Tuesday 30 January 2018

முழு வீச்சில் முதல் நாள் போராட்டம் 
காரைக்குடி மாவட்டத்தில்…
ஐந்து நாட்கள் அறப்போராட்டம்…
அண்ணல் காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர்…
அமைதியாக அறவழியில் துவங்கியது.
கூட்டமைப்பின் தலைவர்
NFTE மாவட்டச்செயலர் தோழர்.மாரி தலைமையேற்க
அனைத்து சங்கத்தலைவர்களும்...
பங்கு கொண்டு கருத்துரை வழங்கினர்…
அண்ணல் காந்தி அனைவராலும் நினைவு கூறப்பட்டார்…
கலந்து கொண்ட தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்….
இரண்டாம் நாள் அறப்போராட்டம்…
இன்னும் கூடுதல் பங்கேற்புடன்…. நடத்தப்படும்.
பணி நிறைவு  வாழ்த்துக்கள் 
தோழர்.சேகர் அவர்களுக்கு FNTO மாவட்டச் செயலர் தோழர்.முத்துக்குமரன் அவர்களும்...
தோழர்.குப்பமுத்து அவர்களுக்கு BSNLEU மாவட்டச்செயலர் தோழர்.பூமிநாதன்
அவர்களும் பொன்னாடை போர்த்திய காட்சி ..
31/01/2018 அன்று காரைக்குடி மாவட்டத்தில்
பணி நிறைவு பெறும் தோழர்கள்
S.சேகர்  TT திருப்புவனம்

N.குப்பமுத்து TT சிவகங்கை

S.பிலிப் ஜெசிந்தாமேரி SDE சிவகங்கை

ஆகியோரின் பணி நிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க வாழ்த்துகின்றோம்.
--------------------------------------------------------------- 
30/01/2018 அன்று காரைக்குடியில் நடைபெற்ற 
சத்தியாக்கிரக அறப்போராட்டத்தில்
தோழர்கள்.சேகர்... குப்பமுத்து...மற்றும்
தோழியர்.பிலிப் ஜெசிந்தா மேரி
ஆகியோருக்கு அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் 
பொன்னாடை அணிவித்து வாழ்த்துரை வழங்கப்பட்டது.

Monday 29 January 2018

ஐந்து நாள் அறவழிப் போராட்டம்

காரைக்குடி அனைத்து சங்க கூட்ட முடிவுகள்

காரைக்குடி மாவட்டத்தில் கீழ்க்கண்ட இடங்களில்…
ஜனவரி 30 செவ்வாய்க்கிழமை முதல்
பிப்ரவரி 03 சனிக்கிழமை வரை…
ஐந்து நாட்களும் தொடர்ந்து….
சத்தியாக்கிரக அறவழிப்போராட்டம் நடைபெறும்.

போராட்டக்களங்கள்
  • காரைக்குடிப் பொதுமேலாளர் அலுவலகம்
  • சிவகங்கைத் தொலைபேசி நிலையம்
  • பரமக்குடித்  தொலைபேசி நிலையம்
  • இராமநாதபுரம் தொலைபேசி நிலையம்…

அனைத்து இடங்களிலும்...
அண்ணல் காந்தியின் திருவுருவப்படத்திற்கு…
காலை 11 மணிக்கு…
மலரஞ்சலி செலுத்திய பின்…
சத்தியாக்கிரக அறப்போராட்டம் துவங்கும்…

வாடிக்கையாளர் சேவை மையங்களில்…
வசூல் செய்யும் பணி மட்டுமே நடைபெறவேண்டும்…
வந்தே மாதரம் முழங்கி மற்றெல்லோரும்…
நாள் முழுக்க  உரிமை முழக்கம் செய்திட வேண்டும்….

அனைத்து சங்கத்தலைவர்களும்…
கீழ்க்கண்ட தேதிகளில் சுற்றுப்பயணம் செய்து
அறப்போராட்டக் கருத்துரை வழங்குவர்….
30/01/2018 – காரைக்குடி
31/01/2018 – சிவகங்கை
01/02/2018 – பரமக்குடி
02/02/2018 – இராமநாதபுரம்
03/02/2018 – காரைக்குடி

தோழர்களே…
ஒப்பந்த ஊழியர்கள்…
ஓய்வு பெற்ற ஊழியர்கள்…
அதிகாரிகள்… ஊழியர்கள்
அனைவரும் ஒன்றிணைந்து…
அறவழி செல்வோம்…
அநீதியை வெல்வோம்…

Sunday 28 January 2018

சரித்திரமாகட்டும்… 
நம் சத்தியாக்கிரகம்..

ஜனவரி 30 முதல் 
பிப்ரவரி 3 வரை…
அண்ணலின் அறவழியில்…
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக..

நாடு தழுவிய சத்தியாக்கிரகம் 
மற்றும் 
விதிப்படி வேலை….

மத்திய அரசே…
செல் கோபுரங்களைப் பிரிக்காதே…
துணை நிறுவனம் உருவாக்காதே…
BSNLஐ சீரழிக்காதே…

ஊதிய உயர்வை மறுக்காதே…
ஊழியர்கள் உணர்வை ஒதுக்காதே..

தோழர்களே…. …
இதுவே தருணம்….
இப்போது இல்லையேல்…
இனி எப்போதுமில்லை…
ஒன்று படுவீர்… உணர்வு கொள்வீர்…
போராடுவோம்… வெற்றி பெறுவோம்….
கலைக்கப்பட்ட...கனவு
28/01/2018 அன்று JE (TTA) பதவிகளுக்கான
இலாக்காப் போட்டித்தேர்வு நடந்தேறியுள்ளது.

நடத்தப்பட்ட தேர்வு போன்மெக்கானிக் தோழர்களுக்கு...
கேட்கப்பட்ட கேள்விகளோ பொறியியல் பட்டதாரிகளுக்கானது.
ஒருவேளை TTA என்பது JUNIOR ENGINEER எனப்பெயர்மாறியதால்..
ENGINEER LEVELலில் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கலாம்…

தேர்வு எழுதிய யாரும் தேறும் நிலைமை இல்லை என
தேர்வு எழுதிய தோழர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

ON LINE தேர்வு, தவறான மதிப்பெண்களுக்கு
எதிர்மறை மதிப்பெண் என்ற ஏகப்பட்ட கெடுபிடிகளுக்கு அப்பால்..
யாருமே பதிலளிக்க இயலாத கேள்விகளைக் கேட்டு
நமது தோழர்களின் பதவி உயர்வு ஆசை பறிக்கப்பட்டுள்ளது.

ஏட்டுச்சுரைக்காய் கூட்டுக்கு உதவாது என்பார்கள்.
ஏட்டறிவு குறைந்தவர்கள்தான் நமது தோழர்கள்.
ஆனால் எட்டும் அறிவில் அனுபவ அறிவில் இளைத்தவர்களல்ல.
அத்தகைய ஒரு பார்வையில்தான்…
அருமைத்தோழர்.குப்தா அவர்கள்…
இலாக்கா ஊழியர்களுக்கான தேர்வுகளை வடிவமைக்கச் செய்தார்.

இப்போது அதெல்லாம் கனாக்காலமாகிப் போய்விட்டது….
ஊழியர்களின் பதவி உயர்வு ஆசையும் கனவாகிப் போய்விட்டது…

நிர்வாகம் இது பற்றி பரிசீலிக்குமா?
தொழிற்சங்கங்கள் இது பற்றி யோசிக்குமா?
தேர்வெழுதிய தோழனின் ஆசையும் ஏக்கமும் இதுவே…

Thursday 25 January 2018

மக்களாட்சி... மலரட்டும்...
தேசம் காப்போம்!

மதம் காக்கும் ஆட்சி மறையட்டும்…
மக்கள் காக்கும் ஆட்சி மலரட்டும்...

அனைவருக்கும்
குடியரசு தின 
நல்வாழ்த்துக்கள்

Monday 22 January 2018

மத்திய சங்க மறியல் போராட்டம்
மத்திய அரசின் தொழிலாளர் விரோத
மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து…
நவம்பர் 2017 பாராளுமன்ற முற்றுகைக்கு…
அடுத்த கட்டமாக… 25...ஜனவரி...2018
தமிழகத்தலைநகர்களில்
அனைத்து மத்திய  சங்க மறியல் போராட்டம்…

தோழர்களே… தயாராவீர்…
ஜனவரி 23 - நேதாஜி பிறந்த நாள்

சத்தம் இல்லாமல் பெறுவதல்ல விடுதலை…
இரத்தம் சிந்திப் பெறுவதே விடுதலை…
என்று முழங்கிய 
இந்திய தேசத்தின் இணையற்ற தலைவர்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

புகழ் பாடுவோம்…

Saturday 20 January 2018

தொழிலாளர் நல அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடம்
தோழர்கள்.மதிவாணன்  - ஆசிக் அகமது ஆகியோர்
கோரிக்கை மனு அளிக்கும் காட்சி 

அடிமட்ட மக்களுக்கு செய்யும் தொண்டே…
ஆண்டவனுக்கு செய்யும் தொண்டு என்றார் சுவாமி விவேகானந்தர்...

அந்த வழியில்…
அடிமட்ட ஊழியர்களாகிய ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வில்…
அல்லல் அகற்றி… ஆதங்கம் போக்கி…. இன்னல் நீக்கி…
அமைதி வழியில் அவர்களது  வாழ்வில் ஒளியேற்றும் பணியில்…
அல்லும் பகலும் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டு வருகிறது… வளருகிறது… NFTCL பேரியக்கம்…

அல்லல்படும் ஒப்பந்த ஊழியர்களின் ஓயாத பிரச்சினைகளை…
அகில இந்தியத்தலைவர் தோழர்.ஆசிக் அகமது அவர்களும்…
அகில இந்தியப் பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்களும்…

அன்புள்ளம் கொண்ட தொழிலாளர் நல 
அமைச்சர் திரு.கங்குவார் அவர்களிடமும்...
முதன்மைத்தொழிலாளர் ஆணையர்
திரு.அனில்குமார் நாயக் அவர்களிடமும்…
19/01/2018 அன்று தலைநகர் டெல்லியில் சந்தித்து
விரிவாக எடுத்துரைத்துள்ளனர்…

உரிய தேதியில் சம்பளம் இல்லை…
உழைப்புக்கேற்ற ஊதிய இல்லை…
அடையாள அட்டை இல்லை…
ஆண்டுதோறும்  போனஸ் இல்லை…
மருத்துவ வசதி இல்லை…
மரித்து விட்டால் இழப்பீடில்லை…
வாரத்தில் ஓய்வில்லை….
வைப்புநிதியில் நிறைவில்லை….
மொத்தத்தில் மனிதநேயம் என்பதே  BSNLலில் இல்லை…
என்பதை நமது தலைவர்கள் நேர்பட எடுத்துரைத்து…
எழுத்துப்பூர்வ கடிதமும் கொடுத்துள்ளனர்….

அதோடு நில்லாமல்…
மூன்று மாத சம்பளம் இல்லாமல் தன்
மூச்சை நிறுத்திக்கொண்டான் ஒரு தோழன் என
தமிழகத்தின் கடைக்கோடியில்….நடந்த கொடுமையை
அமைச்சரிடம்...ஆணையரிடம் எடுத்துரைத்துள்ளனர்….

ஆவண செய்வதாக அமைச்சரும்…
ஆணையரும் உறுதி அளித்துள்ளனர்….

அமைச்சரைச் சந்தித்து… 
நிரந்தர ஊழியர்களின் பிரச்சினையை...
எடுத்து இயம்ப இயலாத இந்நேரத்தில்…

அடிமட்ட ஊழியர்களின் பிரச்சினைக்காக..
அமைச்சரைச் சந்தித்து குறைகளை எடுத்துக்கூறியது…
அடிமட்ட ஊழியர்களின் தொழிற்சங்க வரலாற்றில் 
அற்புதம் மிகுந்த செயலாகும்...

எனவேதான்...
NFTCL பேரியக்கம்...
நாடு முழுக்க வளருகின்றது…
நாள் முழுக்க வளருகின்றது…

இதோ வங்கத்திலும் வளர ஆரம்பித்துள்ளது…
மூவாயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்த ஊழியர்கள்..
NFTCL இயக்கத்தில் இணைந்திட இசைந்துள்ளனர்….
வங்கத்தில் விரைவில் வலுவான இயக்கம் துவங்கப்படும்….

அடிமட்ட ஊழியர்களின் வாழ்வில் ஒளிவிளக்கேற்றிய
அருமைத்தலைவர்கள் குப்தா… சந்திரசேகர்… ஜெகன் வழியில்…
அனுதினமும்...
NFTCL நடைபோடும்… நலம் சேர்க்கும்…
வாழ்க NFTCL… வளர்க NFTCL…

Tuesday 16 January 2018

சஞ்சார் பவன் பேரணி

BSNL அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள் சங்கங்கள்
 ---------------------------------------------------------------------------------------
தொலைத்தொடர்பு தலைமையகம்
சஞ்சார் பவன்  நோக்கி
மாபெரும் கோரிக்கைப் பேரணி

23/02/2018 – வெள்ளிக்கிழமை - டெல்லி
  --------------------------------------------------------------------------------------
 கோரிக்கைகள் 

மத்திய அரசே…
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு
ஊதிய மாற்றத்தை அமுல்படுத்து…

01/01/2017 முதல் ஓய்வூதிய மாற்றத்தை அமுல்படுத்து…

இரண்டாவது ஊதியமாற்ற இழப்புகளை சரி செய்…

விருப்ப ஓய்வுத்திட்டத்தை திணிக்காதே…

ஓய்வு பெறும் வயதைக் குறைக்காதே… 

செல்கோபுரங்களைப் பிரித்து தனி நிறுவனம் உருவாக்காதே..

Saturday 13 January 2018

தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

இழந்தது போதும்…
இன்பம் பொங்கட்டும்…

பொறுத்தது போதும்…
பொறுமை பொங்கட்டும்…

அனைவருக்கும்
இனிய தமிழர் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்

Thursday 11 January 2018

4G  அலைக்கற்றை ஒதுக்கீடு…

4G சேவை அளிப்பதற்காக நமது BSNL நிறுவனம்
 700 MHz band அல்லது 2100 MHz band அலைவரிசையை 
ஒரு வருடத்திற்கு தற்காலிகமாக ஒதுக்குமாறு
 மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தது. 

BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது 
பரிசீலிக்கப்படுவதாக இலாக்கா அமைச்சர் திரு.மனோஜ் சின்கா நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார். 
அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு BSNL அரசிற்கு கட்டணம் 
செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Wednesday 10 January 2018

ஒப்பந்த ஊழியர் உற்பத்திச்சட்டம் 1970 
இந்திய தேசத்தில் ஒப்பந்த ஊழியர் ஒழிப்பு சட்டம் 
Contract Labour (Regulation and Abolition) Act, 
என்று 1970லேயே கொண்டு வரப்பட்டாலும்…
  ஏறத்தாழ 50 ஆண்டு காலத்தில் ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கைப் பெருகியே வருகின்றது.

 நிரந்தர ஊழியர்கள் என்பவர்கள் இனி இந்திய தேசத்தில் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்ற நிலை நிலவுகின்றது. கடந்த 3 ஆண்டுகளில் தற்போதைய அரசின் ஆட்சியில் ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கை பெருகி வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களில் 
கடந்த 3 ஆண்டுகாலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர் 
எண்ணிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
2015 – 8,39,234
2016 – 9,64,001
 2017 – 11,10,603
ஏறத்தாழ 3 கோடிக்கு மேல் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக 
பதிவு செய்து காத்திருக்கும் வேளையில்…மேற்கண்ட எண்ணிக்கை மேலும் மேலும் உயர்வதற்கான வாய்ப்புகள் 
அதிகரிக்குமேயன்றி குறைவதற்கான சூழல் இல்லை. 

அரசு CONTRACT LABOUR ABOLITION ACT
 என்பதற்குப்பதிலாக CONTRACT LABOUR ENHANCEMENT ACT
என்று மாற்றுவது பொருத்தமாக இருக்கும். 

இத்தகைய நிலையில் BSNLலில் ஒப்பந்த ஊழியர் எண்ணிக்கையைக் குறைப்போம் எனக்கூறுவது நகைப்புக்கிடமாக உள்ளது. 

Tuesday 9 January 2018

யார் குற்றவாளி...
ஒப்பந்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை


கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு BSNL அலுவலகத்தில் 
23 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்த  மனோஜ் என்பவர் மூன்று மாதங்களாக சம்பளம் கிடைக்காத காரணத்தால்
தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்

அருமனை பகுதியைச் சேர்ந்த மனோஜ் என்பவர் கடையாலுமூடு BSNL அலுவலகத்தில்  கேபிள் ஜாயிண்டராக பணியாற்றி வந்தார்
ஒப்பந்த தொழிலாளரான இவருக்கு கடந்து மூன்று மாதங்களாக 
ஊதியம் வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த நிலையில் இருந்த மனோஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது  தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்

BSNL ஒப்பந்த தொழிலாளி கடந்த 3 மாதங்களாக ஊதியம் பெறவில்லை எனக்கூறி தூக்கிட்டு தற்கொலை செய்த கொடுமையான சம்பவம் தொடர்பாக அருமனை காவல்நிலைய போலீசார் 
விசாரணை நடத்தி வருகின்றனர்.

சொல்லக்கொதிக்குதடா நெஞ்சம்…
வெறும் சோற்றுக்கு வந்ததிங்கே பஞ்சம்…