Thursday 14 April 2016

78.2 - வீட்டு வாடகைப்படி

தற்போது 68.8 சத நிர்ணய அடிப்படையில் 
வழங்கப்பட்டு வரும் வீட்டு வாடகைப்படியை 
78.2 சத நிர்ணய அடிப்படையில் வழங்கிடக்கோரி 
நமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. 

78.2 சத இணைப்பு அமுல்படுத்தப்படும் போது 
இதனை அமுல்படுத்த BSNLEU சங்கம் வழக்கம் போல் தவறி விட்டது. இருப்பினும் நமது சங்க முயற்சியால் இப்பிரச்சினை 
JCM தேசியக்குழுவில் விவாதிக்கப்பட்டது. 

10/03/2016 அன்று நடைபெற்ற JCM கூட்டத்தில் 
இப்பிரச்சினை  மீண்டும் வலியுறுத்தப்பட்டது. 
நிர்வாகம் இதனால் உண்டாகும் செலவினத்தைக் கணக்கிட்டு உரிய முடிவெடுப்பதாக உறுதி அளித்திருந்தது. தற்போது செலவு தொகை எவ்வளவு என்பது கணக்கிடப்பட்டு விட்டது. எனவே விரைந்து முடிவெடுக்க நமது சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது.

78.2 சத IDA இணைப்பின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி 
வழங்க நிர்வாகம் மறுத்து விட்டதாகவும்.. தாங்கள் அதை அமைதியாக ஏற்றுக்கொண்டதாகவும் BSNLEU சங்கம் கூறியதை 
தோழர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை.

4 comments:

  1. விண்ணப்பத்தில் முன்னே என்ன இருந்ததோ அப்படியே இருக்கிறது. யாரும் விண்ணப்பிக்க முடியவில்லை.பயிற்சி நாளையே கொடுக்க முடியவில்லை, புது வலைப் பக்கமே 1.00 மணி நேரத்தில் ஆரம்பிக்கும் பொழுது நாட்காட்டி(calender)-ல் பயிற்சி நாள் மாற்றத்திற்கு இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமோ தெரியவில்லை. மிக எளிய பணியே ஆனாலும் தொடர்ந்து ஏமாற்றுவதாகவே தெரிகிறது.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 22. விண்ணாப்பம் சமர்பிக்கப் படாமலேயே பதிவு செய்த அனைத்து தோழர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.23,24,25 தேதிகளில் மாற்றம் செய்யலாம் என்றும் வந்துள்ளது. விண்ணபிக்கலாமா விண்ணப்பிக்கக் கூடாதா? கட்டணம் எவ்வாறு செலுத்துவது? பழைய விண்ணப்பத்தில் எந்த வகையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது? JTO EXAM நடக்குமா நடக்காதா? நம்பலாமா நம்பக்கூடாதா யாரைப்போய் கேட்பது இல்லை இதற்கும் நீதிமன்றம் தான் போகவேண்டுமா என்றும் தெரியவில்லை இலாக்கா தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூபாய் 500ஆம், சென்னைக்கு போய் தேர்வு எழுத வேண்டுமாம்.அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனம் தேர்வு நடத்துமாம்.எல்லா பக்கமும் சுவர் இருக்கு எந்தப் பக்கமும் முட்டலாம் என்று தான் தோன்றிகிறது.எந்த துறையிலும் இல்லாத சாதனை BSNL-ல் மட்டும். இதில் தொழிற்சங்கங்களின் பங்கு என்ன? நிர்வாகம் என்ன நினைக்கிறது? என்ன நடக்குதுனு யாருக்கும் புரியவும் இல்ல தெரியவும் இல்ல யாராவது தெரிஞ்சா சொல்லுங்க PLEASA

    ReplyDelete
  2. விண்ணப்பத்தில் முன்னே என்ன இருந்ததோ அப்படியே இருக்கிறது. யாரும் விண்ணப்பிக்க முடியவில்லை.பயிற்சி நாளையே கொடுக்க முடியவில்லை, புது வலைப் பக்கமே 1.00 மணி நேரத்தில் ஆரம்பிக்கும் பொழுது நாட்காட்டி(calender)-ல் பயிற்சி நாள் மாற்றத்திற்கு இன்னும் எத்தனை நாட்கள் வேண்டுமோ தெரியவில்லை. மிக எளிய பணியே ஆனாலும் தொடர்ந்து ஏமாற்றுவதாகவே தெரிகிறது.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 22. விண்ணப்பம் சமர்பிக்கப் படாமலேயே பதிவு செய்த அனைத்து தோழர்களுக்கும் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.23,24,25 தேதிகளில் மாற்றம் செய்யலாம் என்றும் வந்துள்ளது. விண்ணபிக்கலாமா விண்ணப்பிக்கக் கூடாதா? கட்டணம் எவ்வாறு செலுத்துவது? பழைய விண்ணப்பத்தில் எந்த வகையான மாற்றம் செய்யப்பட்டுள்ளது? JTO EXAM நடக்குமா நடக்காதா? நம்பலாமா நம்பக்கூடாதா யாரைப்போய் கேட்பது இல்லை இதற்கும் நீதிமன்றம் தான் போகவேண்டுமா என்றும் தெரியவில்லை இலாக்கா தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூபாய் 500ஆம், சென்னைக்கு போய் தேர்வு எழுத வேண்டுமாம்.அரசு ஊழியர்களுக்கு தனியார் நிறுவனம் தேர்வு நடத்துமாம்.எல்லா பக்கமும் சுவர் இருக்கு எந்தப் பக்கமும் முட்டலாம் என்று தான் தெரியல.எந்த துறையிலும் இல்லாத சாதனை BSNL-ல் மட்டும். இதில் தொழிற்சங்கங்களின் பங்கு என்ன? நிர்வாகம் என்ன நினைக்கிறது? என்ன நடக்குதுனு யாருக்கும் புரியவும் இல்ல தெரியவும் இல்ல யாராவது தெரிஞ்சா சொல்லுங்க PLEASA

    ReplyDelete
  3. Wait wait and wait..that only we can do..

    ReplyDelete
  4. Wait wait and wait..that only we can do..

    ReplyDelete