Thursday 31 December 2015


பதினாறே வருக... 
பதினாறும் தருக...

அனைவருக்கும் 
இனிய 2016
ஆங்கிலப் புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள் 


ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்பு 

BSNLலில் ஏழாவது உறுப்பினர் சரிபார்ப்புத் 
தேர்தலை நடத்துவதற்கான ஆய்வுக்கூட்டம் 
11/01/2016 அன்று நடைபெறும் என்று 
BSNL நிர்வாகம் அறிவித்துள்ளது.

AIBCTES   BTUBSNL    BTEU(BSNL)    BSNLATM   
BSNLDUE    BSNLEAU    BSNLEC     BSNLES   
BSNLEU      BSNLMS     BSNL PEWA
 BSNLSU      BSNLWRU     NFTBE   
NFTE BSNL  
 NUBSNLW(FNTO )     TEPU     TEU(BSNL)

ஆகிய 18 சங்கங்களுக்கு 
ஆய்வுக் கூட்டத்தில்  கலந்து கொள்ள 
நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கூட்டத்தில் தேர்தல் நடத்தும் காலம் 
மற்றும் வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்படும்.
-------------------------------------------------------------------------------------------------
ஜனவரி IDA 

ஜனவரி 2016 முதல் 
IDA 4.5 சதம் உயர்ந்துள்ளது.
இத்துடன் மொத்தப்புள்ளிகள்
(107.9 + 4.5) 112.4 சதம் ஆகும்.

Wednesday 30 December 2015

CORPORATE அலுவலகம் முதல் கன்னியாகுமரி வரை 
BSNLலில்  SERVICE WITH A SMILE   
SWAS என்னும் 100 நாள் 
இன்முக   சேவைக்காலத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. 
-------------------------------------------------------------------------------------------------------------------
MRS மருத்துவத்திட்டத்தை மறு ஆய்வு செய்யும் குழுவின் கூட்டம் 08/01/2016 அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
தேக்க நிலை STAGNATION பற்றி 11/01/2016 அன்று சங்கங்களுடன் 
BSNL  நிர்வாகம்  விவாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
---------------------------------------------------------------------------------
தமிழக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நமது BSNL  சேவையைச் சீரமைக்க 
சிறப்பு நிதி உதவி அளித்திட நமது இலாக்கா அமைச்சரை 
மத்திய  சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
பதவிப்பெயர் மாற்றக்குழுவின் பரிந்துரைகள் BSNL நிர்வாகக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டு வாரிய ஒப்புதலுக்காக 
BOARD APPROVAL  அனுப்பப்பட்டுள்ளது.
---------------------------------------------------------------------------------
01/01/2016 முதல் 3.5 சதம் முதல் 5 சதம் வரை
IDA உயர வாய்ப்புள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------
JTO பதவியில் தற்காலிகப் பதவி உயர்வு வகிக்கும் TTA தோழர்களுக்கு Phase -I பயிற்சி வகுப்பு சென்னை RGMTTCயில் 04/01/2016, 11/01/2016 மற்றும் 18/01/2016 ஆகிய தேதிகளில் துவங்குகின்றன.
அஞ்சலி 
தமிழண்ணல்

செட்டிநாட்டுப்பகுதியின் 
சீர்மிகு தமிழறிஞர் 

இலக்கியம், இலக்கணம் 
நாட்டுப்புறவியல், உரைநடை 
கவிதை, திறனாய்வு
படைப்பிலக்கியம் 
என பன்முகத்திறன் கொண்டவர் 

கவிஞர். முடியரசனாரின் கல்லூரித்தோழர்
வ.சுப.மாணிக்கனாரின் சீடர் 
காரைக்குடி SMS பள்ளி தமிழாசிரியர் 
தியாகராஜர் கல்லூரி தமிழ்ப்பேராசிரியர் 
மதுரைக் காமராஜர் பல்கலை தமிழ்த்துறைப்பேராசிரியர் 
என பல சிறப்புக்களைப் பெற்ற 

தமிழுக்கு இன்னல் என்றால் 
தாங்காத இதயம் கொண்ட 

தமிழண்ணல் 

அவர்களின் மறைவிற்கு 
நமது இதய அஞ்சலி.

31/12/2015 பணி நிறைவு பெறும்
அன்புத்தோழர்கள்
P.பாலுச்சாமி
SSS - GM  அலுவலகம் - காரைக்குடி 

S.மனோகரன் 
TM - தொலைபேசி நிலையம் - முறையூர் 

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
 சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.

Monday 28 December 2015

விளம்பரமும்... விஷமமும்...

AIRTEL நிறுவனம் 
காரைக்குடியில் அகன்ற அலைவரிசை சேவையைத் துவக்கியுள்ளது. நமக்கு அதுவல்ல பிரச்சினை... 
பிரச்சினை என்னவெனில்.. AIRTEL  நிறுவனத்தார்
வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக
வெளியிட்ட விளம்பரச் செய்தியில் 
BSNL வாடிக்கையாளர்களுக்கு 
DEPOSIT தொகை ரூ.1000/= தள்ளுபடி செய்யப்படும் 
என்று விஷமத்தனமாக வாடிக்கையாளர்களுக்கு 
AIRTEL வலை விரித்திருந்தது. 

பிற நிறுவனங்களில் இருந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு  
கூடுதல் சலுகை அளிக்கப்படும் என்று விளம்பரம் செய்திருந்தால் நமக்கொன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் நேரடியாக
  BSNL நிறுவனத்தை விட்டு வருபவர்களுக்கு கூடுதல் சலுகை 
என்று AIRTEL  சொல்லியிருந்தது...
 விளம்பரமாக நமக்குப்படவில்லை.  
விஷமமாகவே தென்பட்டது. 

நமது தோழர்கள் கொதித்துப் போய்
  தோழர்.KR.சண்முகம், SDE , தோழர்.பாண்டியன், SDE ஆகியோர் தலைமையில் AIRTEL நிறுவனத்தை முற்றுகை இட்டனர். 

நிலைமையின் தீவிரம் புரிந்த AIRTEL நிறுவனத்தார் உடனடியாக வருத்தம் தெரிவித்ததுடன்.. இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நிகழாது என உறுதி கூறி எழுத்து வடிவில் GM காரைக்குடிக்கு உறுதிமொழிக் கடிதமும் அளித்தனர்.

உணர்வுப்பூர்வமாக உடனடியாகச் செயல்பட்ட 
நமது தோழர்களுக்குப் பாராட்டுக்கள். 

கடுமையான போட்டிச்சூழலில்.. 
போட்டிச்சுழலில் நாம் சிக்கியுள்ளோம்..
என்பது நமக்குப் புலனாகிறது.   
தனியார் நிறுவனம் ஆள்பிடிக்க 
எந்த சலுகையையும் தர முடிகிறபோது.. 
நம்மால் ஏன் மக்களைக் கவரும் திட்டங்களை 
உடனடியாக அறிவிக்க முடிவதில்லை.. 
என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது...

சிவப்பு நாடாவில் இருந்து BSNL சீக்கிரமே விடுபட வேண்டும்.
சிறந்த சேவை தரும் நிறுவனமாக மாறிட வேண்டும்..
இதுவே நமது தீராத அவா... 

Sunday 27 December 2015

NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம் 
------------------------------------------------------------
தோழர்கள்.குப்தா - வெங்கடேசன் 
புகழஞ்சலிக்கூட்டம் 
மற்றும்  
மாவட்டச்செயற்குழு 
-------------------------------------------------------------------------------------
06/01/2016 - புதன் - காலை 10 மணி 
NFTE சங்க அலுவலகம் - காரைக்குடி.
---------------------------------------------------------------------------------------------------
தலைமை 
தோழர்.காந்தி  - மாவட்டத்தலைவர் 

-: ஆய்படுபொருள் :-  
  • ஒப்பந்த ஊழியரின் நிரந்தரப் பிரச்சினைகள் 
  • நிரந்தர ஊழியரின் நீண்ட நாள் பிரச்சினைகள் 
  • மாநில, மாவட்ட, கிளை மாநாடுகள் 
  • உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல் 
  • மற்றும் ஏனைய பிரச்சினைகள் 


தலைவர்கள் பங்கேற்பு....

தோழர்களே... வருக...

Thursday 24 December 2015

மகிழ்வு பொங்கும் கிறிஸ்துஸ் 

மறிகள்  சூழப்பிறந்தார்..
மரியாளுக்கு மகனாய்ப் பிறந்தார்...
ஆள்பவன் ஆண்டவன் இல்லை  என்றார்...
ஆண்டவனுக்கு முன் அனைவரும் சமம் என்றார்...
கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றார்...
பாவப்பட்டவர்கள்...  தட்டிக்கொண்டே இருக்கின்றார்கள்... 
 தேவைப்பட்டவர்கள்...கேட்டுக்கொண்டே.. இருக்கின்றார்கள்...
2015 வருடங்களாக..  தீரா நம்பிக்கையுடன்.. மாறா விசுவாசமுடன்...

அனைவருக்கும் 
இரட்சகர்  ஏசுபிரானின்  
இனிய பிறந்த நாள் 
நல்வாழ்த்துக்கள்...
டிசம்பர் - 24
மாபெரும் மனிதர்களின் மறைவு தினம் 

வாழ்ந்தவர் பலர்.. மறைந்தவர் பலர்..
மக்களின் மனதில் பதிந்தவர் சிலர்..
பசுமரத்தாணி போல் இன்றும் பசுமையாய் 
என்றும் பசுமையாய்   மக்கள் மனம் குடிகொண்ட
  மாபெரும் தலைவர்கள் மங்காப் புகழ் போற்றுவோம்... 
அவர்கள் ஆற்றிய மக்கள் பணி போற்றுவோம்...

Wednesday 23 December 2015

நபி மொழி சொல்வோம்...

உழைப்பவன் வியர்வை காயுமுன்னே அவனது கூலியைக் கொடுங்கள்...

இடது கைக்கு தெரியாமல் வலது கையால் உதவிகளை வழங்குங்கள்...

அநாதையாக இருப்போரிடம் அன்பு செலுத்துங்கள்...

பசித்தவனுக்கு உணவளிப்பதே மிகச்சிறந்த தர்மம்...

ஏழைகளின் கண்ணீர் கூரிய வாளுக்கு ஒப்பாகும்...

அண்டை வீட்டார் பசித்திருக்க தான் மட்டும் உண்ணக்கூடாது...

ஏழைகளை அரவணைக்கும் வீடே இறைவனுக்கு விருப்பமான வீடு...

உன் சகோதரன் துன்பத்தின் மீது இன்பம் கொள்ளாதே..

உன் தாயின் காலடியில்தான் சொர்க்கம் இருக்கிறது....

பணியாட்கள் மீது அதிகாரத்தை தவறாக உபயோகிப்பவன்
ஒரு போதும்  சொர்க்கம் செல்லமாட்டான்...
டிசம்பர் 23
தோழர்.வெங்கடேசன் 
நினைவு நாள் 

அன்பு சொன்ன அன்னையாய்.. 
அறிவு பெருக்கிய தந்தையாய்.. 
அறம் சொன்ன ஆசானாய்..
ஆற்றல் பெருக்கிய தோழனாய்..

நீங்கா நினைவுகளோடு...
நம் நெஞ்சம் வாழும் 
தோழர்.வெங்கடேசன்
 புகழ் பாடுவோம்...
-----------------------------------------------------------------------
தோழர்கள்.
குப்தா - வெங்கடேசன் 
புகழஞ்சலிக்கூட்டம் 06/01/2016 
அன்று  காரைக்குடியில் நடைபெறும் 
78.2 இணைப்பு ஆர்ப்பாட்டம் 

22/12/2015 அன்று காரைக்குடி 
பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக 
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு 
78.2 சத IDA இணைப்பை 
உடனடியாக அமுல்படுத்தக்கோரி 
அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பாக 
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஓய்வு பெற்ற தோழர்கள் 
ராளமாக கலந்து கொண்டனர். 
கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது நன்றிகள்.

Monday 21 December 2015

 BSNட்க்குறைப்பு 

நமது BSNL நிறுவனம்..
புதிய அலைபேசி வாடிக்கையாளர்களுக்கும்...
தனியார் தொலைத்தொடர்பில் இருந்து 
நமது சேவைக்கு மாறுபவர்களுக்கும் (MNP) 
80 சதக் கட்டணக்குறைப்பை 
இரண்டு மாதங்களுக்கு அறிவித்துள்ளது...

காவல்துறையில் ஆய்வாளராகப் பணிபுரியும் 
நண்பர்  ஒருவர் இன்று அலைபேசியில் தொடர்பு  கொண்டபோது...
அவருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு...
BSNL அறிவித்திருக்கும் அதிரடிச்சலுகை பற்றி 
பெருமையாகக் குறிப்பிட்டோம்...

அவர் சொன்னார்...
புதிதாக வருபவர்களுக்கும்...
வேறு இடத்தில் இருந்து உங்களிடம்..
ஓடி வருபவர்களுக்கு மட்டும்தானே.. இந்தச்சலுகை...
ஆண்டாண்டு காலமாக BSNLஐ உபயோகிக்கும்..
எங்களுக்கு என்ன சலுகை? என்று கேள்வி கேட்டார்...

"ஓடிப்போன மைந்தனுக்குத்தான் உபசரிப்பு" என்று 
நீங்கள்  பைபிளில் படித்ததில்லையா? என்று எதிர்க்கேள்வி கேட்டோம்...
அவர் எரிச்சலோடு பேச்சை முடித்துக் கொண்டார்..

புதியவர்களைக் கவர  
அதிரடிச்  சலுகைகள் அவசியம்தான்..
ஆனால்.. ஆண்டாண்டு காலம் 
நமது வாடிக்கையாளராக 
இருப்போருக்கு என்ன சலுகை?

இப்போது.. நமது மனதுக்குள்ளேயே..
கேள்விகள் எழுகின்றன?..

Sunday 20 December 2015

தொழிலாளர் நல அதிகாரியுடன் சந்திப்பு 

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் தீர்விற்காக..
காரைக்குடி மாவட்ட நிர்வாகத்துடன்...
சந்திப்புக்கள் ஆண்டுக்கணக்கில் ... நடந்துள்ளன...
கோரிக்கைகள் கிலோக்கணக்கில்.. கொடுக்கப்பட்டுள்ளன..
உத்திரவாதங்கள் டன் கணக்கில்... அளிக்கப்பட்டுள்ளன...
ஆனாலும்...
ஒப்பந்த ஊழியன் வயிறு ஒட்டியே கிடக்கிறது...

எனவே.. காரைக்குடி மாவட்ட நிர்வாகத்தால் 
தொடர்ந்து மனிதாபிமானமற்று  இழுத்தடிக்கப்படும்
ஒப்பந்த ஊழியர் பிரச்சினையில்  தலையிடக்கோரி 
நாளை 22/12/2015 - LEO 
மதுரை மத்திய தொழிலாளர் நலச்சட்டங்கள் அமுலாக்க அதிகாரியை 
(LABOUR ENFORCEMENT OFFICER, CENTRAL ) 

NFTE, BSNLEU, TNTCWU, TMTCLU
சங்கங்கள்  இணைந்து சந்திக்கின்றன...

தோழர்களே...
தொழிலாளர் நல அதிகாரியாலும் 
நியாயங்கள் நிலை நிறுத்தப்படவில்லையென்றால்...

அடுத்த கட்ட இணைந்த போராட்டம்...
உலகமே அழிந்தாலும் உறங்கிக் கொண்டிருக்கும்.. 
எம்பெருமான் வைகுண்டநாதன்.. 
பள்ளி கொண்டிருக்கும் பள்ளியில்...
திருச்சிராப்பள்ளியில்...

தோழர்களே... தயாராவீர்...

Thursday 17 December 2015

ஆதரவு...  ஆர்ப்பாட்டம்.. 

அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பின் 
சார்பாக 
ஓய்வு பெற்ற தோழர்களுக்கு உடனடியாக 

78.2 சத IDA இணைப்பை வழங்கக்கோரி 
இழுத்தடிக்கும் இழிநிலையை எதிர்த்து...
கேள்விகள் கேட்டே காலம் தள்ளும் கொடுமையைக் கண்டித்து...

22/12/2015 - செவ்வாய் அன்று 

பொதுமேலாளர் அலுவலகம்  
மாலை 5 மணி - காரைக்குடி.

தோழர்களே... வருக...

Wednesday 16 December 2015

beep song.. பீப்பசங்க...

மலராத பெண்மை மலரும்..
முன்பு புரியாத உண்மை புரியும்...

பாசமலர் படத்தில்...
வாராயோ தோழி வாராயோ 
என்ற பாட்டில் வரும்...
கவியரசர் கண்ணதாசனின் 
காலத்தால் அழியாத வரிகள்...

ஆனால் மேற்கண்ட வரியில் 
ஆபாசம் இருப்பதாக பெரும் விவாதம் எழுந்து 
தணிக்கை அதிகாரிகள் அனுமதி கொடுக்க மறுத்தனர்...
ஆனால் வரிகளில் உள்ள வார்த்தை அழகைக் கேட்டு மயங்கி...
தணிக்கை அதிகாரிகள் அனுமதித்ததாக  கூறுவார்கள்..

அது அந்தக்காலம்...
இந்தக்காலம் தொழில் நுட்பம் தலை விரித்தாடும் காலம்...
எந்த நாயும் எந்தக்கம்பத்திலும் சிறுநீர் கழிக்கலாம்...

நாடக மேடையிலும்.. கரகாட்ட நிகழ்ச்சிகளிலும் அன்று 
இலை மறைவு.. காய் மறைவாக விரசம் இருக்கும்..

இன்றோ இரண்டு தறுதலைகள்
 beep song என்ற பெயரில்.. 
காதால் கேட்க முடியாத வார்த்தைகளால்
காதல் பாட்டு பாடியுள்ளன...

செம்பரம்பாக்கம் இப்போது மறந்து போச்சு..
சிம்பு பாட்டு அவலாகிப் போச்சு...
பீர்பாலின் இருகோடு தத்துவங்கள்...

உடனே எதிர்ப்புக்குரல் கொடுத்த 
மாதர் சங்கத்தையும்  மாணவர்களையும்
மனதார நாம் பாராட்ட வேண்டும்...

தமிழர்கள் அரிதாரம் பூசியோரை 
அரியணையில் ஏற்றிய அப்பாவிகள்..
அதனால்தான் அரிதாரங்கள் இன்று 
அகம்பாவம் கொண்டு அலைகின்றன...
பண்பாட்டு பாதகம் செய்கின்றன...

காந்தி  தேசத்தில்...
தவறு செய்பவனுக்கு...தண்டனை உண்டா?
அது அவனிடம் உள்ள காகித  காந்தியைப் பொறுத்தது...

இங்கு..
அரசுகள் அசிங்கமாகிப் போயின..
இனி மக்களே அரசாகிப் போக வேண்டும்...

பெண்களை விளையாட்டுப் பொருளாக்கிய 
பிரேமானந்தா சாமியாரை..
புதுக்கோட்டையில்...
விளக்குமாற்றாலும்.. செருப்பாலும் 
பெண்கள் அன்று விளாசினார்கள்...
அந்தக்கூட்டத்தில் நமது தோழியர்களும் 
முறம் பிடித்து அறம் பாடினார்கள்...

மாதர் தம்மை இழிவு செய்யும் 
மடமையைக் கொளுத்த பாரதி சொன்னான்...

இதோ.. இன்று..
இழிவு செய்யும் சிம்புகள்...
அரிதாரம் பூசிய பிரேமானந்தாக்கள்...

இழிவு செய்யும் மடையனைப் புடைத்திட...
பாரதியின் பெண்கள்... 
கண்ணகியின் சிவந்த கண்கள்...
விளக்குமாறும்.. செருப்பும்..கையிலெடுக்கும் நேரமிது...
உழைத்த கரங்கள் 
வாழ்க.. வாழ்க...


1982 டிசம்பர் 17
ஓய்வூதியம் கருணை அல்ல..
உழைப்பின் உரிமை.. என 
உச்சநீதிமன்றம் உரக்கச் சொன்ன நாள்...
அதுவே இந்திய ஓய்வூதியர்களின்
ஒளி வீசும் தீபாவளித் திருநாள்...

தம் மக்கள் நலம் மறந்து.. 
நாட்டு மக்கள் நலத்திற்காக 
இருபது முதல் அறுபது வரை உழைத்து...
ஓய்வு பெற்ற உள்ளங்களுக்கு 
நமது அன்பான வாழ்த்துக்கள்...

Tuesday 15 December 2015

ஒப்பற்ற தோழனுக்கு 
உள்ளம் கசிந்த அஞ்சலி...
மாற்றுத்திறனாளிகளின் மலர்ச்சிக்குப் பாடுபட்ட 
பொதுவுடைமைப் போராளி
தோழர்.
சிதம்பரநாதன் 

மாற்றுத்திறனாளிகளின்  மலர்ச்சிக்கான
மாநிலக்கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்ற போது...

தோழர்.சிதம்பரநாதன் 













தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் 
கூட்டமைப்புத் தலைவரும்.. நிறுவனரும்...
பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை நடத்தியவரும்..
சிறந்த பொதுவுடைமைப் போராளியும்...
NFTE சங்கத்தில்  முன்னணிப்பாத்திரம் வகித்த 
அருமைத்தோழியர்.தனம் அவர்களின் கணவருமான 
அன்புத்தோழர். சிதம்பரநாதன் அவர்கள் 
உடல்நலக்குறைவால் 15/12/15 அன்று 
தன்  இயக்கப்பணிகளை நிறுத்திக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளின் மறுமலர்ச்சிக்கு 
வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்...

சிறந்த நண்பராக.. தோழராக.. 
வழிகாட்டியாக.. ஆசிரியராக...விளங்கியவர்...

1980களில் இராமநாதபுரத்தில் நடந்த சாதிக்கலவரத்தில்...
பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி..
சாதியால் ஒடுக்கப்பட்டத் தொலைபேசித் தோழர்களுக்கு..
வீட்டிலே அடைக்கலம் கொடுத்து 
அவர்களை அன்போடு அரவணைத்தவர்...

மாணவர்களாக நாங்கள் இருந்தபோது...
தற்போது தமிழ்நாடு  தலைமைச்செயலகத்தில்..
தொழிலாளர் நலத்துறை உயர் அதிகாரியாகப் பணிபுரியும் 
கல்லூரித்தோழன் பாலச்சந்திரனோடு அடிக்கடி சென்று 
தோழர். சிதம்பரநாதனிடம்...
மார்க்சீய அரிச்சுவடி கற்றது..
வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்...

உருண்டோடும் வாழ்க்கையில்...
ஊனங்களைக் கண்டு தளர்ந்து விடாது..
சக்கர நாற்காலியில் உருண்டோடி..
ஊனமுற்ற தோழர்களின் உயர்வுக்குப்பாடுபட்ட..

தோழர்.சிதம்பரநாதன் 
அவர்களுக்கு வீரவணக்கம்..

--------------------------------------------------------------------------------------------------------------------------
இறுதி நிகழ்வுகள் 17/12/2015 வியாழன் அன்று
 சென்னைக் கோட்டுர்புரத்தில் நடைபெறும்.

Monday 14 December 2015

இன்று 15/12/20152 சென்னை CGM  அலுவலகத்தில் 
அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின் 
கருத்துக்கேட்புக் கூட்டம் 
OPINION LEADERS MEETING நடைபெறுகின்றது.
-----------------------------------------------------------------------------
01/01/2016 முதல் 100 நாட்களை  BSNLலில் 
கனிந்த சேவைக்காலமாக  
வாடிக்கையாளர்களுக்கு அளித்திட 
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
 வேண்டுகோள் விடுத்துள்ளது.
-----------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA  இணைப்பில் 
ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து 
22/12/2015 அன்று  நாடு முழுக்க  
கறுப்பு அட்டை அணியவும் 
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் 
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 
அறைகூவல்  விடுத்துள்ளது.
-----------------------------------------------------------------------------
கருணை அடிப்படை வேலைத்தேர்விற்கான 
HPC  உயர்மட்டக் குழுவில்
 SC/ST பிரிவிற்கான பிணைப்பு அதிகாரியும், 
LO (SCT) உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என 
மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------
11/12/2015 அன்று நமது மத்திய சங்கத்தலைவர்கள் 
மனிதவள இயக்குநரை சந்தித்து 
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு உதவுதல், 
JTO மற்றும் JAO காலியிடங்களை கணக்கிடுதல், 
JAO தேர்வில் வெற்றி பெற்று காலியிடம் இல்லாததால் 
பயன் கிட்டாத தோழர்களுக்கு 
தற்காலிகப் பதவி உயர்வு வழங்குதல் 
ஆகியன பற்றி விவாதித்துள்ளனர். 
-----------------------------------------------------------------------------
ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டங்களை 
முறையாக அமுல்படுத்தக்கோரியும், 
 ஒப்பந்தக்காரர்கள்  விதிமுறைகளை 
ஒழுங்காக பின்பற்றுகின்றர்களா 
என்பதைக் கண்காணிக்க வேண்டியும் 
மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.

Sunday 13 December 2015

உதவிடும் உள்ளத்திற்கு.. ஓய்வேது?
.வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னையில்
தோழர்.ஆர்.கே., அவர்கள்
உள்ளமுவந்து உதவிகள் வழங்கிடும் காட்சி 

கெடுப்பதுவும் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே 
எடுப்பதுவும் எல்லாம் மழை...

வான்புகழ் வள்ளுவன் 
கெடுப்பதுவும் மழை... கொடுப்பதுவும் மழை என 
வான்சிறப்பிற்கு தனி அதிகாரம் அமைத்தான்..

வான் மழையால்  வாழ்வு கெட்ட மனிதனுக்கு 
வாழும் சக மனிதர்கள் கரம் கொடுத்து உதவும் காட்சியை 
நாளெல்லாம் நாம் காணும் போது 
நிலம் ஈரமானதை  விட நம் மனம் ஈரமாகிறது...

அவ்வாறு சக மனிதனின் துன்பம் காணச்சகியா மனிதர்களுள்..
மாமனிதர் தோழர்.ஆர்.கே., ஆவார்..

சென்னையில் துயரப்படும் தோழர்களுக்கு 
நம் தோழர்களுடன் சென்று உதவிக்கரம் நீட்டினார்..

கடலூர் தோழர்கள் நிவாரண வேண்டுகோள் விடுத்தபோது..
முதல் நிதியாக தனது பங்கைச்செலுத்தினார்...

ஜன்னலோரம் அமர்ந்து 
சாலையை வெறித்துப் பார்ப்பவன் மனிதனல்ல...
சங்கடத்தில் சிக்கியுள்ள 
சக மனிதனின் துன்பம்  போக்குபவனே மனிதன்...

அந்த வகையில்...
ஓய்வு பெற்றிருந்தாலும்.. ஓய்வற்று  உழைத்திடும்...
ஒப்பற்ற தலைவருக்கு நம் வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்...

அவர் வழியில்...
ஓய்வு பெற்ற தோழர்களும்..
உழைக்கின்ற தோழர்களும்... 
உணர்வு கொண்ட தோழர்களும்...
உதவிக்கரம் நீட்ட வேண்டுகிறோம்...
தங்கள் தடம் பதிக்க வேண்டுகிறோம்...
உதவிட்ட உள்ளங்களுக்கு நன்றி...

கடலூர் வெள்ள நிவாரண உதவியாக 13/12/2015 அன்று
ரூ.22,000/= உதவிப்பணமும் மற்றும்   உதவிப்பொருட்களும் 
முதல் தவணையாக  தோழர்கள்.காதர் பாட்சா மற்றும் சுபேதார் அலிகான் ஆகியோரால் கடலூருக்கு சென்று வழங்கப்பட்டன. 

திருமதி.இலட்சுமி, DE காரைக்குடி 
திருமதி.நீலாயதாட்சி, AGM காரைக்குடி 
தோழியர்.காந்திமதி வெங்கடேசன் 
தோழர்.செல்வகணபதி, TTA , புதுவயல் 
தோழர். இராஜேந்திரன், TSO , காரைக்குடி 
தோழர்.R.K.இராமச்சந்திரன் (பணி நிறைவு)
தோழர்.கருப்பையா, நகராட்சி காரைக்குடி 
தோழர்.பாலமுருகன், TTA  தேவகோட்டை 
ஆகியோர் பொருளுதவி வழங்கினர்...

இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தோழர்கள் நிதியுதவி வழங்கினர்.

உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக...

Saturday 12 December 2015

பெயர் மாற்றக்குழுக்கூட்ட முடிவுகள் 


11/12/2015 அன்று டெல்லியில் பெயர் மாற்றக்குழுக்கூட்டம் 
(JOINT COMMITTEE FOR CHANGE OF DESIGNATION) நடைபெற்றது. 
ஊழியர்களுக்கான புதிய பெயர் மாற்றம் 
ஊழியர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்து 
உத்வேகமுடன் பணி செய்யத்தூண்டும் என்பதையும்  
நிறுவனத்தின் பெருமை இதனால் கூடும் என்பதையும்...
கணக்கில் கொண்டு கீழ்க்கண்ட முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

1. TTA  -     JUNIOR ENGINEER  
                   இளநிலைப் பொறியாளர் எனவும்...

2. SR.TOA - NE 11 மற்றும் NE 12 சம்பள விகித்தில் உள்ளவர்கள் 
                    OFFICE SUPERINTENDENT 
                   அலுவலக கண்காணிப்பாளர் எனவும்...

3. SR.TOA - NE 10 மற்றும் NE 9 சம்பள விகித்தில் உள்ளவர்கள் 
                    ASSISTANT OFFICE SUPERINTENDENT 
                    உதவி அலுவலக கண்காணிப்பாளர் எனவும்...

4. SR.TOA - NE 8 மற்றும் NE 7 சம்பள விகித்தில் உள்ளவர்கள் 
                    SENIOR OFFICE ASSOCIATE 
                    முதுநிலை அலுவலக இணையாளர் எனவும்...

5. TELECOM MECHANIC  - 
                   TELECOM TECHNICIAN 
                   தொலைத்தொடர்பு தொழில் நுட்ப வல்லுநர் எனவும்...

6. REGULAR MAZDOOR 
                     ASSISTANT TELECOM TECHNICIAN 
                    உதவி தொலைத்தொடர்பு தொழில் நுட்ப வல்லுநர் எனவும்...

பெயர் மாற்றங்கள் செய்வதற்கு குழுவின் இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து எட்டியுள்ளது. இந்த பெயர் மாற்றத்தினால் எந்தவித சம்பள உயர்வோ சலுகையோ தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் கேட்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் நிகழ்ந்தாலும் ஊழியர்கள் தற்போதுள்ள பணியையே தொடர்ந்து செய்வார்கள்.

பெயர் மாற்றக்குழுவின் மேற்கண்ட பரிந்துரை BSNL நிர்வாகக்குழு மற்றும் வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர் அமுலுக்கு வரும்.

தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி.. .
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதி வழி நின்று..
நல்லதொரு பெயர் மாற்றத்திற்கு வித்திட்டு..  
கல்யாணப் பத்திரிக்கைகளில் நம் கௌரவம் மிளிர்ந்திட...
வகை செய்த ஊழியர் தரப்பிற்கு நமது வாழ்த்துக்கள்...

Thursday 10 December 2015

நன்று செய்த... நாகர்கோவில் 

நன்று கருது.. நாளெல்லாம் வினை செய்.. 
என்றான் நாட்டுக்குழைத்த  பாரதி...

பாரதியின் வரி பற்றி.. அவனது வழி பற்றி...
நாகர்கோவில்  மாவட்ட BSNL தோழர்கள்..
உள்ளத்தால் ஒன்று பட்டு..
வெள்ளத்தால் துயரப்பட்ட  சென்னை மக்களுக்கு 
உடமைகளாகவும்.. உணவுப்பொருட்களாகவும்..
ஒரு லட்சத்து அறுபத்தேழாயிரம்  பணமாகவும்.. 
தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர்..
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்...

அனைத்துப்பகுதி ஊழியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து..
முன் முயற்சி எடுத்து.. முழு முனைப்புடன்  பணியாற்றி..
அரும் செயல் செய்துள்ள 
நாகர்கோவில் பொதுமேலாளர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

மற்ற மாவட்டப் பொதுமேலாளர்களுக்கும்..
நாம் வாழ்த்துக்கள் தெரிவிக்க தயாராகவே உள்ளோம்...