Sunday, 30 November 2014

செய்திகள்

இன்று 01/12/2014 முதல் தமிழகத்தில் 
ERP முறை அமுல்படுத்தப்படுகின்றது. 
BLACKOUT PERIOD என்னும் பணிகளற்ற காலம் 
10/12/2014 வரை கடைப்பிடிக்கப்படும். 
15/12/2014லில் இருந்து ERP திட்டம்  
நடைமுறையில் செயல்படுத்தப்படும்.
=======================================================
 MTNL - BSNL  இணைப்பு பற்றி அரசு தீவிரமாக சிந்தித்து வருவதாகவும் அது பற்றி பரிசீலிக்க 4 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 
மேலவை கேள்வி நேரத்தில் அமைச்சர் பதில் அளித்துள்ளார்.  
மேலும் விருப்ப ஓய்வு மற்றும் ஊழியர்களின் சம்பளச்சுமையில் ஒரு பகுதியை அரசே ஏற்றுக்கொள்ளுதல் போன்ற 
முந்தைய அரசின் பரிந்துரையின் மீது இன்னும்
 முடிவெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
=======================================================
அக்டோபர் 2014க்கான விலைவாசிப்படி உயர்வில் 
மாற்றமில்லை என்று கூறப்படுகின்றது. 
ஜனவரி 2015 விலைவாசிப்படி 
உயராமலோ  அல்லது குறைந்தோ போகலாம்.
=======================================================
மாற்றல் பிரச்சினைகளில் இருந்து 
உடல் ஊனமுற்ற ஊழியர்களுக்கு விலக்கு அளித்து
 BSNL  நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
உடல் ஊனமுற்ற குழந்தைகள் இருந்தால்
  அவர்களுக்கும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
========================================================
டிசம்பர் 5 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும்
 இணைந்து  மாநிலத்தலைநகரங்களில் மத்திய அரசின் ஊழியர் சட்டங்களை திருத்தும் போக்கிற்கு 
கண்டனம் தெரிவித்து எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கின்றன. .======================================================

Friday, 28 November 2014

சிவகங்கைச்சீமையில்...
தோழர்.ஞானையா 
சிவப்புரையாற்றுகின்றார்..
வாழும்... வரலாறு..
அவர் வாழ்க்கையே.. வரலாறு 
 
NFPTE 
வைரவிழாக்கொண்டாட்டம் 
30/11/2014 - காலை 10 மணி .
பெமினா திருமண மண்டபம்
சத்தியமூர்த்தி தெரு 
 சிவகங்கை.
===============================================================
தபால் தந்தி இயக்கத்தில் 
வரலாறு படைத்திட்ட 
தோழர்.D.ஞானையா 
இயக்க வரலாறு போதிக்கின்றார்..

வரலாறு கண்டிட...
வரலாறு கேட்டிட..
வாரீர்.. தோழர்களே...
நவம்பர் 27 வேலை நிறுத்தம் 
துளிகளும்...வலிகளும்...


நவம்பர் - 27

 • வழக்கமாக  தேனீ ர் நேரத்தில்  வெறிச்சோடிக்கிடக்கும் நமது வாடிக்கையாளர்  சேவை மையங்கள்  அன்று நாள் முழுவதும் வெறிச்சோடிக்கிடந்தன. 
 • கலகலப்பாகவும், கைகலப்பாகவும் இருக்கும் டீக்கடை பெஞ்சு அன்று கலகலத்து இருந்தது. 
 • பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த ஏட்டு மதிய சாப்பாட்டுக்கு ஏதும் வழி பிறக்குமா என்று நோட்டமிட்டுக்கொண்டிருந்தார்.
 • கால் வலிக்க நின்று கொண்டிருந்த காவலர் வாய் வலிக்க.. வாடிக்கையாளர்களிடம் வேலை நிறுத்தம்.. வேலை நிறுத்தம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். பகல் நேரப்  பணிக்கு வந்த தவறை எண்ணி தலையைச் சொறிந்து கொண்டார்.

 • வேலை நிறுத்தம் அன்று தோழர்கள் சிலர்   மர்ம நோயாலும், மறைமுக நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனர். 
 • போராட்டக்காய்ச்சல் அதிகமாகி ஒரு சிலர் பிதற்றிக்கொண்டிருந்ததையும் நாம்  காண நேரிட்டது.    
 • வைத்தியர்களுக்கு வைத்தியம் செய்யாமலே நல்ல வரவு என்றும்  கேள்வி. 
 • போராட்டக்காய்ச்சலில்    பாதிக்கப்பட்டவர்கள் ஒரே இரவில் உடல் தேறி உடன் மறுநாள் பணிக்குவந்த காட்சி நம்மை நெகிழ வைத்தது.
 • வழக்கமாக  11 மணிக்கும் 12 மணிக்கும் பணிக்கு வரும் சில தோழர்கள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு அதிவிரைவாக அலுவலகம் வந்திருந்த அதிசயமும் நிகழ்ந்தது. இத்தகைய அதிசயங்கள் நித்தமும் தொடர வேண்டும் என்ற நமது வேண்டுதலும் தொடர்ந்தது.
 • பத்து மணிக்கு அம்மா கடையில் ATTENDANCE "போட்டு" விட்டு அலுவலகத்திற்கு 11 மணிக்கு வரும் BSNL பெருங்குடிகள் சிலர்  கை கால் நடுக்கத்தையும் பொருட்படுத்தாமல்  பத்து மணிக்கே அலுவலகம் வந்தது நம்மை நடு நடுங்க வைத்து விட்டது. நல்ல வேளை.. மறுநாள் வழக்கம் போல் பத்து மணிக்கு அம்மா கடைக்கு சென்று  நடுக்கம் நீக்கி  11 மணிக்கு மேல்  அவர்கள் அலுவலகம்  வந்ததைக் கண்ட  பின்புதான் நமக்கு நடுக்கம் நின்றது. 
 • DIES NON புகழ்  தோழர்கள் சிலர் அன்று அதிரடியாக அலுவலகம் ஆஜரானது கண்டு நமக்குப்  புல்லரித்து விட்டது. நமது புல்லரிப்பு நீண்ட நாள் FULL அரிப்பாக மாறிட  நாம்  வேண்டிக்கொண்டோம்.
 • நிரந்தர ஊழியர்களின் நிர்ப்பந்தமோ என்னவோ..ஒப்பந்த ஊழியர்கள் ஓரிருவர் தவிர அனைவரும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டனர். சில பகுதிகளில் இன்னும் அக்டோபர் மாதச்சம்பளம் வழங்கப்படவில்லை. அந்த கோபம் கூட காரணமாக இருக்கலாம்.
 • ஓய்வுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருப்பதைக் காரணம் காட்டி ஒரு சிலர் தங்கள் இறுதிக்காலப்பணியை இடைவிடாமல் மேற்கொண்டு இருந்தனர்.
 • வேலை நிறுத்தம்  என்பது கூட மறந்து ஒரு சிலர் ERP இறைப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.
 • கைச்சங்கம் அகில இந்திய அளவில் நம்மோடு கைகோர்த்தும் கூட தமிழகத்தில் வேலை நிறுத்தத்தைக் கைவிட்டிருந்தது. அலுவலகம் வரச்சொல்லி  அனைவரையும் குறுந்தகவல் மூலம் கூவிக்கூவி அழைத்து சங்கப்பணியாற்றியது.

இத்தனையும் தாண்டி வழக்கம் போல்.

 • வர்க்க உணர்வு கொண்ட தோழர்கள்...
 • கடமை உணர்வுடன் பணியாற்றும் தோழர்கள்...
 • சங்கத்தின் கட்டளையை சிரமேற்கொண்ட தோழர்கள்..
 • அநியாயத்தை எதிர்ப்பதில் முன்னணியில் நிற்கும் தோழர்கள்...
போராட்ட முனையிலே
முகத்து நின்றார்கள்... 
முகம் சிவத்து நின்றார்கள்..

இவர்களே..
இந்த இயக்கத்தின் இதயங்கள்...
பாரம் சுமக்கும் தோள்கள்...
பெருவயிறு தாங்கும் பாதங்கள்...
பிறர் வலி கண்டு நனையும் விழிகள்...
கண்ணீ ர் துடைக்கும் கரங்கள்...

அவர்களுக்கு
நமது வாழ்த்துக்களும்...
 வணக்கங்களும்... 

Wednesday, 26 November 2014

நவம்பர் 27
நாடு தழுவிய 
வெளிநடப்பு வேலைநிறுத்தம் 

ஒற்றைக்கால் அதிகாரிகள்...
உருப்படியில்லாத  நிர்வாகம்...
உபயோகமற்ற பேச்சு வார்த்தை...
தோல்வியில் முடிந்த தொழிலாளர் ஆணையரின் சமரசம்..
முப்பது கோரிக்கைகளில் ஒன்றைக்கூட தீர்க்க இயலா திமிர்த்தனம்...

தோழர்களே...
மன்றாடல்களும்....
மடிப்பிச்சைகளும்..
மனித குலத்துக்கு ஆகாது...

போராடாத மனிதன் நலம் பெறுவதில்லை...
ஓடாத நதி வளம் தருவதில்லை...
ஒன்றுபட்டுப் போராடுவோம்..
உணர்வுடன் போராடுவோம்...
ஒன்றுபட்ட போராட்டம் 
ஒன்றே நமது துயரோட்டும்...

வெல்லட்டும் இன்றைய ஒன்றுபட்ட போராட்டம்...

Tuesday, 25 November 2014


நவம்பர் -  27
நாடு தழுவிய வேலை நிறுத்தம் 
ஒன்றுபட்ட போராட்டம்.. ஒன்றே நமது  துயரோட்டும்..

ஓய்வு பெற்ற ஊழியர்கள் 
உழைக்கின்ற ஊழியர்கள் 
ஒப்பந்த ஊழியர்கள் என 
மூன்று பகுதி ஊழியர்களையும் 
நான்காம் தரமாக நடத்தும்...
ஐந்தாம் படை நிர்வாகத்தின் 
உதவாக்கரை போக்கை எதிர்த்து..
நீண்ட நாள் நியாயமான 
கோரிக்கைகளை தீர்க்கக்கோரி 

JAC 
அனைத்து ஊழியர்கள் 
சங்க கூட்டமைப்பின் சார்பாக 
நவம்பர் 27  
நாடு தழுவிய 
வெளிநடப்பு வேலை நிறுத்தம்.

சமாதானப் பேச்சுக்கள்... 
சண்டி மாடுகளை சரி செய்யாது..
தார்க்குச்சிகளே... 
சண்டிகளுக்கு சரியான ஆயுதம்...

தோழனே..
இழக்கப்போவது.. முப்பதில் ஒரு நாள் ஊதியம்..
அடையப்போவதோ.. முப்பது அம்சக்கோரிக்கைகள்..
ஓன்று படுவோம்.. போராடுவோம்.. வெற்றி பெறுவோம்..
நாளை.. நமதே...

நேற்று 25/11/2014 BSNL நிர்வாகத்துடன் 
JAC கூட்டு நடவடிக்கைக்குழு தலைவர்கள் 
நடத்திய பேச்சுவார்த்தையில் ஏதும் முன்னேற்றமில்லை.
ஊழியர்கள் பிரச்சினை தீர்வில் 
BSNL  நிர்வாகம் வழக்கம் போலவே 
தனது மெத்தனத்தை வெளிப்படுத்துகின்றது. 

எனவே தோழர்களே.. 
நாளை 27/11/2014 
நாடு தழுவிய 
வேலை நிறுத்தத்தை
வெற்றிகரமாக்குவோம். 

தோழனே...
ஓய்தல் ஒழி...
ஒற்றுமை வழி செல்...
வெளிநடப்பு போராட்டத்தை 
வெற்றிகரமாக்கு...
நாளை நமதாகட்டும்...
நாடாள்வோருக்கு.. 
எச்சரிக்கை மணியாகட்டும்...
STR - STP 
தென் மண்டல 
பராமரிப்பு மற்றும் திட்டப்பகுதி 
சென்னை மற்றும் தமிழ்நாடு 
மாவட்ட இணைப்பு மாநாடு 
====================================
29/11/2014 - சனிக்கிழமை - காலை 10.00 மணி
HOTEL DUKE - சேதுபதி மேல்நிலைப்பள்ளி அருகில் 
மதுரை.
====================================
 தலைமை : தோழர்கள் 
VP.காத்தபெருமாள் - SM.கோவிந்தராஜன்

வாழ்த்துரை : தோழர்கள் 
A. சிவக்குமார் 
மாநிலச்செயலர்  - AIBSNLEA
K .சேது 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

மற்றும் முன்னணித்தோழர்கள் 

-:சிறப்புரை:-
NFTE மாநிலச்செயலர்
தோழர். பட்டாபிராமன் 

-:நிறைவுப்பேருரை:- 
சம்மேளனப் பெருந்தலைவர் 
தோழர். ஆர்.கே.,

அன்புடன் அழைக்கும் 
R.அன்பழகன்                          P.இராஜகோபால்
மாவட்டச்செயலர் - சென்னைப்பகுதி            மாவட்டச்செயலர் - தமிழ்நாடு பகுதி  

Monday, 24 November 2014

மாண்புற நடந்த மணிவிழா...
வைரிகளும் வாழ்த்திய வைர விழா 
கரித்துண்டுகளை...
வைரத்துண்டுகளாக்கி...
வையத்தலைமை கொள்ள வைத்த  
NFPTEயின் வைர விழா..
உற்சாக நகராம் புதுவையிலே..
உணர்வுடன் நடந்தேறியது...

எல்லா சங்கத்தலைவர்களும் 
எங்களின் ஏவாள் NFPTE 
என எடுத்துரைக்க...

1968 போராட்டத்  தோழர்கள்
NFPTE எங்களின் போர்வாள்.. 
என பெருமிதம் கொள்ள...

இன்றும் வாழும் தலைவர்களும்..
இன்றையத் தலைவர்களும்...
NFPTE எங்களின் கூர்வாள்.. 
என முழக்கமிட...

அடக்குமுறை கண்டு...
ஒடுக்குமுறை வென்று...
பிரிந்த கரங்களை பிணைத்து..
இணைந்த கரங்களாய் உயரச்செய்த 
NFPTEயின் வைரவிழா...
வாழும் நாளெல்லாம் 
நம் நெஞ்சில் வாழும் விழா...

NFPTE புகழ் பாடிய.. 
புதுவைக்கும்.. மாநிலச்சங்கத்திற்கும்.. 
நமது மனமுவந்த வாழ்த்துக்கள்...
நவம்பர் 27 வேலை நிறுத்தம் 
JAC பேச்சுவார்த்தை 

நவம்பர் 27 வேலை நிறுத்தக்  கோரிக்கைகள் மீது பேச்சுவார்த்தை  நடத்திட
JAC  ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில்
 தோழர்.அபிமன்யு அவர்களுக்கு
 BSNL நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.

பேச்சுவார்த்தை 25/11/2014 செவ்வாய் 
மாலை 5 மணிக்கு நடைபெறும்.

பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்தாலும்.. 
தோழர்கள் போராட்டம் வெற்றிபெற 
 முனைப்புடன் செயலாற்றவும்.

Sunday, 23 November 2014

NFPTE 
24/11/2014 - NFPTE - மணி விழா 

சம்மேளன தின வைர விழா 
கொடியேற்றம் 

24/11/2014 - திங்கள்கிழமை -
மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
 காரைக்குடி.

வேற்றுமையில் பிறந்த ஒற்றுமை..
பேதங்களை ஒழித்த தொழிற்சங்க வேதம்..
தபால் தந்தி தோழர்களின் தாய்ப்பால்.. 
பொதுவுடைமைப் போர்வாள்..

NFPTE 
புகழ் போற்ற 
கூடுவீ ர் தோழர்களே...

Thursday, 20 November 2014

NFPTE 
சம்மேளன வைர விழா 
நவம்பர் 22 - புதுச்சேரி 
புதுச்சேரியில் கூடுவோம்..
NFPTEன்
மங்காப்  புகழ் கூறுவோம்..
NFPTE  பிறந்தது..

கூனர்கள் நிமிர்ந்தார்கள்..
குருடர்கள் விழித்தார்கள்..
செவிடர்கள் கேட்டார்கள்..
முடவர்கள் நடந்தார்கள்..
மூடர்கள் சிந்தித்தார்கள்..

அற்புதங்களின் ஒளி வீசும் சிகரம்...
அறிவாற்றலின் வற்றாத ஊற்று...
ஒற்றுமையின் நிரந்தர அடையாளம்..

NFPTE 
புகழ் பாடுவோம்...
புதுச்சேரியில் கூடுவோம்..
புத்துணர்வு கொள்வோம்...
புறப்படு.. தோழனே...
கரையேறிய மீன்கள்...
நாடு திரும்பிய மீனவர்களுக்கு நமது வாழ்த்துக்கள் 

இனவெறி வலையில் சிக்கினார்கள்.. 
இலங்கைத்தீவில் துடித்தார்கள்...

கட்டுமரம் கண்டவனுக்கு...
தூக்குமரம் காத்திருக்க...

கை  விடப்பட்ட மீனவர்கள்...
கண்ணீரில் மிதந்த நிலையில்... 
தாமரை... இலையில்... மிதந்து 
தாய்நாடு சேர்ந்தார்கள்...

இனிதே கரை சேர்ந்த 
இராமேஸ்வரம் மீனவர்களுக்கு 
இனிய நம் வாழ்த்துக்கள்..

நடந்தது நாடகமாகவே இருந்தாலும்...
நடக்கட்டும் நாட்டில்... 
நல்ல நல்ல நாடகங்கள்...
நவம்பர் 27 வேலை நிறுத்தம் 
பேச்சுவார்த்தை 

நவம்பர் 27 அகில இந்திய வேலை  நிறுத்த அறிவிப்பையொட்டி 
NFTE மற்றும் BSNLEU சங்கங்களை இன்று 21/11/2014  
பேச்சுவார்த்தைக்கு BSNL நிர்வாகம் அழைத்துள்ளது. 

போராட்ட அறிவிப்பு JAC - கூட்டு நடவடிக்கைக்குழுவால் அறிவிக்கப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தைக்கு 
அங்கீகரிக்கப்பட்ட இரண்டு சங்கங்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என நிர்வாகம் கூறியுள்ளது. 

மாறி வரும் சூழலில் இன்னும் BSNL  நிர்வாகம் 
மாறவில்லை என்பது தெளிவாகின்றது. 
ஒரு பகுதி ஊழியர்களை ஓரங்கட்டுவது 
அல்லது பிரித்தாளுவது என்பது புளித்துப்போன
 நிர்வாக நடவடிக்கையாகும். 

அனைவரையும் பேச்சு வார்த்தைக்கு அழைத்து 
தீர்வு காண்பதே நல்ல நிர்வாகத்திற்கு அழகாகும். 
BSNL நிர்வாகம் அழகானதா? 
அசிங்கம் பிடித்ததா?
 என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Wednesday, 19 November 2014

ஆர்ப்பாட்டம் 
விலக்கம் 

19/11/2014 அன்று இராமநாதபுரம் 
கூடுதல் பொறுப்புக்கோட்டப்பொறியாளர் 
அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் 
20/11/2014 அன்று திரு.வெங்கடேசன், SDE OFFICIATINGக்கு எதிராக 
நடத்தவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. 

தோழர். சரவணன், TTAவிற்கு தனிவிரோத
 பகையின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட
DIES NON ரத்து செய்யப்படுகின்றது. 

வெறுப்புடன் செயல்பட்ட 
வெங்கடேசனின் ஊழியர் விரோதப் போக்கை
பொறுப்புடன் செயல்பட்டு தடுத்து நிறுத்திய   
பொறுப்புக் கோட்டப்பொறியாளர் 
தோழர்.குமார் அவர்களுக்கு நமது நன்றி...
"நான் கடவுள்" வெங்கடேசன் 
"நாம் மனிதம்" வெங்கடேசனாக 
மாற வேண்டும் என்பதே ஊழியர் எதிர்பார்ப்பு.
கூட்டு நடவடிக்கைக்குழு 
ஆர்ப்பாட்டம் 
நவம்பர் - 27 
அகில இந்திய வேலை நிறுத்தக்
கோரிக்கைகளை வலியுறுத்தி 

நாடு தழுவிய 
ஆர்ப்பாட்டம் 

20/11/2014 - வியாழன் - மதியம் 12 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 

முழு மூச்சுடன் செயல்படுவோம்..
முப்பது அம்சக்கோரிக்கைகளை வென்றிடுவோம்..
முனைப்புடன் வாரீர்... தோழர்களே...

தோழமையுடன் 
JAC - கூட்டு நடவடிக்கைக்குழு 
காரைக்குடி. 

Tuesday, 18 November 2014

ஆணவம் எதிர்த்து ஆர்ப்பாட்டம் 
இராமநாதபுரத்தில்
உண்மையாய் உழைக்கும் 
ஊழியர்களுக்கு
உபத்திரவம் கொடுக்கும்

துணைக்கோட்ட அதிகாரி - உள்கதவு 
SDE INDOORன் 
ஆணவப்போக்கை கண்டித்து 

ஆர்ப்பாட்டம் 

20/11/2014 - வியாழன்  
மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் 
இராமநாதபுரம். 

தோழர்களே... 
ஆணவம் அகற்றிட 
அணி திரள்வீர்..

JAC
கூட்டு நடவடிக்கைக்குழு

நவம்பர் 27
வேலை நிறுத்த விளக்க கூட்டம்

19/11/2014 - புதன்கிழமை 
மாலை  5 மணி
தொலைபேசி நிலையம் 
இராமநாதபுரம்.

போராட்ட விளக்கவுரை: தோழர்கள்
P.காந்தி
கிளைச்செயலர் - NFTE 

M.லோகநாதன் 
கிளைச்செயலர் - BSNLEU 

M .பூமிநாதன்
மாவட்டத்தலைவர் -BSNLEU

K .தமிழ்மாறன்
மாவட்ட உதவிச்செயலர் - NFTE 

P .மகாலிங்கம்
மாவட்டச்செயலர் -BSNLEU 

V .மாரி  
மாவட்டச்செயலர் - NFTE 

தோழர்களே.. வருக..
நான் கடவுள் 
முகவை  அகம் பாவியின் முக விலாசம்..

நான்  கடவுள்...
நான்  ஏழுமலையின் தெய்வம்... 
நான்  ஏழேழு காலத்திலும் திருந்தாத  ஜென்மம்... 

நான்  எல்லோருக்கும் படியளப்பவன்...
நான்  நல்லோரை படியில் போட்டு மிதிப்பவன்..
நான்  மெத்தப்படித்தவன்... 
நான்  மட்டுமே M.E., முடித்தவன் (ME ONLY ) 

நான்  FNTOவில் சேர்ந்திருந்தேன்...
நான்  NFTEயில்  இணைந்திருந்தேன்...
நான்  BSNLEUவில்  பிணைந்திருந்தேன்...

நான்  SNEAவைப்  பார்த்தவன்..
நான்  OAவால்  வாழ்ந்தவன்... 
நான்  EAவால்  வாழ்பவன்..

நான்  பார்க்காத சங்கம் இல்லை..
நான்  கொடுக்காத சந்தா இல்லை...
நான்  வளர்ந்திட யாருக்கும் வால் பிடிப்பேன் ..
நான்  வாழ்ந்திட  யாருக்கும் கால் பிடிப்பேன்..

நான்  சித்தார்கோட்டையில் பணி செய்தவன்..
நான்  செங்கோட்டையையும் பணிய வைப்பவன்...
நான்  பணிய மாட்டேன்.. யாருக்கும்...
நான்  பணியே செய்ய மாட்டேன் என் மூச்சுக்கும்..

நான்  12 மணிக்கு பணிக்கு வருவேன்..
நான்  அங்கு அரை மணி மட்டுமே ஆசி வழங்குவேன்..
நான்  இரகசிய குறிப்பேடுகளின் பிரம்மா...
நான்  இரகசிய சேட்டைகளின் கர்மா...

நான்  உத்திரவிடப் பிறந்தவன்..
நான்  ஊழலை வளர்ப்பவன்...
நான்  பிடுங்கலைக் கொடுப்பவன்..
நான்  பிடுங்கவே... முடியாதவன்..

நான்  பக்கத்து தொழிலில் பணம் பார்ப்பவன்..
நான்  பக்கத்து துணையை பதம் பார்ப்பவன்..
நான்  அலைபேசியில் ANSWER பண்ணாதவன்..
நான்  தொலைபேசியை தொட்டுப் பார்க்காதவன்..

நான் பதவியில் உள்கதவு (INDOOR)
நான் திறக்க மாட்டேன் மனக்கதவு..
நான் திருந்தவே மாட்டேன்...
நான்  தவறுகளுக்காக வருந்தவே மாட்டேன்..
நான் கடவுள்...


(இராமநாதபுரம்  தொலைபேசி நிலையத்தில்
 நேர்மையாய் உழைத்து .. நித்தமும் 
அதிகார திமிர்த்தனத்தை எதிர்கொள்ளும் 
தோழர்களுக்காக எழுதப்பட்டது...)

Monday, 17 November 2014

जीवन प्रमाण 
DIGITAL LIFE CERTIFICATE 
இலக்க முறை உயிர்ச்சான்றிதழ்

ஓய்வு பெற்ற தோழர்கள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் தாங்கள் ஓய்வூதியம் பெறுமிடத்திலே நேரடியாக சென்று தாங்கள் உயிருடன் இருப்பதாக உயிர்ச்சான்றிதழ்  தர வேண்டும். இல்லையெனில் ஓய்வூதிய இலாக்கா அங்கீகரித்துள்ள அதிகாரிகளிடம் இருந்து 
சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். 

தற்போது இந்த நடைமுறையை மாற்றி இணையத்தின் வழியாக உயிர்ச்சான்றிதழ் வழங்கும் முறையை 
மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. 

இதற்காக புதிய இணைய வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஓய்வூதியர்கள் தங்களது SMART செல்போன் அல்லது கணிணி மூலம் தங்களுடைய புள்ளி விவரங்களை ஒருமுறை பதிவு செய்து விட்டால் பின் ஆண்டு தோறும் BIOMETRIC  முறையில் புதுப்பித்துக்கொள்ளலாம். 

தற்போது மத்திய அரசில் 
ஏறத்தாழ 50 லட்சம் ஓய்வூதியர்களும், 
அதே அளவு மாநில அரசுகளிலும், 
25 லட்சம் பேர் இராணுவத்திலும்,
இன்னும் பலர்  பொதுத்துறைகளிலும்
 ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.  

இந்தியாவின் பல கோடிகளிலும்  ஓய்வு பெற்ற மூத்த குடிமக்கள் 
ஒரு கோடிக்கு மேல் வாழ்ந்து வருகின்றனர். 
 நகர்ப்புற மூத்த குடிகளுக்கு பாதகமில்லை. 
கிராமப்புறங்களில் வாழ்பவர்களுக்கு 
கணிணி வசதி வசப்படுமா என்பதுதான் கேள்வி... 

எப்படியோ..
இன்றைய அவசர உலகில் இதயத்தை யாரும் மறக்கலாம்...
இணையத்தை யாரும் மறக்கவோ..மறுக்கவோ முடியாது.

Sunday, 16 November 2014

JAC 
கூட்டு நடவடிக்கைக்குழு 
காரைக்குடி 

வேலை நிறுத்த விளக்க 
சிறப்புக்கூட்டம் 

18/11/2014 - செவ்வாய்க்கிழமை 
மாலை 4 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
 காரைக்குடி 


போராட்ட விளக்கவுரை 
தோழர்கள் 

P. சந்திரசேகர் 
மாநில அமைப்புச்செயலர்  - BSNLEU 

P. செல்லப்பா 
மாவட்டச்செயலர்  - SNATTA 

V. மாரி 
மாநில அமைப்புச்செயலர்  - NFTE 

தூங்கிப்போன நிர்வாகத்தை விழிக்க வைப்போம்...
முடங்கிப்போன நிர்வாகத்தை நடக்க வைப்போம்...
முழு மூச்சுடன் செயல்படுவோம்..
முழு வீச்சுடன் போராடுவோம்...
முடங்கிக்கிடக்கும் 
முப்பது  அம்சக்கோரிக்கைகளை வென்றெடுப்போம்..

ஒன்றுபடுவோம்... போராடுவோம்..
நவம்பர் வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்...
அணி திரள்வீர் தோழர்களே...

தோழமையுடன்  அழைக்கும்...

P. மகாலிங்கம்                                                 வெ. மாரி 
மாவட்டச்செயலர் - BSNLEU                        மாவட்டச்செயலர்  - NFTE 
ஒருங்கிணைப்பாளர் - JAC                           தலைவர்  - JAC 
JAC 
கூட்டு நடவடிக்கைக்குழு 
அறைகூவல் 

நவம்பர் 18 
மாவட்டங்கள் தோறும்
JAC கூட்டங்கள்

நவம்பர் 20 
கிளைகள் தோறும்
வாயிற்கூட்டங்கள் 
ஆர்ப்பாட்டங்கள் 

நவம்பர் 27 
வேலை நிறுத்தத்தை 
வெற்றிகரமாக்குவோம்..

நீண்ட நாள் தேங்கிக்கிடக்கும் 
30 அம்சக்கோரிக்கைகளை 
வென்றெடுப்போம்..

Friday, 14 November 2014

இரங்கல் 

நமது மாநிலச்செயலர் 
அன்புத்தோழர். பட்டாபி 
அவர்களின் 
அருமைத்தாயார்  

இரா. மங்களம் அம்மாள் 
அவர்கள்  14/11/2014 அன்று 
 இயற்கை எய்தினார். 

நமது ஆழ்ந்த இரங்கலை 
உரித்தாக்குகின்றோம்.

நல்லடக்கம் 
15/11/2014 சனிக்கிழமை 
காலை 9 மணிக்கு மேல் 
காரைக்காலில் நடைபெறும்.

Thursday, 13 November 2014

நவம்பர் - 14
குழந்தைகள் தினம் 


அன்றைய அவர்...
நம் நாட்டுச்செல்வங்களுக்கு மாமா...
இன்றைய சிலர்..
பன்னாட்டுச் செல்வந்தர்களுக்கு மாமா...

பொதுவுடைமை போற்றிய 
பொதுத்துறை போற்றிய 
பொக்கிஷமாம் குழந்தைகளைப் போற்றிய 
நேருவின் நினைவைப்போற்றுவோம்...

Monday, 10 November 2014

NFPTE 
சம்மேளன வைர விழா 

நவம்பர் 22 - புதுச்சேரி 

கரங்களின் சங்கமம்... 
கருத்துக்களின் கருவூலம்... 

கொள்கையில் சிவப்பு.. 
குணத்தில் வெளுப்பு... 

நிறங்களின் வானவில்... 
நீதிசொல்லும் நியாயமுள்... 

உரிமைகளின் குரல்... 
உழைப்பாளிகளின் நிழல்...

NFPTE என்னும் பெருமை கொள்வோம்...
புதுச்சேரியில் பெருமை சொல்வோம்...

வாரீர்.. தோழர்களே.. 
கிறிஸ்துமஸ் 
விழாக்கால முன்பணம் 

தமிழகத்தில் ERP அமுல்படுத்தப்படுவதால் 
டிசம்பர் மாதம் எந்த வித பணப்பட்டுவாடாக்களும் இருக்காது. 

எனவே டிசம்பர் மாத கிறிஸ்துமஸ் விழாவிற்கு
 விழாக்கால முன்பணம் FESTIVAL ADVANCE
 விண்ணப்பிக்க விரும்பும் ஊழியர்கள் 
நவம்பர் 14க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என
 மாநில நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

நவம்பர் மாதமே கிறிஸ்துமஸ் 
விழாக்கால முன்பணம் வழங்கப்படும்.

Sunday, 9 November 2014

செய்திகள்

கல்கத்தாவில் நடைபெற்ற BSNLEU 
அகில இந்திய மாநாட்டில்  பொதுச்செயலராக 
தோழர்.அபிமன்யு
 மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
நமது தோழமை  வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 78.2 சத IDA இணைப்பு வழங்குவதற்கான அனுமதி கோரி மத்திய அமைச்சரவைக்கு DOT யால் குறிப்பு அனுப்பப்படவுள்ளது. IDA இணைப்பு விவகாரத்தில் இன்னும் இரு மாதங்கள் பொறுக்கலாம் என்றும் அதன் பின்னும் தாமதம் தொடர்ந்தால் போராட்டத்தில் இறங்கலாம் என்றும் 
AIBSNLPWA ஓய்வூதியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
தமிழ் மாநில JCM கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி சென்னை மீனம்பாக்கம் பயிற்சி மையத்தில் 3 விடுமுறை வீடுகளை 
HOLIDAY HOME திறப்பதற்கு தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------
ஊழியர் குடியிருப்புக்களில் தேவையான பராமரிப்பு பணிகளைச் செய்வதற்கு மாநில CGMகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய நிதி நெருக்கடியைக் கணக்கில் கொண்டு செலவிட
 CGMகள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
------------------------------------------------------------------------------------------------------------
தங்களது மாவட்டம் தாண்டி மற்ற மாவட்டங்களில் மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கான அனுமதி அந்தந்த  மாவட்ட DGMகளே வழங்கலாம் என மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. மாவட்டம் தாண்டி மருத்துவ சிகிச்சை எடுப்பதற்கான அனுமதி அளிக்கும் அதிகாரம் GMகளுக்கே வழங்கப்பட்டிருந்தது. பல மாவட்டங்களில் GMகளே மாவட்டம் தாண்டி இருப்பதால் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
இருப்பினும் MRS மருத்துவ திட்டத்தில்  வழக்கமான
 முருங்கை மர வேதாள (வேதனை) நிலைதான் காணப்படுகின்றது.
------------------------------------------------------------------------------------------------------------
நட்டத்தில் இயங்கும் பொதுத்துறைகளை விற்று விடலாம் அல்லது மூடி விடலாம் என நமது புதிய நிதி மந்திரி தன் திருவாய் மலர்ந்துள்ளார். 
நோயை அழிப்பதல்ல.. நோயாளியை அழிப்பது...
 என்பதுதான்  தற்போதைய அரசின் கொள்கை என்பது தெளிவாகப் புரிகிறது. 
------------------------------------------------------------------------------------------------------------

Friday, 7 November 2014

கமல் 
ஆறிலிருந்து 
அறுபது வரை 
நான் 
பரமக்குடியின் பாலகன்...
கோடம்பாக்கத்தின் கோமகன்..

வற்றிய...
வைகையில் பிறந்தான்...
கலையில்... வற்றாத..
கங்கையாய் பொங்கினான்...

திரவியம் தேடிட ..
திரை என்னும் கடலோடினான்..

திரையிலே நடிப்பவன்..
திரைக்குப் பின்னால் 
நடிக்கத்தெரியாதவன்..

களத்தூரிலே.. கால் பதித்தான்...
ஹாலிவுட்டிலும் தடம் பதித்தான்... 

காதலில் இளவரசன்...
கலையில் பேரரசன்..
மக்களின் கலைஞன்...
எங்கள்.. 
மண்ணின் மைந்தன்..

கமல் வாழ்க..
அவன் புகழ் வாழ்க...

Wednesday, 5 November 2014

01/12/2014 முதல் 
தமிழகத்தில் ERP அமுலாக்கம் 

தமிழகத்தில்  இன்னும் பல மாவட்டங்களில் 
ERP பணிகள் முழுமை பெறாத நிலையில், 
ERP அமுலாக்கம் 01/12/2014க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
இதற்கான அறிவிப்பை 05/11/2014 அன்று 
மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

 • மாவட்ட மட்டத்தில் அனைத்து பணப்பட்டுவாடாக்களும் 26/11/2014க்குள் முடிக்கப்பட வேண்டும்.
 • ERP மூலம் டிசம்பர் மாத சம்பளம் தயாரிக்கப்பட்ட பின்புதான் GPF உள்ளிட்ட ஊழியர்களின் மற்ற பட்டுவாடாக்கள் வழங்கப்படும்.
 • டிசம்பர் மாதம் முழுக்க எந்த விதமான பணப்பட்டுவாடாக்களும் இருக்காது.
 •  GPF தொகைக்கு விண்ணப்பிப்பது
 • GPFஐக் கூட்டுவது - குறைப்பது
 • வருமான வரிக்காக சேமிப்பு மற்றும் வீட்டுக்கடன் கட்டிய விவரங்களை அளிப்பது
 • வீட்டு வாடகை கொடுத்த தகவல்களை அளிப்பது
 • HRMSல் தவறான தகவல் இருந்தால் உரிய திருத்தம் செய்வது 
போன்ற பிரச்சினைகளை தோழர்கள் 
நவம்பர் மாதத்திலே  செய்து முடிக்கவும்.

ERP அமுலாக்கத்தை அவசர கோலத்தில் 
அள்ளி தெளிக்க முற்பட்ட மாநில நிர்வாகத்தை 
சற்றே நிதானிக்க வைத்த 
அனைத்து சங்க கூட்டமைப்பிற்கு நமது நன்றி.

Tuesday, 4 November 2014

தேவகோட்டை 
புத்தகத்திருவிழா 
தோழர். ஸ்டாலின் குணசேகரன் 
தேவகோட்டை புத்தகத்திருவிழா

05/11/2014 புதன் மாலை 5 மணி
நகரத்தார் மேல்நிலைப்பள்ளி 
தேவகோட்டை 

சிறப்புரை 
ஈரோடு மக்கள் சிந்தனை
பேரவைத்தலைவர் 
அருமைத் தோழர். 
ஸ்டாலின் குணசேகரன் 

தலைப்பு : பெரிதினும்... பெரிது கேள்...

காத்துக்கிடக்குது கருவூலம்..
கவர்ந்து செல்லட்டும் 
தங்கள் திருவுளம்..

தோழர்களே.. வருக..