Tuesday 6 June 2017

கணக்கின்றி உழைத்திடு…
தோழர்.தமிழ்மாறன்  JAO 

NFTE மாவட்ட உதவிச்செயலர்
அருமைத்தோழர்.தமிழ்மாறன் JE அவர்கள்
JAO மற்றும் JTO இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்றார்.
பதவி உயர்வு மற்றும் இதரவற்றைக் கணக்கில் கொண்டு
இளநிலை கணக்கு அதிகாரி பதவியைத் தேர்ந்தெடுத்தார்.
திருவனந்தபுரத்தில் JAO பயிற்சி முடித்தார்.
காரைக்குடியில் காலியிடங்கள் இல்லாததால்..
கும்பகோணத்திற்கு மாற்றல் இடப்பட்டார்…
AIBSNLEA சங்கத்திடம்  கோரிக்கை வைத்தோம்…

தற்போது காரைக்குடியில் JAOவாகப் பணிபுரியும்
தோழர்.அசோகன் அவர்கள் விருப்பமாற்றலில்
மதுரைக்கு மாற்றல் இடப்பட்டுள்ளார்.
அவர் மதுரைக்கு செல்வதால் உண்டான காலியிடத்தில்..
தோழர்.தமிழ்மாறன் JAOவாக பணி அமர்வு பெறுகிறார்.

மிக உறுதியாக செயல்பட்டு…
தோழர்.தமிழ்மாறன் அவர்களுக்கு
காரைக்குடியிலேயே பதவி உயர்வில் பணியமர்த்திய 
AIBSNLEA...
அகில இந்தியத்தலைவர் 
அருமைத்தோழர்.சிவக்குமார் அவர்களுக்கும்…
மாநிலச்செயலர் 
அன்புத்தோழர்.துரையரசன் அவர்களுக்கும்…
மாவட்டச்செயலர் 
அன்புத்தோழர்.மோகன்தாஸ் அவர்களுக்கும்….

பரிவுடன் தோழர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதில்…
என்றென்றும் மனிதாபிமானத்துடன் செயல்படும்
PGM FINANCE அவர்களுக்கும்.. 
DGM FINANCE மற்றும் CAO FINANCE
ஆகியோருக்கும் நமது மனமார்ந்த நன்றிகள்….

தொழிற்சங்க உணர்வு மிக்க 
தோழர்.தமிழ்மாறன் அவர்கள்…
நேர்மை மிக்க... கண்ணியமிக்க... 
உறுதி மிக்க... அதிகாரியாக...
கணக்கின்றி செயல்பட்டு 
கணக்கற்ற வளங்கள் பெற
கனிவோடு வாழ்த்துகின்றோம்….

1 comment:

  1. தோழர் தமிழ்மாறன் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete