Sunday 31 August 2014

செய்திகள் 

BSNL உதயம் ஆன 01/10/2000 முதல்  30/06/2001 வரை ஓய்வு பெற்ற தோழர்களுக்கு கடைசி பத்து மாதம் முழுமையாக IDA சம்பளத்தில் இல்லாததால் ஓய்வூதியத்தில் குறைவு ஏற்பட்டது. இதில் பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை  01/09/2014க்குள் அனுப்புமாறு BSNL நிர்வாகம் மாநில நிர்வாகங்களைக்  கேட்டுக்கொண்டுள்ளது.
==============================================================
DELOITTE குழு அறிக்கையின் மீதான கருத்துக்களை 10/09/2014க்குள் தலைமையகத்திற்கு அனுப்புமாறு மாநில CGMகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.
===============================================================
NFTE அனைத்து மாநிலச்செயலர்கள் கூட்டம் 
 06/09/2014 அன்று டெல்லியில் நடைபெறுகின்றது.
===============================================================
EPF வட்டி விகிதம் 8.75 சத அடிப்படையிலேயே தொடருகின்றது.  
மிக நீண்ட போராட்டத்திற்குப்பின்... EPF திட்டத்தில் உறுப்பினர்களாக இருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு  குறைந்தபட்ச ஓய்வூதியம் மாதம் ரூ.1000/= என அரசு உத்திரவிட்டுள்ளது. மாத ஊதிய வரம்புத்தகுதி 6500ல் இருந்து  15000/= எனவும் உயர்த்தப்பட்டுள்ளது.
===============================================================
NFTE உறுப்பினர் சந்தா மாதம் ரூ.25/= என உயர்த்துவதற்கும் 
அகில இந்திய மாநாடு, மாநில மாநாடு  3 வருடத்திற்கொரு முறையும் 
மாவட்ட மாநாடு 2 வருடத்திற்கொரு முறை நடத்துவதற்கும் 
திருத்தங்கள் ஜபல்பூர் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட உள்ளன.
===============================================================
ஜூலை மாதத்தில்  விலைவாசிப்புள்ளி 6 சதம் உயர்ந்துள்ளது. எனவே அக்டோபர் மாத IDA குறைந்தபட்சம் 6.6 சதம் உயர்வதற்கான வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு 2009 ஜூலையில் 
7 சதம் IDA உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
===============================================================
பணி நிறைவு வாழ்த்துக்கள் 
தனிமரமாய் நின்று 
தம்பி தங்கைகளுக்கு 
நிழல் தந்து 
ஏழுலகில் எங்கு 
சங்கக்கூட்டம் நடந்தாலும் 
நடந்தே வந்து சங்கமித்து.... 
எழுத்தர்களும் வேலை செய்ய மறுத்த.. 
வாடிக்கையாளர் சேவை மையத்தில்.. 
அடிமட்டத் தொழிலாளியாய் இருந்தாலும் 
அலுக்காமல் பணி செய்து....

இன்று 31/08/2014 
பணி நிறைவு பெறும் 
பரமக்குடித்தோழர் 
S.வெங்கிடு  
TM அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புற..
அன்புடன் வாழ்த்துகின்றோம்..

Friday 29 August 2014

செப்டம்பர் - 2 - ஈரோடு 
பணிக்குழு கருத்தரங்கம் 
SEMINAR ON WORKS COMMITTEE

பகுத்தறிவுக்குப் பாதை தந்த ஈரோட்டில்...
பணிக்குழு கருத்தரங்கம்...
பணிக்குழு உறுப்பினர்கள்.. 
மாநிலச்சங்க நிர்வாகிகள்.. 
மாவட்டச்செயலர்கள் மற்றும் 
கிளைச்செயலர்கள் பங்கேற்பு...
தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கருத்துரை...
சிறப்பு சிறுவிடுப்பு...

BSNL வளர்ச்சியை 
செழுமைப்படுத்திட...
பணிக்குழு பணிகளை 
செம்மைப்படுத்திடுவோம்....
 வாரீர்... தோழர்களே... 

Wednesday 27 August 2014

TTA ஆளெடுப்பு விதிகள் 2014

TTA பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள் 
BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி 
TTA பதவிகள் 
50 சதம் இலாக்காத்தேர்வு  மூலமும் 
50 சதம் நேரடிப்போட்டி மூலமும் நிரப்பப்படும்.

இலாக்காத்தேர்வு
வயது வரம்பு  55 வயதிற்கு கீழ் 
கல்வித்தகுதி  +2 தேர்ச்சி/2 வருட ITI /3 வருட DIPLOMA தேர்ச்சி  
சேவைத்தகுதி : 9020-17430 சம்பள விகிதத்தில் 5 வருட சேவைக்காலம் 

போட்டித்தேர்வு
வயது வரம்பு:  18 முதல் 30 வரை 
கல்வித்தகுதி: 
DIPLOMA/BE/B.Sc/M.Sc(Electronics/Computer  Science) 

இனிமேல் TTA  பதவி 
மாநில அளவிலான பதவியாக CIRCLE CADRE கருதப்படும். 
ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு இது பொருந்தாது.

தோழர்களே..
BSNL நிர்வாகம்  அறிவித்துள்ள 
மேற்படி ஆளெடுப்பு விதிகளின் மூலம் 
இலாக்கா ஊழியர்கள் TTA ஆவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

ஏற்கனவே இருந்த 10 சத நேரடி நியமனம் நீக்கப்பட்டுள்ளது. 
DIPLOMA தகுதி உள்ள BSNL ஊழியர்களும் 
இனி போட்டித்தேர்வில் பங்கேற்க வேண்டும். 
மேலும் TTA பதவியை  மாநில அளவிலான பதவியாக அறிவித்திருப்பது 
TTA ஆகும் ஆசையை அறவே ஒழிப்பது போல் உள்ளது.

சமீப காலமாக BSNL நிர்வாகம் 
முழுமையான ஊழியர் நலன் சார்ந்த எந்த அறிவிப்பையும் செய்ததில்லை. 
அதில் மேலே கண்ட TTA ஆளெடுப்பு விதிகளும் அடக்கம்.
உண்ணாவிரதம் 
ஒத்திவைப்பு 

முதன்மைப்பொதுமேலாளரின் 
தந்தையாரின் உடல் நலக்குறைவையொட்டி 
CGM ஹைதராபாத் சென்றுள்ளதால் 
28/08/2014 நடைபெறவிருந்த 
மதுரை அநீதிக்கெதிரான 
மாநிலச்செயலரின் 
உண்ணாவிரதப்போராட்டம் 
04/09/2014 வியாழன் அன்று 
நடைபெறும் என்று 
முடிவு செய்யப்பட்டுள்ளது.

தோழர்களே...  
தாமதத்தைப் பயன்படுத்துங்கள்...
தயாரிப்பை வலுப்படுத்துங்கள்...

Tuesday 26 August 2014

மதுரை அக்கப்போர் களைய 
அண்ணல் வழியில் 
மாநிலச்செயலர் அறப்போர் 

மதுரை மலைப்பகுதி 
மாற்றல் பிரச்சினையில் 
மாறுபட்ட  போக்கை கடைப்பிடிக்கும் 
மதுரைத்தாயின் 
மாற்றந்தாய் போக்கை  எதிர்த்தும் 
விதிமுறையற்ற, வரைமுறையற்ற 
நிர்வாகச்சீர்கேடுகளை கண்டித்தும் 

 மாநிலச்செயலர் 
தோழர்.பட்டாபி 
மாநிலத்தலைநகரில் 
28/08/2014 முதல் 
காலவரையற்ற 
உண்ணாவிரதம்.

பணி செய்தது போதும்..
நிர்வாகப் பிணியகற்ற..
தோழனே..  புறப்படு...
புதிய அலுவலகம் 
கண்டு வருவோம்...
புதிய வரலாறு 
படைத்து வருவோம்...

Monday 25 August 2014

ஆகஸ்ட்  - 26
அன்னை தெரேசா 
பிறந்ததினம் 

இல்லறம் கண்டிருந்தால் 
ருவருக்குத்தான் அன்னை...

நல்லறம் கண்டதனால் 
நானிலத்திற்கே அன்னை...

அன்புத்தெரேசா 
அன்னைத்தெரேசா 
புனித தெரேசா 
புகழ் போற்றுவோம்..

Sunday 24 August 2014

செய்திகள்

22/08/2014 அன்று டெல்லியில் நடைபெற்ற அனைத்து CGM கூட்டத்தில் நமது இலாக்கா அமைச்சர் திரு.இரவிசங்கர் பிரசாத் கலந்து கொண்டு உரையாற்றினார். அனைத்து முதன்மைப்பொதுமேலாளர்களும்   BSNL வளர்ச்சிக்கு முனைப்புடன் செயலாற்ற வேண்டும் எனவும் அவர்களை விட மிகுந்த  முனைப்புடன் அரசு BSNL வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் உறுதிபடக்கூறியுள்ளார். மறுமுறை சந்திக்கும் போது BSNL உயர்வான இடத்தில் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். 
அமைச்சரின் உரை அதிகாரிகளுக்கு உறைக்குமா?
 என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
=========================================================
ஓய்வு பெற்ற, ஓய்வு பெறப்போகும் பல தோழர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை வழக்குகள் பல காலமாகத்தேங்கிக் கிடக்கின்றன. 
இத்தகைய வழக்குகளை உடனடியாக விரைந்து முடிக்க வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
=========================================================
JCM மாவட்ட தலமட்டக்குழுக்களுக்கு உறுப்பினர் நியமனம் செய்யும் பணியை இனிமேல் மாநிலச்சங்கங்களே மேற்கொள்ளலாம் என 
நமது மத்திய சங்கம் அறிவித்துள்ளது. 
மாநிலச்சங்கத்திற்கு மத்திய சங்கமே நியமனம் செய்யும்.
========================================================
2011-12ம் ஆண்டிற்கான வருமானத்தை BSNL நிறுவனம் குறைத்துக் காட்டியதாக கூறி வருமான வரித்துறை 6234 கோடிக்கு வரிகேட்பு அறிவிப்பு செய்துள்ளது. 2011-12ல் BSNL 8850 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது. இப்பிரச்சினையைத் தீர்ப்பது  பற்றி 
நமது இலாக்கா அமைச்சர் நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
========================================================
ஓய்வு பெற்ற தோழர்களுக்கான 78.2 சத IDA இணைப்பு சம்பந்தமாக செலவின இலாக்கா DEPARTMENT OF EXPENDITURE  எழுப்பிய சந்தேகங்களுக்கு 40 நாள் - ஒரு மண்டலம் கழித்து 
DOT தனது பதிலை அனுப்பியுள்ளது.  
காற்று மண்டல வேகத்தில் காலச்சக்கரம்  சுழல்கின்றது. 
காரியங்களோ  நத்தையும் நக்கல்  செய்யும்  வேகத்தில் நகருகின்றன. 
========================================================

Thursday 21 August 2014

வாழ்த்த வருகை தரும் 
அன்புத்தோழர்.சேது 
அவர்களையும்
அருமைத்தோழர். ஆர்.கே., 
அவர்களையும் 
பாசமிகு அண்ணாச்சி 
தோழர்.பொன்னீலன் 
அவர்களையும் மற்றும் 
அனைத்து தோழர்களையும் 

வருக.. வருகவென.. 
வணங்கி வரவேற்கின்றோம்...

Wednesday 20 August 2014

ஆகஸ்ட்  21
தோழர். ஜீவா 
பிறந்தநாள் 
காலுக்கு செருப்பில்லாத 
 கூழுக்கு வழியில்லாத 
பாழுக்கு உழைத்து 
உடல் நசியும்...
பாட்டளிகளின் தலைவன் 
ஜீவா புகழ் பாடுவோம்..

Tuesday 19 August 2014

மதுரை அநீதி களைய 
மாநிலச்செயலர் அறப்போர் 


கால் சிலம்பு கழற்றி...
கண்ணகி நீதி கேட்ட மதுரையில்...
காலில்  விதிகளை போட்டு மிதிக்கும் 
கடமை மறந்த மதுரை நிர்வாகத்தினைக் 
கண்டித்து  மாநிலச்செயலர்
தோழர்.பட்டாபி 
28/08/2014 முதல் 

காலவரையற்ற  
உண்ணாவிரதம் 

தோழர்களே... 
அநீதி களைந்திட.. அணி திரள்வீர்..
==========================================================
"பயமென்னும் பேய்தனை அடித்தோம் 
பொய்மைப் பாம்பைப் பிளந்து 
உயிரைக்குடித்தோம்"

எனும் பாரதியின் வரி சொல்வோம்...

இருந்தால் இருந்தோம்...
எழுந்தால் பெருங்காளமேகம்.. பிள்ளாய்..

எனும் கவி காளமேகம் வழி செல்வோம்...

Monday 18 August 2014

செய்திகள் 

இன்று 19/08/2014 - மாலை காரைக்குடி கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபத்தில் தோழர்.KTK நூற்றாண்டு விழா சிறப்புக்கூட்டம். 
தோழர்.சுப்பராயன் 
AITUC  மாநிலத்தலைவர் சிறப்புரையாற்றுகின்றார்.
=====================================================
BSNL மற்றும் MTNL  நிறுவனங்களை ஒன்றாய் இணைப்பதற்கான வழிமுறைகளை DOT  ஆராய்ந்து வருகின்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரு நிறுவனங்களும் ஏறத்தாழ 21 ஆயிரம் கோடி இழப்பில் உள்ளன. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 
மொத்த சந்தையில் 17 சதம் மட்டுமே.
=====================================================
BSNL மத்திய ஊழியர் நல வாரியக்கூட்டம் 04/09/2014
 அன்று தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
=====================================================
சில மாநிலங்களில் அகன்ற அலைவரிசை பராமரிப்பு தனியாருக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனாலும் பழுதுகள் முறையாக நீக்கப்படாததாலும் செலவினங்கள் கூடுதலாக ஆவதாலும் மேற்கொண்டு  இந்த பணிகளை தனியாருக்கு தரக்கூடாது என 
BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
=====================================================
2013-14 நிதியாண்டில் BSNL 80 லட்சம் செல் இணைப்புக்களை கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 
ஆனால் 61 லட்சம் இணைப்புக்களை BSNL இழந்துள்ளது.

Thursday 14 August 2014


சகிப்பைச்  சொல்லும் காவி 
சமாதானம் சொல்லும் வெண்மை 
சகோதரத்துவம் சொல்லும் பச்சை 
சங்கம் சரணம் சொல்லும் சக்கரம் 

பாரத நாட்டு மணிக்கொடியே..
பட்டொளி வீசிப்பறந்திடு..
பாட்டாளிகள் உயர்ந்திடப் பறந்திடு..

ஏற்றுவோர் எவராயினும் 
எளியோர் வாழ்வு 
ஏற்றம் பெறப்பறந்திடு ..

நொந்தே போயினும்.. 
வெந்தே மாயினும்.. 
உவந்து சொல்வோம்.. 

வந்தே மாதரம்.. 

அனைவருக்கும் 
விடுதலைத்திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

Wednesday 13 August 2014

நலிவடைந்த பொதுத்துறைகள் 
மீட்புக்குழு 
திரு.அருப் ராய் சௌத்ரி
CMD - NTPC 

நலிவடைந்த நிலையில் உள்ள பொதுத்துறைகளை
 நலிவு நிலையில் இருந்து மீட்டு  சீரமைப்பதற்காக மத்திய அரசு,  
சிறந்த நிர்வாகி என்று பெயர் பெற்றுள்ள 
NTPC நிறுவன CMD திரு.அருப் ராய் சௌத்ரி 
தலைமையில் மீட்புக்குழு அமைத்துள்ளது. 

குழு உறுப்பினர்களாக  நலிவடைந்த பொதுத்துறைகளில் இருந்து 
EXECUTIVE DIRECTOR செயல் இயக்குனர் தகுதியில் ஒருவரும், 
DPE/BRPSEயில் இருந்து ஒருவரும் உறுப்பினராக இருப்பார்கள். 

நலிவடைந்த பொதுத்துறைகளை மீட்க தேவைப்படும் நிதி ஆதாரங்களை வளமான நிலையில் இருக்கும் பொதுத்துறைகளிடமிருந்து பெற்று தனி நிதி அமைப்பு உருவாக்குவதற்கான சாத்தியங்களை குழு பரிசீலிக்கும். 

இரண்டு மாதங்களுக்குள் குழு அறிக்கை சமர்ப்பிக்க
 மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

Tuesday 12 August 2014

வாழ்த்துக்கள் 

ஆகஸ்ட் 13 - 14
நெல்லையில் நடைபெறும் 
மூத்த குடிமக்களின் 
AIBSNLPWA 
ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின் 

தமிழ் மாநில மாநாடு 
வெற்றி பெற வாழ்த்துக்கள்..
சீர் வளர்.. சிரில் அறக்கட்டளை ...

தோழர்.சிரில் அறக்கட்டளையின் 15ம் ஆண்டு தமிழ் விழா 11/08/2014 அன்று கடலூரில்  அரங்கு நிறைந்து பங்கேற்றோர் மனம் நிறைந்து சீரோடும், சிறப்போடும் நடைபெற்றது. 

தோழர்.சீனிவாசன் தலைமையேற்க, தோழர்.லோகநாதன் அனைவரையும் வரவேற்றார். அறக்கட்டளையை செவ்வனே நடத்தும் பணியை  பல ஆண்டுகளாக தன் சிரம் மேல் தாங்கிய கட்டளையாகக் கொண்டு சிறப்புடன் பணிபுரிந்த தோழர்.SRC அவர்களின் பணியை முன்னாள் மாவட்டச்செயலர் தோழர்.சுந்தரமூர்த்தி அவர்களும் சங்கு இலக்கியச்சிற்றிதழின் ஆசிரியர் தோழர்.வளவ.துரையன் அவர்களும் பெருமை பொங்க எடுத்துரைத்தனர். இட்ட பணியை இதயம் சுமந்து மேற்கொண்டதை தோழர்.SRC எடுத்துரைத்தார். 

தமிழில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பொதுமேலாளர் திரு.சந்தோஷம் அவர்கள் மிகுந்த சந்தோசத்துடன் பரிசளித்து பாராட்டுரை வாசித்தார். மேலும் கடலூர் தோழர்கள்.செந்தில்குமரன்,  சதாசிவம், காரைக்குடி மாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். 

கேட்போர் மயங்க கேளாதோர் ஏங்க  வேட்ப மொழியும் AITUC மாநிலத்தலைவர் திருப்பூர் தோழர்.சுப்பராயன் அவர்களின் கருத்தாழமிக்க உரை காலத்தின் குரலாய் செவிமடுத்தோர் மனங்களில் நிறைந்தோடியது. 

சான்றோர்கள் , சம்மேளனச்செயலர் தோழர்.ஜெயராமன், தோழர்.கு.ப., தோழர்கள்.அன்பழகன்,ஆனந்தன் என பலர் அரங்கத்திற்கு அணி சேர்த்தனர்.  அலைகள் ஆர்ப்பரித்தாலும் அவை யாவும் கடலுக்குள்.. கடலூருக்குள் அடக்கம்.. 

முத்தமிழின் பெருமை போற்றிய 
சிரில் அறக்கட்டளை 
சிரஞ்சீவித்தமிழாய்.. வாழ்க..வளர்க... 

Monday 11 August 2014

அனைத்து BSNL ஊழியர்கள் 
மற்றும் 
அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு 

ஆட்கொல்லி 
DELOITTE ஆலோசனை நிறுவன 
அறிக்கையை எதிர்த்து 
நாடு தழுவிய 

கண்டன 
ஆர்ப்பாட்டம் 

12/08/2014 - செவ்வாய் - மாலை  5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

ஆளைக்கொல்லும் 
ஆலோசனையை நிறுத்தக்கோரி 
BSNLக்கு உண்மையான உதவிகள் 
வழங்கக்கோரி..
ஒன்றுபடுவோம்.. 
போராடுவோம் 
 தோழர்களே.. வருக...

Saturday 9 August 2014

வாழ்வும்... வீ ழ்வும்...
LIFE AND DEATH 

மரித்து வரும் BSNL நிறுவனத்தை 
எரித்து விடும் நிலைக்கு 
எடுத்துச்செல்ல விட மாட்டோம் 
என நமது துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் 
உறுதிபடக்கூறியதைக்கேட்டு 
உள்ளம் நிறைந்த மிக்க மகிழ்ச்சி... 
நம் எல்லோருக்கும்...

புதிய அரசு அமைந்துள்ளது...
எந்த வேலையும் கிடைக்காமல்...
மூன்று வேளையும் புசிக்காமல்...
இந்த தேசத்தில்...
வாடி வதங்கும் மக்களுக்காக 
மூன்று வேளை உடையுடுத்தி 
வாடாமல் வதங்காமல்.. மக்கள் 
வாட்டம் போக்கப்பாடுபடும் 
புதிய மக்கள் பிரதிநிதிகளை நினைத்து 
நமக்குத் தாங்கவே  முடியவில்லை.. மகிழ்ச்சி..

இத்தகைய புதிய அரசின் அமைச்சர்...
BSNL நிறுவனத்தை வீழ விட மாட்டோம்.. என்று 
கூறியதோடு  நிறுத்தியிருந்தால்.. 
எல்லோருக்கும் நிம்மதி பிறந்திருக்கும்..
ஆனால் 
அடுத்த வரியில்.. BSNL நொடிப்புக்கு காரணம் 
அதன் ஊழியர் செலவுகளே என்று சொன்னதும்... 
அவரது வரிகளுக்கு உடனடி ஒப்பனை செய்து.. 
ஊடகங்கள் ஒரு லட்சம் பேருக்கு விருப்ப ஓய்வு 
என்று செய்திகளை உலவ விட்டதும்தான் 
நமக்குத்தாங்க முடியவில்லை...

ஊழியர் செலவு மட்டும்தான் 
இந்த நிறுவன நொடிப்புக்கு காரணமா?
வேறு காரணங்களே.. கிடையாதா?
ஒத்துக்கொண்டபடி ஓய்வூதிய செலவுகளை 
அரசு  ஏற்றுக்கொண்டாலே..
BSNL எழுந்து விடுமே..
MTNLக்கு ஒரு நீதி..
BSNLக்கு ஒரு நீதியா?

BSNLஐ சாக விடமாட்டோம்...
BSNL ஊழியர்களை வாழ விடமாட்டோம்...
என்பதுதான்... இந்த அரசின் கொள்கையா?

இந்தப்பிறவி முழுக்க... 
இந்த இலாக்கா வளர்ச்சிக்காகவே..
வாழ்ந்து கொண்டிருக்கும் ஊழியர்களை..
அறுபது  அன்று கைகுலுக்கி அனுப்புவார்களா?.. 
இல்லை அதற்கு முன்... 
கழுத்தைப்பிடித்து அனுப்புவார்களா?

என்று  சாதாரண தொழிலாளிக்கு..
சந்தேகங்களும் கேள்விகளும்  எழுகின்றன...
கேட்பது நம் உரிமை..
தீர்ப்பது அரசின் கடமை..

அஞ்சலி

பொழுதெல்லாம் 
பொதுவுடைமைக் கொள்கைக்காக, 
பொதுமக்கள் நலனுக்காக பாடுபட்ட 
இந்தியப்பொதுவுடமை இயக்கத்தின் 
தூத்துக்குடி  மாவட்டச்செயலர் 

தோழர்.மோகன்ராஜ் 
அவர்களின் மறைவிற்கு 
நமது அஞ்சலியை 
உரித்தாக்குகின்றோம்.

அவரது மறைவையொட்டி 
இன்று 9/08/2014
காரைக்குடியில்   நடைபெறவிருந்த
தோழர். KTK அவர்களின் 
நூற்றாண்டு விழா 
19/08/2014 அன்று 
ள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Friday 8 August 2014


தோழர். KTK.தங்கமணி 
நூற்றாண்டு விழா 
சிறப்புக்கூட்டம்  

09/08/2014 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
கண்ணதாசன் மணி மண்டபம் 
காரைக்குடி.

-:தலைமை:-
தோழர். பழ. இராமச்சந்திரன் 
AITUC - மாநிலக்குழு 

பங்கேற்பு 
தோழர்.குணசேகரன் - MLA 
தோழர். தங்கமணி - முன்னாள் MLA 
தோழர்.சேதுராமன் - AITUC மாவட்டத்தலைவர் 
தோழர்.முருகன் - NFTE மாவட்டத்தலைவர் 
தோழர்.மாரி - NFTE மாவட்டச்செயலர் 
மற்றும் தோழர்கள்.

-:சிறப்புரை:- 
தோழர்.சுப்பராயன் 
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் 
AITUC மாநிலத்தலைவர்.

தோழர்களே.. வாரீர்..

Tuesday 5 August 2014

07/08/2014
நாடு தழுவிய 
கோரிக்கை... நாள்.. 

நீண்ட நாள் தேங்கிக்கிடக்கும்
BSNL ஊழியர் பிரச்சினைகளைத் 
தீர்க்கக்கோரி 

 ஆர்ப்பாட்டம் 

07/08/2014 - வியாழன் மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம்
காரைக்குடி.

தோழர்களே.. வாரீர்..

JAC 
அனைத்து ஊழியர்கள் சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு.
காரைக்குடி .

Monday 4 August 2014

J A C 
அனைத்து ஊழியர்கள் சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு 
30 அம்ச கோரிக்கைகள் 
கூடித்தொழில் செய்வோம்.. 

  • ஆண்டு உயர்வுத்தொகை தேக்கநிலை தீர்த்தல்.
  • 01/01/2007க்குப்பின் பணியமர்ந்தவர்களின் ஊதிய முரண்பாடு களைதல்.
  • புதிய போனஸ் கணக்கீடு உருவாக்குதல்.
  • நாலுகட்டப்பதவி உயர்வில் SR.TOA தோழர்களின் குறைகளை நீக்குதல்.
  • கருணை அடிப்படை பணி நியமனத்தில் விதிகளை தளர்த்துதல்.
  • LTC,மருத்துவப்படி,விடுப்பைக்காசாக்கல் ஆகியவற்றை மீண்டும் பெறுதல்.
  • பதவி உயர்வில் அதிகாரிகளுக்கான  E1 சம்பள விகிதம் பெறுதல்.
  • பதவிகளுக்கான உரிய பெயர் மாற்றம் செய்தல்.
  • JTO பதவிகளில் தற்காலிக பதவி வகிக்கும் TTA தோழர்களை நிரந்தரப்படுத்துதல்.
  • BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளித்தல்.
  • இலாக்கா தேர்வுகளில் SC/ST  தோழர்களுக்கான மதிப்பெண்களில் தளர்வு.
  • JTO  மற்றும் JAO தேர்வு முடிவுகளை மறு பரிசீலனை செய்தல்.
  • புதிதாக ஊழியர்களை ஆளெடுப்பு மூலம் நியமனம் செய்தல்.
  • விடுபட்ட மஸ்தூர் தோழர்களை நிரந்தரம் செய்தல்.
  • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம்,EPF,ESI வசதி வழங்குதல்.
  • MANAGEMENT TRAINEE தேர்வெழுத ஊழியர்களுக்கு வாய்ப்பு வழங்குதல்.
  • TM பயிற்சி முடித்து நிரந்தரம் ஆகாதவர்களுக்கு ஊதிய உயர்வு அளித்தல்.
  • மஸ்தூர் தோழர்களுக்கு IDA சம்பள விகிதத்தில் சம்பளம் வழங்குதல்.
  • SC/ST  நிரப்பப்படாத காலியிடங்களை நிரப்புதல்.
  • SR.TOA, DRIVER, மற்றும் TM பதவிகளின் சம்பள விகிதங்களை உயர்த்துதல்.
  • DOT காலத்தில் பயிற்சிக்கு சென்று BSNLலில் பணி நியமனம் பெற்றவர்களை   DOT ஊழியராக கருதுதல்.
  • 01/10/2000க்கு முன் பதவி உயர்வு பெற்று 01/10/2000க்குப்பின் ஆண்டு உயர்வுத்தொகை பெற விருப்பம் கொடுக்க அனுமதித்தல்.
  • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 IDA இணைப்பை வழங்குதல்.
  • முதலாம் ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைதல்.
  • TELECOM FACTORYகளை மறு சீரமைத்தல்.
  • JTO/JAO/TTA/TM தேர்வெழுதுவதற்கான தகுதிகளை தளர்த்துதல்.
  • 01/01/2007ல் இருந்து 78.2 IDA நிலுவை வழங்குதல்.
  • அனைத்து விதமான படிகளையும்  உயர்த்தி வழங்குதல்.
  • அழைப்பு மையங்களில் CALL CENTERகளில் BSNL ஊழியர்களை பணியமர்த்துதல்.
  • அனைத்து ஊழியர்களுக்கும் இலவச SIM  வழங்குதல்.
தோழர்களே..
கூட்டு நடவடிக்கைக்குழு நிர்வாகத்திடம்  மேற்கண்ட பிரச்சினைகள் மீது விவாதம் நடத்தியுள்ளது. 30 கோரிக்கைகளில் கடைசி கோரிக்கையான இலவச SIM மட்டும் நிர்வாகத்தால் தீர்க்கப்பட்டுள்ளது. 
30க்கு ஓன்று பழுதில்லை... 
ஆனாலும் மிக முக்கிய நீண்ட நாள் கோரிக்கைகள் 
இன்னும் தீர்க்கப்படாமலே உள்ளது. எனவேதான் 
07/08/20014 அன்று 
நாடு தழுவிய கோரிக்கை நாள் 
கூட்டு நடவடிக்கைக்குழுவால் அறிவிக்கப்பட்டுள்ளது. 
"கூடித்தொழில் செய்வோம்"
 என பாரதி சொன்னான். நாமும்
கூடித்தொழில் செய்வோம்.. 
கூடித்துயர் தீர்ப்போம்...

Friday 1 August 2014

செய்திகள் 

BSNL BOARD வாரியக்கூட்டம் 05/08/2014 அன்று நடைபெறும் என்று தெரிகின்றது. JTO,TTA மற்றும் இந்தி மொழிபெயர்ப்பாளர்கள் ஆகிய பதவிகளுக்கான புதிய ஆளெடுப்பு விதிகள் 
வாரியக்கூட்ட ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளன. 

ஓராண்டுக்கு மேல் ஆகியும் இன்னும் வெளியிடப்படாத 
JTO போட்டித்தேர்வு முடிவுகளை தமிழகத்தில் உடனடியாக  வெளியிடக்கோரி மத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

அனைத்து மாநிலங்களுக்கும் 2014-15ம்  ஆண்டிற்கான 
DROP WIRE ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ONGC நிறுவனம் தொலைத்தொடர்பு தேவைகளுக்காக  BSNL  மற்றும் MTNL நிறுவனங்களுடன்  5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

சென்னைக்கூட்டுறவு சங்கம் தனது
 செயல்பாடுகளுக்காக விருது பெறவுள்ளது.

2013-14ம் நிதியாண்டில் நமது BSNL நிறுவனம் தரைவழி தொலைபேசி சேவையில் ஏறத்தாழ 15000 கோடி நட்டத்தை சந்தித்துள்ளது.(14979 கோடி)

2014 செப்டம்பர் 2 அன்று மாநிலம் தழுவிய பணிக்குழு கூட்ட 
கருத்தரங்கு ஈரோட்டில் நடைபெறவுள்ளது.

ஆகஸ்ட் 7 அன்று JAC சார்பில்  நாடு தழுவிய கோரிக்கை தினம்.

ஆகஸ்ட் 13, 14 தேதிகளில் AIBSNLPWA அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கத்தின் தமிழ்மாநில மாநாடு நெல்லையில் நடைபெறுகின்றது. மாநிலச்செயலர் தோழர். பட்டாபி சிறப்புரையாற்றுகின்றார்.