Thursday 30 November 2017

வாழ்க… வளமுடன்...

30/11/2017 பணி நிறைவு பெற்ற….
மாநில அளவில் சிறந்த ஊழியர் விருது பெற்ற…
TELEGRAM தொடங்கி ERPவரை கடமையாற்றிய...
அலுவலகக் கண்காணிப்பாளர்
அருமைத்தோழர். V.மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
அவர்களின் பணிநிறைவுக்காலம்
அமைதியுடன் விளங்கிட...
அன்போடு வாழ்த்துகின்றோம்….

Monday 27 November 2017

வேலை நிறுத்த விளக்க கூட்டம்

BSNL
அனைத்து சங்கங்கள்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
 -------------------------------------------------------------------------------
டிசம்பர் 12 & 13 
வேலை நிறுத்த விளக்க கூட்டம்
  -------------------------------------------------------------------------------
08/12/2017 – வெள்ளிக்கிழமை  
மாலை 04 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

தோழர்களே… வருக…

Sunday 26 November 2017

அஞ்சலி
தோழர். R.K.கோஹ்லி  
தோழர்.குப்தா அவர்களோடு 
நெடுங்காலம் தொழிற்சங்கப்பணிகளில் 
தோள் கொடுத்த மூத்த தோழர்...

R.K.கோஹ்லி 

அவர்கள் முதுமையின் காரணமாக 
26/11/2017 அன்று இயற்கை எய்தினார். 

NFTE வரலாற்றில் அவருக்கும் ஒரு தனி இடமுண்டு. 
அவரது மறைவிற்கு செங்கொடி தாழ்த்தி… 
சிரம் தாழ்த்தி அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்.

Friday 24 November 2017

ஊதியப்பேச்சு வார்த்தையும் DPE ஒப்புதலும்…

பொதுத்துறை ஊழியர்களுக்கான 8வது ஊதியப்பேச்சுவார்த்தையை அந்தந்த பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர் சங்கங்களுடன் பேசி முடித்திட மத்திய அமைச்சரவை 22/11/2017 அன்று ஒப்புதல் அளித்திருந்தது. அதனையொட்டி 24/11/2017 அன்று DPE இலாக்கா அதற்கான நிர்வாக உத்திரவைப் பிறப்பித்துள்ளது.

அந்த உத்திரவின்படி…
01/01/2017 முதல் 5 ஆண்டுகள்/10 ஆண்டுகள்  கால இடைவெளியில் ஊதிய மாற்றம் பெற்றவர்கள் ஊதியப் பேச்சுவார்த்தையை உடனடியாகத் துவங்கலாம்.

ஊதியப்பேச்சுவார்த்தையைத் துவங்குமுன் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியமாற்றத்திற்கான செலவிடும் திறன் AFFORDABILITY.. 
ஊதிய மாற்றச்செலவுகளைத் தாங்கிடும் திறன் SUSTAINABILITY  கொண்டதாக இருக்கவேண்டும்.

அரசு எந்தவித நிதி உதவியும் செய்யாது. சம்பந்தப்பட்ட நிறுவனமே முழு நிதிச்செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

ஊழியர்களின் ஊதிய விகிதங்கள் அதிகாரிகளின் சம்பள விகிதங்களை ஒருக்காலும் மிஞ்சி விடக்கூடாது.

ஊதிய மாற்றத்தால் தங்களது துறையின் உற்பத்திப்பொருளின் விலையையோ.. சேவைக்கட்டணத்தையோ உயர்த்துதல் கூடாது.

இதுபோன்ற வழக்கமான பல்லவி நிபந்தனைகளுடன்...
DPE இலாக்கா தனது நிர்வாக உத்திரவை வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட உத்திரவு நமது நிறுவனத்திற்குப் பொருந்துமா?
ஊதியப்பேச்சுவார்த்தை உடனடியாகத் துவங்குமா?
என்பது ஊழியர்களின் எதிர்பார்ப்பாகும்.

ஆனாலும் 
வரிக்கு முந்தைய இலாபம்… PBT… 
AFFORDABILITY… SUSTAINABILITY என்ற நிபந்தனைகள்
நமக்குத் தடைக்கற்களாக இருக்கின்றன.

அரசு எந்த நிதி உதவியும் செய்யாது. சம்பந்தப்பட்ட நிறுவனமே 
முழு ஊதியச்செலவையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் 
என்ற நிபந்தனை விதிக்கப்பட்ட பின் 
ஊதிய மாற்றத்திற்கு இலாபம் நட்டம் பார்ப்பதேன்? 
இதுவே சாதாரண ஊழியனின் நியாயமான கேள்வியாகும்.


ஊதிய மாற்ற முழுச்செலவையும் தானே ஏற்றுக்கொள்ளும் நமது நிறுவனம் உடனடியாகப் பேச்சுவார்த்தையைத் துவங்க வேண்டும்.
இதுவே சாதாரண ஊழியனின் எதிர்பார்ப்பாகும். 

Thursday 23 November 2017

நவம்பர் 24...சம்மேளன தினம்

பிறந்தது… NFPTE..
உயர்ந்தன கரங்கள்…
நிமிர்ந்தன சிரங்கள்…

விடைத்தன கேள்விகள்…
கிடைத்தன விடைகள்…

திமிர்ந்தன நெஞ்சங்கள்…
அதிர்ந்தன அதிகாரங்கள்…

வாழ்வும்.. வளமும்…
NFTE என முழங்குவோம்…

மூச்சும்.. பேச்சும்…
NFTE என விளங்குவோம்….
அனைவருக்கும்…
சம்மேளன தின 
புரட்சி வாழ்த்துக்கள்...
  
சம்மேளன தினக்கொடியேற்றம்
24/11/2017 – வெள்ளி – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

கொடியேற்றி சிறப்புரை
தோழர்.அருணாச்சலம்
AIBSNLPWA அகில இந்திய துணைப்பொதுச்செயலர்

தோழர்களே… வருக…

Wednesday 22 November 2017

கோபக்கைகள்...  இணையட்டும்... 
கோரிக்கைகள்...  வெல்லட்டும்...

BSNL நிறுவனத்தின்
செல்கோபுரங்களைப் பிரிப்பை எதிர்த்து

BSNL ஊழியர்களுக்கு…
ஊதிய மாற்றம் மறுப்பதை எதிர்த்து…

 23/11/2017 - வியாழன் 
அனைத்து சங்கங்களும் கலந்து கொள்ளும்
  நாடுதழுவிய
மனிதச்சங்கிலி இயக்கம்

மாலை 04.00 மணி…
தேவர்சிலை முதல்... பெரியார் சிலை வரை…
காரைக்குடி…

கவியரசர் கண்ணதாசன் 
மணிமண்டபம் முன்பாக...

அனைவரும் அணி திரள்வீர்…. தோழர்களே
மனிதச்சங்கிலி இயக்கம்

மனிதச்சங்கிலி இயக்கம்

Tuesday 21 November 2017

தலைகள்...ஓய்வதில்லை…


அறுபது ஆனாலும்…
ஆற்றல் வற்றினாலும்…

இனிப்பு பெருகினாலும்…
இதயம் பதறினாலும்…

தலை நரைத்தாலும்…
உடல் படுத்தாலும்…

பற்கள் விழுந்தாலும்…
சொற்கள் மெலிந்தாலும்..

அடுத்தவர் நலத்தைப்
பெரிதென நினைப்பவருக்கு…
ஆயுள் முழுவதும்…
ஓய்வில்லை… ஒழிவில்லை…

கடலிலே அலைகள் ஓயலாம்….
பொதுநலம் கொண்ட…
தலைகள் என்றும் ஓய்வதில்லை…

காரைக்குடியில் நடைபெறும்
AIBSNLPWA
ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின்
தமிழ் மாநிலச்செயற்குழு
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்…
உழைப்புக்குப் பின் ஓய்வு…
ஓய்வுக்குப் பின் உழைப்பு…

AIBSNLPWA
அகில இந்திய BSNL 
ஓய்வூதியர்கள் நலச்சங்கம்
தமிழ் மாநிலச்செயற்குழு

வம்பர் 25 & 26 – காரைக்குடி.

ஓய்வெதற்கு?…
பிறர் நலம் பேண உழைப்பதற்கு…

ஓய்வூதியர்கள் நலம் பேணும்…
அகில இந்திய BSNL 
ஓய்வூதியர்கள் நலச்சங்கத்தின்

தமிழ் மாநிலச்செயற்குழு...
வென்றிட… வாழ்த்துகின்றோம்…

Sunday 19 November 2017

இருள் விலகும்...ஒளி பிறக்கும்…
தணலாய் தகித்த உணர்வுக்குரல் 

உணர்வாய் எழுந்த  உரிமைக்குரல் 

நவம்பர் 9..10..11 
நாட்டின் தலைநகரில்
நாலாதிசைகளிலும் இருந்து 
தொழிலாளர் வர்க்கம்  சாரைசாரையாய்
டெல்லி பாராளுமன்றம் முன்பாகத் திரண்டு
தங்களது கோரிக்கைகளுக்காக ஓங்கிக் குரல்கொடுத்தனர்.

டெல்லி தலைநகர் முழுவதும் செங்கொடிகள்...
காலுக்கு செருப்பு இன்றி… 
மேல்சட்டை கிழிசல்களாக…
கால்சட்டையோ அரைச்சட்டையாகத்
துப்புரவுத்தொழிலாளிகள் 
தோள்களில் செங்கொடி சுமந்து 
குறைந்தபட்சக் கூலி கேட்டு டெல்லித்தெருக்களிலே 
குரல் கொடுத்து வந்த காட்சி..
ஆட்சியாளர்களின் செவிட்டில் அறைந்த காட்சி..

நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகள் ஆகியும்
காலுக்கு செருப்பின்றி கால் வயிற்றுக்கு உணவின்றி
அடிமட்டத் தொழிலாளர்கள் அல்லல் படும் நிலை...

போராட்டக்களத்தின் மூன்றாம் நாள் பெண்கள்
பாராளுமன்ற வீதி முழுவதும் நிறைந்து
தங்கள் கோபத்தை கோஷங்களாய் எழுப்பினர்.

தோளிலே தொங்கும் பைகளின் சுமை… 
நெஞ்சிலே குடும்ப சுமை… 
பணிசெய்யும் இடத்தில் பலப் பல சுமை
இத்தனையும் தாங்கி 
தங்கள் கரம் உயர்த்தி சிரம் நிமிர்த்தி
பெண்கள் உரிமைக்குரல் எழுப்பிய காட்சி
காண்போர் உணர்வுகளை மேலும் உரமிக்கதாக மாற்றியது.

ஆனால் ஆளும் வர்க்கமோ… 
அதிகாரிகளோ யாருக்கும் கவலையில்லை...
ஏனெனில் இந்த தேசத்தில் யாருக்கும் வெட்கமில்லை.

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணான
பத்திரிக்கைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும்
தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தைப் படம் பிடிக்கவோ…
துயரங்களை எழுதவோ நேரமில்லை… மனமில்லை…
பாவம் அவர்களுக்கு நடிகைகளின் 
அந்தரங்கங்களை அலசவே பொழுது போதவில்லை….

தோழர்.மதிவாணன் அவர்கள் போராட்டக்களத்தின்
கடைசி நாளன்று பத்திரிக்கைகளின் இருட்டடிப்பை
விமர்சனம் செய்து தனது முகநூலில் வெளியிட்டார்.

கொஞ்சம் நஞ்சம் சுரணையுள்ள 
இந்து பத்திரிக்கையும் கூட..
தனது கடைசிப் பக்கத்திலே 
சிறிய செய்தியாக வெளியிட்டிருந்தது.
சற்றே ஆறுதல் அடைந்தோம்.
ஆனால் அதற்கு பக்கத்திலேயே…
டெல்லியில் நவம்பர் 12 அன்று...
ஓரினச்சேர்க்கையாளர்கள் பேரணி 
என்று செய்தி வெளியிட்டு  
தொழிலாளர்களின் போராட்டத்தை விட
பெரிய படமாகவும் முக்கியச்செய்தியாகவும்  போட்டிருந்தார்கள்...

இந்த தேசத்திலே...
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு இருக்கும் முக்கியத்துவம் கூட
பேரினமான தொழிலாளர் வர்க்கத்திற்கு இல்லை..
என்பது வெட்கத்திலும் வெட்கம்.

பாட்டாளிகளைப் பாராமுகம் பார்க்கும் பாரததேசம்
பரந்து கெடுக என்றே மனம் குமுறுகிறது….

ஆனாலும் 
கோடிக்கால் பூதமாக கோபத்தின் ரூபமாக
தொழிலாளர் வர்க்கம் திரண்ட காட்சி…
மாறும்… எல்லாம் மாறும் 
என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது.

மாறும் என்பது மாபெரும் தத்துவம்…
இவையெல்லாம் 
ஒருநாள் மாறும்… மாற்றப்படும்…
இருள் விலகும்.. ஒளி பிறக்கும்…
இதுவே…
டெல்லி போராட்டக்களம் தந்த செய்தி...நம்பிக்கை... 

Thursday 16 November 2017

மகத்தான நூல் வெளியீடு 

தோழர்.மதிவாணன் அவர்கள் எழுதிய
மகத்தான ருஷ்யப்புரட்சியின்
மலரும் நினைவுகள்

நூல் வெளியீட்டு விழா
17/11/2017 – வெள்ளி – மாலை 03 மணி
இராஜா அண்ணாமலை மன்றம் – சென்னை
தோழர்களே… வாரீர்…

Wednesday 15 November 2017

பதக்கங்களும்…பாராட்டுக்களும்...
தோழியர்.கார்த்திகா அவர்கள் சான்றிதழ் பெறும் காட்சி 
தொடர் ஓட்டத்தில் பதக்கம் வென்ற வீராங்கனைகளும்... வீரர்களும்... 

நவம்பர் 15 முதல் 17 வரை 
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 17வது BSNL  
அகில இந்தியத் தடகளப்போட்டி நடைபெற்று வருகின்றது. 

காரைக்குடி தோழியர்.கார்த்திகா JTO அவர்கள் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலம் வென்றுள்ளார். 

தமிழக மகளிர் அணி 4x400 தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளது. 

ஆண்கள் அணி 4x400 தொடர் ஓட்டப்பந்தயத்தில்
 வெண்கலம் வென்றுள்ளது. 

தோழர்.எழில்நிலவன் 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 
வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

தோழர். செந்தில் குமார் நீளம் தாண்டுதலில் 
வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். 

தோழியர்.கார்த்திகா அவர்களுக்கும்...
 அனைத்து தடகள வீராங்கனைகளுக்கும்...
 வீர்ர்களுக்கும் நமது அன்பான வாழ்த்துக்கள்.  

இன்றும்… நாளையும் மேலும் பதக்கங்களைத்
 தமிழகத்திற்குப் பெற்றுத்தந்து 
பெருமை சேர்த்திட வாழ்த்துகின்றோம்.

Tuesday 14 November 2017

அனைத்து சங்க கூட்ட முடிவுகள்

14/11/2017 அன்று BSNL அனைத்து சங்க கூட்டம் NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

  • 16/11/2017 அன்று நடக்கவிருந்த மனிதச்சங்கிலி இயக்கத்தை 23/11/2017 அன்று கூடுதல் பங்கேற்புடன் நடத்துவது.
  • 23/11/2017 அன்று BSNL நிர்வாகத்திற்கும் DOTக்கும் டிசம்பர் 12 மற்றும் 13 வேலைநிறுத்த அறிவிப்பு செய்வது.
  • 18/11/2017 அன்று மாநில மட்டத்தில் அனைத்து சங்க கூட்டம் நடத்தப்பட்டு மனிதச்சங்கிலி இயக்கத்தையும் வேலைநிறுத்தத்தையும் திறம்பட நடத்துவது பற்றி முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். டெல்லி தலைமையகத்தில் 17/11/2017 அன்று கூட்டம் நடைபெறும்.
  • 30/11/2017க்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை மனு அளிக்கப்படவேண்டும். கோரிக்கை மனுவின் மாதிரி இணையதளத்தில் உடனடியாக வெளியிடப்படும்.
  • அகில இந்தியத்தலைமையில் இருந்து சுவரொட்டி மற்றும் சுற்றறிக்கைகள்  வெளியிடப்படும். மாநில மட்டத்தில் அவர்களது தாய்மொழியில் வெளியிட வேண்டும்.
  • அனைத்து அகில இந்தியத்தலைவர்களும் பங்கேற்கும் வேலைநிறுத்த விளக்கக்கூட்டம் நாடு முழுவதும் நடைபெறும். 20/11/2017 லக்னோவில் துவங்கி 08/12/2017 அன்று ஹைதராபாத் நகரில் முடிவுறும். சென்னையில் 05/12/2017 அன்று நடைபெறும்.

மனிதச்சங்கிலி - 23/11/2017

16/11/2017 அன்று நாடு முழுவதும் நடைபெறவிருந்த 
மனிதச்சங்கிலி போராட்டம் 23/11/2017 அன்று 
நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று 14/11/2017 டெல்லியில் நடைபெற்ற
 அனைத்து சங்க கூட்டத்தில் 
மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் தயாரிப்புடன்…
கூடுதல் பங்கேற்புடன்…
கூடுதல் எழுச்சியுடன்…
மனிதச்சங்கிலி போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்..
மனிதச்சங்கிலி
BSNL அனைத்து தொழிற்சங்க அமைப்புக்கள்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர்களே…
BSNL அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம் 14/11/2017 அன்று BSNLEU
 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 16/11/2017 அன்று நடைபெறவுள்ள மனிதச்சங்கிலி இயக்கத்தை வெகுசிறப்பாக நடத்துவது குறித்து
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

மனிதச்சங்கிலி இயக்கத்தில் அனைத்து அதிகாரிகள், ஊழியர்கள்,
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள்
அனைவரையும் உணர்வுடன் பங்கு பெறச்செய்வது.

குறைந்த பட்சம் 500 தோழர்கள்
மனிதச்சங்கிலி இயக்கத்தில் பங்கு பெற வேண்டும்.
பரமக்குடி மற்றும் முதுகுளத்தூர் 50 தோழர்கள்
சிவகங்கை மற்றும் மானாமதுரை 50 தோழர்கள்
இராமநாதபுரம், கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் 100 தோழர்கள்
காரைக்குடி,தேவகோட்டை மற்றும் திருப்பத்தூர் 300 தோழர்கள்.

இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சிவகங்கை பகுதிகளில் இருந்து அனைத்து தோழர்களும் வேன் மூலமாக காரைக்குடி வந்து சேரவேண்டும்.

மனிதச்சங்கிலி மாலை 03 மணிக்கு காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள தேவர் சிலையில் இருந்து துவங்கி பெரியார் சிலை வரை நடைபெறும். மாலை 5 மணிக்கு கண்ணதாசன் மணிமண்டபம் முன்பாக மனிதச்சங்கிலி நிகழ்வு நிறைவுறும்.

தோழர்களே…
நமது ஊதியமாற்றத்தைப் பெற்றிடவும்….
நமது BSNL நிறுவனத்தைக் கூறு போட்டு
செல் கோபுரங்களுக்காக தனி நிறுவனம் துவங்கத்துடிக்கும்
மத்திய அரசின் BSNL விரோதப்போக்கை எதிர்த்தும்…
நாம் நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்…
அதற்கான தருணம் இது…. அதற்கான போராட்டம் இது…
நமது ஒற்றுமை மூலம் உரிமைகளை வெல்வோம்…

Monday 13 November 2017

நூல் வெளியீட்டு விழா 


தோழர். C.K.மதிவாணன் 
கருத்தோவியத்தில்

மகத்தான ரஷ்யப்புரட்சியின்
மலரும் நினைவுகள்

சோவியத் புரட்சி... 
நூல் வெளியீட்டு விழா

17/11/2017 – வெள்ளிக்கிழமை...
மாலை 03.00 மணி
இராஜா அண்ணாமலை மன்றம்...
சென்னை.

தோழர்களேஅணி திரள்வீர்