Monday 30 September 2019

துரத்தும்... துயரம் 

ஆறேழு மாதங்களாக சம்பளம் இல்லாமல் 
அல்லல் பட்டுக்கொண்டிருக்கும் ஒப்பந்த ஊழியர்களின் 
ஒட்டிய வயிற்றில் மேலும் ஓங்கி அடித்துள்ளது BSNL நிர்வாகம். 

30/09/2019 அன்று சிக்கன நடவடிக்கை என்னும் பெயரில் 
ஒப்பந்த ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பும் திட்டத்தை 
உத்திரவு என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

அந்தப் பாதக உத்திரவு இவ்வாறு கூறுகின்றது...

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகும் செலவு 50 சதம் குறைக்கப்பட வேண்டும்.
அதற்காக கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

55 வயதிற்கு மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்களை
பணியில் அமர்த்தக் கூடாது.

ஒப்பந்த ஊழியர்களுக்கு மாதம் 15 நாட்களுக்கு மேல் பணி கிடையாது. 
(இது கல்கத்தாவிற்கு மட்டும் பொருந்தும். மற்ற மாநிலங்களுக்கு இல்லை)

துப்புரவுப் பணிகளுக்கு ஒரு நாளைக்கு 
3 மணி நேரத்திற்கு மேல் வேலை தரப்பட மாட்டாது.

காவல்பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். அந்தப்பணியில் நிரந்தர ஊழியர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

மேற்கண்ட சிக்கன நடவடிக்கையை  மேற்கொண்டு
50 சத செலவினத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்த மாநிலங்களுக்கு மட்டும் ஒரு மாத சம்பளத்திற்கான 
நிதி ஒதுக்கீடு வழங்கப்படும். 

தோழர்களே..
சிக்கன நடவடிக்கை என்னும் பெயரில் 
மிக மிக மோசமான உத்திரவை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
மிகக்குறைந்த கூலியில் அத்தியாவசியமான  பல பணிகளை  
அவர்கள் மேற்கொண்டு வந்தார்கள்.
குறைக்கப்பட வேண்டிய அநாவசிய செலவுகள் ஆயிரம் இருக்கும்போது அடிமட்ட ஊழியருக்கு வழங்கும் சொற்பக்கூலியையும் குறைத்திட நிர்வாகம் முயல்வது மிகவும் மனிதநேயமற்ற செயலாகும். 
-----------------------------------------------------------------------
மத்திய சங்கங்கள் இன்னும் அமைதி காப்பது 
முறையற்ற செயலாகும். உடனடியாக நிர்வாகத்தின் 
இந்தக் கொடிய  உத்திரவை எதிர்த்துக் களம் காண வேண்டும்.
தலைமை என்பது  கிரீடம் தாங்குவதற்கு மட்டுமல்ல...
தம்மை நம்பி வாழும் ஊழியர்களுக்கு சோதனை நிகழும்போது 
தலைமை தாங்கி அவர்களைத் துன்பத்தில் இருந்து விடுவிப்பதே 
உண்மையான தலைமையாகும்.
-----------------------------------------------------------------
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர் 
துன்பம் துடைத்தூன்றும் தூண்
-குறள்-
மாமணியைத் தோற்போமோ?
தண்ணீர் விட்டா வளர்த்தோம்...
இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்..
கருகத் திருவுளமோ?

எண்ணமெல்லாம் நெய்யாக...
எம்முயிரினுள் வளர்ந்த 
வண்ண விளக்கிது...
மடியத் திருவுளமோ?

தர்மமே வெல்லும் என்னும் 
சான்றோர் சொல் பொய்யாமோ?
கர்ம வினைகள் யாம் கண்டதெல்லாம் போதாதோ?

பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ?
பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
-பாரதி-
I D A  உயர்வு 

01/10/2019 முதல் IDA 5.3 சதம் உயர்ந்துள்ளது. 
இத்துடன் மொத்தப் புள்ளிகள் 152 சதமாகும்.

2007ல் பஞ்சப்படி 68.8 ஆக இருக்கும்போதே 
நம்மால் பஞ்சப்படி இணைப்பைப் பெற முடிந்தது. 
இரண்டாவது ஊதிய மாற்றம் பெற முடிந்தது. 
ஆனால் இப்போது   IDA 152 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளன.
ஆனாலும் பஞ்சப்படி இணைப்பு என்பது 
நம்மைப் பொறுத்தமட்டில் கானல் நீரே. 

 IDA உயர்வு பற்றி ஊழியர்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கும்.
கூடுதலாக IDA உயர்ந்தால் கூடுதலாக மகிழ்ச்சி அடைவார்கள்.
ஆனால் தற்போது ஊதியமே கைக்கெட்டாத நிலையில்...
பஞ்சப்படி உயர்வு ஊழியர்களுக்கு உற்சாகம் தரவில்லை.

BSNLலில் படிப்படியாக பஞ்சம் தலைவிரித்தாடும் வேளையில்...
பஞ்சப்படிகள் உயர்ந்து என்னாகப் போகிறது?

Sunday 29 September 2019

பணி நிறைவு வாழ்த்துக்கள் 

காரைக்குடி மாவட்டத்தில் இன்று 30/09/2019 
பணி நிறைவு பெறும் அன்புத்தோழர்கள் 

நன்னெறி வளர்த்திட... நாடு முழுவதும் 
நடைப்பயணம் சென்ற.. ஆன்மிகச்செம்மல்... 
அருமைத்தோழர் 
P.கோபால் 
TT /இராமநாதபுரம் 

காலம் தவறாத... கடமை வழுவாத... 
கண்ணியம் குறையாத... கடமை வீரர்...
N.கல்யாணசுந்தரம் 
TT/கீழக்கரை 

ஆகியோரின் பணி நிறைவுக்காலம் 
செம்மையுடனும்... சிறப்புடனும் விளங்கிட 
அன்போடு வாழ்த்துகின்றோம்.

Friday 27 September 2019

தஞ்சை மாவட்டச் செயலர்கள் கூட்ட முடிவுகள்
----------------------------------------------------------------------
BSNL வளம்...  ஊழியர் நலம்...  
இதுவே இன்றைய முக்கிய இலக்கு. 
எனவே  இந்த  இலக்கை அடைய 
SEWA உள்ளிட்ட  அனைத்து சங்கங்களையும்  
ஒன்றிணைத்து பலமிக்க  ஒற்றுமையான அமைப்பாக 
AUAB கூட்டமைப்பை வலுப்படுத்துவது. அதன் மூலம் 
வலுவான போராட்டங்களையும்... இயக்கங்களையும் நடத்துவது.
----------------------------------------------------------------------
 ஊழியர்களின் சம்பளத்தை உரிய தேதியில் வழங்கிடவும்... பிடித்தங்களைத் தாமதமின்றி செலுத்திடவும் BSNL நிர்வாகத்தை  
மத்திய சங்கம் அழுத்தமாக வலியுறுத்தி உடனடியான போராட்டங்களை அறிவிக்க வேண்டும்.  அதன் முதற்கட்டமாக தமிழ் மாநிலச்சங்கத்தின் சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை
10/10/2019 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடத்துவது. 
----------------------------------------------------------------------
தடைபட்டு நிற்கும் 3வது ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தையை 
BSNL நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன்
உடனடியாகத் தாமதமின்றி துவக்கிட வேண்டும்.
----------------------------------------------------------------------
வணிகப்பகுதி உருவாக்கத்தில் ஊழியர்களுக்கு பல்வேறு சங்கடங்களும்... துன்பங்களும் நேர்ந்துள்ளன. எனவே தேவையான மாற்றங்களை மாநில நிர்வாகம்  மாநிலச் சங்கத்துடன் கலந்து பேசி இணைப்பால் நேர்ந்த இன்னல்களைக் களைய வேண்டும்.
----------------------------------------------------------------------
தேர்தல் வெற்றிக்கு உழைத்த மற்றும் வாக்களித்த  தோழர்களுக்கு நன்றி தெரிவித்திடவும்... BSNL புத்தாக்கத்திற்கு அழுத்தம் கொடுத்திடவும்... அக்டோபர் இரண்டாவது வாரத்தில் கடலூரில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் 
BSNL புத்தாக்க கோரிக்கை மாநாட்டை நடத்துவது.
----------------------------------------------------------------------
எட்டாவது தேர்தலில் NFTE சங்கத்தின் வெற்றிக்காக பாடுபட்ட மாநிலமாவட்டகிளைச் சங்கத்தோழர்கள் கூட்டணித் தலைவர்கள் மற்றும் முன்னனித் தோழர்களுக்கு மாவட்டச் செயலர்கள் கூட்டம்  தனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றது.

Wednesday 25 September 2019

ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு 

ஒப்பந்த ஊழியர்களுக்கான விலைவாசிப்படி VDA  
01/10/2019 முதல் கீழ்க்கண்டவாறு உயர்ந்துள்ளது.

UNSKILLED WORKERS 
A பிரிவு நகரம் - 
ரூ.584/-லில் இருந்து ரூ.603/- ஆக உயர்வு (523 + 80) 
நாளொன்றுக்கு ரூ.19/- உயர்வு 

B பிரிவு நகரம் 
ரூ.487/-லில் இருந்து ரூ.503/- ஆக உயர்வு (437 + 66)
நாளொன்றுக்கு ரூ.16/- உயர்வு 

 C  பிரிவு நகரம் 
ரூ.390/-லில் இருந்து ரூ.403/- ஆக உயர்வு (350 + 53)
நாளொன்றுக்கு ரூ.13/- உயர்வு 

தோழர்களே...
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறு மாதங்களுக்கு 
ஒரு முறை விலைவாசிப்படி உயருகின்றது. 
ஆனால் BSNLலில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கோ 
ஆறு மாதங்களாக சம்பளமே  இல்லை. 
பணிபுரியும் ஊழியர்களில் 30 சதம் 
குறைக்கப்பட வேண்டும் என ஆட்குறைப்பு வேறு. 
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆகும் செலவினத்தைக்
கட்டுப்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடு வேறு. 
இதனிடையேதான் அவர்களுக்கு 
VDA என்னும் விலைவாசிப்படி உயர்ந்துள்ளது. கைக்கெட்டியது  வாய்க்கெட்டும் நாள் எந்நாளோ?

Tuesday 24 September 2019

சங்க அங்கீகார உத்திரவு 

நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளையொட்டி சங்க அங்கீகாரத்திற்கான உத்திரவை BSNL நிர்வாகம் 24/09/2019 அன்று வெளியிட்டுள்ளது.

அந்த உத்திரவின்படி...
BSNLEU சங்கம் 
அங்கீகரிக்கப்பட்ட முதன்மைச் சங்கமாக செயல்படும்....

NFTE BSNL சங்கம் 
அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது சங்கமாக செயல்படும்...

அங்கீகார காலம்  24/09/2019 முதல் 23/09/2022 வரை  மூன்று ஆண்டுகள்...

இரண்டு சத வாக்குகளுக்கு மேல் பெற்ற 
BTEU BSNL மற்றும் NUBSNLW FNTO சங்கங்களுக்கு
குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படுகின்றன.

JCM கூட்டு ஆலோசனைக்குழுவில்...
BSNLEU சங்கத்திற்கு 8 இடங்களும்... 
NFTE சங்கத்திற்கு 6 இடங்களும் ஒதுக்கப்படுகின்றன...
BSNLEU, NFTE சங்க உறுப்பினர் அல்லாதவர்கள்
JCMல் உறுப்பினராகப்  பங்கு பெற இயலாது.
JCM உறுப்பினர்கள் பணியில் இருப்பவர்களாக இருத்தல் நலம்...

அங்கீகரிக்கப்பட்ட BSNLEU, NFTE சங்கங்களுக்கான வசதிகள்...
தகவல் பலகை 
தொலைபேசி வசதி 
மாற்றலில் இருந்து விதிவிலக்கு...
JCM கூட்டு ஆலோசனைக்குழுவில் பிரதிநிதித்துவம்...
நிர்வாகத்துடன் அதிகாரப்பூர்வ சந்திப்பு...
சிறப்பு விடுப்பு அனுமதி...
உறுப்பினர்களிடமிருந்து சந்தா பிடித்தம் செய்து கொடுத்தல்...
இரகசியம் அல்லாத அனைத்து  உத்திரவு நகல்களை வழங்குதல்...

2 சத வாக்குகள் அடிப்படையில் ...
BTEU BSNL மற்றும் NUBSNLW FNTO 
சங்கங்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்...
தகவல் பலகை 
தொலைபேசி வசதி 
நிர்வாக நலன் கருதி செய்யப்படும் கடிதப்போக்குவரத்து...
உறுப்பினர்களிடமிருந்து சந்தா பிடித்தம் செய்து கொடுத்தல்...

தோழர்களே...
அங்கீகாரம் மற்றும் JCM உறுப்பினர் நியமனத்திற்கான 
உத்திரவு வெளியிடப்பட்டுள்ள நிலையில்... 
சில சந்தேகங்கள் எழுகின்றன.

தமிழகம் போன்ற மாநிலங்களில் 
வணிகப்பகுதி BUSINESS AREA அமைப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. 
JCM தலமட்டக்குழு SSA என்னும் மாவட்ட அமைப்பாகத் தொடருமா? 
அல்லது வணிகப்பகுதி அமைப்பாகத் தொடருமா? 
என்பது பற்றி  விளக்கம் அளிக்கப்படவில்லை.

தேர்தல் SSA அளவில் நடத்தப்பட்டதால்...
JCM தலமட்டக்குழு அமைப்பும் SSA அளவிலே 
செயல்படுவதுதான் சரியான நிலையாக இருக்கும்...
எனவே மாவட்ட அளவிலான SSA LOCAL COUNCIL உறுப்பினர் பட்டியல் வழக்கம்போல் அகில இந்திய சங்கம் மூலம் 
மாவட்ட நிர்வாகங்களுக்கு அனுப்பப்பட வேண்டும்.

Thursday 19 September 2019

சங்க அங்கீகார விதிகள் 

BSNL நிறுவனத்தில் இதுவரை 8 உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. முதல் 5 உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல்கள் வரை 
ஒரு சங்கம் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டு வந்தது. 

இரண்டாவது தேர்தலில்  NFTE சங்கம் தோல்வியைத் தழுவிய பின் 
பல சங்க அங்கீகார முறை அமுல்படுத்தப்பட வேண்டும் 
என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டது.

எனவே ஆறாவது தேர்தலுக்கு முன்பாக பல சங்க அங்கீகாரம் என்ற கோரிக்கையின் அடிப்படையில் BSNL சங்க அங்கீகார 
விதிகளைத் திருத்தி 26/12/2012 அன்று உத்திரவிட்டது.
இன்று வரை 2012 சங்க அங்கீகார விதிகளே நடைமுறையில் உள்ளன...

2012 சங்க அங்கீகார விதிகளின்படி...

உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை இரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறும். முன்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கேற்கும் சங்கங்கள் பதிவு செய்து ஓராண்டு முடித்திருக்க வேண்டும்.

50 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெறும் சங்கம்
அங்கீகரிக்கப்பட்ட ஒரே சங்கமாக அறிவிக்கப்படும். 

ஒரு சங்கம் 50க்கும் அதிகமாக வாக்குகள் பெற்றால்
இரண்டாவது சங்கத்திற்கு அங்கீகாரமில்லை.

எந்தவொரு சங்கமும் 50 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெறாத நிலையில்... 35 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்ற சங்கம் முதன்மைச் சங்கமாக அறிவிக்கப்படும். 

15 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்ற இரண்டாவது சங்கம் அங்கீகரிக்கப்பட்ட இரண்டாவது சங்கமாக அறிவிக்கப்படும்.
இரண்டு அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களும்
எல்லாவிதத்திலும் இணையாக நடத்தப்படும்.

எந்தவொரு சங்கமும் 35 சத வாக்குகள் பெறாத நிலையில் 15  சதத்திருக்கும் கூடுதலாக  வாக்குகள்  பெற்ற இரண்டு  சங்கங்கள் அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களாக அறிவிக்கப்படும்.

மாநிலங்களில் 50 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெறும் சங்கம் 
அகில இந்திய அளவில் அங்கீகாரம் பெறாவிட்டாலும் 
மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட சங்கமாக செயல்படும்.

அகில இந்திய அளவில் 2 சத வாக்குகள் பெற்ற சங்கங்களுக்கு 
சந்தா பிடித்தம், தகவல் பலகை வைத்துக்கொள்ளுதல் போன்ற 
குறைந்த பட்ச சலுகைகள் வழங்கப்படும்.

JCM கூட்டு ஆலோசனைக்குழு உறுப்பினர் நியமனம்
வாக்கு விகிதாச்சார அடிப்படையில் நடைபெறும்.

7 சத வாக்குகள் பெறும் சங்கங்களுக்கு ஒரு உறுப்பினர் என்ற அளவில்  JCM உறுப்பினர் எண்ணிக்கை அமையும். 

JCM  உறுப்பினர் எண்ணிக்கை 15ல் இருந்து 14 ஆக குறைக்கப்படுகிறது. 

முதன்மைச் சங்கத்திற்கு JCM செயலர் பதவியும்... 
இரண்டாவது சங்கத்திற்கு JCM தலைவர் பதவியும் வழங்கப்படும்.

தோழர்களே...
தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 
NFTE மற்றும் BSNLEU  சங்கங்கள் 
35 சதத்திற்கு கூடுதலாகவும் 
50 சதத்திற்கு குறைவாகவும் வாக்குகள் பெற்றுள்ளன. 

35 சதத்திற்கு மேல் 50 சதத்திற்கு கீழ்  
இரண்டு சங்கங்கள் வாக்கு பெற்றால் 
அங்கீகார நிலை என்ன என்பதைத் தற்போதைய 
அங்கீகார விதிகள் தெளிவுபடுத்தவில்லை.

JCM உறுப்பினர் நியமனத்தைப் பொறுத்தவரை 
அங்கீகாரம் என்பது அவசியமில்லை.
அங்கீகரிக்கப்படாத சங்கங்கள் கூட 
7 சத வாக்குகள் பெற்றால் JCMல் இடம் பெற இயலும். 
JCM உறுப்பினர் நியமனம் என்பது பெற்ற வாக்குகளின் 
விகிதாச்சார அடிப்படையில் மட்டுமே நடைபெறும்.

எனவே தற்போதைய சங்க அங்கீகார விதிகளின்படி...
BSNLEU  முதன்மைச் சங்கமாகவும்...
NFTE இரண்டாவது சங்கமாகவும்..
JCMல்...
BSNLEUவிற்கு 8 இடங்களும்..
NFTEக்கு 6 இடங்களும் ஒதுக்கப்படும்.

எங்கும்... எதிலும்...
விருப்பம் என்பது வேறு...
விதிகள் என்பது வேறு...
மாவட்டச் செயலர்கள் கூட்டம்
 தமிழ் மாநிலச் சங்கம் 
மாவட்டச் செயலர்கள் கூட்டம்
----------------------------------------
 26/09/2019 - வியாழன் - காலை 09 மணி 
CTO வளாகம் -  N F T E சங்க அலுவலகம் - தஞ்சை 
----------------------------------------
தலைமை 
     தோழர். .காமராஜ் - மாநிலத்தலைவர்

வரவேற்புரை  
 தோழர். K.கிள்ளிவளவன் - மாவட்ட செயலர்
தோழியர். A.லைலாபானு  - மகளிர் ஒருங்கிணைப்பு குழு

முன்னிலை  
தோழர். T. பன்னீர்செல்வம் மாவட்டத்தலைவர் 
தோழர். A. சேகர் மாவட்டப் பொருளர்

அறிமுக உரை
 தோழர். கி.நடராஜன் - மாநிலச் செயலர்

ஆய்படு பொருள்
  • வது உறுப்பினர் சரிபார்ப்பு தேர்தல் முடிவுகள் பரிசீலனை
  • தேர்தல் வெற்றி விழா 
  •  அடுத்த மாநில செயற்குழு
  • BSNL புத்தாக்கம் – நமது அணுகுமுறை
  • BSNL நிதி நிலை - வெள்ளை அறிக்கை கோருதல் 
  • புதிய கருவிகள் தொழில் நுட்பத்தேவை குறித்த  நிர்வாக திட்டம் குறித்து அறிக்கை கோருதல்.
  • ஊதியம்  வழங்க முன்னுரிமை கோருதல்
  • 2019 BSNL பொதுத்துறையாக  மாற்றம் பெற்ற 20 ஆண்டுகள்
  • அமைப்பு நிலை 
  • தலமட்டப்  பிரச்சனைகள்
  • இதர தலைவர் அனுமதியுடன்

நிதி நிலை 
தோழர். L. சுப்பராயன்  - மாநிலப்பொருளர்

நன்றியுரை 
தோழர். G.S.முரளிதரன் மாநில உதவிச் செயலர்

தோழர்களே... வருக...

Wednesday 18 September 2019

அகில இந்தியத் தேர்தல் முடிவுகள் 


BSNL நிறுவனத்தில் 8வது தொழிற்சங்க உறுப்பினர் 
சரிபார்ப்புத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. 
அகில இந்திய அளவில் மீண்டும் BSNLEU சங்கமே
முதன்மைச் சங்கமாக வெற்றி பெற்றுள்ளது. 
நமது NFTE சங்கம் இரண்டாவது சங்கமாக வெற்றி பெற்றுள்ளது. 
BTEU BSNL  சங்கம் 3வது பெரிய சங்கமாகவும், 
FNTO சங்கம் 4வது சங்கமாகவும் வாக்குகள் பெற்றுள்ளன.

சென்ற தேர்தலில் 49.56 சத வாக்குகள் பெற்று ஏறத்தாழ 50 சதத்தைத் தொட்ட BSNLEU சங்கம் தனது ஊழியர் நல மெத்தனத்தால் 
6 சத வாக்குகளை இழந்து 43 சத வாக்குகளையே பெற்றுள்ளது. 

சென்ற முறை 32 சத அளவிற்கு வாக்குகள் பெற்ற
 NFTE சங்கம் இம்முறை  3 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள் பெற்று 
35 சத வாக்குகளைப் பெற்றுள்ளது. 

சென்ற முறை 2.96 சத வாக்குளைப் பெற்றிருந்த ஆளும் BJP அரசின் ஆதரவு சங்கமான BTEU BSNL இம்முறை கூடுதல் வாக்குகள் பெற்று 
4 சதத்திற்கும் கூடுதலாக வாக்குகள்  பெற்றுள்ளது. 

பரிதாபத்திலும் பரிதாபமாக FNTO சங்கம் 3.86 சத வாக்குளை மட்டுமே பெற்று 4வது இடத்திற்கு இடித்துத் தள்ளப்பட்டுள்ளது. 
இன்று அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளின் அறிவிப்பு வெளியிடப்படும்.

தற்போதைய வாக்குகளின் விகிதாச்சார அடிப்படையில்...
JCM கூட்டாலோசனைக்குழுவில் BSNLEU  சங்கத்திற்கு 8 இடங்களும்...
NFTE சங்கத்திற்கு 6 இடங்களும் கிட்டும்.  7 சத வாக்குகள் பெறாத காரணத்தினால் வேறு எந்த சங்கத்திற்கும் கூட்டு ஆலோசனைக்குழுவில் இடமில்லை. JCMல் சென்ற முறையை விட BSNLEU ஒரு இடத்தை இழந்தும்... NFTE ஒரு இடத்தைக்  கூடுதலாகவும் பெற்றுள்ளது.

தோழர்களே... 
தேர்தல் திருவிழா முடிந்துள்ளது.
சங்கங்கள் வெற்றி பெற்றுள்ளன.
இன்று மிகுந்த இக்கட்டான சூழலில் 
நிறுவனமும் ஊழியர்களும் உள்ளனர்.
தொழிற்சங்கங்கள் வெற்றி பெறுவது பெரிதல்ல...
தொழிலாளர்கள் ... வெற்றி பெற வேண்டும்..
தொழில் நிறுவனம் வெற்றி பெற வேண்டும்..
இழந்த நம் பெருமைகளை மீட்டெடுக்க வேண்டும்...
பறிக்கப்பட்ட நம் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும்...
அந்த திசை வழியில்... 
நிறுவனம் காத்திட... ஊழியர் நலன் காத்திட...
மீண்டும் ஒற்றுமையுடன் அனைவரும் பயணிக்க வேண்டும்... 
இதுவே வாக்களித்த சாதாரண தோழனின் எதிர்பார்ப்பு...
தமிழகத் தேர்தல் முடிவுகள் 

தமிழகத்தில் NFTE தனது பாரம்பரியப் பெருமையுடன் 50 சதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.
வாக்குகள் வித்தியாசம் 1007.

Tuesday 17 September 2019

தேர்தல் முடிவுகள் 

காரைக்குடி மாவட்ட தேர்தல் முடிவுகள் 

NFTE = 171

FNTO = 68

BSNLEU = 29

RASHTRIYA = 1

INVALID = 1

BLANK    = 2

வாக்களித்த தோழர்களுக்கு மனமார்ந்த  நன்றிகள்..
சுயமரியாதையே  சுகவாழ்வு 


செப்டம்பர் - 17 
தந்தை பெரியார் பிறந்த நாள்... 

பகுத்தறிவை வளர்த்தவர்...
சுயமரியாதை சொன்னவர்... 
தந்தை பெரியார் புகழ் போற்றுவோம்...

Sunday 15 September 2019


வாக்களிப்பீர்... வளம் பெறுவீர்...

கிட்டாத உரிமைகளை...
எட்டாத சலுகைகளை...
போராடி வென்றெடுக்க...
எட்டாவது தேர்தலில்...
இணைந்த கரங்களுக்கு வாக்களிப்பீர்...

Wednesday 11 September 2019

தேர்தல் பரப்புரை நிறைவுக்கூட்டம்

தேர்தல் சிறப்புக்கூட்டம் 

13/09/2019 -  வெள்ளி - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - பரமக்குடி 
-------------------------------------------------------------------------
13/09/2019 - வெள்ளி - மாலை 04 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 
---------------------------------------------------------------------------

பங்கேற்பு : தோழர்கள் 
K . சேது 
மேனாள் மாநிலப்பொருளர் - NFTE 

G. சுபேதார் அலிகான் 
மாநில அமைப்புச்செயலர் - NFTE

B.லால்பகதூர்  
மாவட்டத்தலைவர் - NFTE

A. தமிழரசன் 
கிளைச்செயலர் - பரமக்குடி 

B. இராஜன் 
கிளைச்செயலர் - இராமேஸ்வரம் 

R. இராமமூர்த்தி 
கிளைச்செயலர் - இராமநாதபுரம் 
---------------------------------------------------------------------------------
இழந்த காலம்... இருண்ட காலம்  போகட்டும்...
இனியேனும்  சிறந்த காலம் பிறக்கட்டும்... 

இணைந்த கரங்களுக்கு வாக்களிப்போம்...
இழந்ததை... இறந்ததை... மீட்டெடுப்போம்...

தோழர்களே... வாரீர்...
தேர்தல் பரப்புரை நிறைவுக்கூட்டம் 
சிறப்புக்கூட்டம் 
13/09/2019 - வெள்ளி - காலை 10 மணி 
தொலைபேசி நிலையம் - சிவகங்கை 
---------------------------------------------------------------
13/09/2019 - வெள்ளி - மாலை 04 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 
------------------------------------------------------------------- 
பங்கேற்பு : தோழர்கள் 
கடலூர் .ஜெயராமன் 
மேனாள் சம்மேளனச் செயலர் - NFTE

வெ. மாரி 
மாவட்டச்செயலர் - NFTE

ப. முருகன் 
கிளைச்செயலர் - சிவகங்கை 

ம. ஆரோக்கியதாஸ் 
கிளைச்செயலர் - காரைக்குடி
-----------------------------------------------------------------
கிட்டாமல் போன சலுகைகளை..
எட்டாமல் போன உரிமைகளை...
எட்டாவது தேர்தலில் மீட்டெடுக்க...
ஒன்பது கரங்களுக்கு வாக்களிப்பீர்...
------------------------------------------------------------------------
தோழர்களே... வாரீர்...
கொட்டு முரசே...
வெற்றி எட்டுத் திக்கும் 
எட்டக் கொட்டு முரசே...
நித்த சக்தி வாழ்க...
என்று கொட்டு முரசே...

செப்டம்பர் 11
மகாகவி பாரதி நினைவு தினம் 
மகாகவி அடி சொல்வோம்...
மகாகவி அடி செல்வோம்..

Tuesday 10 September 2019

தேர்தல் களம் 

16/09/2019 அன்று BSNLலில் 8வது 
உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் நடபெறவுள்ளது.

அகில இந்திய அளவில் மொத்த வாக்காளர்கள் = 1,10,977
வாக்காளர்கள் அதிகம் உள்ள மாநிலம் - மகாராஷ்டிரா = 10,973
தமிழகத்தில் வாக்காளர்கள் = 7,682
குறைந்த வாக்காளர்கள் - QA ஜபல்பூர் = 35
மொத்த வாக்குச்சாவடிகள் = 1712
அதிக வாக்குச்சாவடிகள் - கர்நாடகா = 176

வாக்குப்பதிவு நேரம்  16/09/2019
காலை 9.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை 

அமைதிக்காலம் - SILENCE PERIOD 
14/09/2019 - காலை 09.00 மணி முதல் 
(வாக்குப்பதிவு நேரத்திற்கு 48 மணி நேரம் முன்னதாக...)

ஒவ்வொரு சங்கத்திற்கும் ஒரு முகவர்...  ஒரு மாற்று முகவர்... 
மற்றும் ஒரு வாக்கு எண்ணிக்கை முகவர்... 

வாக்குச்சாவடிக்குள் அலைபேசி கொண்டு செல்லத்தடை...

வாக்காளர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்...
அடையாள அட்டை இல்லாதவர்கள் 
அதற்கான நிரப்பப்பட்ட படிவத்தை கொண்டு செல்லவேண்டும்..

வாக்குசீட்டுக்களில் தேர்தல் அதிகாரி கையெழுத்து இருக்க  வேண்டும்...

வாக்குச்சீட்டு கிழிந்திருந்தால் புதிய சீட்டு கேட்டுப்பெறவேண்டும்...

மலைப்பகுதி போன்ற   கடினமான இடங்களில் இருந்து வருபவர்களுக்கு நிர்வாகம் வாகன வசதி செய்து கொடுக்க வேண்டும்...

வாக்காளர்களுக்கு அரைநாள் விடுப்பு அளிக்கப்படும்...

தற்காலிகப் பணிநீக்கத்தில் உள்ளவர்களும் வாக்களிக்கலாம்...

தற்காலிக மாற்றலில்அடுத்த மாவட்டங்களுக்கு சென்றவர்களுக்கு 
தபால் ஓட்டு 15 தினங்களுக்கு முன்பாக அனுப்பப்படவேண்டும். 
தபால் ஓட்டில் சின்னம் அல்லது சங்கத்தின் பெயரில் X குறியிட்டு 
தபாலில் திருப்பி அனுப்ப வேண்டும்.

JTO பயிற்சி முடித்து 10/09/2019 அன்று 
பதவி உயர்வு பெற்றவர்கள் வாக்களிக்க இயலாது.

வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்ட பின்பு  கருணை அடிப்படையில் புதிதாக பணி அமர்த்தப்பட்டவர்கள் வாக்களிக்க இயலாது...

வாக்களிக்க செல்பவர்களுக்கு பயணப்படி கிடையாது...

வாக்கு எண்ணிக்கை 
18/09/2019 - காலை 09.00 மணி தொடங்கி 
மாலை 03.00 மணிக்குள் முடிக்கப்படவேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும்  பார்வையாளர்களும்... ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்...

மதுரை மாவட்டத்திற்கு 
திரு.யுவராஜ் DE /காரைக்குடி அவர்கள் OBSERVER  பார்வையாளராகவும்...
திரு.பிலாவடியான் SDE/மதுரை  ஒருங்கிணைப்பாளராகவும்...

காரைக்குடி மாவட்டத்திற்கு 
திரு.அப்துல் காதர் AGM/மதுரை  அவர்கள் பார்வையாளராகவும்...
திரு.சண்முகம் SDE/காரைக்குடி  ஒருங்கிணைப்பாளராகவும்...
நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்தலை அமைதியாக எதிர்கொள்வோம்...