Monday, 31 March 2014

ஏப்ரல் 1 
சென்னைக்கூட்டுறவு 
சங்கத்தேர்தல் 

அடுக்குமாடி அடுக்காது...
நாற்பதாயிரம் நடக்காது..
நிலப்பிரச்சினையில் நியாயம் கிடைத்திட..

வட்டிக்கு வாங்கி வட்டிக்கு விடும் வன்கொடுமை முடித்திட...
கடன் அளவிற்கு காப்பீட்டுத்தொகையை உயர்த்திட 
ஓய்வு பெறுவோருக்கு உரிய சலுகை அளித்திட..
SURETY கட்டத்தவறிய கடனை நம் தலையில் 
சுமத்தும் அநியாயம் அகற்றிட..
ஊழல் பெருச்சாளிகள் உறங்கும் பொந்தாக 
கூட்டுறவு சங்கம் மாறும் அபாயம் தடுத்திட..

காரைக்குடி NFTE சங்க வேட்பாளர்கள்  
தோழர்கள். 
கரு.சேதுபதி, 
வே.சுப்பிரமணியன் 
ஆகியோருக்கு வாக்களியுங்கள்...

வரிசை எண்கள் 
கரு.சேதுபதி
வே.சுப்பிரமணியன்
ஏழாண்டுகளாக ஏமாந்தது போதும்..
ஏப்ரல் 1ல் விழித்திடுவீர் தோழர்களே 


விலைவாசிப்படி வீழ்ச்சி 

01/04/2014 முதல் விலைவாசிப்படி 
IDA 2.1 சதம் வீழ்ச்சி அடைந்துள்ளது.  
இதனால் மொத்தம் 90.5 சதம் இருந்த விலைவாசிப்படி 
தற்போது 88.4 சதமாக குறைந்துள்ளது. 

விலைவாசிப்படி  படியிறங்கி விட்டது. 
ஆனால் விலைவாசிதான்  இறங்கவில்லை. 
அது படிப்படியாக ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. 
தொடரும்.. துயரங்கள்..


கடலூர்  முன்னாள் மாவட்டச்செயலரும் 
முன்னாள் மாநிலச்சங்க நிர்வாகியும் 
 முன்னோடித்தோழருமான 

அன்புத்தோழர்.
P .பிச்சைப்பிள்ளை 
அவர்கள் இன்று 31/03/2014  மறைந்தார்.

நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

Friday, 28 March 2014

T M T C L U 
தமிழகத்தொலைத்தொடர்பு 

ஒப்பந்த ஊழியர்கள் சங்கம்.


தமிழ் மாநில சிறப்பு மாநாடு
30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கண்ணதாசன் மணிமண்டபம் 
புதிய பேருந்து நிலையம் அருகில் 
காரைக்குடி.

பங்கேற்போர் : தோழர்கள் 

TM. மூர்த்தி - AITUC 
S.குணசேகரன் - MLA 
மீனாள் சேதுராமன் - AITUC 
PL. இராமச்சந்திரன் - AITUC 
R.பட்டாபிராமன் NFTE 
K. சேது - NFTE 
S.தமிழ்மணி -TMTCLU 
ஆர்.கே - TMTCLU 

மற்றும் தோழர்களும்.. தலைவர்களும்...

கூலித்தொழிலாளியே கூடிடு..
போலிகளைப் புறந்தள்ளிடு..
உன்...
வேதனைச்சுமைகள் இறங்கிட .
வேண்டிய உரிமைகள் வென்றிட...
காரைக்குடியில் கரம் உயர்த்திடு..

Thursday, 27 March 2014

தி.க.சி
சிறந்த திறனாய்வாளரும் 
சாகித்ய அகாடமி விருதாளரும் 
தாமரை இதழின் மேனாள் ஆசிரியரும் 
கலை இலக்கியப்பெருமன்றக் காப்பாளரும் 
பொதுவுடமைச்சிந்தனைவாதியுமான 

தோழர். திக.சிவசங்கரன் 

அவர்கள் மறைவிற்கு 
நமது அஞ்சலி..
வாழ்த்துக்கள் 

27/03/2014 அன்று நடைபெற்ற 
சென்னைக்கூட்டுறவுச்சங்கத்தேர்தலில் 
வேலூரில் போட்டியிட்ட அனைத்து 9 இடங்களிலும், 
தஞ்சையில் போட்டியிட்ட 6 இடங்களிலும்
 நமது கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

நமது வாழ்த்துக்கள்..

Wednesday, 26 March 2014

செய்திகள் 

நாடாளுமன்றத்தேர்தல் அன்று அனைத்து மத்திய அரசு மற்றும் பொதுத்துறைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தரைவழித்தொலைபேசி மற்றும் அகன்ற அலைவரிசை இலாக்கா இணைப்புக்களுக்கான (SERVICE CONNECTION) கட்டுப்பாட்டு விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதன்படி ஒரு மாநிலத்தில் உள்ள மொத்த தரைவழித்தொலைபேசி  எண்ணிக்கையில் ஒரு சதமும்,  அகன்ற அலைவரிசை இணைப்பில் 0.25 சதமும் மட்டுமே இலாக்கா இணைப்புக்களாக இருக்க வேண்டும் என உத்திரவிடப்பட்டுள்ளது. 
01/01/2014 நிலவரப்படி நாடுமுழுக்க 1,83,41,482 தரைவழி இணைப்புக்களும், 51,76,693 அகன்ற அலைவரிசை இணைப்புக்களும் உள்ளன. தற்போது தமிழகத்தில் நிர்ணயிக்கபட்ட இலக்கை விட கூடுதலாகவே இணைப்புக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இருந்தபோதும் தேவையின் அடிப்படையில் கூடுதலாக இணைப்புக்கள் வழங்க 
CGMகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Monday, 24 March 2014

ஒப்பந்த ஊழியர் 
விலைவாசிப்படி VDA உயர்வு 

ஒப்பந்த ஊழியர்களுக்கான 
விலைவாசிப்படி  VDA உயர்ந்துள்ளது. 

UNSKILLED ஊழியர்களுக்கு 
A பிரிவு நகரத்தில் ரூ.329/=
B பிரிவு நகரத்தில் ரூ.273/=
C பிரிவு நகரத்தில் ரூ.220/=
ஒரு நாள் கூலியாகும்.

விலைவாசிப்படி உயர்வு 
01/04/2014ல் இருந்து அமுலுக்கு வரும்.
இரங்கல் 

நமது அகில இந்தியத்தலைவர் 
தோழர்.இஸ்லாம் அகமது அவர்களின் 
அருமைப்புதல்வி 
நோய்வாய்ப்பட்டு 
24/03/2014 அன்று இயற்கை எய்தினார்.

நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

Sunday, 23 March 2014

பணி சிறக்க வாழ்த்துக்கள் 

காரைக்குடி மாவட்டத்தலைவராக சிறப்பாக பணியாற்றிய அருமைத்தோழர். நாகேஸ்வரன் அவர்கள் 
பணி நிறைவு பெற்று விட்டதாலும், ஓய்வூதியர்கள் சங்கத்தில் பொறுப்பு வகிப்பதாலும் மாவட்டத்தலைவராக புதிய பொறுப்பாளரை தேர்ந்தெடுக்க இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்டசெயற்குழு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.  

அனைவராலும்  ஒருமனதாக அருமைத்தோழர். 
சி.முருகன், STS 
அவர்கள் காரைக்குடி NFTE  மாவட்டத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

அன்பும், பண்பும், பணிவும், துணிவும் கொண்ட 
தோழர்.முருகன் 
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்..

இதுவரை சிறப்பாக பணியாற்றிய 
தோழர். நாகேஸ்வரன் அவர்களுக்கு 
நமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.. உரித்தாகுக..

மேலும் செயற்குழுவில்
 தோழர்.சே.சரவணக்குமார் 
 TTA /இராமநாதபுரம், அவர்கள் 
மாவட்ட உதவிச்செயலராக 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இளம் தலைமுறையின் பணி சிறக்க 
நமது வாழ்த்துக்கள்.  

Saturday, 22 March 2014

மார்ச் 23
தியாகத்திருநாள் 
பகத்சிங் - சுகதேவ் - இராஜகுரு 
இன்னுயிர் போகும்போதும் 
இன்குலாப் முழக்கம் சொன்ன 
தோழர்களை.. வணங்குவோம்..

காலன் முன் நிற்பினும் 
கடுகளவும் அஞ்சாது 
விடுதலை முழக்கமிட்ட 
வீர மைந்தர்களை 
வணங்குவோம்..

Friday, 21 March 2014

TMTCLU

தமிழ் மாநில தொலைத்தொடர்பு 
ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் 

தமிழ் மாநில சிறப்பு மாநாடு 

30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
புதிய பேருந்து நிலையம் அருகில் 
காரைக்குடி.

பங்கேற்பு 

தோழர் TM. மூர்த்தி 
AITUC  - தமிழ்மாநில பொதுச்செயலர் 

தோழர் S. குணசேகரன், MLA 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 

தோழர் PL. இராமச்சந்திரன் 
தலைவர் - சிவகங்கை AITUC 

தோழர் R. பட்டாபிராமன் 
NFTE - தமிழ் மாநிலச்செயலர் 

தோழர் ஆர்.கே 
TMTCLU  - தமிழ்மாநிலத்தலைவர் 

தோழர் S.தமிழ்மணி 
TMTCLU  - தமிழ்மாநிலச்செயலர் 

தோழர் K .சேது 
NFTE - மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

தோழர்களே.. வருக..

Thursday, 20 March 2014

குஷ்வந்த் சிங் 

சிறந்த பத்திரிக்கையாளரும் 
எழுத்தாளரும் 
நகைச்சுவை நாயகருமான 

குஷ்வந்த் சிங் 

மறைவிற்கு  நமது அஞ்சலி.
===============================================================================
“Freedom is for the educated people  who fought for it. 

We were slaves of the English, 

now we will be slaves of  the educated Indians"

செய்திகள் 

JCM தேசியக்குழுக்கூட்டம் 22/04/2014 அன்று நடைபெறும்.

20 இணைப்புக்களுக்கும் கீழான தொலைபேசி நிலையங்களை மூடுவதற்கு BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. அகன்ற அலைவரிசை மற்றும் அரசு அலுவலகங்களுக்கான இணைப்புக்கள் இருந்தால் 
தொலைபேசி நிலையம் தொடர்ந்து செயல்படும்.

TTA ஆளெடுப்பு விதி TTA RECRUITMENT RULES நிர்வாகக்குழுவின் ஒப்புதலுக்குப்பின்னர் BSNL  BOARD ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

ஏப்ரல் 14 அண்ணல் அம்பேத்கார் பிறந்த தினம் 
அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 2012ல்  JAO தேர்வெழுதி தோல்வியுற்ற பொதுப்பிரிவு OC தோழர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்க இயலாது என BSNL நிர்வாகம் கைவிரித்துள்ளது. ஆயினும் புதிய  பாடத்திட்டத்தின் அடிப்படையில் விரைவில் JAO தேர்வு 
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
சேமநலநிதி...  நிதி ஒதுக்கீடு 

2013-14ம் ஆண்டிற்கான இறுதிக்கட்ட 
சேமநல நிதி ஒதுக்கீடு 
FINAL WELFARE GRANT 
இன்று 20/03/2014 அறிவிக்கப்பட்டுள்ளது.  

மொத்தம்  ரூ.3,95,46,000/= 
நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  

இதில் தமிழகத்திற்கு 
37 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

Wednesday, 19 March 2014

TMTCLU
தமிழ் மாநில தொலைத்தொடர்பு 
ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் 

தமிழ் மாநில சிறப்பு மாநாடு 

30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம் 
புதிய பேருந்து நிலையம் அருகில் 
காரைக்குடி.

பங்கேற்பு 

தோழர் TM. மூர்த்தி 
AITUC  - தமிழ்மாநில பொதுச்செயலர் 

தோழர் S. குணசேகரன், MLA 
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 

தோழர் PL. இராமச்சந்திரன் 
தலைவர் - சிவகங்கை AITUC 

தோழர் R. பட்டாபிராமன் 
NFTE - தமிழ் மாநிலச்செயலர் 

தோழர் ஆர்.கே 
TMTCLU  - தமிழ்மாநிலத்தலைவர் 

தோழர் S.தமிழ்மணி 
TMTCLU  - தமிழ்மாநிலச்செயலர் 

தோழர் K .சேது 
NFTE - மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

மற்றும் தோழர்கள்...

உழைப்பவன் வியர்வை காயுமுன்னே
அவனது கூலி கொடுக்கப்பட வேண்டும் 
என்றார் அண்ணல் நபிகள் நாயகம்..

இங்கோ..
உழைத்து உடல் தேய்ந்தாலும் 
உரிய கூலி இல்லை..

முப்பது நாள் உழைத்தாலும் 
குறித்த நாளில் கூலி இல்லை..

EPF என்பது யார் காதிலும் விழுவதில்லை.. 
கணக்கிலும் அது ஏறுவதே.. இல்லை..

ESI என்னும் மருத்துவத்திட்டம் 
மருந்துக்கு கூட இங்கில்லை..

போனஸ் என்பது கொடுபடா ஊதியம் 
இங்கோ அது.. எடுபடா ஊதியம்..

ஒப்பற்ற பணிகள் புரியும்..
ஒப்பந்த ஊழியனே..

இந்நிலை.. இழிநிலை 
மாற்ற வேண்டாமா?

உன் வாழ்விலே 
மாற்றம் வேண்டாமா?

கரம் உயர்த்து..
காரைக்குடி புறப்படு..
கண்ணதாசன் அரங்கிலே 
உன் கவலை தீர்க்கும் 
காரியம் செய்வோம்....

அன்புடன் அழைக்கும் 
NFTE  - TMTCLU  மாவட்டச்சங்கங்கள் 
காரைக்குடி.
காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு 
காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு 

22/03/2014 - சனிக்கிழமை 
காலை  10 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 

-:விவாதப்பொருள்:-

  • ஒப்பந்த ஊழியர்  தமிழ்மாநில சிறப்பு மாநாடு 
  • சென்னை கூட்டுறவு சங்கத்தேர்தல் 
  • ஊழியர் மாற்றல்கள் 
  • தலமட்டப்பிரச்சினைகள் 
  • மற்றும் ஏனைய பிரச்சினைகள் 

கிளைச்செயலர்கள் 
மாவட்டச்சங்க நிர்வாகிகள் 
JCM உறுப்பினர்கள் 
பணிக்குழு உறுப்பினர்கள் 
சேமநலநிதி உறுப்பினர்கள் 
தவறாது கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

NFTE  மாவட்டச்சங்கம் 
காரைக்குடி.

Monday, 17 March 2014

காட்டுமிராண்டித்தனம் 

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 28 வயதே நிரம்பிய இராஜா என்ற கூலித்தொழிலாளி காட்டுமிராண்டித்தனமாக பாதுகாப்பு படை 
கிங்கரன் ஒருவனால் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். 
நியாயம் கேட்க சென்ற AITUC தோழர்கள்
 மிருகத்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். 

எந்த அரசாக இருந்தாலும் , எந்த நிர்வாகமாக இருந்தாலும் தொழிலாளர்களைத் துன்புறுத்துவது என்பது 
இந்த தேசத்தில் தொடர்கதையாக உள்ளது.

 பாதுகாப்பு படை வீரர்களே ஊழியர்களின் பாதுகாப்பை அழிப்பது மாபாதக செயலாகும். இந்த காட்டுமிரண்டித்தனத்தை கடுமையாக கண்டிக்கின்றோம். AITUCன்  மாநிலந்தழுவிய 
எதிர்ப்புக்கூட்டங்களில் நாமும் பங்கேற்போம். 

Sunday, 16 March 2014

இதயம் கணக்கும்.. 
கண்ணீர் அஞ்சலி 

விருதுநகர் மாவட்டச்சங்கத்தின் 
முன்னோடித்தோழரும் 
அன்புச்சகோதரனுமாகிய
சிவகாசித்தோழர்.

ஜாபர் சாதிக் சேட் 

நேற்று 16/03/2014  இரவு 
மாரடைப்பால் காலமானார்.

அன்பு நிறைந்த சகோதரன்..
பண்பு நிறைந்த தோழன்..
இயக்கத்தில் உணர்வானவன்..
கொள்கையில் உருக்கானவன்..

நேற்று இரவு கலகலப்பாக 
அனைவரிடமும் கை குலுக்கிச்சென்றான் 
இன்றோ நம்மைக் கைவிட்டுச்சென்றான் 

ஈடு இணையில்லாத
அவனது மறைவு 
இயக்கத்திற்கு 
ஈடு செய்ய இயலாத.. இழப்பு..

கண்ணீரை மட்டுமே 
நம்மால் 
காணிக்கையாக்க  முடிகின்றது..

Thursday, 13 March 2014

உலகத்தொழிலாளர்களே.. 
ஓன்று சேருங்கள் 
மார்ச் - 14
கார்ல் மார்க்ஸ் 
நினைவு தினம் 
கடமைகள் இல்லாமல் உரிமைகள் இல்லை 
உரிமைகள் இல்லாமல் கடமைகள் இல்லை


மண்ணுலக அடிமைகளுக்கு 
பொன்னுலகு காட்டிய..
மார்க்சிய வழி நிற்போம்..
மார்க்சின் வழி செல்வோம்..

Wednesday, 12 March 2014

JAC - JOINT ACTION COMMITTEE
அனைத்து தொழிற்சங்கங்களின் 
கூட்டு நடவடிக்கைக்குழு 

தற்போதைய BSNL நிர்வாகத்தின் பயனற்ற அணுகுமுறை, 
ஊழியர்கள் பிரச்சினைகளின் தேக்கம், BSNL நிறுவனத்தின் பின்னடைவு 
ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், 
அனைத்து ஊழியர் சங்கங்களும் ஒன்றுபட்டு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும்,  11/03/2014 அன்று 
புதிய கூட்டு நடவடிக்கைக்குழு JAC துவக்கப்பட்டுள்ளது. 

அனைத்து தொழிற்சங்கங்களும் JACல் இணைந்துள்ளன.
பிரச்சினைகளின் தீர்விற்காக இம்மாத இறுதியில் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டு நடவடிக்கைக்குழு பொறுப்பாளர்கள் 

தலைவர்: 
தோழர். சந்தேஷ்வர் சிங் - பொதுச்செயலர் - NFTE 

ஒருங்கிணைப்பாளர்: 
தோழர். அபிமன்யு - பொதுச்செயலர் - BSNLEU 

இணை ஒருங்கிணைப்பாளர்கள் : 
தோழர்.ஜெயப்பிரகாஷ் - பொதுச்செயலர் - FNTO 
தோழர். பவன் மீனா - பொதுச்செயலர் - SNATTA 

பொருளாளர்: 
தோழர். பாண்டே, பொதுச்செயலர், BTEU BSNL 

நிறுவனத்தை மேம்படுத்துவதில் 
நியாயங்களை நிலைநாட்டுவதில்..

கூட்டு நடவடிக்கைக்குழு 
சிறப்புடன் செயல்பட.. வாழ்த்துக்கள்...

Monday, 10 March 2014

T M T C L U 
தமிழ் மாநில தொலைத்தொடர்பு 
ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
===========================================================
இணைப்பு: AITUC           பிணைப்பு: NFTE 
===============================================


மாநில  சிறப்பு மாநாடு 

30/03/2014 - ஞாயிறு - காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணி மண்டபம் 
காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 

ஆர்.கே

S.தமிழ்மணி 

R .பட்டாபிராமன் 

K.சேது 

R .ஜெயபால் 

PL.இராமச்சந்திரன் 

மற்றும்  தோழர்கள்..

உரிமைகளை வென்றிட.. 
கொடுமைகளைக் கொன்றிட..
உணர்வுடன் வாரீர்..

தோழமையுடன்..

P. இராமசாமி 
மாவட்டச்செயலர் 
TMTCLU  
காரைக்குடி .

Sunday, 9 March 2014

சென்னைக்கூட்டுறவு 
சங்கத்தேர்தல் 

நாள்: 01/04/2014 
செவ்வாய்க்கிழமை 
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

நமது வேட்பாளர்கள் 

தோழர். KR. சேதுபதி 
TM காரைக்குடி 

தோழர். V. சுப்பிரமணியன் 
TM இராமநாதபுரம் 

ஊழல் வேர் கெட..
உண்மை வேர் விட..
வாக்களிப்பீர்... 

வரிசை எண்கள் 
    

Friday, 7 March 2014

 மார்ச் 8
ளிர் திம் 

சுமக்கப்பிறந்தவள் பெண் 
வயிற்றில் சுமப்பாள்.. 
முதுகில் சுமப்பாள்.. 
தோளில் சுமப்பாள்.. 
தலையில் சுமப்பாள்.. 
சுமக்கப்பிறந்தவள் பெண் 

எம்மைச்சுமந்தவளே.. 
உலகைச்சுமந்தவளே.. 
உன் பாதம் பணிகின்றோம்..
மகளிர் தின சிறப்புக்கூட்டம் 
பணி நிறைவு பாராட்டு விழா 
ஒப்பந்த ஊழியர் 
பொதுக்குழுக்கூட்டம் 

08/03/2014 - சனிக்கிழமை 
மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் - சிவகங்கை 

பாராட்டு பெறுவோர் 

தோழியர். 
J.கனகமணி 
TM - சிவகங்கை 

தோழர்.
P. பாஸ்கரன் 
TM - ஒக்கூர் 

:- பங்கேற்பு :- 
V . மாரி 
மாவட்டச்செயலர் - NFTE 
K . தமிழ்மாறன் 
மாவட்ட உதவிச்செயலர் -NFTE 
B. லால்பகதூர் 
மாவட்ட உதவிச்செயலர் -NFTE 
G. சுபேதார் அலிகான் 
மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் - NFTE 

-:சிறப்புரை:- 
P. இராமசாமி 
மாவட்டச்செயலர் - TMTCLU 

தோழர். சேது 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் -NFTE 

தோழர்களே வருக..

அன்புடன் 
B.முருகன் 
கிளைச்செயலர் - NFTE 
சிவகங்கை கிளை.

Thursday, 6 March 2014

புத்தியுள்ள மனிதரெல்லாம் 
வெற்றி காண்பதில்லை..

வீழ்ந்த பின்...
வெற்றி கொண்டான்..

வெற்றி பெற்ற பின் 
வீழ்ந்தான்..
=====================================================================
நாட்டு நடப்பை நினைக்கையிலே 
சந்திரபாபுவின் நினைவுகள்
ஓடுது.. மனத்திரையிலே..
தொழிலாளர்  வைப்பு நிதி 
EPF வட்டி அதிகரிப்பு 

2013-14 நிதியாண்டிற்கு 
EPF தொழிலாளர் வைப்பு நிதிக்கான 
வட்டி விகிதம் 8.5 சதத்திலிருந்து 
8.75 சதமாக 
உயர்த்தப்பட்டுள்ளது. 
இதற்கான அறிவிப்பை 
EPF நிறுவனம் 
இன்று 06/03/2014 வெளியிட்டுள்ளது. 

EPF வட்டி விகிதம் 
1989ல் இருந்து 2011 ஜுன் வரை
 12 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கூறு கெட்ட தொழிலாளர் விரோத  அரசுகள்
அதை கொஞ்சம் கொஞ்சமாக 
8.75 அளவிற்கு குறைத்து விட்டன.

Wednesday, 5 March 2014

MTNL ஓய்வூதியம் 
அரசிதழ் அறிவிப்பு 
GAZETTE NOTIFICATION 

MTNL ஊழியர்களுக்கு 
01/10/2000 முதல் BSNL ஊழியர்களைப்போலவே 
மத்திய அரசின் ஓய்வூதியம் 
அளிப்பதற்கான ஓய்வூதிய விதி திருத்தம் 

CENTRAL CIVIL SERVICES ( PENSION) 
SECOND AMENDMENT RULES 2014 
03/03/2014 அன்று 
மத்திய அரசின் அரசிதழில் 
அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

CCS PENSION RULES 37(A )ன்படி
 MTNL ஊழியர்களுக்கும் 
BSNL ஊழியர்களைப்போலவே 
மத்திய அரசின் ஓய்வூதியம் கிடைக்கும்.
தொலைபேசிக்கட்டணம் 
நேரடி வசூல் 

வாடிக்கையாளர் சேவை மையங்கள் இல்லாத 
தொலைபேசி நிலையங்களில் உள்ள BSNL வாடிக்கையாளர்கள் 
தங்களது தொலைபேசிக்கட்டணத்தை செலுத்த நீண்ட தூரப்பயணமும்  நிறைய நேர விரயமும் செய்ய வேண்டியிருந்தது. 

துணைப்பொதுமேலாளர்(நிர்வாகம்) 
மற்றும் துணைப்பொதுமேலாளர்(நிதி) 
ஆகியோர்  நடத்திய அனைத்து தொழிற்சங்க கூட்ட முடிவின்படி   
மார்ச் மாதம் முதல் காரைக்குடி மாவட்டத்தில்
 வாடிக்கையாளர் சேவை மையங்கள் இல்லாத தொலைபேசி நிலையங்களில் மாதம் ஒருமுறை நேரில் சென்று தொலைபேசிக்கட்டணம் வசூல் செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தப்பணியில் ஈடுபடும் தோழர்களுக்கு 
உணவுப்படியாக நாளொன்றுக்கு ரூ.100/= வழங்கப்படும். 
பயணத்திற்கு இலாக்கா வாகன வசதி அளிக்கப்படும்.

நமது தோழர்கள் இந்தப்பணியில் உளப்பூர்வமாக ஈடுபட வேண்டும். 
மறுதலிப்பது மாண்புடையதல்ல.  தோழர்கள் மறுதலிக்கும் இடங்களில் நமது கிளைச்செயலர்கள் இந்தப்பணியைச் செய்திட வேண்டும். கிளைச்செயலரும் மறுதலித்தால் மாவட்டச்செயலர் தொலைபேசிக்கட்டண வசூல் பணியில் ஈடுபடுவார்.

இன்றைய சூழலில் வாடிக்கையாளர்களை வசப்படுத்துவது.. 
BSNLஐ வலுப்படுத்துவது நமது கடமையாகின்றது. 
BSNLஐகாப்போம் என்ற  மேடை முழக்கத்தோடு ..நில்லாமல் 
 களப்பணி ஆற்றுதல்.. காரியம் முடித்தல் 
என்பதனையும்  மனப்பூர்வமாக செய்து முடிப்போம்..