Thursday 31 May 2018


கச்சநாத்தம்

சொல்லக் கொதிக்குது நெஞ்சம்…
சிவகங்கை கச்சநத்தம் சாதிவெறிக்கொலை கண்டு..

சொல்லவே கூசுது நெஞ்சம்…
சாதி வெறி பிடித்த சிவகங்கை நமது மண் என்று…

சுயமரியாதை வாழ்வே...
சுகவாழ்வு என்றார் தந்தைப்பெரியார்..
சுதந்திர தேசத்தில் தலித் மக்கள்
சுயமரியாதையுடன் வாழமுடியாத நிலை…

காலமெல்லாம் அடிமைப்பட்ட மக்கள்
கால் மேல் கால் போட்டு…
டீக்கடையில் அமரமுடியாத கொடுமை…

ஊர்த்திருவிழாவில் இருசக்கர வாகனத்தில்
உரசிச்சென்றவரை “ கொஞ்சம் பார்த்துப்போகக்கூடாதா? “
என்று கேட்டதற்காக மூன்று படுகொலைகள்…
கச்சநத்தம் கிராமத்திலே நடந்தேறியுள்ளது.

கச்சநத்தம் காட்டுமிராண்டித்தனத்தை…
வன்மையாகக் கண்டிக்கின்றோம்…
கச்சநத்தம்….
சாதி என்னும் சாக்கடையின் உச்ச நாத்தம்…

பணிநிறைவு விழா

தோழர்.அல்போன்ஸ் பணிநிறைவு விழா

திருப்பத்தூர் NFTE கிளைச்செயலராகப் பலகாலம் திறம்பட சங்கப்பணி செய்த அருமைத்தோழர்.அல்போன்ஸ் அவர்கள் 
31/05/2018 அன்று பணிநிறைவு பெற்றார்.
 அவரது பணி நிறைவு விழா 01/06/2018 அன்று கீழச்செவல்பட்டியில் நடைபெறுகின்றது. தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

பணிநிறைவு விழா

01/06/2018 – வெள்ளிக்கிழமை – மாலை 05 மணி
ASV திருமண மண்டபம் – கீழச்செவல்பட்டி.

Tuesday 29 May 2018


பணி நிறைவு வாழ்த்துக்கள்


காரைக்குடி மாவட்டத்தில் 31/05/2018 அன்று
பணிநிறைவு பெறும் தோழர்களின்
பணிநிறைவுக்காலம் சிறப்போடும் அமைதியோடும்
விளங்கிட வாழ்த்துகின்றோம்.
 ------------------------------------------------------------------------------------
பணி நிறைவு விழாக்கள்
------------------------------------------------------------------------------------
தோழர்.தங்கவேலு TT – கீழக்கரை
29/05/2018 – செவ்வாய் – மாலை 5 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
------------------------------------------------------------------------------------
 தோழர்.U.பத்மநாதன் – OS – காரைக்குடி
30/05/2018 – புதன் மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
------------------------------------------------------------------------------------
தோழர்.P.ஜெயகரன் – TT – சிவகங்கை
31/05/2018 – வியாழன் – மதியம் 12.00 மணி
தொலைபேசி நிலையம் – சிவகங்கை
------------------------------------------------------------------------------------
தோழர்.KL.கருப்பையா – TT – காரைக்குடி
31/05/2018 – வியாழன் – மாலை 05 மணி
கிருஷ்ணா திருமண மண்டபம் – காரைக்குடி.
------------------------------------------------------------------------------------
தோழர்.T.அல்போன்ஸ் – TT – கீழச்செவல்பட்டி
01/06/2018 – வெள்ளி – மாலை 05 மணி
ASV திருமண மண்டபம் – கீழச்செவல்பட்டி
------------------------------------------------------------------------------------
 தோழர்களே…. வருக…..

Monday 28 May 2018


கண்டுகொள்ளப்படாத வேலை நிறுத்தம்… 

ED என்று அழைக்கப்பட்டு
இப்போது GDS என்று அழைக்கப்படும்
அப்பாவி கிராமப்புற அஞ்சல் ஊழியர்கள்
21/05/2018 முதல் நாடுதழுவிய
காலவரையற்ற வேலைநிறுத்தத்தை...
மேற்கொண்டுள்ளனர்.

எட்டாவது நாளான இன்று 28/05/2018
நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை
தோல்வியில் முடிந்தது…
எனவே போராட்டம் தொடர்கிறது…

மாதம் எட்டாயிரம் பத்தாயிரம் மட்டுமே
சம்பளமாகப் பெற்று வாழ்க்கை நடத்தும்..
கிராமப்புற அஞ்சல் ஊழியர்களின்
வாழ்வு மிகக்கொடியது…

மத்திய அரசு வழக்கம் போலவே…
தனது அலட்சியப் போக்கைக் கடைப்பிடிக்கின்றது…
உயிர்ப்பலி போராட்டங்களையே கண்டுகொள்ளாத அரசு…
ஒடுக்கப்பட்ட GDS ஊழியர்கள் போராட்டத்தைக்
கண்டுகொள்ளாததில் வியப்பேதுமில்லை…

காலம் காலமாக துன்புறும்
கிராமப்புற ஊழியர்களுக்கு ஆதரவாக
நிரந்தர ஊழியர்களும் களம் இறங்கினாலன்றி
அவர்களுக்கு விடியல் கிடையாது…

Friday 25 May 2018


செய்திகள்

சட்டரீதியான போராட்டம் 
செல்கோபுரங்களைத் தனிநிறுவனமாகப் பிரிக்கும்
 அரசின் முடிவினை எதிர்த்து  அனைத்து சங்கங்களின் முடிவின்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் AIBSNLEA, SNEA மற்றும் AIGETOA அதிகாரிகள் சங்கங்களின் சார்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு 25/05/2018 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  புதிய செல்கோபுரம் துணைநிறுவனம் ஆரம்பிப்பது என்பது நீதிமன்ற முடிவிற்கு உட்பட்டது 
என டெல்லி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது. 
 அடுத்த கட்ட விசாரணை 25/09/2018 அன்று நடைபெறும்.
------------------------------------------------------------------------------------------
தலைநகரில் ஆர்ப்பாட்டம் 
செல்கோபுரம் தனி நிறுவனம் ஆரம்பிக்கும்
 முடிவினை எதிர்த்து டெல்லியில் 24/05/2018 அன்று 
அனைத்து சங்க ஆர்ப்பாட்டம் எழுச்சியோடு நடைபெற்றது.
------------------------------------------------------------------------------------------
JCM கூட்டம்
 JCM தேசிய கூட்டாலோசனைக்குழுக் கூட்டம் 12/06/2018 
அன்று டெல்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும் JCM கூட்டங்கள் அகில இந்திய அளவிலும்… மாநில அளவிலும்…  மூன்று மாதங்களுக்கு ஒருமுறையும், 
மாவட்ட மட்டங்களில் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையும் நடத்தப்பட வேண்டும் என CORPORATE அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
------------------------------------------------------------------------------------------
 அகில இந்தியக் கருத்தரங்கம்
 மோடி அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து அனைத்து மத்தியப் பொதுத்துறை சங்கங்களின் கருத்தரங்கம்
 30/05/2018 அன்று டெல்லியில் நடைபெறுகின்றது.
------------------------------------------------------------------------------------------
மருத்துவப்படி 
01/10/2017 முதல் 31/03/2018 வரையிலான ஆறு மாத காலத்திற்கான மருத்துவப்படியை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கிட 
தமிழ் மாநில நிர்வாகம் உத்திரவிட்டுள்ளது.

Thursday 24 May 2018


விலக்கிக்கொள்ளப்பட்ட…

வெளிநடப்பு போராட்டம்…


BSNL செல்கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஆரம்பிக்கும் மத்திய அரசின் முடிவினை எதிர்த்து 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின்  சார்பில்
28/05/2018 அன்று நாடு முழுக்க வெளிநடப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது.   

நமது அறிவிப்பினைத் தொடர்ந்து சங்கத்தலைவர்களை சந்தித்த  
BSNL CMD ஹைதராபாத் நகரில்  28/05/2018 அன்று கூடவுள்ள 
BSNL வாரியக்குழுக்கூட்டத்தில் செல் கோபுரம் தனி நிறுவனம் பற்றிய விவாதம் இடம் பெறாது என்றும் நிகழ்ச்சி நிரலில் 
அது சேர்க்கப்படவில்லையென்றும் விளக்கமளித்தார். 
எனவே 28/05/2018 அன்று நடக்கவிருந்த வெளிநடப்பு போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

28ந்தேதி போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டாலும்…
செல்கோபுரம் தனி நிறுவன முடிவு கைவிடப்படும் வரை
தொடரட்டும் நமது போராட்டக்கனல்…

Wednesday 23 May 2018


வெளிநடப்பு போராட்டம்

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

BSNL நிறுவனத்தின் 
செல்கோபுரங்களைத் தனியாகப்பிரித்து…

துணை நிறுவனம் ஆரம்பிக்கத்துடிக்கும் 
மத்திய அரசைக் கண்டித்து…
துணை போகும் BSNL வாரியத்தைக் கண்டித்து…

28/05/2018 திங்கள் அன்று…
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இணைந்த…
நாடு தழுவிய வெளிநடப்பு போராட்டம்…

BSNL நிர்வாக இயக்குநர்கள் கூட்டம் நடக்கும்
 ஹைதராபாத் நகரில்... 28/05/2018 அன்று

அனைத்து தொழிற்சங்கப் 
பொதுச்செயலர்கள் தலைமையில்…
மாபெரும் கண்டனப் பேரணி 
மற்றும் 
ஆர்ப்பாட்டம்…

BSNL நிறுவனம் காத்திட…
செல்கோபுரம் தனி நிறுவனம் தடுத்திட…
தொடரட்டும் போராட்டம்…
தொடங்கட்டும் போர்க்களம்…

Tuesday 22 May 2018

குருதியில் நீந்தும் காலம்
சுடுடா சுடு

நிராயுதபாணிகளை
நெஞ்சுக்கு நேராகச் சுடு..
குண்டுகள் வீணாக்காமல் சுடு..

பத்துக்குண்டுகளுக்கு
பத்துப்பேர் விழ வேண்டும்..

முதலில் ஆகாயத்திற்கு நேரே சுட வேண்டியதில்லை
முதலில் முட்டுக்கு கீழே சுட வேண்டியதில்லை..
கண்ணீர் புகைக் குண்டுகள் வேண்டியதில்லை..

வீண் செலவுகளை தவிர்க்கவேண்டும்
துப்பாக்கியை நெஞ்சுக்கு நேரே உயர்த்து
மக்கள் சாகப்பிறந்தவர்கள்
வாழ்வதற்காக சாகப்பிறந்தவர்கள்

சுடுடா மறுபடி சுடு
குருவிகளை சுடுவதென்றால் கூட
குறிபார்க்கவேண்டும்..
மிருகங்களை சுடுவதென்றால் கூட
மறைந்து காத்திருந்து சுடவேண்டும்..

மக்களைச்சுட எதுவுமே தேவை இல்லை
எதிர்த்து நிற்பவர்கள் நெஞ்சில்
ஈய ரவைகளை செலுத்து
அவர்கள் அதை புரிந்துகொள்வதற்குள்
தம் நெஞ்சில் வழியும் குருதியைக்கண்டு
அவர்கள் வியக்கும்படி
அத்தனை விரைவாய் சுடு...

மக்கள் நச்சுக்காற்றை எதிர்த்துப்போராடினார்கள்
கேன்ஸரை எதிர்த்துப்போராடினார்கள்
கருவிலிருக்கும் தம் குழந்தைகள்
ஊனமடைவதை எதிர்த்துப்போராடினார்கள்
எளிய மக்கள் தாங்கள் நஞ்சாகக்கப்படுகிறோம்
என்று அறிந்த நாளில் தெருவுக்கு வந்தார்கள்
பின்னர் அவர்கள் வீடு திரும்பவே இல்லை...

இப்போது துப்பாக்கிக்குண்டுகளால்
அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டிருக்கிறது
ஒரு பதினேழு வயது சிறுமி
ஒரு அறுபட்ட புறாவைபோல
ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள்
இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள்
எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன..

திறந்த கண்களுடன்
ஒரு இளைஞன் கைகளை விரித்தபடி
வீழ்ந்துகிடக்கிறான்
அவன் மனைவி மார்பில் விழுந்து கதறுகிறாள்
அவள் நெற்றியில் துப்பாகிக் குருதி
குங்குமம் போல பரவுகிறது
இப்படித்தான் நீதி கேட்கப்படுகிறது...

இந்த அந்தியின் வெளிச்சம்
குருதிவண்ணத்தில் இருக்கிறது
இந்த அந்தியின் காற்றில்
குருதியின் உப்புக் கரிக்கிறது..

பத்துப்பேர் இறந்துவிட்டார்கள்
இன்றைய இலக்கு நிறைவடைந்ததா?
திரும்பிச்செல்லுங்கள்
உங்கள் முதலாளிகள்
இன்றிரவு நிம்மதியாகக் குடிப்பார்கள்
உங்களுக்கு ஆணை பிறப்பித்தவர்கள்
இன்றிரவு நிம்மதியாக புணர்வார்கள்

ஊரில் பத்துவீடுகளில்
சாவின் அதிகாரம் நிரம்பியிருக்கிறது
பத்து சவ ஊர்வலங்கள்
ஒரே நேரத்தில் கிளம்புகின்றன
மக்கள் மனம் சிதறி அழுகிறார்கள்
இயலாமையுடன் சாலைகளை மறித்து
லத்தியால் அடிவாங்கி ஓடுகிறார்கள்

மக்களை இன்னும் 
எப்படி அச்சுறுத்துவதெனெ
வேட்டை நாய்கள்
ரகசியமாக கூடிப்பேசுகின்றன
பத்துப்பேரை கொல்லும் அளவு
தனக்கு அதிகாரம் இருப்பதைக் கண்ட தலைவன்
அந்தரங்க கிளுகிளுப்புடன்
நீலிக்கண்ணீர் வடிக்கிறான்

நமது காலம் நெருப்பில் நீந்துகிறது
நமது காலம் கண்ணீரில் நீந்துகிறது
நமது காலம் குருதியில் நீந்துகிறது

அடுத்த வெடியோசைக்கு மக்கள் காத்திருக்கிறார்கள்.
தங்களை ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்.
எதற்கு என்று கேட்காதீர்கள்.
மக்கள் தங்களை வன்மத்துடன்
ஆயத்தப்படுத்திக்கொள்கிறார்கள்
 -மனுஷ்ய புத்திரன்
-------------------------------------------------------------------------------------------------------------------------
தூத்துக்குடி...  படுகொலையைக் கண்டித்து

கண்டன ஆர்ப்பாட்டம் 

23/05/2018 - புதன் - மதிய உணவு வேளை... 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.. 

தோழர்களே... வருக...

Friday 18 May 2018


தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018

புதிய தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018
 வரைவுத்திட்டம்  01/05/2018 அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.  25/05/2018க்குள் கருத்துக்கள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.


புதிய தேசிய தொலைத்தொடர்புக்
கொள்கையின் குறிக்கோள்கள்...

2022ம் ஆண்டிற்குள்…

அனைவருக்கும் அகன்ற அலைவரிசை சேவை

தொலைத்தொடர்பில் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் GDP 6 சதத்திலிருந்து 
8 சதமாக தொலைத்தொடர்பின் பங்கை உயர்த்துதல்.

தொலைத்தொடர்பில் உலகளவில் 
134வது இடத்தில் உள்ள  இந்தியாவை
முதல் 50 நாடுகள் பட்டியலில் இடம்பெறச்செய்வது.

தொலைத்தொடர்பில் இந்தியாவின் பங்கை
 உலக அளவில் உயரச்செய்தல்…

தொலைத்தொடர்பில் வல்லமை மிக்க கோலோச்சுதல்.

Thursday 17 May 2018


எங்கே ஜெகன்?

நேர்மை தொலைந்து விட்டதே…
நியாயம் வளைந்து விட்டதே…
எங்கே ஜெகன் ?


ஒற்றுமை ஒழிந்து விட்டதே…
வேற்றுமை பெருகி விட்டதே…
எங்கே ஜெகன் ?

அணைக்கும் கரங்கள் அருகி விட்டதே…
அழிக்கும் கரங்கள் வளர்ந்து விட்டதே….
எங்கே ஜெகன் ?


கோரிக்கை முழக்கம் குறுகி விட்டதே…
கேளிக்கை  வழக்கம் எகிறி விட்டதே…
எங்கே ஜெகன் ?

லஞ்சமும் ஊழலும் நாறி விட்டதே…
வஞ்சமும் துரோகமும் ஊறி விட்டதே…
எங்கே ஜெகன் ?

செங்கொடி செம்மை இழந்து விட்டதே…
செம்மையாய் பறக்க மறந்து விட்டதே…
எங்கே ஜெகன் ?எங்கே ஜெகன் ?எங்கே ஜெகன் ?

மே – 17

NFTE இளைஞர் தினம்
தோழர். ஜெகன் பிறந்த நாள்
உலகத்தொலைத்தொடர்பு நாள்

சிறப்புக்கூட்டம்
17/05/2018 – வியாழன் – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி.

தோழர்களே… வருக…

Monday 14 May 2018


ஓய்வூதியப் பட்டறை
 
AIBSNLPWA
அனைத்திந்திய BSNL ஓய்வூதியர் 
நலச்சங்கத்தின் சார்பாக...

சென்னையில் ஓய்வூதியப்பட்டறை

15/05/2018 – செவ்வாய்க்கிழமை – காலை 10 மணி
பூக்கடை தொலைபேசி நிலையம் – சென்னை.

தொழிற்சங்கத் தலைவர்கள் பங்கேற்பு…

Thursday 10 May 2018


நிறைவு நாள் தெருமுனைப்பிரச்சாரம்.. 

நிறைவு நாள் தெருமுனைப்பிரச்சாரம்

11/05/2018 – வெள்ளிக்கிழமை  
மாலை 04 மணி - இராமேஸ்வரம்.

பங்கேற்பு

தோழர் .முருகானந்தம் – AITUC
தோழர். வெங்கடேசன் - AIBSNLEA
தோழர். இராமமூர்த்தி – AIBSNLEA
தோழர். இராமநாதன் - SNEA
தோழர். முருகன்  - NFTCL 
தோழர். லோகநாதன் – BSNLEU
தோழர். கேசவன் – BSNLEU
தோழர். பிரேம்குமார் - BSNLEU 
தோழர். வெ.மாரி – NFTE
தோழர். இராஜன் – NFTE
தோழர். சேதுராஜன் – NFTE

மற்றும் தோழர்கள்….

தோழர்களே… வருக….