Saturday 17 September 2016

நீரும்... நெருப்பும்...

நீரைக் கேட்டால்...
நெருப்பை உமிழ்கிறார்கள்...

காவிரியில் குளிக்க ஆசை கொண்ட... 
மன்னார்குடி விக்னேஷ்...
நெருப்பில் அல்லவா குளித்துவிட்டான்..

தண்ணீரை மடை திறந்த கர்நாடகம்...
வன்முறையையும் அல்லவா 
மடை திறந்து விட்டது....

இவர்கள்....
திறந்து விட்ட தண்ணீரை விட...
பெருக்கி விட்ட கண்ணீர் அதிகம்...

எரியும் நெருப்பணைக்கவே...
எல்லாத் தண்ணீரும் போய்விட்டது...
இனி...
சம்பாவிற்கு என்ன செய்ய?
சாப்பாட்டிற்கு என்ன செய்ய?

காவிரித்தாய்..
பிறந்த இடம் கர்நாடகம்...
புகுந்த இடம் தமிழ்நாடு...
பெண்ணுக்கழகு...
புகுந்த வீட்டில் இருப்பதுதானே?
பிறந்த வீட்டிலேயே தங்கி விட்டால்...

காவிரி நடுவர் மன்றம்... 
இறுதியாய் சொன்னது....
ஓடும் காவிரியில்...
தமிழகத்திற்கு 58 சதம்...
கர்நாடகாவிற்கு 37 சதம்..
கேரளாவிற்கு 4 சதம்...
புதுவைக்கு 1 சதம்...
பின் ஏன் இன்னும் சத்தம்?

நதிகளின் தாழ்வாரப் பகுதிக்குத்தான் 
கூடுதல் தண்ணீர் என்பது 
எழுதப்பட்ட உலகச்சட்டம்...
பின் ஏன் இன்னும் சட்டாம்பிள்ளைத்தனம்?

காரணம் ஒன்றுதான்...
எல்லாக் காலங்களிலும்...
நதியின் நீரோட்டத்தை முடக்கிப்போடுவது...
தேசிய நீரோட்டமே...

நெருப்பெரிந்தால்...
நீரூற்றலாம்...
நீரே எரிந்தால்...? 

2 comments:

  1. "சேறு" என்ற வார்த்தையை உருவாக்கி அதில் (கால்) வைத்தால்தான் "சோறு" இது தான் தமிழ்

    ReplyDelete
  2. "சேறு" என்ற வார்த்தையை உருவாக்கி அதில் (கால்) வைத்தால்தான் "சோறு" இது தான் தமிழ்

    ReplyDelete