுகலாம் என்று சென்றால்  அங்கே கொத்தாக நமது தோழர்கள் குவிந்து இருந்தார்கள்.  அத்தனை பேரைப் பார்த்ததில் நமக்கு அதிர்ச்சி. பத்திரிக்கைகளில் விஷக்காய்ச்சல் என்ற செய்தி வேறு. பதறிப் போய் விசாரித்தால் பதில் தர தயங்கி   தோழர்கள் நெளிய ஆரம்பித்தார்கள். நமது தோழர்கள் நெளிவு சுளிவு உள்ளவர்கள் 
என்பது தெரியும். ஆனால் அதுவே வியாதியாகி விட்டதா?  
என்ற கேள்வி நமக்குள் எழுந்தது.  

முன்பெல்லாம் தொழிற்சங்கத்தலைவர்கள் உரமண்டை உடையவர்களாக இருந்தார்கள். எதையும் எளிதில் புரிந்து கொண்டார்கள்.
நமக்குத்தான் வரவர மரமண்டையாகி விட்டதே. எனவே நமது மரமண்டைக்கு  பின்புதான் விளங்கியது நமது தோழர்கள் மருத்துவத்திற்கு வரவில்லை..  
மருத்துவ சான்றிதழுக்கு வந்துள்ளார்கள் என்பது. 

ஜூன் 12 காலவரையற்ற வேலைநிறுத்தத்தை பிணியற்ற  வேலைநிறுத்தமாக  மாற்றிட நமது தோழர்கள் மருத்துவரை அணுகியதாக நாம் சமாதானப்படுத்திக்  கொண்டோம்.

நோய் என்றால் கூட நமது தோழர்கள் மருத்துவரை தேடுவதில்லை. ஆனால்  போராட்டம் என்றால் மருத்துவரை தேட ஆரம்பித்து விடுகின்றார்கள். தற்போது  இதுவும் 
ஒரு வியாதியாக பரவ ஆரம்பித்து விட்டது. 

கடந்த காலங்களை நினைத்துப்பார்க்கின்றோம். 
இதே தோழர்கள்தான் எந்த இழப்பையும் பற்றி கவலைப்படாமல் கடுமையாக போராடினார்கள். அன்றைய  தலைமையும் அவர்களுக்கு இழப்பு இல்லாமல் பார்த்துக்கொண்டது. 

ஆனால் இன்றைய நிலை வேறு. 
ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம், தந்தி, 
மனு கொடுத்தல், ஊர்வலம் விடுதல் 
போன்றவை மட்டுமே  சாத்தியமான  போராட்ட வடிவங்களாகி விட்டன.
வேலை நிறுத்தம் என்றால் மருத்துவ விடுப்பில் செல்வது என்பது எட்டாண்டில் வாடிக்கையாகிவிட்டது.

இன்றைய  தொழிற்சங்கத்தலைவர்கள் 
தோழர்களின் இன்றைய மனநிலையை ஆராய்ந்து அதனை மாற்றிட முயற்சி செய்திடல் வேண்டும். 

"அறிவும் ஆயுதமும் "ஒன்று. 
பயன்படுத்தாவிட்டால் துருப்பிடித்து விடும். 
 போராட்டக்குணமும் அவ்வாறே..
 துருப்பிடித்த நமது போராட்ட வாளை 
கூர்ப்படுத்தும் காலம் வந்து விட்டது.
சிந்திப்போம்!!! தோழர்களே!!!

Friday 7 June 2013

78.2 சத IDA இணைப்பு 

78.2 சத IDA இணைப்பிற்கு DOT  ஒப்புதல் வழங்க 
முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் உலா வருகின்றன. 
ஆயினும் DOT உத்திரவு இன்னும் வெளியிடப்படவில்லை. 

உரிய உத்திரவு வெளிவரும் வரை 
உருவப்பட்ட  போராட்ட வாள் 
உறையில் இடப்பட வேண்டாம் .
உங்கள் கரங்களிலேயே இருக்கட்டும். 

அனைத்து தொழிற்சங்கக்கூட்டம் 

06/06/2013 அன்று NFTE அகில இந்தியத்தலைவர் 
தோழர். இஸ்லாம் அகமது தலைமையில் 
அனைத்து தொழிற்சங்கக்கூட்டம் நடைபெற்றது.
 கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

1. 07/07/2013 அன்று BRPSE செயலரைச் சந்தித்து விவாதிப்பது.
2. மாவட்ட மாநில மட்டங்களில் பத்திரிக்கைகளுக்கு பேட்டி அளிப்பது.
3. 11/06/2013 அன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது.
4. முழுவீச்சில் 12/06/2013 வேலை நிறுத்தத்தை நாடு முழுக்க நடத்துவது.

Thursday 6 June 2013

ஜூன் - 7 
தோழர். ஜெகன் நினைவு நாள் 

இகழ்    மொழி   மறுத்தவனே 
இனிய மொழி    மருத்துவனே 
எளியோரை      மதித்தவனே 
எள்ளிநகைதல்   வெறுத்தவனே 

பகைத்தொழில்  மறந்தவனே 
பாசமழை பொழிந்தவனே  
போர்வழி   இகழ்ந்தவனே 
    ஓர்வழி    புகழ்ந்தவனே..

மலையாய் வருது..  சோதனைகள்.. 
சிலையாய் நின்று சிரித்து விடாதே..

மலையைப் பனியாய்  மாற்றி விடு..
மனங்களைப் பஞ்சாய் மகிழ விடு ..

78.2 சத IDA இணைப்பு 

இன்றைய பேச்சுவார்த்தை 

DOT  செயலருடன் இன்று அனைத்து சங்க தலைவர்கள் சந்திப்பு நிகழ்ந்தது.

BSNL சீரமைப்பு  சம்பந்தமாக அனைத்து தொழிற்சங்கத்தலைவர்கள் அமைச்சர்கள் குழுவிற்கு அளித்த மனுவின் நகல் அவருக்கு அளிக்கப்பட்டு அதன் முக்கிய அம்சங்கள்  விவாதிக்கப்பட்டன.

மேலும்  78.2 சத IDA இணைப்பு  சம்பந்தமாக  உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக DOT  செயலர்  உறுதி அளித்துள்ளார். 
நாளை 07/06/2013 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும்.
செய்திகள் 

இன்று  06/06/2013  78.2  சத  IDA இணைப்பு பற்றி
 அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களும் DOT செயலருடன் 
பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

 12/06/2013  காலவரையற்ற  வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது பற்றி அனைத்து தொழிற்சங்க கூட்டம் 
இன்று  06/06/2013 டெல்லியில் நடைபெறுகின்றது.

அங்கீகரிக்கப்பட்ட  NFTE மற்றும் BSNLEU சங்கங்களுக்கு சங்க அலுவலகம் ஒதுக்கப்பட்டதால் JCM கூட்டலோசனைக்குழுவிற்கு முன்பு ஒதுக்கப்பட்ட அலுவலக வசதி விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.

BSNL  சீரமைப்புக்காக அமைக்கப்பட்ட அமைச்சர் குழு 
ஜூன் 11 அன்று கூடி விவாதிக்க உள்ளது.

போன் மெக்கானிக் இலாக்காத்தேர்வு எழுத வயது வரம்பு இல்லை என  CORPORATE அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

 01/01/2007ல் 5 ஆண்டு ஊதிய உடன்பாடு போடப்பட்ட பொதுத்துறைகளில் 01/01/2012 முதல் புதிய ஊதிய விகிதம் அமைவதற்கு  சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிர்வாகங்கள்  தொழிற்சங்கங்களுடன் ஊதியப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது. 
BSNLலில் 5ம் இல்லை, 6ம் இல்லை. 
அடுத்து அதிகாரிகள் கவனிக்கப்படும் போதுதான் 
ஊழியர்களும் சற்றே கவனிக்கப்படுவார்கள்.


Sunday 2 June 2013

தொழிற்சங்க நிறைகுடம்  

 தோழர். R.R.B

குறைகுடங்கள் கூத்தாடும் இக்காலத்திலே,
வாழ்நாள் முழுவதும் நிறை குடமாக, 
அன்பு, ஆற்றல், இனிமை, எளிமை நிறைந்த குணமாக,
விருதுநகரில் வியக்கும் வண்ணம் NFTEல் பணி செய்து,

வால் பிடிக்கும், ஆள்பிடிக்கும் அதிகாரிகள் சங்க மத்தியில் 
நேர்மைப்  பிடிப்போடு, நியாயத்துடிப்போடு 
AIBSNLOA சங்கத்தை வளர்த்து 
AGS ஆகப் பணி தொடர்ந்து 
இலாக்காப்பணி முடித்த 
அருமைத்தோழர். 
R. R. B 
அவர்களின் பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

பணி நிறைவு எல்லோருக்கும் உண்டு..
நிறைவான பணி இவருக்கு மட்டுமே உண்டு.

Saturday 1 June 2013


JCM - நீதிமன்றத்தடை 

எர்ணாகுளம் உயர்நீதிமன்றத்தில் FNTO சங்கம் 
" 7 சதத்திற்கு கீழ் வாக்குகள் பெற்ற சங்கங்களின் உறுப்பினர்களை 
JCM கூட்டாலோசனைக்குழு உறுப்பினர்களாக அனுமதிப்பதற்கு 
 இடைக்கால தடை விதிக்க வேண்டும் "
 என்று  தொடுத்த வழக்கில் 
7 சதத்திற்கு கீழ் வாக்குகள் பெற்ற சங்கங்களின் உறுப்பினர்களை 
JCMல் உறுப்பினராக சேர்ப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து 
எர்ணாகுளம் உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

இதனால் TEPU, BSNLMS, SEWABSNL போன்ற சங்கங்களின் உறுப்பினர்கள் 
JCMல் பங்கு கொள்வது கேள்விக்குறியாகியுள்ளது.

இதோ ... 78.4...

விலைவாசிக்குறியீட்டெண்  உயர்வு  அடிப்படையில் 
1/07/2013 முதல் DA 3.5 சதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய DA 74.9 சதம்   ஆகும். எனவே ஜூலை 2013 முதல் 
மொத்த DA  78.4 சதம் ஆகும். 78.2 வருமா? என எல்லோரும் எதிர்பார்த்து இருக்கையில் இதோ நானிருக்கின்றேன் என 78.4 வந்து விட்டது.

ஆனாலும் 78.2 சத IDA இணைப்பு என்பது நமது உரிமையாகும். 
ஜூன் 12  காலவரையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்திக்காட்டினால் மட்டுமே 78.2ஐ அடைய இயலும். 
மாறாக மருத்துவ விடுப்பில் சென்றால்
 மருந்துக்குக் கூட 78.2 கிடைக்காது. 
எனவே உறுதியுடன் போராடுவோம். 78.2ஐ அடைந்தே தீருவோம் .