Friday 31 March 2017

IDA ஏப்ரல் மாத ஏமாற்றம்

ஏப்ரல் மாத IDA 
டிசம்பர் 2016, ஜனவரி 2017 மற்றும் 
பிப்ரவரி 2017 மாதங்களின்..
விலைவாசிப்புள்ளிகளின் உயர்வின்
டிப்படையில் கணக்கிடப்படுகிறது. 

ஜுலை 2016ல் 280 என இருந்த விலைவாசிப்புள்ளி  
அக்டோபரில் 278 எனக்குறைந்ததால் 
ஜனவரி 2017ல் 0.8 சத IDA குறைந்தது. 

நவம்பர் 2016ல் 277 என இருந்த விலைவாசிப்புள்ளி
டிசம்பரில் 275 என இரண்டு புள்ளிகள் குறைந்தது. 
இது ஜனவரி 2017ல் மேலும் ஒரு புள்ளி குறைந்து
274 என்றாகியது.

எனவே 01/04/2017 முதல் IDA  
2.3 அல்லது 2.4 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
மொத்தத்தில் இந்தாண்டு 3 சதத்திற்கும் மேல் IDA இழப்பு ஏற்படும்.

பருப்பு விலை வீழ்ச்சியால்..
புள்ளிகள் குறைந்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மக்கள்தான் விலை குறைந்துள்ளதா என சொல்லவேண்டும்...
பருப்பினால் இந்த முறையும் நமது IDA பருப்பு வேகவில்லை..
ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் 
ஓய்வு பெறும் தோழர்களின் பணிக்கொடை மற்றும் 
விடுப்புச்சம்பளம் போன்ற ஓய்வூதியப்பலன்கள் குறையும்.

இது தண்டனை இல்லாத ஆண்டு உயர்வுத்தொகை வெட்டு…
மொத்தத்தில் IDA  ஏப்ரல் மாத ஏமாற்றம்…

Thursday 30 March 2017

விதிவிலக்கு மாற்றல்

அங்கீகரிக்கப்பட்ட சங்க பொறுப்பாளர்களுக்கான
 விதிவிலக்கு மாற்றல் IMMUNITY TRANSFER 
பிரச்சினையில் குழப்பமான
 கருத்துக்களை BSNL நிர்வாகம் தனது
15/03/2017 கடிதத்தில் தெரிவித்திருந்தது. 

தற்போது மீண்டும் 30/03/2017 அன்று
விளக்கம் அளித்துள்ளது. அதன்படி…
வேறு பணியிடங்களில் பணிபுரிபவர்கள் 
செயலர், உதவிச்செயலர் மற்றும் பொருளர்
பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டால்
 அவர்களுக்கு அந்தந்த தலைமையிடங்களுக்கு
 அங்கீகார காலம் வரை மாற்றல் அளிக்கப்படவேண்டும்
என்று நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது
அனைத்து சங்க கோரிக்கைகள்

BSNL அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்கங்கள் 
DPE மற்றும் DOT இலாக்கா செயலர்களுக்கு கீழ்க்கண்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி 29/03/2017 அன்று கடிதம் எழுதியுள்ளன.

  • 3வது ஊதியக்குழுவில் BSNL நிறுவனத்திற்கு  செலவினம் மற்றும் இலாபம் என்ற நிபந்தனைகளில் இருந்து விலக்கு...
  • அனைவருக்கும் 15 சத ஊதிய உயர்வு
  • 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு
  • ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியத் திருத்தம்
  • வாங்கும் சம்பளத்தில் ஓய்வூதியப் பங்களிப்பு
  • ஒழுங்குபடுத்தப்பட்ட  ஆண்டு ஊதிய உயர்வு

கொடியேற்று விழா

NFTCL
தேசியத்தொலைத்தொடர்பு ஒப்பந்தத்
 தொழிலாளர்கள் சங்கம்
பரமக்குடி

கொடியேற்று விழா
31/03/2017 – வெள்ளிக்கிழமை – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி

கொடியேற்றம்
தோழர்.G.ஜெயராமன்
NFTE சம்மேளனச்செயலர்
தோழர்களே… வருக…

Wednesday 29 March 2017

JAO ஆளெடுப்பு விதிகள்

JAO ஆளெடுப்பு விதிகளில் சில திருத்தங்களைப் புகுத்தி BSNL நிர்வாகம் 23/03/2017 அன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் மீது கருத்து தெரிவிக்க விரும்பும் சங்கங்கள் இன்று 30/03/2017க்குள் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

நமது கருத்துக்கள் சில…

ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளும்போது
 அதனைப் பற்றி முழுமையாக ஊழியர் சங்கங்கள் விவாதித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். ஒரு வார காலத்திற்குள் தெரிவிக்க வேண்டும் எனக்கூறுவது 
ஏதோ கண்துடைப்பு என்றே கருதவேண்டியுள்ளது.

இலாக்கா ஊழியர்கள் தேர்வு எழுதும் வயது 53லிருந்து 55ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 55 வயதில் அதிகாரியாக ஆவதால் பலன் ஏதும் இல்லை. 55 வயதில் அதிகாரி  என்பது LATE MARRIAGE தாமதத்திருமணம் போன்றதே. ஏதோ திருமணம் நடந்ததே
 என்ற திருப்தியைத் தவிர வேறு எதுவும் கிடைக்காது.

இதுவரை இலாக்கா ஊழியர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 சத ஒதுக்கீடு 25 சதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. SR.ACCOUNTANT/JR.ACCOUNTANT ஆகிய கேடர்களுக்கு 5 சதமும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு 
20 சதமும் என ஒதுக்கீடு பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. 
இது BSNL  நிர்வாகம் இலாக்கா ஊழியர்களுக்கு
 செய்யவிருக்கும் மிகப்பெரிய துரோகமாகும்.

SR.ACCOUNTANT/JR.ACCOUNTANT  கேடர்களில் எண்ணிக்கைப் பெருமளவு குறைந்து விட்டது. AO சம்பளத்தையும் தாண்டி
 மூத்த தோழர்கள் பலர் SR.ACCOUNTANT ஆகப் பணிபுரிகிறார்கள்.
 அவர்களை அப்படியே மேல்நிலைப்படுத்த வேண்டும் 
என்ற கோரிக்கையும் உள்ளது. 

இந்நிலையில் SR.ACCOUNTANT/JR.ACCOUNTANT  கேடர்களுக்குத் தனியாக ஒதுக்கீடு என்பது தேவையற்றது. கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்வுகளில் மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே தோழர்கள் தேர்வெழுதினர். எனவே இலாக்கா ஊழியர்களுக்குள் இருவித ஒதுக்கீடு என்பது தேவையற்றது. 

NE-6 சம்பள விகிதத்தில் 3 ஆண்டு சேவை மற்றும் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனைகள் போடப்பட்டுள்ளன.
முன்பு பல தோழர்கள் GR’D கேடரிலிருந்து கூட JAOவாகப் பணி புரிந்தனர். பட்டப்படிப்பு என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட பின்
 அந்த ஊழியர் எந்தக்கேடரில் இருந்தால் என்ன? 
எனவே NE-6 சம்பள விகிதத்தில் 3 ஆண்டு சேவை 
என்ற நிபந்தனை நீக்கப்பட வேண்டும்.

இன்று JE கேடரில் பொறியியல் பட்டப்படிப்பு படித்த பல தோழர்கள் பணிபுரிகின்றார்கள். கடந்த தேர்வில் கூட அவர்களே பெரும்பான்மையாக வெற்றி பெற்றனர். பொறியியல் பட்டதாரிகள் கணக்கதிகாரியாகப் பணிபுரிவது கூடுதல் பலனைக் கொடுக்கும். தொழில்நுட்பங்களைப் புரிந்து கொள்ளவும்.. 
ENGINEERING தோழர்களோடு நல்லுறவைப் பேணவும் 
அவர்களது கல்வித்தகுதி கைகொடுக்கும். 

இத்தகைய நிலையில் ஏராளமான தகுதியுள்ள இளைஞர்கள்
 பதவி உயர்வுக்காக காத்திருக்கையிலே 75 சத ஒதுக்கீட்டை வெளியாட்களுக்கு ஒதுக்கியிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல எதிர்த்துப் போராட வேண்டிய பிரச்சினையுமாகும்.

எனவே நிர்வாகம் 75 சதக் காலியிடங்களை 
ஒரே ஒதுக்கீடாக இலாக்கா ஊழியர்களுக்கும், 
25 சதக் காலியிடங்களை வெளியாட்களுக்கும் ஒதுக்க வேண்டும்.

அதிகாரிகளாக வெளியாட்கள் நேரடியாக வந்து 
பணிசெய்வதை விட இலாக்காவில் ஊழியராக அனுபவம் பெற்றவர்கள் வந்தமர்ந்து பணிசெய்வது சிறப்பானது. இலாக்காவிற்கு கூடுதல் பலன் தரத்தக்கது.

எனவே நிர்வாகம் JAO ஆளெடுப்பு விதியில் 
75 சதம் இலாக்கா ஊழியர்களுக்கு ஒதுக்க வேண்டும் 
என்பதே ஊழியர்களின் ஒட்டுமொத்தக்கோரிக்கை.
NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
இராமநாதபுரம்

31/03/2017 - வெள்ளிக்கிழமை - மாலை 05 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 

தோழர்.M.சாத்தையா - TT
பணிநிறைவு பாராட்டு விழா
மற்றும்
சிறப்புக்கூட்டம்

பங்கேற்பு : தோழர்கள்

P.காந்தி – AIBSNLPWA
C.இராமமூர்த்தி AIBSNLPWA
S.முருகன் – NFTCL மாவட்டத்தலைவர்
B. முருகன் – NFTCL மாவட்டச்செயலர்
K.தமிழ்மாறன் – NFTE மாவட்ட உதவிச்செயலர்
G.சுபேதார் அலிகான் – NFTE மாநில அமைப்புச்செயலர்
V. மாரி – NFTE மாவட்டச்செயலர்

சிறப்புரை
தோழர்.G.ஜெயராமன்
சம்மேளனச்செயலர் – NFTE

தோழர்களே… வருக…

அன்புடன் அழைக்கும்…
R.அமலநாதன் - கிளைத்தலைவர் 
G.தங்கராஜ் - கிளைச்செயலர்
சிறப்புக்கூட்டம் 

NFTE
கிளைச்செயலர்கள் கூட்டம்
மற்றும்
பணிநிறைவு பாராட்டு விழா

31/03/2017 –  வெள்ளிக்கிழமை - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் – பரமக்குடி.

தலைமை : தோழர்.B.லால்பகதூர் 
NFTE மாவட்டத்தலைவர்
  • தலமட்டப்பிரச்சினைகள்
  • அமைப்புநிலை
  • ஏப்ரல் 12 உண்ணாவிரதம்
  • மற்றும் ஏனைய பிரச்சினைகள்

சிறப்புரை
தோழர்.G.ஜெயராமன்
சம்மேளனச்செயலர் – NFTE
தோழர்களே… வருக…

Tuesday 28 March 2017

அதெல்லாம் அந்தக்காலம்…

ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு முன்பு…
அப்போதும் காரைக்குடிக்கு தனிப்பொதுமேலாளர் இல்லை.
துணைப்பொதுமேலாளராக திரு.பாலசுப்பிரமணியன் பணிபுரிந்தார்.
பின்பு அவர் நெல்லையில் பொதுமேலாளராகப்
பணிபுரியும் போது இயற்கை எய்திவிட்டார்.

அவருக்கு காரைக்குடி ஊழியர்கள் 
“சுனாமி” என்ற பட்டப்பெயரைச் சூட்டியிருந்தார்கள். 
ஏனென்றால் சுனாமி போலவே சுற்றிச்சுழன்று வந்து 
ஊழியர்களுக்குக் கடும் சேதாரங்களை விளைவிப்பார். 

அவர் ஒரு முறை சிவகங்கை சென்றிருந்தார். 
சிவகங்கையில் சிலர் அவரைச் சந்தித்து..
அங்குள்ள மனமகிழ் மன்றத்தை தோழர்கள் பல்வேறு சந்தோஷங்களுக்குப் பயன்படுத்துவதாக கொளுத்திப்போட்டனர். 

அவ்வளவுதான்… 
என்ன? ஏது? என்றே விசாரிக்காமல்...
மனமகிழ்மன்றத்தை உடனே இழுத்துப் பூட்டிவிட்டு 
சாவியுடன் காரைக்குடி திரும்பிவிட்டார். 
தோழர்கள் இந்நிகழ்ச்சி கண்டு கொதித்துப் போய்விட்டனர். 

அவரிடம் தொலைபேசியில் நாம் பேசியபோது 
“முடியவே முடியாது… பூட்டியது… பூட்டியதுதான்… 
திறந்து விடும் பேச்சுக்கே இடமில்லை “ என்று கூறிவிட்டார். 
அந்தக் காலக்கட்டத்தில் அவரை எதிர்த்து
எவரும் வாயைத்திறந்து பேசமாட்டார்கள். 
NFTE சங்கம் அங்கீகாரம் இழந்திருந்த நேரம். 
ஆனாலும் நாம்  அவரை எதிர்த்து 
“கதவு திறக்கும்வரை கண்டன ஆர்ப்பாட்டம்”
என்று அறிவிப்புச் செய்தோம். 

ஆர்ப்பாட்டம் என்ற அறிவிப்பைக் கேட்டவுடன்..
"வாருங்கள் பேசித்தீர்த்துக்கொள்ளலாம்".. 
என்று நம்மைத் தொலைபேசியில் அழைத்தார்.
“முடியவே முடியாது… பூட்டிய கதவுகள் திறக்கும்வரை 
பேச்சுவார்த்தைக்கு இடமில்லை”
என்று உறுதியாகச் சொல்லிவிட்டோம். 

மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம். 
4 மணிக்கே தோழர்கள் அலுவலக வாயிலில் கூடிவிட்டார்கள். 
4.45 மணிக்கு சிவகங்கைத் தோழர்கள்...
தொலைபேசியில் நம்மை அழைத்தார்கள். 
“கதவு திறந்து விட்டது” என்று களிப்போடு சொன்னார்கள். 

எனவே DGMஐச் சந்தித்து நன்றி கூறி வர சென்றோம். 
எங்களைச் சந்தித்த அவர் சொன்னார்..
"சிவகங்கை மனமகிழ் மன்றம் சரியான காரணங்களுக்குப் பயன்படுத்தப்படவில்லை. எனவே அது பூட்டப்படவேண்டிய ஒன்றுதான். ஆனால் எனது நிர்வாகத்தில் எனது ஊழியர்கள்
என்னை எதிர்த்துப் போராட்டம் செய்வது என்பதை 
என்னால் ஏற்றுக்கொள்ள இயலவில்லை. 
ஊழியர்கள் என் பிள்ளைகள். 
அவர்கள் என்னை எதிர்த்துக்குரல் கொடுப்பதை 
நான் விரும்பவில்லை. 
எனவேதான் திறந்து விட்டேன்” என்று கூறினார்.

“சார்… மனமகிழ் மன்றக்கதவும் திறந்தது… 
உங்கள் மனக்கதவும் திறந்தது… மிக்க நன்றி” 
என்று கூறிவிட்டு வந்தோம்.

இப்போதும் காரைக்குடியில் தனிப்பொதுமேலாளர் இல்லை…
ஊழியர்களின் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் என்று
நீண்ட நாட்களுக்கு முன்பாகவே
நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தோம்.

தற்போதைய DGM திரு.ஸ்ரீதர்
இங்கேயே RSA,JTO,SDE,DE என்று பணிபுரிந்தவர்.
அவர் எங்களிடம் கூறுகிறார்…
"போராட்டமா? எனக்கென்ன வந்தது…
தாராளமாய் பண்ணுங்கள்…
என்று எகத்தாளமாய்க் கூறுகிறார்..

அன்றைய காலத்தை எண்ணிப் பார்க்கிறோம்…
இன்றைய நிலைமையையும் நினைத்துப் பார்க்கிறோம்…
எங்கே செல்கின்றன?  நமது நிர்வாகங்கள்...

Monday 27 March 2017

JCM கூட்டங்கள்

JCM கூட்டங்கள் உரிய கால இடைவெளியில்
 தவறாமல் நடத்தப்பட வேண்டும் என CORPORATE அலுவலகம் 27/03/2017 அன்று மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.

எத்தனை JCM  கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது என்பது 
சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் ஆண்டு செயல்பாட்டுத்திறனை கணக்கிடுவதற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் 
எனவும் CORPORATE அலுவலகம் கூறியுள்ளது.  
                                           
காரைக்குடி மாவட்ட JCM உறுப்பினர் நியமன ஒப்புதல் 
27/3/2017 அன்று பொதுச்செயலர் தோழர். C.சிங் அவர்களிடமிருந்து 
9 மாத காலத்திற்குப் பின் காரைக்குடிக்கு  வந்துள்ளது. 
மத்திய மாநில சங்கங்களுக்கு நன்றி… 
மாவட்ட நிர்வாகம் உடனடியாக JCM கூட்டத்தைக் 
கூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
இணைந்த ஆர்ப்பாட்டம்

 மதுரை செயற்குழு முடிவின்படி..
 நிரந்தர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள்
பிரச்சினைகளைத் தீர்க்கக்கோரி

NFTE – NFTCL
இணைந்த ஆர்ப்பாட்டம்
28/03/2017  செவ்வாய் மாலை 5  மணி
GM அலுவலகம் -  காரைக்குடி.
தோழர்களே… அணிதிரள்வீர்…

 நிரந்தர ஊழியர் பிரச்சினைகள்

நீண்ட நாள் மாற்றல்களை..
உடனடியாக அமுல்படுத்துதல்...

விதி 8 மாற்றல் விண்ணப்பங்களை 
உரிய மாவட்டங்களுக்கு அனுப்புதல் 

நாலுகட்டப்பதவி உயர்வு வழங்குதல்.. ·        

கருணை அடிப்படை விண்ணப்பங்களை 
உடனடியாகப் பரிசீலனை செய்தல்...

சம்பள முரண்பாடுகளைக்களைதல்....
        
குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை 
அலுவலகங்கள் மற்றும் தொலைபேசி 
நிலையங்களில் ஏற்படுத்துதல்

JCM… பணிக்குழு மற்றும் சேமநலக்குழுக் 
கூட்டங்களை உடனடியாகக் கூட்டுதல்· 
       
மாவட்டம் முழுவதும் உள்ள 
சேவைக்குறைபாடுகளைக் களைதல்·
        
மறுக்கப்பட்ட மருத்துவப் பில்களை 
பட்டுவாடா செய்தல்

விடுபட்டவர்களுக்கு CONFIRMATION 
பணிநிரந்தரம் வழங்குதல்...· 
       
தேங்கிக்கிடக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை 
விரைந்து முடித்தல்

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள்      

இராமநாதபுரம் பகுதியில் கேபிள் பணி செய்யும் தோழர்களின் டிசம்பர் 2016 மற்றும் ஜனவரி 2017 சம்பளத்தைப் பட்டுவாடா செய்தல்·        

காவல்பணி செய்யும் தோழர்களின் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2017 சம்பளத்தை உடனடியாகப் பட்டுவாடா செய்தல்·        

பல ஆண்டுகளாகப் பணிசெய்யும் 
ஒப்பந்த ஊழியர்களுக்கு 8 மணிநேரப்பணி வழங்குதல்·        

துப்புரவுப்பணிக்குத் தேவையான பொருட்களை 
தவறாமல் வழங்குதல்·        

பிடித்தம் செய்து வைக்கப்பட்டுள்ள வைப்புநிதிப்பணத்தை 
உரிய ஒப்பந்த ஊழியர்களின் கணக்கில் சேர்த்தல்·        

7ந்தேதி சம்பளம் என்பதை எல்லோருக்கும் உறுதிப்படுத்துதல்· 

மத்திய அரசு உத்திரவின்படி இந்தாண்டு  குறைந்தபட்ச போனஸ் 7000 வழங்கிட ஒப்பந்தக்காரர்களைப் பணித்தல்

பாம்பனில் பணியில் இருக்கும்போது  
இறந்து போன ஊழியரின் குடும்பத்திற்கு 
உரிய நிவாரணம் வழங்குதல்...
பணி நிறைவு பாராட்டு விழா

NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
பரமக்குடி
பணி நிறைவு பாராட்டு விழா

31/03/2017 – வெள்ளிக்கிழமை – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி

பணி நிறைவு பாராட்டு பெறுவோர்

அமைதியின் அடையாளம்
அன்புத்தோழர். 
SK.நாகநாதன்
அலுவலக கண்காணிப்பாளர் – பரமக்குடி

சுதந்திரப் போராட்டத்தியாகி
பொன்னுச்சாமித்தேவரின் அருந்தவப்புதல்வர்
பொ.கல்யாணசுந்தரம்
TT - பரமக்குடி

வாழ்த்துரை : தோழர்கள்

P.இராமசாமி - AIBSNLPWA
A.காசிநாதன்  - கிளைச்செயலர் AIBSNLPWA
A.கணேசன் - AIBSNLPWA
P.முருகன் - AIBSNLPWA - மாவட்டச்செயலர்
S.முருகன் - NFTCL மாவட்டத்தலைவர்
B.முருகன் - NFTCL மாவட்டச்செயலர்
N.பாலமுருகன் - NFTE மாவட்டப்பொருளர்
K.தமிழ்மாறன் - NFTE மாவட்ட உதவிச்செயலர்
B.லால்பகதூர் - NFTE மாவட்டத்தலைவர்
V.மாரி - NFTE மாவட்டச்செயலர்
G.சுபேதார் அலிகான் - NFTE மாநில அமைப்புச்செயலர்

 சிறப்புரை
G.ஜெயராமன் 
NFTE சம்மேளனச்செயலர்

தோழர்களே.. வாரீர்..