Tuesday, 30 September 2014

 வெளிநடப்பு போராட்டம் 
30/09/2014 அன்று 
அனைத்து சங்க கூட்டு நடவடிக்கைக்குழு 
JAC  விடுத்த அறைகூவலுக்கிணங்க 
காரைக்குடி மாவட்டத்தில் 
NFTE - BSNLEU இணைந்த 
வெளிநடப்பு போராட்டம்
 உணர்வுடன் நடத்தப்பட்டது. 
கலந்து கொண்ட தோழர்களுக்கு
 நமது வாழ்த்துக்கள்.

Monday, 29 September 2014

வாழ்க... பல்லாண்டு..

இன்று 30/09/2014 
பணி நிறைவு பெறும் 
NFTE பேரியக்கத்தின் 
முனை மழுங்கா 
முன்னாள் போர்வாள்..
AIBSNLEA இயக்கத்தின் 
இந்நாள் கூர்வாள்...
அடிமட்ட ஊழியர்களின் 
அன்புக்கும் நேசத்திற்கும் 
பாத்திரமான 

அன்புத்தோழர்
N. வீரபாண்டியன் 

அவர்களின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்கிட 
வாழ்த்துகின்றோம்..

இலாக்காப் பணி என்னும் 
தளை நீங்கிய தோழனே..
தளை பட்ட மக்களின் 
தலை நிமிர்ந்திட...
தானைத்தலைவன் 
ஜெகன் வழியில்..
உழைத்திடு...
நானிலம்  போற்றிட 
இன்னும் 
நாற்பது ஆண்டுகள் 
வாழ்ந்திடு...

Sunday, 28 September 2014

போனஸ்ஸ்...
 • மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் உற்பத்தி திறனோடு இணையாத போனஸ் ரூ.3500/=. கூலித்தொழிலாளர்களுக்கு(CASUAL LABOUR) ரூ.1200/=.
 • பாதுகாப்பு துறையில் உற்பத்தியோடு இணைந்த போனஸ் 40 நாட்கள் 
 • இரயில்வேத்துறையில் 78 நாட்கள் போனஸ். அதிகபட்சம் ரூ.8975/=
 • அஞ்சல் துறையில் ED ஊழியர்களுக்கும் சேர்த்து 60 நாட்கள் போனஸ். அதிக பட்ச போனஸ் ரூ.7000/=
ஆனால் ஆண்டாண்டு காலமாக போனஸ் பெற்று வந்த நமது துறையில் மட்டும் போனஸ் இல்லை. நமது மத்திய சங்கம் குறைந்த பட்ச போனஸாக ரூ.3500/= அளிக்க நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. ரூ.3500/= வழங்குவதால் ஆகும் செலவு 75 கோடிக்கும் கீழ்தான். ஆனால் போனஸ் வழங்குவது சம்பந்தமாக 
கீழ்நிலை அதிகாரிகள் கீழ்நிலையாக எழுதுகின்ற குறிப்புகள் 
சாதகமாக இல்லை என்பதே நிர்வாகத்தின் பதிலாகின்றது.

(மாநிலச்சங்க இணையதளத்திலிருந்து)
செய்திகள் 

BSNL  ஊழியர்களுக்குப் போனஸ் வழங்க வேண்டும் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி மத்திய சங்கம் CMDக்கு கடிதம் எழுதியுள்ளது. இதனிடையே மத்திய அரசு ஊழியர்களுக்கு 30 நாட்கள் இந்த ஆண்டு உற்பத்தி திறனோடு இணைக்கப்படாத போனசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
காஷ்மீர் வெள்ள நிவாரண நிதி உதவியாக BSNL  ஊழியர்கள் ஒருநாள் அடிப்படைச்சம்பளத்தை வழங்கக்கோரி CMD வேண்டுகோள் விடுத்துள்ளார். ஏற்கனவே நமது தொழிற்சங்க கூட்டமைப்பு ஒரு நாள் சம்பளத்தைப் பிடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது.
---------------------------------------------------------------------------------
2007க்குப்பின் பணியில் அமர்ந்த TTA தோழர்களின் சம்பளக்குறைப்பை 
சரி செய்யக்கோரி மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.
---------------------------------------------------------------------------------
JTO போட்டித்தேர்வு வினாக்களில் கேட்கப்பட்ட  பல்வேறு குளறுபடிகளை சரி செய்யக்கோரி மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்துள்ளது. ஏறத்தாழ இருபது மாதங்களாய் இப்பிரச்சினை இழுத்தடிக்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------
ERP நடைமுறைப்படுத்தபட்ட பல்வேறு மாநிலங்களில் நடைமுறைச் சிக்கல்கள் வெகுவாக உருவாகியுள்ளன. மற்ற மாநிலங்களிலும்  ERP திட்டத்தை அமுல்படுத்தி மேலும் சிக்கலை உண்டாக்கும் முன்பு ERP திட்டக்குளறுபடிகளை சரிசெய்ய 
ஊழியர் தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------
AIBSNLPWA ஓய்வூதியர்கள் நலச்சங்கம் 
03/10/2014 அன்று சென்னையில் 
வேலை இல்லாத்திண்டாட்டத்தை 
எதிர்த்து போராட்டம் நடத்துகின்றது. 

Friday, 26 September 2014

 போனஸ் வழங்கக்கோரி...
தீராத நெடுநாள் பிரச்சினைகளை..
தீர்க்கக்கோரி..  

செப்டம்பர்  30 
JAC
அனைத்து ஊழியர் சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு 
அறைகூவலின்படி 

நாடு தழுவிய  வெளிநடப்பு 

30/09/2014 - செவ்வாய்க்கிழமை
காலை 11.00 மணி முதல் 
பிற்பகல் 01.00 மணி வரை...

தோழர்களே...
நியாயமற்ற நிர்வாக 
நடப்பைக் கண்டித்து..
வேகம் கொண்டு..
கோபம் கொண்டு..
செய்திடுவோம்..

வெ ளி ந ட ப் பு ..

Wednesday, 24 September 2014

செய்திகள் 

25/09/2014 அன்று டெல்லியில் JCM  தேசியக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. 24/09/2014 அன்று NFTE  சங்க அலுவலகத்தில் 
ஊழியர் தரப்பு விவாதம் நடைபெற்றது.
----------------------------------------------------------------------------------------------------------
கருணை அடிப்படை வேலைக்கான விண்ணப்பங்களை இனிமேல்  மாநில நிர்வாகங்களே பரிசீலிக்கலாம் என்று உத்திரவு வெளியாகவுள்ளது. இதனால் கூடுதல் காலதாமதம் தவிர்க்கப்படும்.
------------------------------------------------------------------------------------------------------------
நமது BSNL நிறுவனத்திடம் அதிகமாக பிடிக்கப்பட்ட 7000 கோடி வருமான வரியை உடனடியாக திருப்பித்தருமாறு இலாக்கா அமைச்சர் 
நிதி அமைச்சகத்தை வலியுறுத்தியுள்ளார். 
------------------------------------------------------------------------------------------------------------
EPF பிடித்தம் செய்யப்படும் BSNL நேரடி நியமன ஊழியர்களின் 
UNIVERSAL ACCOUNT NUMBER எனப்படும் 
UAN பட்டியலை மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு ஊழியரும் UAN எண்ணை EPF இணையதளத்தில் தங்களுக்கான 
USER NAME உண்டாக்கி அதில் செயல்படுத்திக்கொள்ள வேண்டும்.  
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரரிடம் இருந்து 
ஊழியர் வாரியான UAN எண்ணை பெற்றுக்கொள்ள வேண்டும். 
EPF பிடித்தம் செய்யப்படும் ஊழியர்களுக்கு UAN கட்டாயமாகின்றது.
------------------------------------------------------------------------------------------------------------
உரிமைக்குரல் எழுப்பிய 
ஒன்றுபட்ட தர்ணா 

JAC கூட்டு நடவடிக்கைக்குழு அறைகூவலின்படி காரைக்குடி மாவட்டத்தில்  NFTE  - BSNLEU  சங்கங்கள் இணைந்த தர்ணா போராட்டம் காரைக்குடி பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில்  
23/09/2014 அன்று சிறப்பாக நடைபெற்றது. 

NFTE  மாவட்டத்தலைவர் தோழர். முருகன், BSNLEU கிளைத்தலைவர் தோழர். மகாலிங்கம் ஆகியோர் கூட்டுத்தலைமையேற்றனர். BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன், NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி ஆகியோர்  கோரிக்கைகளை விளக்கிப்பேசினர். ஓய்வூதியர்கள் சங்க மாவட்டச்செயலர்கள் தோழர்கள்.முருகன், சுப்பிரமணி, AIBSNLEA மாவட்டச்செயலர் தோழர்.மோகன்தாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  கிளைச்செயலர்களும், முன்னணித்தோழர்களும் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். ஒப்பந்த ஊழியர்களும், 
ய்வு பெற்ற ஊழியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

வரும் 30/09/2014 நடைபெறவுள்ள 2 மணி நேர வெளிநடப்பு போராட்டத்தை வெற்றிகரமாக்கிட தோழர்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டது. 
JACயில் கலந்து கொள்ள FNTO சங்கத்திற்கு  அழைப்பு விடுக்கப்பட்டது.  தோழர்.சுபேதார் அலிகான் நன்றியுரை நிகழ்த்த ஊழியர்களின் உரிமைக்குரல் எழுப்பி தர்ணா இனிதே முடிவுற்றது.

Monday, 22 September 2014

JAC 
கூட்டு நடவடிக்கைக்குழு 
காரைக்குடி மாவட்டம் 

தர்ணா 
23/09/2014 - செவ்வாய்க்கிழமை 
காலை 10 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
காரைக்குடி 

இணைந்த ஆர்ப்பாட்டம் 
இராமநாதபுரம் - பரமக்குடி - சிவகங்கை 

தோழர்களே.. 
ஒன்றுபடுவீர்.......போராடுவீர்.. 
வெற்றி பெறுவீர்..

முக்கிய கோரிக்கைகள் 
BSNL  நிர்வாகமே...
 • ஒரு மாத சம்பளம் குறைந்தபட்ச போனசாக வழங்கு..
 • ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தபட்ச கூலி, போனஸ்,EPF,ESI சலுகை வழங்கு 
 • LTC , மருத்துவப்படியை மறுபடியும் வழங்கு..
 • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 01/01/2007 முதல் 78.2 சத IDA  இணைப்பை வழங்கு.
 • ஆண்டு உயர்வுத்தொகை தேக்க நிலை தீர்த்து வை..
 • SC/ST  தோழர்களுக்கு பதவி உயர்வு தகுதி மதிப்பெண்களில் தளர்வு செய்
 • நாலு கட்டப்பதவி உயர்வு பிரச்சினைகளை தீர்த்து வை..
 • நாலாவது கட்டப்பதவி உயர்வுக்கு அதிகாரிகளின் சம்பள விகிதம் வழங்கு 
 • TTA  தோழர்களின் சம்பள பிரச்சினையைத் தீர்த்து வை...
 •  BSNLலில் பணியமர்ந்த தோழர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்து..
 • பதவிகளுக்கு புதிய பெயர் மாற்றம் செய்..

தோழமையுடன்...
NFTE  - BSNLEU 
மாவட்டச்சங்கங்கள் 
J A C
அனைத்து சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு 
நீண்ட நாட்கள் 
தேங்கிக்கிடக்கும் 
BSNL ஊழியர்களின் 
நியாயமான 
30 அம்சக்கோரிக்கைகளை 
உடனடியாக  தீர்க்கக்கோரி 

தலைநகர் டெல்லி 
மாநிலத்தலைநகரங்கள் 
மற்றும்  
மாவட்டத் தலைநகர்களில் 

நாடு தழுவிய 
தர்ணா 

23/09/2014 - செவ்வாய்க்கிழமை 
காலை 10 மணி.
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

நியாயமான கோரிக்கைகளை... 
நியாயமற்ற முறையில்... 
நீண்ட நாட்களாக 
நிராகரித்து வரும்...

நிர்வாகத்தின்.. 
செவிப்பறை கிழிக்க..
தோழர்களே.. வாரீர்...

தோழமையுடன்  அழைக்கும்..
NFTE  - BSNLEU 
மாவட்டச்சங்கங்கள் 
காரைக்குடி.

Sunday, 21 September 2014

பரவசம் தந்த.... பாரதி விழா
20/09/2014 அன்று காரைக்குடி 
BSNL  பொதுமேலாளர் அலுவலகத்தில்
விடுதலைக்கவி பாரதி விழா 
சிறப்புடன் நடைபெற்றது. 
இசையால், கவிதையால், உரையால் 
பாரதியின் புகழ் போற்றப்பட்டது.
கலந்து கொண்ட அனைவருக்கும் 
நமது நன்றி உரித்தாகுக..
இதனிடையே...
சிறுமதி கொண்ட சிலர் 
பாரதி விழாவை
BSNL அலுவலகத்தில் நடத்தக்கூடாது 
என நிர்வாகத்தை நிந்திக்க...
சிந்திக்க திராணியற்ற ....
நிர்வாகம் நம்மிடம் மறுக்க...
பொறுக்க இயலாத நம் தோழர்கள்
போருக்கு கிளம்ப..
இறுதியில் விழா 
இனிதே நடந்தேறியது..


தடை தாண்டி வாழ்வதும்...
தடை தாண்டி வளர்வதும்...
நம் உதிரத்தில் ஊறியது..
அதுவே பாரதியிடம் நாம் கற்றது..

Friday, 19 September 2014

அஞ்சலி 
மழலையில் 
மாண்டலின் பிடித்து 
மக்கள் மனதை
கொள்ளை கொண்ட 
மாண்டலின் சீனிவாசன் 
மறைவிற்கு 
நமது அஞ்சலி...
பாரதி திருநாள்
சிறப்புக்கூட்டம்

20/09/2014 - சனிக்கிழமை
மாலை 5 மணி
BSNL பொதுமேலாளர் அலுவலகம்
காரைக்குடி.

பாரதி புகழ் பாடுவோர்..

சிறப்பு மிகு இசையில்...
தோழியர்.கரு.லதா

சீர் மிகு கவிதையில்.... 
தோழர்கள்..

ந.சிதம்பரம்...              நாளெல்லாம்  வினை செய்
கா. தமிழ்மாறன்...    கொடுமையை எதிர்த்து நில்
சி. முருகன்...             எண்ணுவது உயர்வு
வெ.மாரி...                  முனையிலே முகத்து நில்

சிந்தனை வளர் உரையில்...

முனைவர் - பேராசிரியர்
பழனி இராகுலதாசன்

நல்லாசிரியர்  - தோழியர்
இரா. வனிதா

நாவலாசிரியர் - தோழர்
பொன்னீலன்

நிறைவில்...
தோழர். க. சுபேதார் அலி கான்

மனிதம் போற்றிய.. 
பாரதி போற்றுவோம்...

சிறியன...சிந்தியாரே...
சீரியலை...  சிந்தியாரே..
வருக.. வருக..
 

Thursday, 18 September 2014

1968 
செப்டம்பர்-19 
போராட்டத்திருநாள் 

1968 செப்டம்பர் 19 
இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் திருநாள்...

குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல்..
விலைவாசிப்படி கணக்கீட்டை மாற்றியமைத்தல் 
விலைவாசிப்படியை சம்பளத்துடன் இணைத்தல் 

என்ற மூன்று முக்கிய கோரிக்கைகளின் மீது 
தபால் தந்தி  - இரயில்வே  - பாதுகாப்பு 
என மூன்று முக்கிய சக்திகள் சங்கங்கள் சேர்ந்து 
நடத்திய போராட்டத்திருநாள்.

மூன்று லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.
இதில் பாதிக்கும் மேல் கைதாகினர்...
கைதானவர்களில் பாதிக்கும் மேல் தபால் தந்தி ஊழியர்கள்..
ஏறத்தாழ ஒன்பதாயிரம் பேர் தற்காலிகப்பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதில் தபால் தந்தி ஊழியர்கள் 3756 பேர்...
44000 தற்காலிக ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்..

பத்தான்கோட்டில்.. பீக்கானீரில்.. பொங்கைகானில்...
9 இரயில்வே தொழிலாளர்கள்
 துப்பாக்கி குண்டுகளை நெஞ்சில் ஏந்தினர்...

தொழிலாளர் கண்ணீரைத்துடைக்க வேண்டிய அரசு 
கண்ணீர்ப்புகை  குண்டுகளை வீசியது...

வயிற்றுக்கு வழியின்றி 
தெருவில் நின்ற தம் குடும்பத்தினரின் 
பசியை தீர்க்க முடியாமல் 
தோழர்கள் பலர் தம் வாழ்வை முடித்துக்கொண்டனர்...

செப்டம்பர் போராட்டம் 
ஈரத்தை நினைவூட்டும்..
வீரத்தை வலுவூட்டும்...

இந்த மகத்தான போராட்டத்தின்
தளபதி தோழர்.ஞானையா 
இன்றும் வாழ்கின்றார்..

கொள்கை விளக்கமும் 
கோட்பாடு வரையறையும் 
அரசியல் தெளிவும் 
தொழிற்சங்க அனுபவமும் 
உலகப்பார்வையும் 
அவரிடம் நாம் பருகிட.. பருகிட 
அது.. அமுத சுரபியாய் 
 அவரிடம் பெருகிடும்...

68 போராட்டத்தின் சாட்சியங்கள்
 இன்று பணியில் இல்லாவிட்டாலும்...
ஓய்வு பெற்று உணர்வு பெற்று வாழ்கின்றார்கள்..

68ல் பணி நீக்கம் செய்யப்பட்ட 
காரைக்குடி தோழர்.அண்ணாமலை 
இன்றும் அதன் சாட்சியாய் வாழ்கின்றார்...

கவிஞனின் கற்பனை போல்..
போர் வீரனின் அனுபவம் போல்..
அவர்களது 68 போராட்ட 
அனுபவம் அலுக்காது... 

அது அனுபவம்  மட்டும் அல்ல..
அவர்களுக்கும்....
வாழ்ந்து கொண்டிருக்கும் 
நமக்கும்.. ஆன்ம பலம்..

தலை வணங்குவோம்...
தோழர்களே...

Wednesday, 17 September 2014

 அகில இந்திய BSNL 
ஓய்வூதியர் நலச்சங்கம் 
காரைக்குடி. 

ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 
78.2 சத IDA  இணைப்பை 
உடனடியாக அமுல்படுத்தக்கோரி 

ஆர்ப்பாட்டம் 

19/09/2014 - வெள்ளிக்கிழமை 
மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம்
 காரைக்குடி.

ஓய்வு பெற்ற தோழர்களே...
78.2 இணைப்பை அடையும்வரை 
ஓய்வில்லை நமக்கு..

வாரீர்... வாரீர்...

தோழமையுடன்...
பெ.முருகன் 
மாவட்டச்செயலர் 
AIBSNLPWA

Tuesday, 16 September 2014

செப் - 17
தந்தை பெரியார் 
பிறந்த நாள் 

கூட்டுறவுத்துறை அதிகாரியான 
குப்பன் மகன் ரமேஷும்...
வருவாய்த்துறை அதிகாரியான 
சுப்பன் மகன் சுரேஷும்..

ஆளுயர மாலை போட்டு... 
அண்டாக்கணக்கில் பாலை ஊற்றி...
அஜீத் படத்தை வணங்கினார்கள்...

எதிரே...
கையில் தடியோடு...
தலையில் காகத்தோடு...
கருப்பு நிறம் மாறாமல்... 
சிலையாய் நிற்கின்றார்...
தந்தை பெரியார்...

Monday, 15 September 2014

செய்திகள் 

நாலுகட்டப்பதவி உயர்வு கணக்கில்  POST BASED PROMOTIONS எனப்படும் போட்டித்தேர்வு மூலம் அடையக்கூடிய பதவி உயர்வுகளும் தற்போது எண்ணிக்கையில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.
 இது நியாயமற்ற செயலென்றும் இதனை மாற்ற நிர்வாகத்தை வலியுறுத்தக்கோரி தமிழ் மாநிலச்சங்கம் 
மத்திய சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.
---------------------------------------------------------------------------------------
ஓய்வு பெறப்போகும் தோழர்களது ஓய்வூதிய விண்ணப்பங்கள்  
ஆறு மாதங்களுக்கு முன்பே  DOT CELLக்கு அனுப்பப்பட வேண்டும் என்பது ஓய்வூதிய விதி. எனவே 31/03/2015க்குள் ஓய்வு பெறப்போவோரின் விண்ணப்பங்கள் 26/09/2014க்குள் DOT CELL க்கு அனுப்பப்பட வேண்டும் என BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------
ERP நடைமுறைப்படுத்தப்படும் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பல்வேறு நடைமுறைச்சிக்கல்கள் எழுந்துள்ளன. 
இதனை உடனடியாகக் களையுமாறு நிர்வாகத்தை
 மத்திய சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------
காஷ்மீர் வெள்ளத்தை முன்னிட்டு  21/09/2014 வரை இலவசமாக பேசுவதற்கும், SMS அனுப்புவதற்கும் BSNL வசதி செய்துள்ளது. 
BSNL ஊழியர்களின் பங்காக ஒரு நாள் சம்பளத்தை நிவாரண நிதிக்கு பிடித்தம் செய்யக்கோரி  நிர்வாகத்திடம் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
----------------------------------------------------------------------------------------
MTNL - BSNL  இணைப்பு சூடு பிடித்துள்ளது. 
பங்கு விற்பனை செய்யப்பட்ட MTNLன் பங்குகளை திரும்ப பெறுவதா? 
அல்லது BSNL பங்குகளை விற்பனை செய்வதா? 
என்று  DOT தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றது.
--------------------------------------------------------------------------------------------------------------------- 

Thursday, 11 September 2014


காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு 

13/09/2014- சனிக்கிழமை - காலை 10.00 மணி 
AITUC அலுவலகம் 
இரயில் நிலையம் அருகில் 
இராமநாதபுரம்.

-:பங்கேற்பு : -
கிளைச்செயலர்கள் 
மாவட்டச்சங்க நிர்வாகிகள் 
பணிக்குழு உறுப்பினர்கள் 
JCM உறுப்பினர்கள் 
மற்றும் முன்னணித்தோழர்கள் 

கருத்துரை : தோழர்கள் 

A. இராஜன் - AITUC - மாவட்டச்செயலர் 
RT. இரகுநாதன் - AITUC 
P. இராமசாமி - மாவட்டச்செயலர் - ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் 
G. சுபேதார் அலிகான் - இளைஞர் அணி ஒருங்கிணைப்பாளர்  
S. முருகன் - மாவட்டத்தலைவர் 
V. மாரி - மாவட்டச்செயலர் 
P. காந்தி - கிளைச்செயலர்...     

பங்கேற்போருக்கு சிறப்பு சிறுவிடுப்பு...

செயற்குழுவை சிறப்பாக்கிட ...
தோழர்களே.. வாரீர்.. 

Wednesday, 10 September 2014

01/10/2000 RM  தோழர்களின் 
BSNL பணியமர்வு பிரச்சினை 

  30/09/2000 வரை நிரந்தரம் பெறாத  TSM ஊழியர்கள்
  செப்டம்பர்  2000 போராட்ட உடன்பாட்டின்படி
01/10/2000 முதல் நிரந்தரம் செய்யப்பட்டனர். 

BSNL  உருவான 01/10/2000 முதல் நிரந்தரம் செய்யப்பட்டாலும் 
இவர்கள் DOT  ஊழியராகவே கருதப்பட்டு 
BSNLலில் பணியமர்வு செய்யப்பட்டனர். 

சில இடங்களில் தோழர்கள்  சிலர் பல்வேறு காரணங்களுக்காக 
01/10/2000 அன்று பணியில் சேர இயலாத நிலை இருந்தது. 
அவர்கள் 01/10/2000க்குப்பின்  BSNLலில் பணியமர்ந்தனர். இத்தகைய தோழர்களை DOT ஊழியராக கருத முடியாது என்றும்,   அவர்களுக்கு BSNLலில் பணியமர்வு உத்திரவு PRESIDENTIAL ORDER வழங்காமலும், 
சில இடங்களில் நிர்வாகம் வழக்கம் போல் 
தவறான நிலை எடுத்து நமது தோழர்களின் உரிமையை மறுத்து வந்தது. 

இது தவறான செயல் என்றும்
30/09/2000 அன்று யாரெல்லாம் TSM தகுதியில் இருந்தார்களோ அவர்கள் அனைவரும் DOT  ஊழியர்கள் என்றும் அவர்களுக்கு PRESIDENTIAL ORDER தவறாமல் வழங்கப்பட வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் 
10/09/2014 அன்று தெளிவுபட உத்திரவிட்டுள்ளது.

இது போலவே 01/10/2000க்கு முன்பு  DOT  காலத்தில்  பயிற்சியில்  இருந்து 01/10/2000க்குப்பின் பணியமர்த்தப்பட்ட தோழர்கள் DOTல் இருந்து வந்த  ஊழியராக  கருதப்படாமல் BSNL  ஊழியராக கருதப்பட்டனர். 

இத்தகைய தோழர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும். 
JAC  ஊழியர் தரப்பு 30 அம்சக்கோரிக்கையில் இதுவும் ஒன்று. 

TSM பிரச்சினை தீர்க்கப்பட்டது போலவே 
பயிற்சியில் இருந்த தோழர்களின் பிரச்சினையும் 
 தீர்க்கப்பட வேண்டும் என்பது 
பாதிக்கப்பட்ட தோழர்களின் எதிர்பார்ப்பு.
எதிர்பார்ப்பு ஈடேறும் என்று நம்புவோம்...
செப்டம்பர் 11
பாரதி 
நினைவு நாள்

அச்சம் தவிர்... 
ஆண்மை தவறேல்...

குன்றென நிமிர்ந்து நில்...
கொடுமையை எதிர்த்து நில்..

சிதையா நெஞ்சு கொள்..
சீறுவோர்ச்  சீறு..

தீயோர்க்கு அஞ்சேல்..
தோல்வியில் கலங்கேல்..

நன்று கருது..
நாளெல்லாம் வினை செய்..

வீ ரியம் பெருக்கு..
வையத்தலைமை கொள்..


பாட்டி வழி..  பழைய வழி..
பாரதி  வழி..  தனி  வழி..

பாரதியை சொல்லாதவன்... 
பாரதத்திற்கு பொல்லாதவன்...

பாரதியைச்  சொல்வோம்..
பலம் மிகக் கொள்வோம்..

Monday, 8 September 2014

NFTE 
காரைக்குடி 
மாவட்டச்செயற்குழு 

13/09/2014 - சனிக்கிழமை - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்.

-:தலைமை:- 
தோழர். சி.முருகன் 
மாவட்டத்தலைவர் 

விவாதப்பொருள் 

 • இழுத்தடிக்கப்படும் மாற்றல்கள்...
 • இருட்டடிக்கப்படும் பதவி உயர்வுகள்..
 • தேங்கும் தனிமனித பிரச்சினைகள்... 
 • தூங்கும் மேல்மட்ட உத்திரவுகள்...
 • மனம் நோகும் மருத்துவபில் பிரச்சினைகள்...
 • தினம் நோகும் ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 
 • சீர் கெடும் தலமட்ட நிர்வாகம்...
 • பேர் கெடும் BSNL  சேவை...
 • JAC கூட்டுக்குழு போராட்டம்...
 • மாவட்ட மாநாடு... 
 • அகில இந்திய மாநாடு...
 • மற்றும் கிளை மாநாடுகள்...

முகவை மாநகரில்...
சந்திப்போம்....  சிந்திப்போம்.... 
வாரீர்...தோழர்களே...

தோழமையுடன்....

சி.முருகன்                                             வெ.மாரி 
மாவட்டத்தலைவர்                           மாவட்டச்செயலர்

Sunday, 7 September 2014

JAC 
அனைத்து ஊழியர்கள் சங்க 
கூட்டு நடவடிக்கைக்குழு 
போராட்டம் 

போனஸ்,ஊதிய முரண்பாடு,ஊதிய நிலை தேக்கம் உள்ளிட்ட 
முக்கிய 30 அம்சக்கோரிக்கைகளில் மெத்தனம் காட்டும் நிர்வாகத்தைக் கண்டித்து அனைத்து ஊழியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு 
நாடு தழுவிய போராட்டம்.

23/09/2014 - செவ்வாய்க்கிழமை 
டெல்லித்தலைநகர் 
மாநிலத்தலைநகரங்கள் மற்றும் 
மாவட்டத்தலைநகரங்களில் 
 தர்ணா 

30/09/2014 - செவ்வாய்க்கிழமை 
காலை 11 மணி முதல் மதியம் 01 மணி வரை 
இரண்டுமணி நேர 
வெளிநடப்பு.

அப்படியும் நிர்வாகம் 
அசையவில்லை என்றால் 
நவம்பர் 2014ல் 
ஒரு நாள் வேலை நிறுத்தம்.

கேளாச்செவிகளைக் கேட்க வைப்போம்...
பாராமுகங்களைப் பார்க்க வைப்போம்...
தயாராவீ ர்...தோழர்களே...

Friday, 5 September 2014

ம் திருவிழா 

மூன்றடி மண் போதுமென்றான் வாமனன்...
காணி நிலம் வேண்டுமென்றான் பாரதி..
மூவுலகும் வேண்டுமென்றான் மனிதன்..

ஆனாலும் அனைவரும்  
ஆடி அடங்குவதென்னவோ..
 ஆறடியில்தான்...

மயிலையில்  மக்கள் மனம் மகிழ்ந்து 
ஓணம் கொண்டாடியதை..
திருஞான சம்பந்தர் 
மகிழ்வோடு பாடியுள்ளார்..

மயிலையில் இருந்து மலையாளத்திற்கு 
மாற்றலில் சென்று விட்ட ஓணத்தை 
நாமும்  மகிழ்வுடன் கொண்டாடுவோம்...

அனைவருக்கும் 
இனிய ஓணம் 
திருவிழா நல்வாழ்த்துக்கள்..
நடையாய்.. நடந்து...

உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு
 போக்குவரத்துப்படியை குறைந்த பட்சம் ரூ.1000/= என்று உயர்த்தி 11/07/2014 அன்று BSNL நிர்வாகம் உத்திரவிட்டது. 

காரைக்குடி மாவட்டத்தில் இந்த உத்திரவை அமுல்படுத்தக்கோரி  
நடக்க முடியாத நமது தோழர்கள் கணக்கு அதிகாரியிடம் 
நடையாய் நடந்து இப்போதுதான் பெற்றுள்ளனர். 

இதில் JTO  போன்ற பதவிகளில் உள்ள தோழர்களுக்கு எந்த பலனும் இல்லை. காரணம் ஏற்கனவே அவர்கள் ரூ.1000/= பெற்று வருகின்றனர். 
NE-11 சம்பள விகிதத்தில் உள்ள தோழர்கள் மாதம் ரூ.950/= போக்குவரத்துப்படியாக பெற்று வந்தனர். 
அவர்களுக்கு ரூ.50/= மட்டுமே உயர்ந்துள்ளது.  

NE-11 சம்பள விகிதத்திற்கு கீழே உள்ள ஊழியர்கள் ரூ.400/= பெற்று வந்தனர். அவர்களுக்கு மட்டுமே 
ரூ.1000/=  உயர்வு என்பது பலனுள்ளதாக உள்ளது. 

உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு சலுகைகளை அளிப்பதில் மிகுந்த மனிதாபிமானத்துடன் நிர்வாகம் நடந்து கொள்ள வேண்டும். 
கொடுக்கும் சலுகையிலும் குறைவானவர்களுக்கே 
பலன் கிட்டுவது போல் கொடுப்பதும்... 

சாமி வரம் கொடுத்த பின்பும் 
பூசாரிகள் இழுத்தடிப்பதும்.. 

யார் ஊனமுற்றவர்கள்?
 என்ற கேள்வியை நம்முள் எழுப்புகின்றது...

Thursday, 4 September 2014

செய்திகள் 

விழாக்காலம் நெருங்குவதால் உடனடியாக BSNL  ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.3500/= போனஸ் வழங்க வேண்டும் என BSNL நிர்வாகத்திற்கு மத்திய சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
25/09/2014 அன்று டெல்லியில் JCM தேசியக்குழுக்கூட்டம் 
நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------
BSNL  மற்றும் MTNL நிறுவனங்களின் இணைப்பை 
ஜூலை 2015க்குள் அமுல்படுத்த DOT  திட்டமிட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA 
இணைப்பை உடனடியாக அமுல்படுத்தக்கோரி 
19/09/2014 அன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 
நடத்த AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் 
அறைகூவல் விடுத்துள்ளது.
---------------------------------------------------------------------------------------------------------
மத்திய அரசு ஓய்வூதிய விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாகி ஓய்வு பெற்ற தோழர்களின் பணிக்கொடை GRATUITY  வழக்கு முடியும் வரை வழங்கப்படுவதில்லை. ஜார்க்கண்ட் மாநில அரசிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட இத்தகையதொரு வழக்கில்  பணிக்கொடையை நிறுத்தக்கூடாது என உச்சநீதிமன்றம்  தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பு மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருந்தாது எனவும், ஒழுங்கு நடவடிக்கை வழக்குகளில் 
பணிக்கொடை வழக்கம்போல் நிறுத்தப்படும் எனவும் 
BSNL நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 

பணிக்கொடை என்பது ஓய்வு பெறும் ஊழியர்களின் உரிமை. 
இதில் வம்பு வழக்குகளுக்கு வேலையில்லை.
 தவறுக்குத்தண்டனை என்பது வேறு. 
ஆண்டாண்டு காலமாக பார்த்த பணிக்கு
 பணிக்கொடை வழங்குவது என்பது வேறு. 
மத்திய அரசின் ஊழியர் விரோதமான 
இத்தகைய  ஓய்வூதிய விதிகள் திருத்தப்பட வேண்டும்.