Sunday 30 April 2017

மேதினப்புரட்சி வாழ்த்துக்கள்

உழைக்கும் கரங்கள்… உயரட்டும்…
உழைப்பவர் வாழ்வு மலரட்டும்…
தளைகளை அறுத்திடுவோம்…
தலைகளை நிமிர்த்திடுவோம்..
அனைவருக்கும்…
புரட்சிகர... 
மேதின நல்வாழ்த்துக்கள்
மேதின விழா…

மேதினக்கொடியேற்றம்
01/05/2017 – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

மாலை 05.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி…

AITUC – NFTE – NFTCL 
இணைந்த
மேதினச்சிறப்புக்கூட்டம்
மாலை 06.00 மணி
ஐந்து விளக்கு – காரைக்குடி

தோழர்களே வருக…
பணி தொடரட்டும்…
30/04/2017 இலாக்காப்  பணி நிறைவு 

காரைக்குடி மண்ணின் சொத்து…
கண்ணியமிக்க முத்து…
படிப்படியாய் உயர்ந்தவன்…
படி...படி...என்று பலரைத் தூண்டியவன்…
எத்தனையோ அதிகாரிகளுக்கு
இவன் ஒரு ஏணிப்படி…
எத்தனை உயரம் சென்றாலும்..
இவன் மறக்கவில்லை ஏணிப்படி…
தோழமை இவன் பேச்சு…
பொதுவுடைமை இவன் மூச்சு..
தொடரட்டும் இயக்கப்பணி…
சங்கிலித்தொடராய்…
அன்புடன் வாழ்த்தும்…
NFTE காரைக்குடித் தோழர்கள்

Saturday 29 April 2017

வாழ்க… பல்லாண்டு

இன்று பணிநிறைவு பெறும்
NFTE இயக்கத்தின்..
நெடுநாள் உறுப்பினர்..
இளநிலை கணக்கு அதிகாரி
அன்புத்தோழியர்
R.மீனாகுமாரி 
அவர்களின் பணிநிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்..

Friday 28 April 2017

வாழ்க… வளமுடன்..

இன்று 29/04/2017 
பணி நிறைவு பெறும்
திருச்சி NFTE மாவட்டத்தலைவர்
தோழர்.சுந்தரம் 
அவர்களின்
பணிநிறைவு விழா சிறக்கவும்…
பணிநிறைவுக்காலம் சிறக்கவும்
மனதார வாழ்த்துகின்றோம்…

அன்புடன்
NFTE மாவட்டச்சங்கம்
காரைக்குடி.

Thursday 27 April 2017

நெல்லை... நிறையட்டும்..

தோழர்.பாபநாசம் பணிநிறைவு விழா
28/04/2017 – வெள்ளி – காலை 10 மணி
KKR மண்டபம் – நெல்லை...
-------------------------------------------------------------------------------
மதியம் 02.00 மணி
NFTCL தமிழக மாநில செயற்குழு
தோழர்களே… அணி திரள்வீர்…

Tuesday 25 April 2017

நமக்கு நாமே நல நிதித்திட்டம்

BSNL தலைமையகம் தனது 19/04/2017 தேதியிட்டக் கடிதத்தில்...
பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக BENEVOLENT FUND 
நலநிதி ஒன்றைத் துவக்க இருப்பதாகவும்...
அந்த நலநிதி முழுக்க முழுக்க ஊழியர்களின்
பங்களிப்பில் உருவாக்கப்படும் என்றும்...
இது சம்பந்தமாக அதிகாரிகளைக்கொண்ட
குழு ஒன்று பரிசீலிக்கும் என்றும்...
நலநிதியை எவ்வாறு கையாள்வது....
மாதந்தோறும் ஊழியர்களிடம் 
எவ்வளவு தொகை பிடித்தம் செய்வது… 
நலநிதியாக எவ்வளவு தொகை வழங்குவது...
என்ற தங்களது கருத்துக்களை தொழிற்சங்கங்கள்
01/05/2017க்குள் அதிகாரிகள் குழுத்தலைவருக்கு
தெரியப்படுத்த வேண்டும் எனவும் BSNL நிர்வாகம் கூறியுள்ளது.

முதலில் இப்படியொரு குழு அமைக்கப்பட்டதே யாருக்கும் தெரியாது..
இது போன்ற பிரச்சினைகளுக்கு அதிகாரிகள் மற்றும் ஊழியர் தரப்பு அடங்கிய இருதரப்புக்குழு அமைப்பதுதான் சரியான முறையாகும்…
ஊழியர் தரப்பின் கருத்துக்களை மட்டுமே கேட்டு முடிவெடுப்பது சரியான ஜனநாயக நடைமுறையாகப் படவில்லை...

இறந்து போன ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி கொடுப்பதைக் கைவிட்டு விட்டு ஏதேனும் நலநிதியைக் கொடுத்து அவர்களைச் சரிசெய்து விடலாம் என்று நிர்வாகம் நினப்பதாக ஊழியர்களுக்கு தற்போது அச்சம் ஏற்பட்டுள்ளது....
இதனைப் போக்குவது நிர்வாகத்தின் கடமை…

நலநிதி சம்பந்தமாக நமது  கருத்துக்கள் இவைதான்…

நலநிதி கருணை அடிப்படைப்பணிக்கு மாற்றாக இருக்க முடியாது….
தற்போது ஏறத்தாழ இரண்டு லட்சம் ஊழியர்கள் உள்ளனர்.
மாதம் ரூ.100/- பங்களிப்பு செய்தால்
மாதம் இரண்டு கோடி ரூபாயும்…
ஆண்டிற்கு 24 கோடி ரூபாயும் நலநிதியாகத் திரட்ட முடியும்.
தற்போது பணிக்கொடை அளவு 20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே பணியில் இருக்கும்போது இறக்கும் ஊழியருக்கு
இருபது லட்சம் நலநிதியாக வழங்க வேண்டும்…

கருணை அடிப்படையில் பணி பெற்றவர்களுக்கு
குறிப்பிட்ட நலநிதித்தொகையும்...
கருணை அடிப்படையில் பணி கிடைக்காதவர்களுக்கு 
கூடுதல் தொகையும் வழங்கப்பட வேண்டும்..
இறந்து போன ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட வேண்டிய
வங்கிக்கடன், கூட்டுறவு சங்கக்கடன் மற்றும் இதரக்கடன்கள் கணக்கில் கொள்ளப்படவேண்டும்…

தற்போது ஆயுள் காப்பீடாக LICயில் ஊழியர்களுக்கு மாதம் ரூ.105/- பிடித்தம் செய்யப்பட்டு இறந்தால் ஒருலட்சம் வழங்கப்படுகிறது. 
இது மிகக்குறைவான தொகையாகும்.
எனவே ஆயுள் காப்பீட்டு அளவுத்தொகை 
5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும்.

ஊழியர் தரப்பையும் உள்ளடக்கி குழு அமைத்து...
உரிய முறையில் நடைமுறைப்படுத்தினால்...
நமக்கு நாமே நலநிதித்திட்டம் இறந்து போகும் ஊழியர் குடும்பங்களுக்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும். 

சாக்காடு கண்ட ஊழியரின் வாரிசுகளுக்கு...
உண்மையான நோக்கோடு.... உதவி புரியும் நோக்கோடு...
இந்தத்திட்டம் முறையாக அமுல்படுத்தப்பட வேண்டும்...

Monday 24 April 2017

உழுதவன்... தொழுதவன் ... வீழ்வதோ?

உணவளிப்பவன்… வயிறு காய்வதோ?
உயிர் கொடுப்பவன்… பிணமாவதோ?
உழுதவன்… உலகம் தொழுதவன்
வீழ்வதோ… வீழ்ந்து மடிவதோ?
தமிழகத்தில் எல்லாமே தாமதம்தான்…
இன்று தமிழகத்தில் நடைபெறும்…
போராட்டத்திற்கு நமது ஆதரவும் வாழ்த்துக்களும்…
மத்திய சங்க செய்திகள்

NFTE அகில இந்திய மாநாடு பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் என்று 21/04/2017 அன்று நடைபெற்ற பஞ்சாப் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இடம் மற்றும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
------------------------------------------------------------------------------------------
போன்மெக்கானிக் இலாக்காத் தேர்வு அறிவிப்பில் உள்ள குளறுபடிகளை நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு சுட்டிக்காட்டி.. உரிய திருத்தம் வெளியிட கேட்டுக்கொண்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
விரைவில் நடைபெறவுள்ள விளையாட்டுக்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படுவதற்காக நமது மத்திய சங்கம் பல்வேறு கோரிக்கைகளை நிர்வாகத்திடம் அளித்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு இரயிலில் AC II வகுப்பில் பயணம் செய்வது… தினப்படியை  உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை நமது சங்கம் விவாதப்பொருளாக அளித்துள்ளது.
------------------------------------------------------------------------------------------
SR.ACCOUNTANT கேடர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்த வேண்டும் என்ற CAT தீர்ப்பினை எதிர்த்து BSNL நிர்வாகம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது. அவ்வாறு மேல்முறையீடு செய்வது அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் அவர்களை அதிகாரிகளாக மேல்நிலைப்படுத்துவதுதான் சரியானது என்றும் நமது சங்கம் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதிகாரிகள் கூட்டமைப்பு போராட்டம்


SNEA தலைமையிலான அதிகாரிகள் சங்க கூட்டமைப்பு 
இன்று 25/04/2017 முதல் நாடு தழுவிய
 போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.  
  • 25/04/2017 முதல் 3 நாட்கள் தொடர் உண்ணாவிரதம்… 
  • 28/04/2017 அன்று ஒட்டுமொத்த விடுப்பு…
  • மே 1 முதல் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதம் மற்றும் விதிப்படி வேலை 
என்ற போராட்டத் திட்டத்தை 
அதிகாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 
அடிப்படைக்கேடர்களான JTO/JAO 
சம்பள விகித மாற்றம் முக்கிய கோரிக்கையாகும். 
 நமது வாழ்த்துக்களையும்… 
ஆதரவையும் உரித்தாக்குகின்றோம். 

Sunday 23 April 2017

NFTCL  மாநிலச் செயற்குழு 

NFTCL
தேசியத் தொலைத்தொடர்பு
ஒப்பந்தத் தொழிலாளர்கள் சம்மேளனம்

தமிழக மாநிலச்செயற்குழு

28/04/2017 – வெள்ளி – மதியம் 02.00 மணி
KKR திருமண மண்டபம் – நெல்லை

தலைமை :  தோழர்.V.பாபு
மாநிலத்தலைவர் NFTCL

ஆய்படு பொருள்
  • புதிய கூலி அமுலாக்கம்
  • 19/01/2017 முதல் நிலுவைத்தொகை
  • புதிய போனஸ்...
  • மாநிலம் தழுவிய பிரச்சினைகள்
  • மாநிலம் தழுவிய போராட்டம்
  • உரிமை மீட்பு வழக்குகள்..
  • அமைப்பு நிலை
  • நிதி நிலை
  • மற்றும் பல…

மாவட்டச்செயலர்கள்….
மாவட்ட வாரியான உறுப்பினர் எண்ணிக்கைப்பட்டியல்…
மாவட்டத்தில் ஒப்பந்தக்காரர்கள் விவரப்பட்டியல்…
இதுவரை அமுல்படுத்தப்படாத பிரச்சினைகளின் பட்டியல்…
இவற்றோடு அவசியம் வரவேண்டும்…..
மாவட்டச்செயலர்களும், மாநிலச்சங்க நிர்வாகிகளும்
முன்னணித்தோழர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் அழைக்கும்...
S.ஆனந்தன் - மாநிலச்செயலர்.
தோழர். பாபநாசம் 
பணிநிறைவு பாராட்டு விழா
கறுப்பாய் பிறந்தான்
சிவப்பாய் வளர்ந்தான்
உண்மையை விளக்கினான்
வெண்மையாய் விளங்கினான்...

அருமைத்தோழர்….
நெல்லை பாபநாசம் 
பணிநிறைவு பாராட்டு விழா

நெல்லை நிறையட்டும்
நெஞ்சம் நெகிழட்டும்….

ஏப்ரல் 28…
நெல்லை நோக்கி... 
வாரீர்தோழர்களே
ஏப்ரல் 28…. நெல்லை செல்வோம்
தளைகளுக்கு அஞ்சாத தளபதி
தலைகளுக்கு அஞ்சாத தலபதி

தோழமையின் எல்லை
தோழர் பாபநாசம்
பணிநிறைவு பாராட்டு விழா

ஏப்ரல் 28….
நெல்லை செல்வோம்

நெடுநாள் பணியினை...
நெஞ்சம் மறக்காத் துணிவினை...
நெஞ்சாரப் போற்றுவோம்...
வாரீர்… தோழர்களே

Thursday 20 April 2017

நேர்மை வளையுதடா

ஏப்ரல் 21 
பாவேந்தர் பாரதிதாசன்
நினைவு நாள்…

பாழாய்ப்போகும் நேர்மை பற்றி…
பாவேந்தரின் கவிதை….

நேர்மை வளையுதடா

ஊழலே தொழிலாச்சு
உலகம்
கொள்ளையடிப்பவர்க்கு நிழலாச்சு

வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு ..
எங்கும் வஞ்சகர் நடமாட வழியாச்சு..

சோகச் சுழலிலே...
ஏழைச் சருகுகள் சுற்றுதடா...
கண்ணீர் கொட்டுதடா

மோசச் செயலாலே...
முன்னேற்றம் கண்டோரின்..
ஆசைக்கு நீதி இரையாகுதடா ..

அன்பை அதிகார வெள்ளம்
கொண்டு போகுதடா

பழந்துணி அணிந்தாலும்
பசியாலே இறந்தாலும்
பாதை தவறாத பண்பு உள்ளம்...

இருந்த நிலை மறந்து
இழுக்கான குற்றம் தன்னைப்
புரிந்திடலாமென்று துணியுதடா

நேர்மை
பொல்லாத சூழ்நிலையால்
வளையுதடா
ஒப்பந்த ஊழியர் விலைவாசிப்படி உயர்வு

ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA விலைவாசிப்படி 
01/04/2017 முதல் உயர்ந்துள்ளது. 
இதற்கான உத்திரவு இன்று 20/04/2017 CLC
முதன்மை தொழிலாளர் ஆணையரால் வெளியிடப்பட்டுள்ளது.

திறனற்ற தொழிலாளிகளுக்கு
FOR UNSKILLED LABOUR
A பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.13/=ம்
B பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.11/=ம்
C பிரிவு நகரத்தில் நாளொன்றுக்கு ரூ.9/=ம்
விலைவாசிப்படி 01/04/2017 முதல் உயர்ந்துள்ளது.

தற்போதைய சம்பளம்
பிரிவு A நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.523
விலைவாசிப்படி    - ரூ.13
மொத்தச்சம்பளம்   - ரூ.536

பிரிவு B நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.437
விலைவாசிப்படி    - ரூ.11
மொத்தச்சம்பளம்   - ரூ.448

பிரிவு C நகரம்
அடிப்படைச்சம்பளம் ரூ.350/=
விலைவாசிப்படி    - ரூ.9/=
மொத்தச்சம்பளம்   - ரூ.359/=


தற்போதைய விதிகளின்படி ஒப்பந்த ஊழியர்களுக்கு 
ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டுமே
விலைவாசிப்படி வழங்கப்படும். 

புதிய சம்பளம் 19/01/2017ல் இருந்து நடைமுறைக்கு வந்தாலும் அவர்களுக்கு அன்றைய தேதியில் விலைவாசிப்படி உயர்வு இல்லை. எனவே 19/01/2017 முதல்  31/03/2017 வரை அடிப்படைச்சம்பளம் மட்டுமே பொருந்தும். 01/04/2017ல் இருந்ததுதான்  விலைவாசிப்படி அமுலுக்கு வரும். ஆனால் மாநில நிர்வாகம் வழிமொழிந்த உத்திரவின்  அடிப்படையில் சில இடங்களில் 
19/01/2017 முதல் VDA சேர்த்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
இது தவறாகும். CLCயின் 17/03/2017 உத்திரவின்படி
VDA 01/04/2017 முதல் அமுலாகும் என்பது  தெளிவாக்கப்பட்டுள்ளது. 

காரைக்குடி மாவட்டத்தில் நிர்வாகத்திடம் 
இதை ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்ததன் அடிப்படையில் 
மார்ச் மாத சம்பளம் புதிய 350 ரூபாய் அடிப்படையிலே வழங்கப்பட்டது. சில இணைய தளங்களும் 19/01/2017 முதல் 
VDA உயர்வு உண்டு என தவறுதலாக குறிப்பிட்டிருந்தன.

எது எப்படியோ... 
நிரந்தர ஊழியர்களுக்கு விலைவாசிப்படி குறைந்தாலும்...
அன்றாடக்கூலிகளான ஒப்பந்த ஊழியர்களுக்கு விலைவாசிப்படி உயர்ந்துள்ளது 
நமக்கு மிக்க மகிழ்ச்சியே…

Wednesday 19 April 2017


வைப்புநிதி
GPF  வைப்புநிதி BSNL ஊழியர்களுக்கு இனிமேல் நேரடியாக 
DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்யப்படும் என
 CORPORATE அலுவலகம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் ESS எனப்படும் ONLINE மூலம் விண்ணப்பித்தவுடன் சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரி அதனை ஒப்புதல் செய்து நேரடியாக DOTCELLக்கு E-MAIL மூலம் அனுப்பிவிடுவார். DOTCELL நேரடியாக ஊழியர்களின் வங்கிக்கணக்கில் வைப்புநிதியை வரவு வைத்துவிடும். 

இந்தப்பணி இரண்டு கட்டமாக அமுல்படுத்தப்படும். முதற்கட்டமாக ஏப்ரல் 2017க்குள்  12 மாநிலங்களிலும், இரண்டாம் கட்டமாக ஏனைய மாநிலங்களிலும் அமுல்படுத்தப்படும். தமிழகம் இரண்டாம் கட்ட அமுலாக்கத்தில் உள்ளது. வைப்புநிதி DOTCELL மூலமாகப் பட்டுவாடா செய்வதன் மூலமாக ஊழியர்கள் விரைவாக பட்டுவாடா பெறமுடியும். ஆனால் தற்போதுள்ள நடைமுறைப்படி மாதாமாதம் 
விண்ணப்பிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
ஏப்ரல் IDA
ஏப்ரல் 2017 முதல் 117.1 சதமாக குறைந்துவிட்ட
 IDA உத்திரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
--------------------------------------------------------------------------------------------------------------------------------
கேடர் பெயர் மாற்றம்
விடுபட்ட கேடர்களுக்கான பெயர்மாற்றம் பற்றி அதற்காக நியமிக்கப்பட்ட குழுவில் 18/04/2017ல் விவாதிக்கப்பட்டது. 
தற்போது 19 வகையான GROUP ‘D’ கேடர்கள் உள்ளன. இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரே கேடராக அறிவிக்கும்படி உழியர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைப்போலவே GROUP ‘C’ கேடரிலும் பெயர் மாற்றம் செய்யப்படாத பல கேடர்கள் உள்ளன. இதனைப் பற்றி விவாதித்து முடிவு செய்யவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அடுத்த கூட்டம் 26/06/2017ல் நடைபெறும் என்றும் அதில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------
அங்கீகாரமற்ற சங்கங்களின் கோரிக்கைகள்
அங்கீகாரமற்ற சங்கங்கள் தங்களது ஊழியர் பிரச்சினை பற்றி எடுத்துச்சொல்வதைக் காது கொடுத்துக் கேட்க வேண்டும் என BSNL நிர்வாகம் அனைத்து மட்ட நிர்வாகங்களையும் அறிவுறுத்தியுள்ளது. அவர்களின் கோரிக்கையை செவிமடுக்க மறுப்பது தவறு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே நேரம் அங்கீகாரமற்ற சங்கங்களுடன் எழுத்துப்பூர்வமாக எந்தக் கடிதத்தொடர்பும் கூடாது 
எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------
போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு
நடைபெறவுள்ள போன்மெக்கானிக் இலாக்காத்தேர்வு எழுதுவதற்கான கல்வித்தகுதியைத் தளர்த்த வேண்டும் எனவும்…. தேர்வுக்கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என சங்கங்களின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்கும் என நம்புவோம்.

Tuesday 18 April 2017

சிவந்த நெல்லை சிறக்கட்டும்...

தாமிரபரணிக்கரையின்…
தன்மானம் மிக்கத்தலைவன்..

நெல்லைப்பகுதியின்…
நெஞ்சம் நிறைந்த தோழன்…

பாபநாசம் அவர்களின்
பணிநிறைவு விழா…



நிரந்தர ஊழியர்களின்…
நேர்மைமிகு தலைவன்…

ஒப்பந்த ஊழியர்களின்…
செயல்மிகு தலைவன்…

தாமிரபரணியில்…
தடம் பதித்த தலைவன்…
தன் வாழ்நாள் முழுவதும்…
தடம் மாறாத் தலைவன்…

தோழர்.பாபநாசம் அவர்களின்
பணிநிறைவு விழா சிறக்க…
பாங்குடன் பங்கேற்போம் தோழர்களே….

Monday 17 April 2017

NFTCLதமிழக மாநில செயற்குழு

NFTCL
தேசியத் தொலைத்தொடர்பு
ஒப்பந்தத்தொழிலாளர் சம்மேளனம்

தமிழக மாநில செயற்குழு

28/04/2017 – வெள்ளிக்கிழமை 
பிற்பகல் 2 மணி
KKR மண்டபம் - நெல்லை...

தோழர்களே… வருக…