Tuesday 28 February 2017

அழியட்டும்...காமராஜ்ஜியம்..


தலையிருக்க வாலாடக்கூடாது என்பார்கள்…
ஆனால் தமிழக NFTEயில்...
தலை மட்டுமே ஆடுகிறது...
அதுவும் ஓவராக…

NFTE TAMILNADU என்ற பெயரில் 
Wattsapp குழு ஒன்று தமிழகத்தில் 
தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்டது..
GROUP ADMIN - குழு நிர்வாகியாக
மாநிலத்தலைவர் காமராஜ் என்றிருந்தது…
மாநிலச்செயலருக்கோ எடப்பாடி நிலை…

தன்னிச்சையாக ஆரம்பிக்கப்பட்ட குழுவில்
காமராஜ் தன் இஷ்டம் போல் 
செய்திகளைப் பரப்பினார்…
மாநிலச்செயலர் எப்போதாவது
ஆமென் மட்டும் சொல்வார்…

திண்டுக்கல்லில்.. 
மதுரை மாவட்டச்செயலருக்கே தெரியாமல்...
மாநிலத்தலைவரும் செயலரும் கூட்டம் நடத்தினார்கள்..
காமராஜின் Wattsapp குழுவில் இதுபற்றி
நமது கண்டனத்தை தெரிவித்தோம்…

நீக்குதல் மட்டுமே தெரிந்த காமராஜ்..
உடனே Wattsapp குழுவை விட்டு நம்மை நீக்கினார்…
நீக்குப்போக்கு இல்லாதவனின் நீக்கும்..
நிலைபாடு நமக்கு புரிந்ததுதான்…
எனவே இது பற்றி 
நமது தோழர்கள் யாரும் கவலை கொள்ளவில்லை…

திடிரென… 27/02/2017 அன்று 
மீண்டும் கருணை உள்ளத்தோடு
காமராஜ் நம்மை Wattsapp குழுவில் இணைத்தார்…

நிச்சயமாக மானமுள்ளவர்கள் 
அந்தக்குழுவில் இருக்க வாய்ப்பில்லை...

எனவே நமது கண்டனத்தை தெரிவித்து விட்டு
Wattsapp குழுவை விட்டு வெளியேறி விட்டோம்…

தமிழக NFTEயில்...
காமராஜ்ஜியம் கண்மண் தெரியாமல் 
ஆட்டம் போடுகிறது…
இது நிச்சயமாக அழிவுக்குத்தான்… 
என்பது ஊழியர்களுக்குத் தெளிவு…

2 comments:

  1. CUG other network 50Rs பேசுவதற்கு.
    உரிமையைப் பெற்று தான்த அங்கீகரிக்கப்பட்ட தெழிளிற்சங்க தலைமைக்கு எனது நன்றி.....

    ReplyDelete
    Replies
    1. தோழர் பரமசிவம் வெறும் 50 ரூபாயை பற்றி பேசி கொண்டு இருக்கின்றார் ஆனால் ஒருவருடமாகியும் இன்னமும் கூட்டு ஆலோசனை குழு மற்றும் மாவட்ட குழுக்கள் இன்று வரை கூட வில்லை அதற்கும் அவர் ஆதரவு தெரிவிப்பாரா. அடங்கொப்புரானே!!!

      Delete