Wednesday, 30 October 2013

துறைமுகத்தொழிலாளர் 
ஊதிய உடன்பாடு 

துறைமுகத்தொழிலாளர்களுக்கு (PORT & DOCK WORKERS) 
புதிய ஊதிய உடன்பாட்டு ஒப்பந்தம் டெல்லியில் கையெழுத்தாகியுள்ளது.


 • துறைமுக நிர்வாகத்திற்கும் 5 மத்திய சங்கங்களுக்கும் இடையில் ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. 
 • ஒப்பந்தம் 01/01/2012ல் இருந்து அமுலுக்கு வரும்.
 • அடிப்படைச்சம்பளம் மற்றும் விலைவாசிப்படியில் (BASIC + DA)      10.5 சதம் ஊதிய உயர்வு அளிக்கப்படும்.
 • ரூ.4000/= குறைந்தபட்ச உயர்வாகவும், ரூ.8000/= அதிகபட்ச உயர்வாகவும் கிடைக்கும்.
 • ஊதிய உடன்பாடு 5 ஆண்டுகளுக்கு அமுலில் இருக்கும்.
 • ஏறத்தாழ 48000 தொழிலாளர்கள் இதனால் பயன் பெறுவர்.

பல பொதுத்துறைகளில் 
10 ஆண்டுகளில் ஊதிய உடன்பாடு என்று இருக்கும்போது 
5 ஆண்டுகளுக்கு உடன்பாடு கண்ட துறைமுகத்தொழிலாளர்களின்  
5 சங்கங்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

துறைமுகத்தொழிலாளர் ஒன்று பட்டு கரை சேர்கின்றனர்.
தொலைத்தொடர்பு தொழிலாளர்களோ...
தங்களுக்குள்  தொடர்பறுந்து தொலைந்து போகின்றனர்.
TTA   நேரடி  ஊழியர் 
போட்டித்தேர்வு முடிவுகள் 

14/07/2013 அன்று நடைபெற்ற TTA நேரடி ஊழியர் நியமன போட்டித்தேர்வு முடிவுகள் 29/10/2013 அன்று  வெளியிடப்பட்டுள்ளது.

27 தோழர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
காரைக்குடி மாவட்டத்திற்கு தேர்வு பெற்றுள்ள 
தோழர். ஜனார்த்தனன் என்பவருக்கும்,  
வெற்றி பெற்ற  ஏனைய  தோழர்களுக்கும் 
நமது வாழ்த்துக்கள்.

Tuesday, 29 October 2013

போனஸ் போராட்டம் 

30/10/2013 பசும்பொன் தேவர் பிறந்த நாள் வழிபாட்டையொட்டி 
இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 
144 தடை உத்திரவு  பிறப்பிக்கப்பட்டுள்ளதால் 

இராமநாதபுரம், பரமக்குடி, சிவகங்கை 
தொலைபேசி நிலையங்கள் முன்பும்
காரைக்குடி பொது மேலாளர் அலுவலகம் முன்பும் 

அகில இந்திய சங்க அறைகூவலுக்கிணங்க 
BSNL ஊழியர்களுக்கு 
போனஸ் வழங்காததைக் கண்டித்து 

இன்று 30/10/2013 
மாலை 5 மணிக்கு

ஆர்ப்பாட்டம் 
நடைபெறும். 
தோழர்களே.. வருக...

Monday, 28 October 2013

காரைக்குடி 
JCM தலமட்டக்குழு 
விவாதப்பொருள் 

 • BSNL வருவாய் பெருக்கத்திற்கான வழிமுறைகளை கண்டறிதல்.
 • காலியாக உள்ள ஊழியர் குடியிருப்பு மற்றும் அலுவலக இடங்களை வாடகைக்கு விடுதல்.
 • காலியாக உள்ள சந்திப்புக்கூடங்களை சமுதாயக்கூடமாக மாற்றுதல். (Conference Hall to Community Hall )
 • வாடிக்கையாளர் சேவை மையங்களில் உரிய வசதிகள்  ஏற்படுத்துதல்.
 • பணம் தரும் இயந்திரங்களை ATM  வாடிக்கையாளர் சேவை மையங்களில் அமைத்தல்.
 • ஊழியர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல்.
 • நாலு கட்டப்பதவி உயர்வில் விடுபட்டவர்களுக்கு, மறுக்கப்பட்டவர்களுக்கு  பதவி உயர்வு வழங்குதல்.
 • தனியார் பேருந்தில் பயணித்ததால் மறுக்கப்பட்ட LTC BILLகளை பட்டுவாடா செய்தல்.
 • தனியார் மருத்துவமனை சிகிச்சை  மருத்துவ பில்களை பட்டுவாடா செய்தல்.
 • வங்கி கடன் பெறும் ஊழியருக்கு காப்பீட்டு திட்டத்தை அமுல்படுத்துதல்.
 • TTA கேடரில் 10 சத காலியிடங்களை நிரப்புதல்.
 • TTA கேடரில் விடுபட்டோருக்கு CONFIRMATION நிரந்தர நியமன உத்திரவு வழங்குதல்.
 • TM/TTA  கேடர்களில் நீண்ட நாள் காத்திருப்போரின் விருப்ப மாற்றலை பரிசீலித்தல்.
 • ஆளற்ற தொலைபேசி நிலைய காலியிடங்களை நிரப்புதல்.
 • JCM, WORKS COMMITTEE, WELFARE COMMITTEE உறுப்பினர்களுக்கு இலவச SIM வழங்குதல்.
 • UDAAN, VIJAY திட்டங்களை மறு ஆய்வு செய்தல்.
 • அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் தோழர்களுக்கு சிறப்பு படிகள் வழங்குதல்.
 • ஒப்பந்த ஊழியர்களுக்கான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

Sunday, 27 October 2013

தீபாவ(லி)ளி

இந்திய தேசத்தின் மிகப்பெரும் விழாவான தீபாவளித்திருநாள் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஆனால் உழைக்கின்ற  ஊழியர்களின் உள்ளமோ நொறுங்கிக்கொண்டிருக்கின்றது.  

3 ஆண்டுகளாக போனஸ் இல்லை. 
அந்த வரிசையில் இந்த ஆண்டும் சேர்ந்திடுமோ? 
என்ற கேள்வி எழுகின்றது. 
அமெரிக்க அரசு இந்திய மக்களின் கலாச்சார உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தீபாவளியைக் கொண்டாட தயாராகி வருகின்றது. ஆனால் இந்தியாவின் மிகப்பெரும் பொதுத்துறையின் CMDயோ  ஊழியர்களின் உணர்வுகளை மதித்து அவர்களின் உரிமையான போனசை அறிவிப்பதை விடுத்து,  நிதி நிலையைக்காரணம் காட்டி போனசை மறுத்து வருகின்றார். 

மருத்துவப்படியை நிறுத்தியதால் 400 கோடி, 
LTCஐ நிறுத்தியதால் 100 கோடி, 
78.2 நிலுவையை பறித்ததால் 1000 கோடி 
என்று ஊழியர் உரிமையைப்பறித்த  CMD வெறும் 70 கோடி செலவாகும் போனசை மறுப்பது எந்த விதத்தில் நியாயமாகும்?..

இதே ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 18 கோடியை உத்தரகண்ட் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி வழங்கியதை மறக்க முடியுமா? மொத்தத்தில் BSNL நிர்வாகம் ஊழியர்களின் உணர்வுகளை மதிக்க தவறி விட்டது. போனஸ்  என்பது லாபம் நட்டம் சார்ந்ததல்ல. 
அது இந்த தேசத்தின் பண்பாடு சார்ந்தது. எனவே போனஸ் மறுப்பு என்பது பண்பாடற்ற செயலாகவே கருதப்படுகின்றது. 

ஊழியருக்கு போனஸ் என்ற உரிமையை பெற்றுத்தந்த NFTE பேரியக்கம் கடந்த மூன்று ஆண்டுகளில் போனசை பெறுவதற்கு தனது முயற்சியை தொடர்ந்து செய்து வந்தது. இந்த ஆண்டு மீண்டும் அங்கீகாரம்  கிடைத்திருப்பதால் கூடுதல் பொறுப்புடன் போனசைப்பெற கடமையுணர்வுடன் செயலாற்றி வருகின்றது. 

தோழர்களே !..போனஸ் நமது உரிமை என்ற குரலை ஓங்கி ஒலிப்போம். 
BSNL ஊழியர்கள் போனஸ் தேசத்திலிருந்து 
நாடு கடத்தப்பட்டவர்கள் என்னும் நிலை மாற்றுவோம். 
அக்டோபர் 30 உண்ணாவிரதத்தை வெற்றிகரமாக்குவோம்.  

போனஸ் நமது உரிமை.. 
போராடாமல் இழந்தது மடமை.. 
போராடிப்பெறுவது நமது கடமை..

( NFTE தமிழ் மாநில இணையத்தளச்செய்தியிலிருந்து )

Friday, 25 October 2013


திருச்சி மாவட்டம் 
 பொன்னமராவதி 
கிளை மாநாடு 

26/10/2013 - சனிக்கிழமை  - மாலை 03-00 மணி 
தொலைபேசி நிலையம் - பொன்னமராவதி 

பங்கேற்பு:  தோழர்கள் 

S.  முத்து - கிளைத்தலைவர் 
M. நடராஜன் - கிளைச்செயலர் 
K . பழனியப்பன் - கிளைப்பொருளர் 
S. நாகராஜன் - மாவட்ட உதவிச்செயலர் 
S . சுந்தரவேல் - மாவட்டத்தலைவர் 
S . பழனியப்பன் - மாவட்டச்செயலர் திருச்சி 
V . மாரி - மாவட்டச்செயலர் - காரைக்குடி 
P . சுந்தரம் - மாநில உதவித்தலைவர் 
S . மனோகரன் - மாநில உதவித்தலைவர் 

சிறப்புரை:  தோழர் 
R . பட்டாபிராமன் 
மாநிலச்செயலர் 


தோழர்களே... வருக...

Thursday, 24 October 2013

செய்திகள்

 BSNL ஊழியர்களுக்கு  
01/01/2007 முதல் 09/06/2013 வரையிலான காலத்திற்கு 
78.2 சத IDA இணைப்பிற்கான நிலுவையை வழங்கிட DOT செயலருக்கு BSNL CMD வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் மூலம் பணிபுரியும் ஊழியர்கள்  புதிய தெம்புடன் கூடுதலாக பணி புரிந்து நிறுவன வளர்ச்சிக்கு உதவிடுவார்கள் எனவும் CMD கருத்து தெரிவித்துள்ளார். 
CMDஐப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம். ஆனால் இதே CMD நிறுவனத்தின் நிதி நிலை சரி இல்லை என்று சொல்லி நமது உரிமையான  குறைந்த பட்ச போனசை மறுப்பதையும் நாம் மறப்பதற்கில்லை.

கருணை அடிப்படை பணிக்கு மதிப்பெண் போடும் போது திருத்தியமைக்கப்படாத PRE REVISED ஓய்வூதிய பலன்களை கணக்கில் கொண்டு மதிப்பெண் வழங்க BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
போகாத ஊருக்கு எத்தனை பாதை போட்டால் என்ன? 
கிடைக்காத வேலைக்கு எத்தனை உத்திரவு போட்டால் என்ன?


ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 78.2 சத IDAஇணைப்பு 
வழங்குவதற்கான  குறிப்புகள் அடங்கிய கோப்புகள் தொலைதொடர்பு செயலரிடம் இருந்து ஓய்வூதிய இலாக்காவிற்கு அனுப்பப் பட்டுள்ளது.

ஆண்டுக்கணக்காக JTOவாக OFFICIATING  செய்யும் TTA தோழர்கள் சிலர் வேறு வழியின்றி 2013ல் நடந்த போட்டித்தேர்விலும் பங்கு பெற்றனர். ஒருவேளை போட்டித்தேர்வில் அவர்கள் வெற்றி பெற்றால் 
அவர்கள் மீண்டும் PHASE -I  பயிற்சி செல்ல வேண்டும் என 
BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.  மறுபடியும் முதலில் இருந்து..

மதுரை வந்த CMD மதுரை தோழர்களின் அன்பில் நனைந்து இராமேஸ்வரத்தில் மேலும் நனைந்து தனது தமிழக பயணம் பற்றி மட்டற்ற  மகிழ்ச்சியை நமது தலைவர்களிடம் பகிர்ந்துள்ளார். 
வந்த விருந்து கவனித்து..  வரும் விருந்துக்காக 
காத்திருப்பவன் தமிழன் அல்லவா..?

Tuesday, 22 October 2013

NFTE 
போனஸ் போராட்டம் 

BSNL  ஊழியர்களுக்கு
உடனடியாக 
போனஸ் வழங்கக்கோரி 

30/10/2013 அன்று 
நாடு தழுவிய போராட்டம் 


அகில இந்திய , மாநில
மாவட்டத்தலைநகர்களில் 
உண்ணாவிரதம் 

போனஸ்.. 
போராடிப்பெற்ற நமது உரிமை.. 
போராடாமல் அதை இழந்தோம்..
மீண்டும் அதை போராடிப்பெறுவோம்..

அணி திரள்வீ ர்.. தோழர்களே...
அக்டோபர் 22
புரட்சி இளைஞன் 
அஷ்பகுல்லா கான் 
பிறந்த நாள் 

கொள்ளைக்கார  வெள்ளையனிடமே 
கொள்ளையடித்தவன்..
ககோரி ரயில் கொள்ளையின் கதாநாயகன்..
அன்னையின் விலங்கொடிக்க 
ஆயுதம் ஏந்தியவன்..
அல்லாவின் நாமம் சொல்லி 
தூக்கு கயிற்றை 
முத்தமிட்ட  முதல் இந்திய முஸ்லிம்..
அஷ்பகுல்லா புகழ் போற்றுவோம்.. 

Monday, 21 October 2013

JAO SC/ST தோழர்கள் 
மறு ஆய்வு முடிவு வெளியீடு 

JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாத SC/ST தோழர்களின் தேர்வு முடிவுகள் 
மறு பரிசீலனை செய்யப்பட்டு கீழ்க்கண்ட தோழர்கள் 
தேர்வு பெற்றதாக அறிவிக்கபட்டுள்ளது.

1. தோழர். P. முத்துச்சாமி, SSS - சேலம் 

2. தோழியர். D. கண்ணகி,   SSS - திருச்சி 

தேர்வு பெற்ற தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள் .

Sunday, 20 October 2013

மகளிர் சிறப்பு விருப்ப ஓய்வூதியத்திட்டம் 
இங்கல்ல.. COAL INDIAவில்..

AITUC, CITU, BMS, INTUC மற்றும் HMS சங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் COAL INDIA நிறுவனத்தில் மகளிருக்கான சிறப்பு 
விருப்ப ஒய்வுத்திட்டத்தை நடைமுறைப்படுத்த COAL INDIA நிர்வாகம் சம்மதித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 

இது விருப்ப ஓய்வாக மட்டுமில்லாமல் வாரிசுக்கு வேலை திட்டமாகவும் நடைமுறைப்படுத்தப்படும் . இத்திட்டத்தின் மூலம் COAL INDIA நிறுவனத்தில் பணிபுரியும் ஏறக்குறைய 10000 தோழியர்கள் தங்களது வாரிசுக்கு வேலை கிடைப்பதற்காக விருப்ப ஓய்வு திட்டத்தில் செல்லத்தயாராக இருப்பதாக கூறப்படுகின்றது.

நமது நிறுவனத்திலும் இது போன்ற திட்டம் வந்தால் 
உடனடியாக செல்வதற்கு தாயார்கள் (தந்தையார்களும்) தயார்.. தயார்..

Friday, 18 October 2013

நத்தையாய் நகரும் 
78.2 IDA இணைப்பு FILEகள்

01/01/2007க்குப்பின்  ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 
78.2 சத IDA இணைப்பை அமுல்படுத்துவதற்கான குறிப்புகள் அடங்கிய கோப்புகளை (FILEகளை)  செப்டம்பர் இறுதிக்குள் 
ஓய்வூதிய இலாக்காவிற்கு அனுப்பிட 
BSNL நிர்வாகத்தை DOT கேட்டுக்கொண்டிருந்தது. 

ஆனால் 20 நாட்கள் தாமதத்திற்குப்பின் தற்போதுதான் FILE 
DOT செயலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து பைல்கள் தங்களது பயணத்தை  மேலும் தொடர இருக்கின்றன.

நத்தையும் நக்கல் செய்யும் வேகம் 
நமது அலுவலக பைல்களின் வேகம்.
FILES COMPLAINT என்பது அரசு நிறுவனங்களின் 
பரம்பரை வியாதி போலும்..

எது எப்படியோ.. மூத்த குடிமக்களின் 78.2 IDA இணைப்பு அவர்கள் மூச்சுக்காலத்திற்குள் கிடைத்தால் சரி..

Thursday, 17 October 2013

JAO தேர்வு 
SC/ST  தோழர்களின் தேர்வு முடிவு மறு ஆய்வு 

டிசம்பர் 2012ல் JAO தேர்வு எழுதி தேர்ச்சியுறாத 
SC/ST தோழர்களின் தேர்வு முடிவுகளை 08/01/2007ல் வெளியிட்ட வழிகாட்டுதலின்படி மறு ஆய்வு செய்திட மாநில நிர்வாகங்களுக்கு CORPORATE அலுவலகம் 17/10/2013 அன்று உத்திரவிட்டுள்ளது.
அதன்படி..

1. குறித்த JAO காலியிடங்களுக்கு போதிய SC/ST    
    தோழர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் மறு ஆய்வு 
    செய்ய அவசியமில்லை.

2.போதிய SC/ST  தோழர்கள் தேர்ச்சி பெறாத நிலையில்,  
எல்லா பாடங்களிலும் குறைந்த மதிப்பெண் (minimum marks)  பெற்று 
கூட்டு மதிப்பெண்கள் (Aggregate marks)  பெறாத தோழர்களுக்கு 
கூடுதல் மதிப்பெண்கள் GRACE MARKS அளிக்கப்பட்டு 
காலியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

3. ஒரேயொரு பாடத்தில் மட்டும் தேர்ச்சி பெறாதவர்களை 
கீழ்க்கண்டவாறு ஆய்வு செய்திடவேண்டும்.

பாடம் III CPWDல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 
5 மதிப்பெண்கள் வரை GRACE MARKS அளிக்கலாம்.
அதன்பின்னும் காலியிடங்கள் நிரப்பப்படவில்லையென்றால் 

பாடம் II WORKSல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 
5 மதிப்பெண்கள் வரை GRACE MARKS அளிக்கலாம்.
அதன்பின்னும் காலியிடங்கள் நிரப்பப்படவில்லையென்றால் 

பாடம் I - TRAல் தேர்ச்சி பெறாதவர்களுக்கு 
5 மதிப்பெண்கள் வரை GRACE MARKS அளிக்கலாம்.

மேற்கண்ட வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் 
SC பிரிவில் இரண்டொரு தோழர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கிட்டலாம். 
ST  பிரிவில் காலியிடங்கள் இருந்தும் போதிய தோழர்கள் தேர்வு எழுதாதால் யாருக்கும் பலன் கிட்டாது.

Wednesday, 16 October 2013

செய்திகள் 
செப்டம்பர் மாதம் நாடு முழுக்க ஏறத்தாழ 44 லட்சம் புதிய GSM செல் இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த இணைப்புக்கள் முழுக்க தனியார் நிறுவனங்களால் கொடுக்கபட்டுள்ளன.  MTNL நிறுவனம் 90 ஆயிரம் இணைப்புக்களை சென்ற மாதம் இழந்துள்ளது. BSNL நிறுவனம் இணைப்பும் இன்றி இழப்பும் இன்றி நிற்கின்றது.

தேசிய பாதுகாப்புக்குழு - NATIONAL SECURITY COUNCIL 
BSNL மற்றும் MTNL நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையில் வெளிநாட்டு நிறுவனங்களிடம் தொழில் நுட்பங்களுக்காக கையேந்தி நிற்பதை விட தங்களுக்கென்று REASEARCH AND DEVELOPMENT 
R&D  அமைப்பை உருவாக்க வேண்டும் என கூறியுள்ளது.. 

Tuesday, 15 October 2013

பக்ரீத் 
நல் வாழ்த்துக்கள் 


பகுத்துண்டு.. 
பல்லுயிர் காக்கும் 
பண்பாடு தந்த 

புனிதமிகு 
ஹஜ் பெருநாள் 
நல் வாழ்த்துக்கள்.

பகிர்ந்துண்போம்.. 
சேர்ந்துண்போம்..

அக்டோபர் 
IDA  உத்திரவு 

01/10/2013 முதல் 6.6 சத IDA உயர்விற்கான 
BSNL உத்திரவு 
இன்று 15/10/2013 வெளியிடப்பட்டுள்ளது. 
மொத்தப்புள்ளிகள் 85.5.

நூறு சதத்திற்கு இன்னும் 
14.5 சதமே பாக்கி.

Sunday, 13 October 2013

நாதியற்ற..  நலத்திட்டங்கள் 

2013-14க்கான DOTன் ஆண்டறிக்கையை முழுமை செய்வதற்காக செப்டம்பர் 2013 வரை BSNLலில் அமுல்படுத்தபட்ட 

மகளிர் முன்னேற்ற திட்டங்கள்  
உடல்  ஊனமுற்றோர் நலத்திட்டங்கள்
மற்றும் SC/ST ஊழியர்களுக்கான சிறப்புத்திட்டங்கள் 

பற்றி BSNL நிர்வாகத்திடம் DOT விரிவான அறிக்கை கேட்டுள்ளது.  அரசு பொதுத்துறை என்ற முறையில் பல்வேறு நலத்திட்டங்களை அமுல்படுத்த வேண்டியது BSNLன் கடமையாகும்.

ஆனால் மேற்கண்ட 3 பிரிவிலும் நலத்திட்டங்கள்  குறிப்பிடத்தக்க அளவு ஒன்று கூட அமுல்படுத்தப்படவில்லை என்பது 
கசப்பான உண்மையாகும்.

மகளிருக்கு சிறப்பு விடுப்பு என்ற 
நமது கோரிக்கை நிர்வாகத்தின் காதில் ஏறவில்லை.
SC/ST ஊழியருக்கு நாலு கடப்பதவி உயர்வில் ஒதுக்கீடு என்ற கோரிக்கையும் நிர்வாகத்தின் மண்டையில் உரைக்கவில்லை. 
உடல் ஊனமுற்றோருக்கு பதவி உயர்வில் வாய்ப்பில்லை. 
சிறப்பு படிகளும் இல்லை.  

மேற்கண்ட 3 பிரிவினருக்கும் BSNLக்கென 
தனியான  சிறப்பு திட்டங்கள் இது வரை இல்லை. 
இதனை அமுல்படுத்திட..
 நலத்திட்டங்களில் BSNL முன்னோடி என்ற நிலை உருவாக்கிட  சிந்திப்போம்.. தோழர்களே..

Saturday, 12 October 2013


ஆயுதம் செய்வோம்..

ஆயுதம் செய்வோம்..
நல்ல காகிதம் செய்வோம்...

கொடிய 
ஆயுதமும்.. காகிதமும்.. 
வெல்வோம்..
01/01/2007க்குப்பின் பணியமர்ந்த 
ஊழியர்களின் சம்பள பிரச்சினை

01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த தோழர்களின்,  குறிப்பாக TTA தோழர்களின் அடிப்படைச்சம்பளம்
குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டது. 

இதனால் பல தோழர்களுக்கு சம்பளப்பிடித்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்தப்பிரச்சினை BSNL நிர்வாகத்துடன் விவாதிக்கப்பட்டு 08/10/2013 அன்று நமது சங்கத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்படும் என்று கூறப்பட்டது.  எனவே இப்பிரச்சினையை உடனடியாக முடிக்க வேண்டும் என நமது சங்கம் 
நிர்வாகத்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இப்பிரச்சினை சம்பந்தமாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளதும், 01/01/2007க்குப்பின் JAO/JTO தோழர்களின் சம்பளம் கூடுதல் ஆண்டு உயர்வுத்தொகை அளிக்கப்பட்டு
 சரி செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.  

Friday, 11 October 2013

 இராஜபாளையம் 
NFTE
 கிளை மாநாடு 

12/10/2013 - சனிக்கிழமை 
மாலை 4 மணி 
தொலைபேசி நிலையம் 
இராஜபாளையம்.

பங்கேற்பு 

தோழர். சக்கணன் 
விருதுநகர் மாவட்டச்செயலர் 
தோழர். மாரி 
காரைக்குடி மாவட்டச்செயலர் 

மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 
தோழர். சேது 
மற்றும் முன்னணித்தோழர்கள்..

தோழர்களே.. வருக..
ADHOC போனஸ் கொடு..
மத்திய சங்கம் வலியுறுத்தல்.. 

மூன்று ஆண்டுகளாக போனஸ் மறுக்கப்பட்ட 
BSNL  ஊழியர்களுக்கு உடனடியாக தற்காலிக போனஸ் வழங்கக்கோரி 
நமது மத்திய சங்கம் BSNL நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது.  

புதிய போனஸ் கணக்கீட்டை உருவாக்குவதற்காக
 குழு ஒன்று அமைக்கவும் நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. 

ஊழியர்களின் உரிமையான போனசை தொடர்ந்து BSNL மறுத்து வரும் அவல நிலை கண்டு கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாதெனவும் நிர்வாகத்திற்கு  எச்சரிக்கை மணி அடித்துள்ளது.. 

Wednesday, 9 October 2013

பலே.. பாலமுருகன்..

தேவகோட்டை NFTE கிளைச்செயலர் தோழர்.பாலமுருகன்,TTA 
விருப்ப மாற்றலில் 09/10/2013 அன்று திருவாடானை
தொலைபேசி நிலையத்தில் பணியில் சேர்ந்தார்.

இதிலென்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்கலாம்..
தொடர்ந்து படித்தால் புரியும்..

சென்ற மாதம் நடைபெற்ற TTA பணி நியமனத்தில்
தோழர்.அண்ணாமலை, TMக்கு TTAவாக
திருவாடானை தொலைபேசி நிலையத்திற்கு உத்திரவு வழங்கப்பட்டது.
தோழர். அண்ணாமலை பணியில் சேர்ந்தபின்
திருவாடானையில் 6 ஆண்டுகளாக மாற்றலுக்கு காத்திருக்கும் தோழர்.முத்துகுமாரசாமி,TTA காரைக்குடிக்கும்,  
தோழர். மாதவன், TTA தேவகோட்டைக்கும், 
தோழர்.கார்த்திகேயன்,TTA காரைக்குடிக்கும் 
மாற்றலில் விடுவிக்கப்பட வேண்டும். 

ஆனால் தோழர். அண்ணாமலையின் புதல்வன் விசித்திரமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரால் தொலைதூரத்தில் உள்ள திருவாடானைக்கு செல்ல இயலவில்லை. எனவே மீண்டும் TMஆக சென்று விடலாம் என்ற எண்ணத்திற்கு வந்து விட்டார். இந்த நிலையில் தோழர். பாலமுருகனிடம் இது பற்றி விவாதித்தோம். உடனடியாக எந்த தயக்கமும் இன்றி தோழர். அண்ணாமலைக்காக தான் திருவாடானை செல்ல தயார் என்றும் இதனால் அண்ணாமலை மட்டுமின்றி மாற்றலுக்காக காத்திருக்கும் மற்ற 3 TTAக்களும் பயன் பெறுவார்கள் என்றும் மகிழ்ச்சியுடன் கூறினார்.  உடனடியாக நிர்வாகத்தை சந்தித்து திருவாடானைக்கு விருப்ப மாற்றல் கடிதம் கொடுத்தோம். தற்போது தோழர். அண்ணாமலையின் திருவாடானை மாற்றல் ரத்து செய்யப்பட்டு அருகில் உள்ள திருப்பத்தூரில் TTAவாக பணியில் சேர்ந்து விட்டார். மாற்றலுக்காக காத்திருந்த மற்ற 3 TTAக்களும் அவரவர் விருப்ப இடங்களுக்கு விடுக்கப்படுகின்றனர். 

மாற்றல் என்பது இன்று தொழிலாளியை மிகவும் ஆட்டிப்படைக்கும் பிரச்சினையாக உள்ளது. மேல்மாடி கீழ்மாடி மாற்றல்  கூட 
தொழிற்சங்க பிரச்சினையாக, மோதலாக மாறி விடுகின்றது. 
இந்த சூழலில் தனது தன்னலம் கருதாது 
4 பேருக்கு நல்லது நடந்தால் தான் ஒருவன் சிரமம் அடைந்தாலும் பரவாயில்லை என்று முடிவெடுத்த 
தோழர். பாலமுருகனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் தோழர். அண்ணாமலை உள்ளிட்ட தோழர்கள் FNTO சங்கத்தை சேர்ந்தவர்கள். 
FNTO தோழர்களுக்காக தன்னலம் கருதாது 
மனித நேயத்துடன் செயல்பட்ட 
NFTE கிளைச்செயலர் பாலமுருகனின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம். 

அரிது.. அரிது.. மானிடராய் பிறத்தல் அரிது..
பிறந்த காளையும் கூன் குருடு செவிடு பேடு 
தன்னலம் நீக்கி.. 
தோழர். பாலமுருகன் போல் பிறத்தல் அரிது..

Tuesday, 8 October 2013

செய்திகள் 

01/10/2013 முதல் உயர்ந்துள்ள 
6.6 சத  IDA உயர்விற்கான  உத்திரவை 
04/10/2013 அன்று DPE  வெளியிட்டுள்ளது. 
BSNL உத்திரவு விரைவில் வெளிவரும்..

08/10/2013 அன்று DIRECTOR(HR) உடன் 
நமது சங்கம் நடத்திய  விவாதத்தில் 
போனஸ், RM/GR Dதேக்கநிலை, 
01/01/2007க்குப்பின் பணியமர்ந்த தோழர்களின் சம்பள பிரச்சினை, 
BSNLலில் பணியமர்ந்த தோழர்களின் ஓய்வூதியம், 
 OFFICIATING TTAக்களின் பதவி உயர்வு, TTAஆளெடுப்பு, 
நாலு கட்டப்பதவி உயர்வில் இரகசிய குறிப்பேடுகளின் சராசரி குறிப்பு,  
JTO தேர்வு முடிவுகளை வெளியிடுதல் 

போன்ற பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. 
சாதகமான முடிவுகள் அடைந்திட 
நமது முயற்சி தொடரும்..

தமிழ்மாநில கூட்டாலோசனைக்குழு ஊழியர் தரப்புக்கூட்டம் 
தோழர். பட்டாபி தலைமையில் 08/10/2013 அன்று சென்னையில் நடைபெற்றது. தேசிய கூட்டாலோசனைக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர். பட்டாபி அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நவம்பர் இறுதிக்குள்
 கூட்டாலோசனைக்குழு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அக்டோபர் 9 - 
ஜுனாகட்  மத்திய செயற்குழு முடிவின்படி 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

கோரிக்கைகள்:
BSNL நிர்வாகமே..

உடனடியாக போனஸ் வழங்கு.. 
RM/GR'D தேக்க நிலையை சரி செய்.. 
01/01/2007க்குப்பின் பணியமர்ந்தர்களின் சம்பள பிரச்சினையை சரி செய்.. 
4 கட்ட பதவி உயர்வு குளறுபடிகளை சரி செய்.. 
GPF பட்டுவாடவை முறைப்படுத்து..
78.2 சத IDA இணைப்பிற்கான நிலுவையை வழங்கு..
LTC, மருத்துவப்படி  மீண்டும் வழங்கு..
மத்திய அரசு ஊழியருக்கு இணையான படிகள் வழங்கு..
JAO/JTO ஆளெடுப்பு விதிகளில் மாற்றம் செய்..
கருணை அடிப்படை வேலை விதிகளைத் தளர்த்து..
TELECOM FACTORYயை மேல்நிலைப்படுத்து..
JTO OFFICIATING செய்யும் TTAக்களை நிரந்தரப்படுத்து..
விடுபட்ட TSM மற்றும் மஸ்தூர்களை நிரந்தரப்படுத்து..
அனைத்து கேடர்களுக்கும் தகுந்த பெயர் மாற்றம் செய்..
78.2 சத IDA இணைப்பை அனைத்து ஊழியருக்கும் அமுல்படுத்து..
50 சத DAவை உடனே இணை.. புதிய சம்பளக்குழு உருவாக்கு..

காரைக்குடியில்..
GM அலுவலகம் முன்பாக 
09/10/2013 மாலை 5 மணிக்கு 
ஆர்ப்பாட்டம்..
தோழர்களே.. அணி.. திரள்வீர்..

Saturday, 5 October 2013

அக்டோபர் - 5
இடது சாரி இயக்கத்தின் 
நாடு தழுவிய மறியல் 

விஷம் போல் ஏறும் விலைவாசி 
கட்டுப்படுத்த இயலா பணவீக்கம் 
வேலை இல்லாத்திண்டாட்டம் 
குறைந்த பட்சக்கூலி பத்தாயிரம் 
விவசாயிகளுக்கு மானியம் 

என்று  மக்களை வதைக்கும் 
10 அம்ச பிரச்சினைகளை தீர்க்க கோரி 
இன்று இந்திய பொதுவுடைமை கட்சி சார்பாக 
நடந்த மறியலில் மதுரையில் 

நமது மூத்த வழிகாட்டி  
மாநில சங்க சிறப்பு அழைப்பாளர் 
தோழர். சேது 
அவர்கள் பங்கேற்று கைதானார்.

மக்கள் பிரச்சினையில் மனதார ஈடுபடுத்திகொள்ளும்
தோழர்.சேது அவர்களை வாழ்த்துகின்றோம்.
ஓய்வு பெற்ற ஏனைய முன்னணித்தோழர்களும் 
எஞ்சிய தம் வாழ்க்கையை மக்களுக்கான 
போராட்டங்களில் ஈடுபடுத்திட வேண்டுகின்றோம்.

Friday, 4 October 2013

நாட்டுக்கு நவராத்திரி.. 
நமக்கோ.. சிவராத்திரி..

நவராத்திரி காலம் துவங்கிவிட்டது..
நாடு முழுக்க போனஸ் பேச்சு துவங்கிவிட்டது..
ஆனால் BSNL ஊழியருக்கோ இனி சிவராத்திரிதான்..

தேனும் பாலும் கிடைத்த தொலைத்தொடர்பில் 
இனி ஏதேனும் கிடைக்குமா என்பதே..
ஊழியரின் இன்றைய ஏக்கமும் எதிர்பார்ப்பும்..

இரயில்வே ஊழியர்களுக்கு உற்பத்தியோடு 
இணைந்த 78 நாள் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது..
அஞ்சல் ED ஊழியர்கள் போனஸ் உச்சவரம்பை 
2500லிருந்து 3500 ஆக்கி விட்டார்கள்..

அடுத்தடுத்து  போனஸ் செய்திகள் இனி தொடரும்..
இரயில்வே ஊழியர்களுக்கு  
GROSS TRAFFIC RECEIPT
மொத்த போக்குவரத்து வருமான அடிப்படையில் 
போனஸ் அறிவிக்கபட்டுள்ளது.
அதே போல் மொத்த அழைப்புக்கள் GROSS MINUTES USAGE அடிப்படையில்
BSNL ஊழியர்களுக்கு  ஏன் போனஸ் வழங்கக்கூடாது?
என்ற நியாயமான கேள்வியை நமது மாநில சங்கம் எழுப்பியுள்ளது...

இரண்டு சங்கங்கள் BSNLலில் அங்கீகாரம் பெற்றுள்ள நிலையில்
இருவரும் இணைந்து இந்த ஆண்டு ஊழியர்களுக்கு 
அவர்களின் பூர்வீக உரிமையான  போனசை  
பெற்றுத்தர போராட வேண்டும்..
இதுவே ஒட்டுமொத்த ஊழியர்களின் இன்றைய எதிர்பார்ப்பாகும்..
அக்டோபர் - 5
அருட்பெருஞ்சோதி 
தனிப்பெருங்கருணை 
வள்ளலார் அவதார தினம் 

ஆணவம் கன்மம்  மாயை என்னும் 
மும்மலங்களை  அறுத்தவன்..
உயிருண்ணும் அவலம் தடுத்தவன்..
சாதீய தீயை அணைத்தவன்...
சமத்துவ சோதியில் கலந்தவன்...
வாடிய பயிரைக்கண்டு வாடிய
வள்ளலார் புகழ் பாடுவோம்...

Thursday, 3 October 2013

JCM
தலமட்டக்குழு  - காரைக்குடி 

காரைக்குடி மாவட்ட JCM தலமட்டக்குழு  
29/10/213 அன்று நடைபெறும் 
என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  
ஊழியர் பிரச்சினை தீர்வில் 
இலாக்கா வளர்ச்சியில் 
BSNLEU சங்கத்துடன் இணைந்து 
புதிய முத்திரையைப் பதிப்போம். 

Tuesday, 1 October 2013

அக்டோபர் - 2
அகிம்சை அரசர் 
அண்ணல் காந்தி 
அவதார தினம் 
இன்று 02/10/2013 தோழர். ஜீவா 
சமத்துவ ஆசிரமம் நடத்திய சிராவயலில் 

தமிழ்நாடு கலை இலக்கியபெருமன்றம் 
மற்றும் 
அண்ணல் காந்தி அமரர் ஜீவா அறக்கட்டளை சார்பாக 

சிறப்பு விழா 
மற்றும் 
சமத்துவ சாப்பாடு 

தவத்திரு. குன்றக்குடி அடிகளார் சிறப்புரை 

தோழர். சி. முருகன் 
கலை இலக்கிய பெருமன்ற செயலர் 
தலைமையில்  தோழர்கள் பங்கேற்பு.

தோழர்களே... வருக ...