Friday 10 April 2015

விடாது... சிவப்பு...
ஒப்பந்த ஊழியர் போராட்டங்கள் 

காரைக்குடி மாவட்டத்தில் 
இன்று 10/04/2015 ஒப்பந்த ஊழியர்களுக்கு 
மார்ச் மாத சம்பளம் 
முழுமையாக பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

சம்பளத்தில் ரூ.200/- அளவுக்கு 
அனைவருக்கும் குறைந்துள்ளது. 
ஒரு ஆளுக்கு 200 என்றால் 
198 ஊழியர்களுக்கு சுமார்  40000/= ரூபாய் ஆகும். 
இது என்ன கணக்கு என்பதை நிர்வாகம் தெளிவு படுத்த வேண்டும். 

புதிய குத்தகைக்காரர்கள் 
  • ஊழியர்களுக்கு சம்பள பட்டியல் PAY SLIP வழங்க வேண்டும்.
  • அடையாள அட்டை வழங்க வேண்டும்.
  • EPF கட்ட வேண்டும்... 
  • ESI அட்டை வழங்க வேண்டும்...
  • உரிய சம்பளம் வழங்க வேண்டும்...
  • குறித்த தேதியில் வழங்க வேண்டும்...
  • ஆண்டுக்கு ஒரு போனஸ் தர வேண்டும்...
  • மரணமுறும் ஊழியர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் உரிய நேரத்தில் தர வேண்டும்..
  • இல்லையென்றால் குத்தகை தொழிலை விட்டு ஓட வேண்டும்...
தோழர்களே...

11/04/2015 சிவகங்கை  
மாவட்ட செயற்குழுவில் 
விவாதிப்போம்...
கொதிக்கும் மேதினத்தில்..
உரிமைக்காய் கொதிப்போம்... 
போராட்டத்தில் குதிப்போம்...

கருப்புகளை...
கரை சேர்க்கும்வரை 
விடாது சிவப்பு...
இது ஒரு மெகா தொடர்...

2 comments:

  1. தோழரே உங்களின் முதல் போராட்டம் வெற்றி. தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம். ஒப்பந்த ஊழியர் என்றாலே தீண்டத்தகாதவர் போலே என்னும் அதிகார வர்க்கத்தை ஓட ஓட விரட்டுவோம். உங்களின் போராட்டம் வெல்ல எங்கள் சிதம்பரம் கிளையின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete
  2. தோழரே உங்களின் முதல் போராட்டம் வெற்றி. தொடர்ந்து போராடுங்கள் வெற்றி நிச்சயம். ஒப்பந்த ஊழியர் என்றாலே தீண்டத்தகாதவர் போலே என்னும் அதிகார வர்க்கத்தை ஓட ஓட விரட்டுவோம். உங்களின் போராட்டம் வெல்ல எங்கள் சிதம்பரம் கிளையின் சார்பாக வீர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ReplyDelete