Saturday 31 December 2016

தூய்மை கொள்...தொண்டு செய்...


தூய்மை கொள்ளுங்கள்...
தொண்டு செய்யுங்கள்... 
உதவி... இந்த வார்த்தையை 
உள்ளத்திலிருந்து அகற்றுங்கள்...
தொண்டு செய்வது என்ற சிந்தனையை 
இதயத்தில் கொள்ளுங்கள்...
துயரம் கொண்ட ஒரு மனிதனுக்கு...
ஒரே  ஒரு நாள் உள்ளன்போடு...
நான் தொண்டு செய்திருந்தால்...
அதுவே என் வாழ்வின் பாக்கியம்...
என்றார்  சுவாமி விவேகானந்தர்...

துயரப்படுவோருக்கு தொண்டு செய்வது...
அதைத் தூய மனதோடு செய்வது...
நமது  இயக்கம் நமக்கு கற்றுத்தந்துள்ளது....

தூய்மையும்... தொண்டும்...
தலைவனுக்கு அடையாளம்....
அத்தகைய அடையாளச்சின்னங்களாக...
தொண்டு செய்து வாழ்ந்து வழிகாட்டிய...
நேர்மை தடுமாறாத்தலைவர்கள் வழியில்...
தொடர்ந்து  தடம் பதிப்போம்....
தூய்மை கொள்வோம்... தொண்டு செய்வோம்...
இதுவே புத்தாண்டில் நம் உறுதிப்பாடு.....

அனைவருக்கும் 
இனிய ஆங்கிலப்புத்தாண்டு 
நல்வாழ்த்துக்கள் 
happy new year  animated greetings க்கான பட முடிவு
காலம் கற்றுத்தரும்...

கடிகாரத்தைப்பார்...
ஓடுவது முள்ளல்ல... உன் வாழ்க்கை... 
என்றார் சுவாமி விவேகாநந்தர்...
"சென்றது இனி மீளாது" என்றான் பாரதி...

அந்தக்காலத்தின் ஓர் அங்கம்தான் 2016...
365 நாட்களைத் தந்து விட்டு....
2016... காலம் என்ற பெயரில் கரைந்து விட்டது...

2016 கற்றுத்தந்தது... ஏராளம்...
சிறுமை கண்டு பொங்கிடச் சொன்னது...
சினம் கொண்டு எதிர்த்திடச் சொன்னது...
வலிகளைத் தாங்கச் சொன்னது...
வழிகளைத் தேடச்சொன்னது...
கண்களைத் திறந்து விட்டது... 
காதுகளை மூடிவிட்டது...
கால்களை இடற வைத்தது...
தோள்களை இளைப்பாற வைத்தது..

காலமே எல்லாக் காரியங்களையும் முடிக்கிறது...
என்கிறது உபநிடதம்...
காலம் காரியங்களை முடிக்கும்...
காலம் கற்றுத்தரும்... எனக்கும்... நமக்கும்...

Friday 30 December 2016

காய்வது பயிறு... காந்துவது வயிறு...
எலி தின்னும் இழிநிலை சொல்லி
 திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 

மாடு கட்டிப் போரடித்தால் 
மாளாது செந்நெல் என்று 
யானை கட்டிப் போரடித்த தமிழகத்தில்...
பச்சைப் பயிர் வாடிக்  கிடக்கிறது...
பாழும் வயிறு   காய்ந்து கிடக்கிறது...

சோறு போடும் விவசாயிக்கு 
சோதனைகள் ஏராளம்...

வறண்டு போன வயலிலே... விவசாயிகளுக்கு...
குனிந்து வேலை செய்ய  வழியில்லை...

நாசம் போகும் நாட்டிலே  மந்திரிகளுக்கு...
குனிந்து நிமிரவே நேரமில்லை...

ஏர் உழும் விவசாயிக்கு... 
எலிக்கறிதான் மிச்சம்...

ஏய்த்துப்பிழைப்பவன் வீட்டிலே...
எந்நாளும் வெடிச்சத்தம்...
JTO அடிப்படைப் பயிற்சி விலக்கு 

JTO தேர்வில் வெற்றி பெற்ற   தோழர்கள்
தமிழ்மாறன் TTA மற்றும்  கார்த்திகா TTA ஆகியோர்
 B.E., பொறியியல் பட்டதாரிகளாக இருந்தும் 
அவர்களுக்கும்  02/01/2017 முதல்  JTO அடிப்படைப்பயிற்சிக்கு 
செல்ல  உத்திரவிடப்பட்டிருந்தது.  

மாநில நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்ற பின் 
அவர்களது கல்வித்தகுதி கணக்கில் கொள்ளப்பட்டு 
 JTO அடிப்படைப் பயிற்சி செல்வது ரத்து செய்யப்பட்டுள்ளது. 

மாநில நிர்வாகத்திற்கும், காரைக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும்...
AIBSNLEA  மாநிலச்செயலர் அன்புத்தோழர்.சிவக்குமார் அவர்களுக்கும் 
NFTE மாநில உதவிச்செயலர்  அருமைத்தோழர்.முரளிதரன் 
 அவர்களுக்கும்    நமது  நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

Thursday 29 December 2016

ஓய்வூதியமும்   
7வது ஊதியக்குழு முடிவுகளும் 

ஓய்வூதியம் பற்றிய  7வது ஊதியக்குழு முடிவுகள்
 BSNLலில் அமுலாகுமா?  என்பது
 கேள்விக்குறியாகவும்... விவாதப்பொருளாகவும் மாறிவிட்டது.

இது சம்பந்தமாக  AIBSNLPWA  ஓய்வூதியர் சங்கம்  
DOT  - DDG (ESTABLISHMENT ) அவர்களிடம்
 கோரிக்கை  எழுப்பியபோது  ஓய்வூதிய இலாக்காவிடமிருந்து உரிய வழிகாட்டுதல்கள் வந்த பின்பு  அமுல்படுத்தப்படும் 
என DOT தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஓய்வூதிய இலாக்காவைத் தொடர்பு கொண்டபோது 
தனியாக வழிகாட்டுதல்கள் தேவையில்லை என்றும் 
DOTயே இது சம்பந்தமான உத்திரவைப் பிறப்பிக்கலாம் எனவும் கூறியுள்ளது. எனவே DOT விரைவில் உரிய உத்திரவை பிறப்பிக்க வேண்டும்.  நியாயமான  இப்பிரச்சினை 
விரைவில் தீர்த்து வைக்கப்படும் என நம்புவோம்.

Wednesday 28 December 2016

காத்திருக்கின்றன காலணிகள்

அரியணையில் இடம் காலி...
பாக்கெட்டில் பணம் காலி...
காத்திருக்கின்றன காலணிகள்...

ATM பணம் ஏய்க்கும்...
அரியணை பணம் காய்க்கும்...
காத்திருக்கின்றன காலணிகள்...

நாடகம் போட்டு பிழைப்பாருண்டு...
நாடகம் போட்டு  ஏய்ப்பாருண்டு...
நாடகம் போடும் நயவஞ்சக நரிகளுக்கு...
காத்திருக்கின்றன காலணிகள்...

கால்களில் அல்ல... கரங்களில்...

Tuesday 27 December 2016

அதிகாரிகள் சங்கங்களும்.. 
அங்கீகாரச் சலுகைகளும்...

BSNLலில் 45.32 சத வாக்குகள் பெற்ற 
SNEA சங்கம் முதன்மைச்சங்கமாகவும் 
41.52 சத வாக்குகள் பெற்ற 
AIBSNLEA  சங்கம் SUPPORT ASSOCIATION 
என்ற நிலையிலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. 
இரண்டு சங்கங்களுக்கும் இடையே 
3.8 சத வாக்குகளே வித்தியாசம். 

அதிகாரிகள் சங்க அங்கீகார விதிகளின் படி 35 சதத்திற்கும்  அதிகமாக வாக்குகள் பெற்று முன்னிலை பெற்ற சங்கம்  முதன்மைச்சங்கமாகவும்... 
15  சதத்திற்கும்  அதிகமாக வாக்குகள் பெற்ற சங்கம்
SUPPORT ASSOCIATION  என்ற அளவிலும் அங்கீகரிக்கப்படும்.

ஆனால் இரண்டு சங்கங்கள் 35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றால் அங்கீகார நிலை என்ன என்பது பற்றி அங்கீகார விதிகளில் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் 41.52 சத வாக்குகள் பெற்று  SUPPORT ASSOCIATION  என்ற தகுதியைப் பெற்றுள்ள 
AIBSNLEA  சங்கம் தங்களுக்கு ஊழியர்கள் சங்கங்களுக்கு வழங்கப்பட்டது போல் சமநிலை கோரி போராட்டக்களம் இறங்கியுள்ளது.

தற்போது ஊழியர் சங்கங்களில் இரண்டு அங்கீகாரச் சங்கங்கள் இருப்பது போல அதிகாரிகள் மட்டத்திலும் 35 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்ற சங்கங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.  41.52 சத வாக்குகள் பெற்ற ஒரு சங்கம் கொள்கைப்பிரச்சினைகளில் தலையிட முடியாது... அதிகாரப்பூர்வ  பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாது என்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும். ஒரு மாபெரும் ஜனநாயக நாட்டில் இப்படியெல்லாம் விதிகள் உருவாக்கப்படுவது கேலிக்குரியது. எனவே AIBSNLEA  சங்கம் தொடங்கியுள்ள போராட்டம் நியாயமான போராட்டமாகும். நிர்வாகம் ஏறத்தாழ 42 சதம் வாக்குகள் பெற்ற சங்கத்திற்கு உரிய தகுதி அளிக்க வேண்டும்.

அதிகாரிகள் சங்கங்கள் நம்மைச் சுட்டிக்காட்டும் வேளையில்...
நாமும் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விழைகிறோம்..

அதிகாரிகள் சங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளில்...

  • INTRANET எனப்படும் நிறுவன இணையத்தளத்திற்கு உபயோகிப்பாளர் வசதி தரப்பட்டுள்ளது. (USER ID FOR INTRANET)
  • அங்கீகரிக்கப்பட்ட சங்கப்பொறுப்பாளர்களுக்கு அனைத்து  நிலைகளிலும்  இலவச அலைபேசி வசதி தரப்பட்டுள்ளது.  

 மேற்கண்ட இரண்டு சலுகைகளும் ஊழியர் சங்கங்களுக்கு கிடையாது. இந்த பாகுபாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.  எனவே நிர்வாகம் மேற்கண்ட சலுகைகளை  அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். நமது சங்கங்களின் சார்பாக 
நாம் கோரிக்கையை விரைந்து எழுப்ப வேண்டும்.

ஒரு தொழிலுக்கு ஒரு சங்கம் என்பது 
ஜனநாயக நாட்டில் ஏற்புடையதல்ல...
இணையான அங்கீகாரம் என்ற 
ஜனநாயகப் போராட்டக் களம் காணும் 
AIBSNLEA  சங்கத்திற்கு நமது வாழ்த்துக்கள்...

Monday 26 December 2016

ஊதிய திருத்தக்குழு 

BSNL ஊழியர்களுக்கான ஊதிய திருத்தக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்திரவை BSNL நிர்வாகம் 
26/12/2016 அன்று வெளியிட்டுள்ளது.

கீழ்க்கண்ட அதிகாரிகள் உறுப்பினர்கள் ஆவர்.

தலைவர் : திருமதி. அனுராதா பண்டா PGM(F)
செயலர் : திரு.AK.சின்ஹா DGM(SR) 
உறுப்பினர்கள் 
திருமதி. மது அரோரா GM(EST)
திருமதி. RD. சரண் GM(EF) 
திரு.AM.குப்தா GM(SR)

5 பேர் கொண்ட ஊதியக்குழுவில் 3 பேர் திருமதிகள் ஆவர்.
திருமதிகள் குழு ஊழியர்களுக்கு அதிக வெகுமதிகள் அளிக்குமா 
என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஊதியக்குழுவில் ஊழியர் தரப்பு பிரதிநிதிகள் இடம் பெறவில்லை.
ஊழியர் தரப்பில் நியமனம் கோரப்பட்டு பின்பு சேர்க்கப்படலாம்.
ஊதியக்குழு அமைக்கப்பட்டாலும் 
DPE வழிகாட்டுதல் வந்தபின்புதான் குழு தனது பணியைத் துவக்கும்.

BSNLEU  சங்கம்  தனது  அகில இந்திய  மாநாட்டை டிசம்பர் 31ல் சென்னையில் நடத்துகிறது. எனவே BSNLEUவைக் குளிர்விப்பதற்காக நிர்வாகம் மேற்கண்ட குழுவை நியமனம் செய்திருக்கலாம்.
ஓய்வூதிய உத்திரவுகளும்...
ஓயாத குழப்பங்களும்..

     ஓய்வூதியம்  பற்றிய   7வது ஊதியக்குழுவின் முடிவுகளை அமுல்படுத்திட   DPE   04/08/2016 அன்று உத்திரவிட்டிருந்தது.  
DPE  உத்திரவினை    DOT  22/08/2016 அன்று   தனது கட்டுப்பாட்டில் உள்ள BSNL, MTNL உட்பட  அனைத்து தொலைத்தொடர்பு 
நிறுவனங்களுக்கும்  வழிமொழிந்து   அனுப்பியிருந்தது.

அதனை BSNL 21/12/2016 அன்று வழிமொழிந்து அனைத்து மாநில நிர்வாகங்களுக்கும் அனுப்பியுள்ளது.   DPE உத்திரவை DOTயும், BSNLம் ஆமென்  என்று வழிமொழிந்தன  தவிர அதில் குறிப்பாக எந்த செய்திகளும்  சொல்லப்படவில்லை. எனவே  இந்த  உத்திரவு 
BSNL  ஊழியர்களுக்குப் பொருந்தும் என்றே எடுத்துக்கொள்ளப்பட்டது. 

22/08/2016 அன்று டெல்லியில் 7வது ஊதியக்குழு முடிவுகளை அமுலாக்குவது பற்றி  கூடுதல் CGA தலைமையில் வங்கிப்பிரதிநிதிகளுடன்  கலந்தாய்வு நடைபெற்றது. 
அதில் 11 சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. அதில் 04/08/2016 தேதியிட்ட DPE உத்திரவு யாருக்கெல்லாம் பொருந்தும் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த DP&PW இயக்குநர்  IDA ஓய்வூதியம் பெறும்  
BSNL மற்றும் MTNLக்கு  மேற்கண்ட உத்திரவு பொருந்தாது என விளக்கமளித்துள்ளார்.  எனவே   இது BSNL ஊழியர்களுக்குப் பொருந்துமா என்ற கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது. 

வங்கிகளுக்கு விளக்கம் சொல்லப்பட்ட  22/08/2016 அன்றுதான் 
DOT மேற்கண்ட உத்திரவை எந்தவித மேற்கோளும் இன்றி வழிமொழிந்துள்ளது. அதனையே BSNLம் 21/12/2016 அன்று செய்துள்ளது. எனவே 22/08/2016 அன்று அளிக்கப்பட்ட விளக்கம் செல்லத்தக்கதல்ல என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்.  மேலும் BSNL உருவாக்கத்தின் போது பல்வேறு விளக்கங்கள் ஓய்வூதியம் பற்றி அளிக்கப்பட்டுள்ளன. அவற்றுள்...   குறிப்பாக தனியாக சொல்லப்படாத வரையில்
  அனைத்து ஓய்வூதிய உத்திரவுகளும் BSNLக்குப் பொருந்தும் என்றொரு விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும்    ஓய்வூதிய  உத்திரவுகளுக்கு விளக்கம் கேட்டே இழுத்தடிக்கப்படுவது 
என்பது  நமது பகுதியில்  வாடிக்கையாகும். 

எனவே BSNL வழிமொழிந்துள்ள 21/12/2016 உத்திரவு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் கவலையும் எழுந்துள்ளது.
     04/08/2016 தேதிய DPE உத்திரவு BSNLலில்  அமுல்படுத்தப்பட வேண்டும். இல்லையேல்...  78.2 போன்றதொரு  நீண்ட நெடிய  போராட்டம் தவிர்க்க இயலாதது.  நமது DOT CELL என்ன செய்யப்போகிறது? என்பதைப் பொறுத்தே
 நமது அடுத்த கட்ட நடவடிக்கை அமையும்.

Sunday 25 December 2016

நெகிழ்ச்சி தந்த நினைவேந்தல் 

அருமைத்தோழர் அய்யர் அவர்களின் 
நான்காம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 
காரைக்குடி சங்க அலுவலகத்தில் 
23/12/2016 அன்று நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது. 

தோழர்.பூபதி தலைமையேற்றார். 
கோட்டப்பொறியாளர் தோழர்.குமார் 
ஓய்வூதியர் சங்கச்செயலர் தோழர்.முருகன் 
BSNLEU  மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன் 
ஒப்பந்த ஊழியர் சங்கத்தலைவர்  தோழர்.முருகன்
மாநில அமைப்புச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான் 
மாவட்டத்தலைவர் தோழர்.லால்பகதூர் 
கிளைச்செயலர் தோழியர்.கார்த்திகா 
மாவட்டச்செயலர் தோழர்.மாரி 
மற்றும் பல  தோழர்கள் தங்கள் 
நினைவலைகளைப்  பகிர்ந்தனர்.

மாமி காந்திமதி வெங்கடேசன் 
அவர்களின் நிறைவுரையோடு 
அய்யர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 
நெகிழ்வோடு நிறைவுற்றது.

Saturday 24 December 2016

இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் 
தொடர்புடைய படம்

இதயத்தில் சுத்தமானவர்களே... பாக்கியவான்கள் 
அவர்களே... ஆண்டவனைத் தரிசிப்பார்கள்...

அனைவருக்கும் இதயங்கனிந்த 
கிறிஸ்துமஸ் 
நல்வாழ்த்துக்கள்
பண மதிப்பிழப்பு எதிர்ப்பு போராட்டம் 

காரைக்குடியில் 22/12/2016 அன்று பொதுமேலாளர் அலுவலகம் மற்றும் கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் ஆகிய இடங்களில் 
பண மதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்த  மத்திய அரசின் 
மடத்தனமான முடிவை எதிர்த்து அனைத்து  தொழிற்சங்களின் 
சார்பாக  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வூதியர் சங்கத்தலைவர் தோழர்.பூபதி, 
வங்கி ஊழியர் சங்கத்தலைவர் தோழர்.பத்மநாபன்,
 இந்திய பொதுவுடைமைக்கட்சி நகரச்செயலர் தோழர்.சீனிவாசன் , 
இளைஞர் பெருமன்ற மாவட்டச்செயலர் தோழர்.சிவாஜி காந்தி 
ஆகியோர் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினர்.

Friday 23 December 2016

நெருப்பைப் பொசுக்கிய பகலவன் 

டிசம்பர் -24
தந்தை பெரியார் நினைவு தினம்
‘SNIPER OF THE SACRED COWS’ 

   சதிமாதாக்களை ஒழித்தவன்...
சாதிபிதாக்களை அழித்தவன் ...

புனிதம் வளர்த்த மூட நெருப்பை
உரக்க ஊதி அணைத்த பகலவன்...

கோமாதாக்களை குறிவைத்து சுட்டவன்...
கோணல் முதுகுகளை கோபுரமாய் நிமிர்த்தவன்..

தந்தை பெரியார் வழி நடப்போம்...
-------------------------------------------------------------------------------------------------------------------
தந்தைப் பெரியார் நினைவேந்தல் நிகழ்வு 

24/12/2016 - சனிக்கிழமை - மாலை 05 மணி 
VKN அரங்கம் - கல்லூரி சாலை - காரைக்குடி 

"அய்யாவின் அடிச்சுவட்டில்"
நூல் வெளியீடு 

சிறப்புரை 
முனைவர்.தோழியர்.கண்மணி 
இலக்கியதென்றல் தென்னவன் 
மற்றும் சுமரியாதை இயக்கத் தலைவர்கள் 
தோழர்களே... வருக...
7வது ஊதியக்குழு 
ஓய்வூதிய முடிவுகள் அமுலாக்கம் 

01/01/2016 முதல் 7வது ஊதியக்குழுவின் ஓய்வூதியம் பற்றிய பரிந்துரைகள் அனைத்து மத்திய அரசுத்துறைகளிலும் அமுல்படுத்தப்பட்டிருந்தாலும் நமது BSNL துறையில் அமுலாக்கம் செய்யப்படவில்லை. நமது மத்திய சங்கம் இதை சுட்டிக்காட்டியிருந்தது. 

DPE இலாக்கா தனது   04/08/2016 தேதிய கடிதத்தில்  
7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்திட உத்திரவிட்டது. அதனை வழிமொழிந்து DOT  22/08/2016 அன்று உத்திரவிட்டது. 
ஆனால் 4 மாதங்கள் கழித்து 21/12/2016 அன்று BSNL நிர்வாகம் வழிமொழிந்து  உத்திரவிட்டிருப்பது கண்டனத்துக்குரியது.

BSNLலின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.7760/= ஆக உள்ளபோது 
குறைந்தபட்ச ஓய்வூதியம் 01/01/2016 முதல் ரூ.9000/=
  என உயர்த்தி அமுல்படுத்தப்படுமா ? 
என்ற கேள்வியும்... சந்தேகமும்  பலரிடம் இருந்தது.  
தற்போதைய உத்திரவின்படி  குறைந்தபட்ச ஓய்வூதியம் 
01/01/2016 முதல் ரூ.9000/=   என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

BSNLலில் அமல்படுத்தப்படும்  
7வது ஊதியக்குழு முடிவுகள்   

குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9000/= 
அதிக பட்ச ஓய்வூதியம் ரூ.1,25,000/=
அதிக பட்ச பணிக்கொடை ரூ.20,00,000/= (இருபது லட்சம்)

இவை யாவும் 01/01/2016 முதல் அமுலுக்கு வருகிறது. 
மேற்கண்ட உத்திரவு 01/01/2016க்கு முன் 
ஒய்வு பெற்ற ஊழியர்களுக்கும், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும்... 
01/01/2016க்குப்பின் ஒய்வு பெறுபவர்களுக்கும் பொருந்தும்.

01/01/2016க்கு முன் ஓய்வு பெற்றவர்கள் 
தங்கள் அடிப்படை ஓய்வூதியத்தை பெருக்கு  மடங்கு 
2.57ஐக்கொண்டு பெருக்கினால் வருவது  புதிய ஓய்வூதியமாகும்.

Thursday 22 December 2016

வஞ்சமில்லா... அய்யரை  
நெஞ்சம் மறப்பதில்லை...
christmas lights animation க்கான பட முடிவுchristmas lights animation க்கான பட முடிவு
டிசம்பர் - 23 
தோழர்.வெங்கடேசன் 
நினைவு நாள் 

அன்பை சொன்னான்...
அறிவை சொன்னான்....
அகிம்சை சொன்னான்...
அடக்கம் சொன்னான்...

அதர்மம் வெல்லும்...
வழி  மட்டும் சொல்லாமல் 
சென்று விட்டான்...

ஆனாலும்...
அவன் தந்த நேர்மை என்னும் 
ஆயுதம் கொண்டு...
அதர்மம் ஒரு நாள் வெல்வோம்...

ஆண்டுகள் எத்தனை  ஆனாலும்...
 தாக்குதல் எத்தனை வந்தாலும்...
அவன் வழி தொடர்ந்து செல்வோம்...
-----------------------------------------------------------------------------------------------------------------
அய்யர் நினைவஞ்சலிக் கூட்டம் 
23/12/2016 - வெள்ளி - மாலை 05 மணி 
NFTE - சங்க அலுவலகம் - காரைக்குடி 
தோழர்களே... வாரீர்...

Wednesday 21 December 2016

வாழ்த்துக்கள்... ண்ணதான்...

இந்த ஆண்டிற்கான 
சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ள 
எழுத்தாளர்.. கவிஞர்...
தோழர்.தி.க.சி.யின் புதல்வர் 
கலைமாமணி. ண்ணதான்
வர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

ஒரு சிறு இசை
என்ற அவரது சிறுகதைத் தொகுப்பு 
விருது பெற்றுள்ளது...

தோழர்கள் படித்து மகிழவும்...
மோதி மிதித்து விடு... முகத்தில் உமிழ்ந்துவிடு 

நாட்டு மக்களை 
நடுத்தெருவில் நிறுத்திய 
நாணயங்கெட்ட..
நாலுங்கெட்ட.. 
நடுவண் அரசைக் கண்டித்து 
அனைத்து சங்கங்களின் சார்பாக 
கண்டன ஆர்ப்பாட்டம் 

22/12/2016 - வியாழன் 
மதியம் 01.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி. 

மாலை 05.00 மணி 
கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம்  
காரைக்குடி.

நம்மை வீதியில் நிறுத்தியோரை...
நாம்  வீதிக்கு இழுப்போம்...
வாரீர்... தோழர்களே...
 விழாக்கால முன்பணம் 

2017ம் ஆண்டிற்கான விழாக்கால முன்பணம் 
விண்ணப்பிக்க உரிய தேதிகளை மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.

விழாக்கால முன்பணம் விண்ணப்பிக்க விரும்புவோர் 
கீழே  கண்ட விழாக்களுக்கு  எதிரே  குறிப்பிட்ட தேதிக்குள் 
தங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

  • பொங்கல் & குடியரசு தினம் - 02/01/2017
  • ஹோலி  - 01/03/2017
  • தமிழ் வருடப்பிறப்பு - புனித வெள்ளி - 01/04/2017
  • ரம்ஜான் - 07/06/2017
  • சுதந்திர தினம் - 01/08/2017
  • விநாயகர் சதுர்த்தி - பக்ரீத் - 11/08/2017
  • தசரா - முகரம் - 08/09/2017
  • தீபாவளி  - 03/10/2017
  • மிலாடி நபி - 08/11/2017
  • கிறிஸ்துமஸ் - 08/12/2017

Tuesday 20 December 2016

செய்திகள்
NFTE மத்திய செயற்குழு  2017 பிப்ரவரி 13 மற்றும் 14 தேதிகளில் 
தோழர். இஸ்லாம் அகமது அவர்கள் தலைமையில்
  கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெறுகிறது. 
--------------------------------------------------------------------------------
மத்திய பொதுத்துறை சங்கங்களின் தேசிய கருத்தரங்கம் 29/01/2017 அன்று பெங்களூரில் நடைபெறுகிறது. 01/01/2017 முதல் ஊதிய மாற்றம் மற்றும் தனியார் நுழைவு ஆகியன பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்படும்.
--------------------------------------------------------------------------------
15/12/2016 நாடு முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்களின் ஒரு நாள் ஊதியத்தை உடனடியாகப் பிடிக்குமாறு 
CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------
பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குப்  பின்புதான் தற்காலிக மாற்றலுக்கு ஊழியர்கள் விண்ணப்பிக்க முடியும் என்றும், தற்காலிக மாற்றல்கள் 5 ஆண்டுகள் வரை அனுமதிக்கப்படும் என்றும் 
COPORATE அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
--------------------------------------------------------------------------------
நடந்து முடிந்த அதிகாரிகள் சங்கத்தேர்தலில் முதன்மை இடம் பெற்ற SNEA சங்கத்திற்கு முதன்மைச்சங்கம் என்ற தகுதியும், இரண்டாமிடம் பெற்ற AIBSNLEA  சங்கத்திற்கு SUPPORT ASSOCIATION என்ற தகுதியும் அளித்து BSNL நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 
இதனிடையே 35 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்றுள்ளதால் தங்களுக்கும் முழுமையான அங்கீகாரம் வழங்கக்கோரி 
AIBSNLEA சங்கம் போராட்டக் களத்தில் குதித்துள்ளது.
--------------------------------------------------------------------------------
ஊழியர்களின் மாதாந்திர வேதனையான வைப்புநிதி GPF பட்டுவாடா இந்த மாதம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. 
அடுத்த ஆண்டு பட்டுவாடா நடைபெற வாய்ப்புள்ளது. 
தற்போது 500, 1000 என  யாரிடமும் கடனும் கேட்க
 இயலாத சூழலில் ஊழியர்கள் பாடு  படுதிண்டாட்டம்தான்.

Monday 19 December 2016

 அடிப்படைப்பயிற்சியும்... 
அனாவசிய செலவுகளும் 

JTO தேர்வில் வெற்றி பெற்ற தோழர்களுக்கான 
6 வார  PREBASIC அடிப்படைப்பயிற்சி  
சென்னை மறைமலை நகர் பயிற்சி மையத்தில்
 02/01/2017 அன்று துவங்குகிறது.

PREBASIC -I  பயிற்சி 3 வாரங்களுக்கும் 
PREBASIC - I I  பயிற்சி 3 வாரங்களுக்கும் சேர்த்து 
6 வாரங்கள் பயிற்சி நடைபெறும்.  மேற்கண்ட பயிற்சி பொறியியல் பட்டதாரிகளுக்குப் பொருந்தாது.  பயிற்சிக்கு அனுப்பப்படும் 
34 தோழர்களில் பல தோழர்கள் BE பட்டதாரிகள் ஆவர். 

TTAவாக பணி நியமனம் பெறும்போது DIPLOMA தகுதி இருந்தாலும்... 
பணி நியமனத்திற்குப்பின் பல தோழர்கள் பகுதி நேரப்படிப்பில் BE முடித்துள்ளனர். சில தோழர்கள் TTA  விண்ணப்பிக்கும் போது DIPLOMA தகுதியும்... பணி நியமனம் பெறும்போது BE தகுதியும் பெற்றுள்ளனர். இவர்களது உயர் கல்வித்தகுதி அவர்களது சேவைக்குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ERPயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

காரைக்குடியில் TTAவாகப்  பணிபுரியும்...
 தோழியர்.கார்த்திகா BE பட்டதாரி....
 தோழர்.தமிழ்மாறன் BE பட்டதாரி....
ஆனாலும்  அவர்களையும்  6 வாரப்பயிற்சிக்கு
  அனுப்பிட நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது. 

நமது கேள்வி இதுதான்...
பட்டதாரிகள் அடிப்படைப்பயிற்சி என்ற பெயரில்... 
மறுபடியும் முதலில் இருந்து...
12ம் வகுப்பு பாடங்களை எழுத்துக்கூட்டி படிக்க வேண்டுமா?

அதைப்படிப்பதற்கு 6 வாரங்களுக்கு... 
இலாக்காவிற்கும் ஊழியர்களுக்கும் அனாவசிய செலவு தேவைதானா?

6 வாரங்கள் அவர்கள் தற்போது செய்யும் 
பணியில் இடையூறு அவசியமா?

சிக்கனத்திற்கென்றே நாம் 
PROJECT SANJAY என்றொரு திட்டம் வைத்துள்ளோம்...
அவையெல்லாம் ஏட்டுச்சுரைக்காய்தானா?
நிர்வாகம் இவை பற்றி சிந்திக்காதா?
EPF வட்டி குறைப்பு 

ஏறத்தாழ 17 கோடி தொழிலாளர்கள் 
 உறுப்பினராக உள்ள EPF வைப்பு நிதி திட்டத்தில் 
தற்போது 8.8 சதமாக உள்ள   வட்டி விகிதம்
 2016-17ம் ஆண்டிற்கு 8.65   சதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

பெங்களூரில் 19/12/2016 அன்று   நடைபெற்ற 
215வது EPF வாரியக்கூட்டத்தில் 
மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 
 தொழிற்சங்கங்கள்  எதிர்ப்பைத் தெரிவித்த போதிலும்  
EPF வாரியம் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை.

இது போலவே  தற்போது  வழங்கப்படும் 
 ADMINISTRATIVE CHARGES நிர்வாகச்செலவு 
0.85 சதத்திலிருந்து 0.65 சதமாக குறைக்கப்படுகிறது. 

அடிமட்டத் தொழிலாளியின் அடிவயிற்றில்  கைவைப்பதே 
 ஆள்வோர்களின் அன்றாட  வாடிக்கையாக உள்ளது.

Sunday 18 December 2016

BSNL  தாராளம் ... ஏராளம்.. 

16/12/2016 முதல் PREPAID வாடிக்கையாளர்களுக்கு
 நமது BSNL  நிறுவனம் 
புது சலுகைகளை அறிவித்துள்ளது. 
இது 90 நாட்களுக்குப் பொருந்தும். 
வாடிக்கையாளர்களின் வரவேற்பைப் 
பொறுத்து மேலும் நீட்டிக்கப்படலாம்.
 மாநிலங்களுக்கேற்ப புதுப்புது 
கட்டணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

STV MRP in Rs. 
Freebies 
Validity (in calendar days)
Telecom Circles
(inclusive of service tax) 
99* 
Unlimited local/STD BSNL to BSNL with 300 MB data 
28
Kolkata TD, WB, Bihar,JKD, Assam, Gujarat, MP, CG, MH, Rajasthan
119* 
28 
UPE,UPW, Uttaranchal
139 
28
HR, OR, PUN, AP, J&K, KTK, Chennai TD, NE-I/II, TAMILNAD
149*
28
Kerala,HP
339
Unlimited local/STD BSNL to BSNL/others with 1 GB data
28
Pan-India