Wednesday 28 August 2013

பட்டமா.. பாடமா..

ஓய்வூதிய பிடித்தம் கூடாதென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையொட்டி 
வழக்கம் போல் வலைத்தளத்தில் அறை குரைப்பு நடந்தேறியது. 
காஞ்ச புறத்தவனுக்கும், கொங்கனுக்கும் புரிவது 
கம்பன் உறங்கும் காரைக்குடிக்காரனுக்குப் புரியாதா?

காரைக்குடியைப்  பொறுத்தவரை 
இதை மிக முக்கிய தீர்ப்பாக கருதுகின்றோம். 
காரணம் கீழே நீங்கள் காண்பதுதான்..

நமது சங்கத்தின் மிக விசுவாசமான தோழர். P .காமாட்சி, TM.
கடந்த ஜுன் 2012 அன்று ஓய்வு பெற்றார். 
சுயமரியாதை மிக்க தோழர். 
காமாட்சியை ஒரு பொறுக்கி அதிகாரி வா  போ என ஏக வசனத்தில் அழைத்ததை பொறுக்க இயலாமல் காமாட்சி பல்வேறு வசனங்களில் பொறுக்கி அதிகாரியை  பொரித்து எடுத்து விட்டார். 
வழக்கம் போல் தற்காலிகப்பணி நீக்கம். அதன் பின் காவல்துறை நடவடிக்கை என திட்டமிட்ட பழி வாங்குதல்கள் தொடர்ந்தன. 

தற்காலிகப்பணி நீக்கத்தை ரத்து செய்து அவரை பணியில் சேர வைத்து இலாக்கா அனுமதியுடன் ஓய்வும் பெற வைத்தோம். 
பணி ஓய்வு அன்று விடுப்பு பணத்தை முழுமையாகப் பட்டுவாடா செய்ய வைத்தோம். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அவரது பணிக்கொடை DCRG வழங்கப்படவில்லை.
தற்காலிக ஓய்வூதியத்திற்கான PROVISIONAL PENSION அனுமதி மாவட்ட நிர்வாகத்தால் அளிக்கப்பட்டு DOT CELL பரிசீலனையில் உள்ளது. விரைவில் வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 
இத்தோடு ஏறத்தாழ 15 மாதங்கள் ஓடி விட்டன . இன்று வரை தோழர். காமாட்சி இது பற்றி முணுமுணுக்கவில்லை. தனக்கு பட்டங்கள் வேண்டுமென சங்கத்தை கேட்கவுமில்லை. 

இந்நிலையில் தான் ஜார்க்கண்ட் மாநில ஓய்வூதிய வழக்கில் 
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வந்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்  காட்டி மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தோழர். காமாட்சிக்கு சேர  வேண்டிய அவரது உரிமையான பணிக்கொடையை, ஓய்வூதியத்தை உ டனடியாக வாங்க முடியும் என அவரது வழக்கறிஞர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தோழர். காமாட்சி பட்டங்களை நம்மிடம் கேட்கவில்லை.. 
பாடுபட்டு உழைத்த காலத்திற்கான பலன் மட்டுமே வேண்டுமென்றார். தற்போதைய தீர்ப்பை சுட்டிக்காட்டுவதின் மூலம்
அவரது உரிமையை வெல்ல வாய்ப்புக் கிட்டியுள்ளது. 
தீர்ப்புக்கள் உத்திரவாக காலதாமதமாகலாம். 
மாட்சிமை தாங்கியோர்கள்  காத்திருந்து தியாகிகளாகட்டும். 
காமாட்சிகள் நீதி கேட்டு தங்கள் நியாயத்தை நிலைநாட்டட்டும்.

1 comment:

  1. கும்பகோணத்தானுக்கு ... தெளிவாக புரிந்தது ...
    விஜய் -குடந்தை

    ReplyDelete