Tuesday 27 August 2019

சிறப்புக் கூட்டங்கள் 

28/08/2019 - புதன் 
காலை 10 மணி -  பரமக்குடி 
மாலை  04 மணி  - இராமநாதபுரம் 

பங்கேற்பு  : தோழர்கள் 

P .காமராஜ் 
சம்மேளனச்செயலர் 

V.மாரி 
மாவட்டச்செயலர் 

A.தமிழரசன் 
கிளைச்செயலர் - பரமக்குடி

R. இராமமூர்த்தி 
கிளைச்செயலர் - இராமநாதபுரம் 

K. சேதுராஜன் 
கிளைச்செயலர்  - இராமேஸ்வரம் 

தோழர்களே... வாரீர்...
சிறப்புக் கூட்டங்கள் 

28/08/2019 - புதன்  
காலை 10 மணி - சிவகங்கை 
மாலை 04 மணி - காரைக்குடி 

பங்கேற்பு : தோழர்கள் 
K.நடராஜன் 
மாநிலச் செயலர் 

G. சுபேதார் அலிகான் 
மாநில அமைப்புச்செயலர் 

B. லால்பகதூர் 
மாவட்டத்தலைவர் 

B. முருகன் 
கிளைச்செயலர் - சிவகங்கை 

M. ஆரோக்கியதாஸ் 
கிளைச்செயலர் - காரைக்குடி 

தோழர்களே... வருக...

Monday 26 August 2019

இன்னலை உடைத்தவர் 

நம் இன்னலை உடைத்த
அண்ணலை உடைத்தனர்...

உடைக்கட்டும்  விட்டு விடுங்கள்...

அண்ணல் அம்பேத்கர்...
பச்சை வயலில்..
பாழும் வெயிலில்..
பாடுபட்டவனை..
பச்சை மையில் ஒப்பமிட்டு...
பஞ்சு மெத்தையில் படுக்க வைத்தவர்...

அவரால்தான்... 
இடுப்புத்துண்டு முண்டாசானது... 

அவரால்தான்...
உரிமை பெற்றோம்.. 
அவரால்தான்...
உணர்வு பெற்றோம்.. 
அவரால்தான்...
உயர்வு பெற்றோம்.. 
அவரால்தான்...
எல்லாம் பெற்றோம்..

பெற்றுத்தந்தவன் சிலையை...
பெற்றவன்  சிலையை...
பிள்ளைகள் உடைக்க உரிமை இல்லையா ?
உடைக்கட்டும் விட்டு விடுங்கள்...
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்

BSNL நிறுவனத்தின் நிலையும்.. ஊழியர்களின் நிலையும்
கேள்விக்குறியாகி... கேலிக்குரியதாகி உள்ள நிலையில்
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறு மாதம் சம்பளம் கொடுக்க வக்கில்லை...
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?

வங்கிக்கடன்... சொசைட்டி பிடித்தம்...
வைப்புநிதி மே மாதம் முதல் வரவில் வைக்கப்படவில்லை...
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?

மே மாதத்திற்குப் பின் இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின்
வைப்புநிதி இன்னும் பட்டுவாடா செய்யப்படவில்லை..
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?

வளர்ச்சிப்பணிகள்... மராமத்துப் பணிகள்...
என எல்லாப் பணிகளும் முடங்கிப்போயுள்ள நிலையில்
இன்று இங்கு தேர்தல் ஒரு கேடா?
  
இது நாம் எழுப்பும் கேள்வி அல்ல..
வாக்கு கேட்டு உறுப்பினர்களை நாம் அணுகும் போது
அவர்கள் கோபமாக எழுப்பும் கேள்விதான் இது?
இந்தக் கேள்வியில் நியாயம் இல்லாமல் இல்லை...

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை முடக்கி விட்டு
தங்கள் விருப்பம் போல் நிர்வாகம் செயல்படும்
என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 
சங்கங்கள்  நிர்வாகத்தை வலியுறுத்தியதன் விளைவாக
நிர்வாகம் தேர்தலை அறிவித்துள்ளது...

தேர்தலுக்கான பணிகள் ஏறத்தாழ முடிவடைந்து விட்டன...
04/09/2019  அன்று தேர்தல் அதிகாரிகளுக்கான 
சிறப்பு வகுப்பு நடைபெறவுள்ளது
எனவே தேர்தல் நடப்பது உறுதியாகியுள்ளது...

ஏழு தேர்தல்கள் முடிவடைந்துள்ளன...
எட்டாவது தேர்தல் நடைபெறவுள்ளது...
போராடிப்பெற்ற பல சலுகைகள் உரிமைகள்
இன்று எட்டாமல் போன நிலையில்
இன்று எட்டாவது தேர்தல் நடைபெறவுள்ளது...

BSNL உருவாகி 19 ஆண்டுகள் ஆன நிலையில்
அதிக காலம் முதன்மைச்சங்கம் என்ற அங்கீகாரத்தில்
15 ஆண்டுகள் BSNLEU  சங்கம் உலா வந்துள்ளது...

இன்று நிறுவனமும் ஊழியர்களும் 
தெருவில் நிற்கும் நிலைக்கு
நிர்வாகமும் அரசும் BSNLEU சங்கமும்
முழுக்காரணம் என்றால் அது  மிகையில்லை...

முதல் ஊதிய மாற்றத்தில் தோழர் குப்தா
குறைந்தபட்ச உயர்வு 1500 பெற்றுத்தந்தார்...
ஆனால் BSNLEU சங்கத்தால்
இரண்டாவது ஊதிய மாற்றத்தில்
குறைந்தபட்ச ஊதிய உயர்வைப்பெற முடியவில்லை
78.2ஐக் கோட்டை விட்டார்கள்...
மூன்றாவது ஊதிய மாற்றம்
இவர்கள் காலத்தில் ஊத்தி மூடப்பட்டு விட்டது...

பல்வேறு சலுகைகள் உரிமைகள்
இவர்கள் காலத்தில் பறிபோய் விட்டன...
பணிப்பாதுகாப்பு கூட இன்று கேள்விக்குறியாகி விட்டது...

இழப்பதற்கு ஏதுமில்லை...
இடுப்பு வேட்டியைத் தவிர..
என்ற நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்...

இந்த நிலை மாறவேண்டும்...
மீண்டும் BSNL  எழ வேண்டும்
ஊழியர் வாழ்வில் மலர்ச்சி வரவேண்டும் எனில்
நாம் என்ன செய்ய வேண்டும்?

பாரதி சொன்னான்...
நன்றிது தேர்ந்திடல் வேண்டும்...
இந்த  ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்?

ஆம் தோழர்களே...
நமது பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்...
நன்று எது என தெளிந்து தேர்வு செய்வோம்...
வாக்குச்சாவடி முகவர்கள் 

காரைக்குடி மாவட்டத்தில் உள்ள 4 வாக்குச்சாவடிகளில் 
கீழ்க்கண்ட தோழர்கள் வாக்குச்சாவடி முகவர்களாகவும், 
மாற்று முகவர்களாகவும்  நியமிக்கப்பட்டுள்ளனர்.

BOOTH AGENTS 
காரைக்குடி 
தோழர். நெப்போலியன்  JE
தோழர். ஆரோக்கியதாஸ் TT (மாற்று)

சிவகங்கை 
தோழர்.துரைச்சாமி TT 
தோழர். அருணகிரி ATT  ((மாற்று)

பரமக்குடி 
தோழர்.கதிரேசன் TT 
தோழர். இராமு TT (மாற்று)

இராமநாதபுரம் 
தோழர்.கார்மேகம் TT 
தோழர்.முருகேசன் TT (மாற்று)

வாக்கு எண்ணிக்கை முகவர் 
தோழர்.லால் பகதூர் TT 

Saturday 24 August 2019

மாநிலச்சங்கத் தேர்தல் பரப்புரை

28/08/2019 – புதன்கிழமை – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – பரமக்குடி
சிறப்புரை : தோழர். P. காமராஜ்
சம்மேளனச்செயலர் – NFTE
 ------------------------------------------------------------------
28/08/2019 – புதன்கிழமை – காலை 10 மணி
தொலைபேசி நிலையம் – சிவகங்கை
சிறப்புரை : தோழர். K. நடராஜன்
மாநிலச்செயலர் – NFTE
 ------------------------------------------------------------------
28/08/2019 – புதன்கிழமை – மாலை 05 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்
சிறப்புரை : தோழர். P. காமராஜ்
சம்மேளனச்செயலர் – NFTE
 ------------------------------------------------------------------
28/08/2019 – புதன்கிழமை – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
சிறப்புரை : தோழர். K. நடராஜன்
மாநிலச்செயலர் – NFTE
  -----------------------------------------------------------------
வாழ்வு தரும் BSNL நிலையை வலுவாக்கிட...
வாக்கு தரும் ஊழியர் நிலையை வளமாக்கிட...
வாழ்வு தந்த சங்கம் NFTEக்கு வாக்களிப்பீர்...
--------------------------------------------------------------------
இழந்த  உரிமைகளை மீட்டிட...
இழந்த பெருமைகளை அடைந்திட...
இணைந்த கரங்கள் சின்னத்தில் வாக்களிப்பீர்...
--------------------------------------------------------------------
BSNL நிறுவனத்தை முதன்மையாக்கிட...
 NFTE சங்கத்தை முதன்மையாக்கிடுவீர்...

Thursday 22 August 2019

இறுதி வாக்காளர் பட்டியல் 

16/09/2019 அன்று நடைபெறவுள்ள 
8வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான 
தமிழக வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக வாக்காளர் எண்ணிக்கை...

CGM அலுவலகம்  - 265
கோவை  - 787
தருமபுரி  - 227
கும்பகோணம்  - 282
குன்னூர்   - 146
தஞ்சாவூர்  - 401
நெல்லை  - 432
கடலூர்  - 492
ஈரோடு  - 477
மதுரை  - 839
பாண்டி  - 169
திருச்சி  - 723
விருதுநகர்  - 261
காரைக்குடி   - 279
நாகர்கோவில்  - 253
சேலம்  - 743
தூத்துக்குடி  - 232
வேலூர்  - 674

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரையில் 839 வாக்காளர்களும்...
 குறைந்தபட்சமாக குன்னூரில் 146 வாக்காளர்களும் உள்ளனர். 
மொத்த வாக்காளர்கள்... 7682

Tuesday 20 August 2019

வயதைக் குறைக்காதே...
வாழ்வைக் குலைக்காதே...

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் 
ஓய்வு பெறும் வயதை..
60லிருந்து 58ஆக குறைக்க முயலும்..
BSNL நிர்வாகத்தின் ஊழியர் விரோத நடவடிக்கையை எதிர்த்து...
------------------------------------
நாடு தழுவிய கண்டன 
ர்ப்பாட்டம்
------------------------------------
21/08/2019 - புதன் - பகல் 12.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.
------------------------------------
தோழர்களே... அணி திரள்வீர்...
 BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
 காரைக்குடி.

Monday 19 August 2019

தேர்தல் சிறப்புக் கூட்டம்
பணிநிறைவு பாராட்டு விழா  

28/08/2019 - புதன்  - மாலை 05 மணி 
தொலைபேசி நிலையம் 
இராமநாதபுரம் 

தலைமை : தோழர். லால்பகதூர் 
மாவட்டத் தலைவர் 

பணி நிறைவு பாராட்டுப் பெறுவோர் 
தோழர்.ஜோதிக்குமார் 
TT /புதுமடம் 

பங்கேற்பு : தோழர்கள் 

G.சுபேதார் அலிகான் 
மாநில அமைப்புச் செயலர் 

V. மாரி 
மாவட்டச்செயலர் 

B. முருகன் 
மாவட்டச்செயலர் - NFTCW 

சிறப்புரை 
தோழர்.P .காமராஜ் 
சம்மேளனச் செயலர் 

தோழர்களே... வாரீர்...

உரிமை இழந்தோம்...
பெருமை இழந்தோம்...

இழந்த காலம்...
இறந்த காலமாகட்டும்...

வருங்காலம் 
வசந்த காலமாகட்டும்...

இழப்புகள் தடுத்திட...
இன்னல்கள் தொலைந்திட...

இணைந்த கரங்களில் வாக்களிப்பீர்...

Friday 16 August 2019

தேர்தல் சிறப்புக் கூட்டம் 

21/08/2019 - புதன் - மாலை 05 மணி 
தல்லாகுளம் தொலைபேசி நிலைய வளாகம் - மதுரை 
------------------------------------------------------------------
தலைமை : தோழர்.சிவகுருநாதன் 
மதுரை மாவட்டத்தலைவர் 
------------------------------------------------------------------

சிறப்புரை 

தோழர். சந்தேஷ்வர்சிங் 
பொதுச்செயலர் - NFTE
------------------------------------------------------------------

பங்கேற்பு : தோழர்கள் 

P. காமராஜ் 
சம்மேளனச் செயலர் 

K . நடராஜன் 
மாநிலச்செயலர் 

G. இராஜேந்திரன் 

மதுரை மாவட்டச்செயலர் 

V. மாரி 

காரைக்குடி மாவட்டச்செயலர் 


நன்றியுரை 

தோழர்.லால்பகதூர் 

காரைக்குடி மாவட்டத்தலைவர்


தோழர்களே... வாரீர்...

அன்புடன் அழைக்கும்...

மதுரை - காரைக்குடி மாவட்டச்சங்கங்கள் 

------------------------------------------------------------------

இழப்புக்கள் தடுத்திட...

இன்னல்கள் தீர்ந்திட...

இணைந்த கரங்கள் 
சின்னத்தில் வாக்களிப்பீர்...

வரிசை எண்: 15
தேர்தல் நாள் : 16/09/2019

Thursday 15 August 2019

யானைப்பசிக்கு சோளப்பொரி…

முன்பெல்லாம் ஒப்பந்த ஊழியர்களைக் கண்டால் நலம் விசாரிப்பதுண்டு.
ஆனால் இப்போது அவர்களைக் கண்டாலே 
நாம் தலையைக் குனிந்து செல்ல வேண்டிய நிலை உருவாகி விட்ட்து.
காரணம் சொல்ல வேண்டியதில்லை. 
ஆறேழு மாதங்களாக சம்பளம் இல்லை. 
2019ம் ஆண்டு அவர்களுக்கு சோதனை மிகுந்த ஆண்டாகி விட்டது.

காவல் பணியில் இருந்து கம்ப்யூட்டர் பணிவரை 
அவர்களின் பங்களிப்பு இல்லாத இடமே இல்லை. 
ஒரு அலுவல்கத்திற்குள் நுழையும்போதே அங்கு காவல் ப்ணியில் இருக்கும் 
ஒரு ஒப்பந்த ஊழியரைக் கண்ணுற்ற பின்புதான் நாம் அலுவலகத்திற்குள் செல்கிறோம். 

மிகமிக சொற்ப சம்பளத்தில் பணி செய்து கொண்டிருந்தார்கள். 
அந்த சொற்ப சம்பளமும் தற்போது கிடைக்கவில்லை என்பதுதான் 
வேதனையிலும் வேதனையான விஷயம்.
இந்தியா முழுவதும் ஏறத்தாழ 100 கோடிக்கும் மேல்
சம்பளம் நிலுவையில் உள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் சுமார் 20 கோடி அளவிற்கு சம்பளப்பாக்கி இருக்கலாம். 
ஒவ்வொரு ஒப்பந்த ஊழியருக்கும் 
50 ஆயிரம் 60 ஆயிரம் அளவிற்கு சம்பள பாக்கி. 
ஒவ்வொரு குத்தகைக்காரருக்கும் 
ஒருகோடி இரண்டுகோடி என பில்கள் பாக்கி உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழகத்திற்கு 
கோடி அளவில் நிதி  ஒதுக்கப்பட்டுள்ளது. 
இது ஒரு மாத சம்பளப்பட்டுவாடாவிற்கே போதாது. 
மூன்று நான்கு மாதங்களாக கையில் இருந்து சம்பளம் பட்டுவாடா செய்தோம். 
எனவே இப்போது எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சொற்ப தொகையில் 
எங்களால் சம்பளம் போடமுடியாது என ஒப்பந்தகாரர்கள் கையை விரிக்கின்றார்கள்.

நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் 
ஒப்பந்த ஊழியர்களின் ஒட்டுமொத்த சம்பளப்பாக்கியையும் வழங்க வேண்டும்.
தேவையெனில் நிரந்தர ஊழியர்களின் சம்பளத்தைக் கூட நிறுத்தி வைத்துவிட்டு 
ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கிடலாம்.
ஏனெனில் அவர்கள் நாள்தோறும் மரித்துகொண்டிருக்கின்றார்கள்.

Wednesday 14 August 2019

விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தொடர்புடைய படம்

தாயின் மணிக்கொடி
தாழ்ந்து பறக்க விடமாட்டோம்...
பாரதியின் வரிகளை...
பரவசத்துடன் பாடுவோம்….
பாரதத்தின் புதல்வர்களிடையே
பாகுபாடுகளை அனுமதியோம். . .
இமயம் முதல் குமரி வரை...
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை...
இந்திய தேசம் நம் தேசம்.. . .

அனைவருக்கும் 
விடுதலைத் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்
----------------------------------------------------------
தாயின் மணிக்கொடி பாரீர்!- அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம்-அதன்
 உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும்-செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்!

இந்திரன் வச்சிரம் ஓர்பால்-அதில் 
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும்-அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ?

கம்பத்தின் கீழ்நிற்றல்காணீர்-எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்குரியர் அவ்வீரர்  - தங்கள்
 நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்

செந்தமிழ் நாட்டுப் பொருநர்
கொடுந்தீக்கண் மறவர்கள் சேரன்தன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர்
தாயின்   சேவடிக்கே பணி செய்திடு துளுவர்..

கன்னடர் ஒட்டிய ரோடு-போரில்
காலனும் அஞ்சக்கலக்கு மராட்டர்,
பொன்னகர்த் தேவர்களொப்ப-நிற்கும்
 பொற்புடையார் இந்துஸ்தானத்து மல்லர்.

பூதலம் முற்றிடும் வரையும்-அறப்
போர்விறல் யாவும் மறப்புறும் வரையும்,
 மாதர்கள் கற்புள்ள வரையும்-பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர்

பஞ்சநதத்துப் பிறந்தோர்-முன்னைப்
 பார்த்தன் முதற்பலர் வாழ்ந்த நன்னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின்-பதத்
 தொண்டு நினைத்திடும் வங்கத்தினோரும்.

சேர்ந்ததைக் காப்பது காணீர்!-அவர்
 சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க..
-    மகாகவி பாரதி -
தாயின் மணிக்கொடி தாழ்ந்து வணங்குவோம் 

விடுதலைத்திருநாள் கொடியேற்றம்

15/08/2019 – வியாழன்காலை 08-30 மணி
பொதுமேலாளர் அலுவலகம்காரைக்குடி

விடுதலைத்திருநாள் சிறப்புரை

 எழுத்தாளர்... தோழர்.சந்திரகாந்தன்

சங்க அலுவலகம்காலை 10 மணிகாரைக்குடி

தோழர்களேவாரீர்

Tuesday 13 August 2019

மதுரையில் ரவுடித்தனம்

10/08/2019 அன்று 
மதுரை தல்லாகுளம் ஊழியர் குடியிருப்பில் 
பணிசெய்து கொண்டிருந்த தோழர்.சந்திரசேகர் TT 
அங்கு வசித்து வரும் திரு.கார்த்திகேயன் SDE என்பவரால்
கடுமையாகத் தாக்கப்பட்டு காயமுற்றார். 

காயமுற்ற தோழர்.சந்திரசேகர் TT  
மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் 
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தோழர்.சந்திரசேகரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய
திரு.கார்த்திகேயன் SDE திருநெல்வேலியில் 
பேட்டரி திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்டவர் என்பதுவும், 
தர்மபுரியில் தோழர்களுடன் வீண்சண்டையும் வம்பும் செய்து
அங்கிருந்து ம்துரைக்கு தூக்கியடிக்கப்பட்டவர் என்பதுவும் குறிப்பிடத்தக்கது. 

மனிதநேயமற்ற திரு.கார்த்திகேயன் SDEன் காட்டுமிராண்டித்தன நடவடிக்கையைக் கண்டித்தும் தவறிழைத்த திரு.கார்த்திகேயன் SDE மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் 
13/08/2019 அன்று AUAB அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் 
மதுரை முதன்மைப்பொதுமேலாளர் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 
AUAB தலைவர் தோழர்.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில், 
CONVENOR தோழர்.செல்வின் சத்தியராஜ் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 
அனைத்து சங்கத்தலைவர்களும் கண்டன உரையாற்றினார்கள். 
முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன….

 தீர்மானங்கள்
10/08/2019 அன்று பணியில் இருந்த திரு.சந்திரசேகர் TT அவர்களை கடுமையாகத்தாக்கி காயமுறச்செய்த திரு.கார்த்திகேயன் SDE 
உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும்.  
மேற்கொண்டு இலாக்கா நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
 -------------------------------------------------
தல்லாகுளம் ஊழியர் குடியிருப்பில் அமைதியைக் குலைத்து வரும் 
திரு.கார்த்திகேயன் SDEஐ ஊழியர் குடியிருப்பில் இருந்து அகற்ற வேண்டும்.
 
 -------------------------------------------------
எல்லோரையும் மிரட்டுவது, மட்டு மரியாதை இல்லாமல் பேசுவது, 
தனது உடல் பலத்தைக் காட்டி இளைத்தவர்களைத் துன்புறுத்துவது என்று 
மதுரைப்பகுதியில் தொழில் அமைதியைக் குலைத்து ரவுடித்தனம் செய்து வரும் 
திரு. திரு.கார்த்திகேயன் SDE உடனடியாக 
மதுரையை விட்டு மாற்றல் செய்யப்படவேண்டும்.

தோழர்களே….
குடியிருப்பு என்பது ஒரு சமத்துவபுரம். 
அங்கு எல்லா மதத்தினரும் உண்டு. 
எல்லா சாதியினரும் உண்டு. 
எல்லாக் கேடர்களும் உண்டு. 
எல்லா மொழியினரும் உண்டு...
எல்லா ஊர்க்காரர்களும் உண்டு. 
அது ஓர் சமத்துவபுரம். 
அத்தகையை சமத்துவம் நிலவும் இடத்தில் 
தேவையற்ற முறையில் அமைதியைக் குலைத்து 
சாதிமத பேதம் வளர்த்து 
ஊழியர்களைத்துன்புறுத்தி இன்பம் காணும் 
கார்த்திகேயன் போன்ற சமூக நல்லிணக்கத்தைக் கெடுப்பவர்கள் மீது 
நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்.

ஒற்றுமையும் அமைதியும் நிலவும் 
மதுரை மாவட்டத்தில் ஒருசில நபர்களால் 
அமைதி கெடுவது எவ்வகையிலும் அனுமதிக்க முடியாதது.