Friday 29 January 2021

ஜனவரி 30 

அண்ணல் காந்தி நினைவு தினம்


30/01/1948...

உலகம் உமிழ்ந்தது...

தந்தையைக் கொன்ற

தறிகெட்ட பாரதம்

தலை கவிழ்ந்தது...

கவிழ்ந்த தலை...

இன்னும் நிமிரவில்லை...

இனியும் நிமிராது...

உலகம் உமிழ்ந்து கொண்டே இருக்கட்டும்...

----------------------------------------------------------

உலகிற்கே அகிம்சை ஒளிகாட்டிய

அண்ணல் காந்தி புகழ் பாடுவோம்... 

 GROUP TERM INSURANCE

குழுக்காப்பீட்டுத் திட்டம்

GROUP TERM INSURANCE  எனப்படும் குறிப்பிட்ட காலவரையறைக்கான குழுக்காப்பீடு BSNL அதிகாரிகளுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்தது. அந்த காப்பீட்டுத்திட்டம் ஊழியர்களுக்கும்  விரிவுபடுத்தப்பட வேண்டும் என்று சங்கங்களால் கோரிக்கை எழுப்பப்பட்டது. அதனடிப்படையில் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LICயுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று தற்போது உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. BSNL ஊழியர்கள் அனைவரிடமும் விருப்பம் கேட்கப்பட்டு திட்டம் அமுல்படுத்தப்படும்.

Voluntary Group Term Insurance Scheme for BSNL Employees (Non-Executive)

ஆயுள் காப்பீட்டுத்திட்டம் தனிநபர் விருப்பத்தைப் பொறுத்தது. கட்டாயமில்லை.

ஆயுள் காப்பீட்டுத்தொகை ரூ. 20 லட்சம்

கால அளவு : ஓய்வு பெறும் வயதை அடையும் வரை

Premium தொகை

50 வயதிற்குட்பட்டவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.3776/=

ஒரு மாத Premium ரூ. 315/=

50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆண்டிற்கு ரூ.18172/=

ஒரு மாத Premium ரூ. 1514/=

ஆண்டிற்கு ஒருமுறை சம்பளத்தில் பிடிக்கப்பட்டு 

LIC நிறுவனத்திற்கு Premium தொகை செலுத்தப்படும்.

தோழர்களே...

மேற்கண்ட ஆயுள் காப்பீட்டுத்திட்டம் பணியில் இருக்கும்போது அகால மரணம் அடையும் ஊழியர்களின் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உறுதுணை செய்யும் திட்டமாகும். குறிப்பாக BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஏதுவான திட்டமாகும்.

தற்போது BSNL ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ளது Group Savings Linked Insurance Scheme எனப்படும் GSLIS திட்டமாகும். ரூ.105 மாதம்தோறும் பிடித்தம் செய்யப்படுகின்றது.  இதில் 70 சதம் ஊழியருக்குத் திருப்பித் தரப்படுகின்றது. 30 சதம் திருப்பித் தரப்படமாட்டாது. ஆயுள் காப்பீட்டுத்தொகை ஒரு லட்சம் ஆகும்.   இது மிகவும் குறைவான தொகையாகும். வெறும் ஒரு லட்சம் என்பது எதிர்பாராமல் இறப்பைச் சந்திக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு ஏற்படும் இழப்புக்களை எந்தவிதத்திலும் சரிசெய்யாது. மேலும் விபத்தில் இறப்பைச் சந்திக்கும் ஊழியரின் குடும்பத்திற்கு கூடுதலாக 2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகின்றது. அதிலும் விபத்தைச் சந்தித்தவர் 14 நாட்களுக்குள் மரணத்தைத் தழுவ வேண்டும் என்ற நிபந்தனைகள் வேறு.

எனவே தற்போதைய GSLIS திட்டத்தில்  ஆயுள் காப்பீட்டுத்திட்டத் தொகை ஒரு லட்சத்தில் இருந்து குறைந்தது 5 லட்சமாக உயர்த்தப்பட வேண்டும். தற்போது கூடுதலாக அமுல்படுத்தப்படவுள்ள திட்டத்தின் மற்ற நடைமுறைகள் என்ன என்பது திட்டம் அறிவிக்கப்பட்ட பின்பே தெரியவரும்.  எப்படியாயினும் அகால மரணமடையும் ஊழியரின் குடும்பத்திற்கு 20 லட்சம் ஆயுள் காப்பீடு என்பது உறுதுணையாக இருக்கும்.

Monday 25 January 2021

 மக்களாட்சி எழுவே....


மக்களுக்காக....

மக்களால் நடத்தப்படும்...

மக்களாட்சி எழுகவே.... 

மதம் பிடித்த...

மதங்களாட்சி வீழ்கவே....

மனசாட்சியில்லா ஆட்சி அகலவே... 

--------------------------------------

அனைவருக்கும்

குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

--------------------------------------

குடியரசு தினக் கொடியேற்றம்

26/01/2021 – செவ்வாய் காலை 09.00 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தோழர்களே... வாரீர்...

Friday 22 January 2021

தோழர். ஜீவா... தோழர். முருகன் 

நினைவேந்தல் நிகழ்வு

பொதுவுடைமை இயக்கம்...

கலை இலக்கியப் பெருமன்றம்..

NFTE தொழிற்சங்கம்...

ஒப்பந்த ஊழியர் சங்கம்...

என தன் வாழ்நாள் முழுவதும்...

பொதுவாழ்வில் புடம் போட்டு மெருகேறிய

காரைக்குடியின் கம்பீரமிக்க....

கண்ணியமிக்கத் தலைவராக விளங்கிய

தோழர். சி.முருகன் படத்திறப்பு நிகழ்வு மற்றும்

தோழர். ஜீவா நினைவேந்தல் நிகழ்வில்...

தோழர்களே பங்கு கொள்வீர்....

தியாகத்தலைவர்களின்...

திருநாமம் போற்றுவோம்....

Thursday 21 January 2021

கிளை மாநாடு

N F T E

தொலைத்தொடர்பு ஊழியர்ள் சங்கம்

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை

அமைப்பு விழா மற்றும் கிளை மாநாடு

-----------------------------------------------

26/01/2021 – செவ்வாய் – காலை 09 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

-----------------------------------------------

இணைந்த தேசியக்கொடியேற்றம்  : தோழர்கள்

மாரிமுத்துசேவியர்செய்யது 

-----------------------------------------------

சங்கக்கொடியேற்றம்

தோழர். நா. ஜெகன்

-----------------------------------------------

தலைமை 
தோழர். அ. காதர்பாட்சா - கிளைத்தலைவர்

-----------------------------------------------

வரவேற்புரை

தோழர். ம. ஆரோக்கியதாஸ் – கிளைச்செயலர்

-----------------------------------------------

நடப்பது குடியரசா? முடியரசா?

குடியரசு தின சிறப்புரை

எழுத்தாளர் 

தோழர். சந்திரகாந்தன்

மாநில உதவித்தலைவர்

தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்

-----------------------------------------------

வாழ்த்துரை : தோழர்கள்

ந. நாகேஸ்வரன்

AIBSNLPWA – மாவட்டச்செயலர்

பெ. முருகன்

AIBSNLPWA – மாவட்டத்தலைவர்

க. சுந்தரராஜன்

AIBSNLPWA – கிளைச்செயலர்

க. சுபேதார் அலிகான்

NFTE மாநில அமைப்புச்செயலர்

பா. முருகன்

TMTCLU மாவட்டச்செயலர்

பா. லால்பகதூர்

NFTE & TMTCLU மாவட்டத்தலைவர்

வெ. மாரி

NFTE மாவட்டச்செயலர்

மற்றும் முன்னணித்தோழர்கள்

 -----------------------------------------------

செயல்பாட்டறிக்கை

நிதிநிலையறிக்கை

தலமட்டப்பிரச்சினைகள்

அமைப்பு நிலை

BSNL சேவை

புதிய நிர்வாகிகள் தேர்வு

-----------------------------------------------

நன்றியுரை : தோழர். ஜெயராமன்

-----------------------------------------------

தோழர்களே... வருக... வருக

அன்புடன் அழைக்கும்

சிவகங்கை மற்றும் காரைக்குடி கிளைகள்

Monday 18 January 2021

தமிழ் மாநில செயற்குழு

NFTE

தமிழ் மாநில செயற்குழு

19/01/2020 – செவ்வாய் – காலை 10 மணி

தொலைபேசி நிலையம் - கடலூர்.

Wednesday 13 January 2021

உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

உழுபவனுக்குத் தெருவீதி...

உழைப்பவனுக்கு படுகுழி...

கரம் உயர்த்துபவன் தீவிரவாதி...

கருத்து சொல்பவன் தேசத்துரோகி...

பஞ்சிலே பால்போல் பொங்கும்

பகட்டுப் பொங்கல் அழியட்டும்...

நெஞ்சிலே உணர்வாய்ப் பொங்கும்...

பண்பாட்டுப் பொங்கல் பொங்கட்டும்...

அனைவருக்கும் இனிய

உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்

Monday 11 January 2021

 மாவட்டச்செயற்குழு முடிவுகள்

09/01/2021 அன்று  காரைக்குடியில் NFTE காரைக்குடி  மாவட்டச்சங்க செயற்குழு மாவட்டத்தலைவர் தோழர் லால்பகதூர் அவர்கள் தலைமையில் பணியில் உள்ள தோழர்கள் கலந்து கொண்ட செயற்குழுவாக வெகு சிறப்பாக நடைபெற்றது.

AITUC தலைவர் தோழர் பழ.இராமச்சந்திரன், AIBSNLPWA மாவட்டச்செயலர் தோழர் நாகேஸ்வரன், மாவட்டத்தலைவர் தோழர் முருகன், NFTE மாநில அமைப்புச்செயலர் தோழர். சுபேதார் அலிகான், ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டச்செயலர் தோழர் முருகன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர்.

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஒப்பந்த ஊழியர் அமைப்பு

ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் TMTCLU  பதாகையின்கீழ் AITUCயுடன் இணைந்த அமைப்பாகச் செயல்படும். AITUC தலைவர்களின் பங்களிப்போடு விரைவில் சிறப்பு மாநாடு நடத்தப்படும்.

ஒப்பந்த ஊழியர்கள் சங்க மாவட்டத்தலைவராக சிறப்பாகப் பணியாற்றிய தோழர் முருகன் மறைவு ஒப்பந்த ஊழியர் இயக்கத்திற்கு பெரும் இழப்பு ஆகும்.  ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத்தலைவராகத் தோழர். லால்பகதூர் செயல்படுவார்.

கிளை மாநாடுகள்

விருப்ப ஓய்விற்குப் பின் ஊழியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. எனவே காரைக்குடித் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளை மற்றும் இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளை என இரண்டு கிளைகள் மட்டும் அமைக்கப்படுகின்றன.

சிவகங்கை வருவாய் மாவட்டக்கிளையின் கிளை அமைப்பு மாநாடு 26/01/2021 குடியரசு தினத்தன்று காரைக்குடியில் நடைபெறும்.

இராமநாதபுரம் வருவாய் மாவட்டக்கிளையின் கிளை அமைப்பு மாநாடு 13/02/2021 அன்று  இராமநாதபுரத்தில் நடைபெறும்.

மாவட்ட மாநாடு

காரைக்குடி மாவட்ட மாநாடு 08/03/2021 மகளிர் தினத்தன்று காரைக்குடியில் நடைபெறும்.

போராட்ட அறைகூவல்

மதுரை வணிகப்பகுதி இணைப்பிற்குப் பின் காரைக்குடி மாவட்டம் இரண்டாம் பட்சமாக மதுரைப்பகுதி நிர்வாகத்தால் நடத்தப்படுகின்றது. பல்வேறு ஊழியர் பிரச்சினைகள், விருப்ப ஒய்வில் சென்றவர்களின் பிரச்சினைகள், ஓய்வு பெற்ற ஊழியர்களின் நாள்பட்ட  பிரச்சினைகள், ஒப்பந்த ஊழியர்களின் வேதனை தரும் பிரச்சினைகள், சென்னை, மதுரை கூட்டுறவு சங்கக்கொடுமைகள், சரிந்து வரும் BSNL சேவை என திரும்பும் திசையெல்லாம் பல்வேறு பிரச்சினைகள் தொழிலாளர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்குகின்றன. எனவே பிரச்சினைகளை எடுத்துரைக்கவும், தீர்வு காணவும் கீழ்க்கண்ட போராட்ட அறைகூவலை மாவட்டச்செயற்குழு விடுக்கின்றது.

30/01/2021 அண்ணல் காந்தி நினைவு நாளன்று கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்துக் கிளைகளிலும் ஆர்ப்பாட்டம்.

16/02/2021 அன்று மதுரைப் பொதுமேலாளர் அலுவலகம் முன்பு தர்ணா.

நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் கலந்து கொள்வார்கள்.

தேங்கிக்கிடக்கும் பிரச்சினைகள் பற்றி விரிவான செய்திகள் தொடர்ந்து வெளியிடப்படும்.

 தமிழ் மாநிலச்செயற்குழு

 கொரோனாப் பெருந்தொற்று இன்னும் தீராத நிலையில் மாவட்டச்செயலர்கள் மற்றும் மாநிலச்சங்க நிர்வாகிகள் மட்டும் அழைக்கப்பட்டுள்ளனர்.  ஆர்வக்கோளாறில் மற்ற தோழர்கள் கலந்து கொள்ள நினைப்பதைத்  தவிர்க்கவும்.

Tuesday 5 January 2021

 நினைவெல்லாம் நீங்களே....

 
06/01/2021

அன்புத்தலைவன் சவுக்கத்...

அருமைத்தோழர் குப்தா...

நினைவு தினம்

=============

தொண்டால் பொழுதளந்து...

தொண்டர்களை சிகரமேற்றிய...

தூய தலைவன் குப்தா...

தொண்டனாய் பொழுதளந்து...

தலைவர்களை சிரமேற்றிய...

தூய தொண்டன் சவுக்கத்...

கொடியில் ஒன்றாய்...

கொள்கையில் ஒன்றாய்...

நினைவு நாளும் ஒன்றாய்...

நீக்கமற நெஞ்சம் நிறைந்த

உத்தமத் தலைவர்கள்...

தியாகங்கள் போற்றுவோம்...

மாறா நினைவுகள் போற்றுவோம்...

 =====================================

நினைவேந்தல் கூட்டம்

06/01/2021 – புதன்கிழமை – காலை 11 மணி

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்.

 =====================================

கூட்டுத்தலைமை 

தோழர். C. இராமமூர்த்தி 

கிளைச்செயலர் AIBSNLPWA

தோழர். R.  இராமமூர்த்தி 

கிளைச்செயலர் NFTE

முன்னணித்தோழர்கள்... 

தலைவர்கள் பங்கேற்பு...

தோழர்களே... வாரீர்...

Monday 4 January 2021

 ஒப்பந்த ஊழியர் சரிபார்ப்பு அட்டவணை

தமிழகத்தில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை கீழ்க்கண்ட அட்டவணைப்படி  நேரடியாக ஆய்வு செய்து சரிபார்ப்பு நடத்திட 

DY. CLC சென்னை துணை தொழிலாளர் ஆணையர் உத்திரவிட்டுள்ளார்.     

1. கோவை

287 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – D. சகிராபானு, SDE(OP)

தொழிலாளர் அதிகாரி – திரு. இளையராஜா LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : சாய்பாபா காலனி, கோவை.

சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021 07/01/2021 மற்றும் 08/01/2021 

2. குன்னூர்

136 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – R. ராமசாமி, DE

தொழிலாளர் அதிகாரி – திரு. இளையராஜா LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : GM அலுவலகம், குன்னூர்

சரிபார்ப்பு தினங்கள் : 09/01/2021 மற்றும் 10/01/2021 

3. ஈரோடு

376 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – N. குணாளன், AGM

தொழிலாளர் அதிகாரி – திரு. இளையராஜா LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : GM அலுவலகம், ஈரோடு

சரிபார்ப்பு தினங்கள் : 11/01/2021, 12/01/2021 மற்றும் 13/01/2021 

4. நெல்லை

267 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – திரு. விஜயகுமார், SDE

தொழிலாளர் அதிகாரி – திரு. இளையராஜா LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : GM அலுவலகம், நெல்லை.

சரிபார்ப்பு தினங்கள் : 18/01/2021, 19/01/2021 மற்றும் 20/01/2021 

5. புதுச்சேரி

156 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – A. திருமுருகன், SDE

தொழிலாளர் அதிகாரி – திரு. பாரிவள்ளல், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : MKM தொலைபேசி நிலையம், புதுவை

சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021

6. கடலூர்

250 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – S. கிருஷ்ணகுமார், JTO

தொழிலாளர் அதிகாரி – திரு. பாரிவள்ளல், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : தொலைபேசி நிலையம், கடலூர்

சரிபார்ப்பு தினங்கள் : 07/01/2021, 08/01/2021 மற்றும் 09/01/2021 

7.  தஞ்சை

438 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – S. வினோத், JTO

தொழிலாளர் அதிகாரி – திரு. பாரிவள்ளல், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : GM அலுவலகம், தஞ்சை

சரிபார்ப்பு தினங்கள் : 11/01/2021, 12/01/2021 மற்றும் 13/01/2021 

8. குடந்தை

241 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – T. சிவசங்கரன், AGM

தொழிலாளர் அதிகாரி – திரு. பாரிவள்ளல், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : தொலைபேசி நிலையம், குடந்தை

சரிபார்ப்பு தினங்கள் : 18/01/2021 மற்றும் 19/01/2021 

9. விருதுநகர்

188 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – S. கேசவன், JTO

தொழிலாளர் அதிகாரி – திரு. பாரிவள்ளல், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : தொலைபேசி நிலையம், விருதுநகர்.

சரிபார்ப்பு தினங்கள் : 21/01/2021 மற்றும் 22/01/2021 

10.  மதுரை

480 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – திரு. D. துரைச்சாமி, AGM

தொழிலாளர் அதிகாரி – திரு.  இராமகிருஷ்ண புயன், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : PGM அலுவலகம், மதுரை

சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021, 07/01/2021,08/01/2021 மற்றும் 09/01/2021 

11.  காரைக்குடி

329 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – திரு. K. சரவணன், DE

தொழிலாளர் அதிகாரி – திரு.  இராமகிருஷ்ண புயன், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : GM அலுவலகம், காரைக்குடி

சரிபார்ப்பு தினங்கள் : 11/01/2021, 12/01/2021 மற்றும் 13/01/2021 

12.  நாகர்கோவில்

297 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – திரு. Antonette Chrishanti, SDE

தொழிலாளர் அதிகாரி – திரு.  இராமகிருஷ்ண புயன், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : 

தொலைபேசி நிலையம், நாகர்கோவில்

சரிபார்ப்பு தினங்கள் : 18/01/2021, 19/01/2021 மற்றும் 20/01/2021 

13.   திருச்சி

495 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – N. பாலசுப்பிரமணியன், AGM

தொழிலாளர் அதிகாரி – திரு. இராமானந்த யாதவ், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : PGM அலுவலகம், திருச்சி.

சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021, 07/01/2021,08/01/2021 மற்றும் 09/01/2021 

14.   தூத்துக்குடி

260 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – திரு. E. JUNO, JTO

தொழிலாளர் அதிகாரி – திரு. இராமானந்த யாதவ், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : GM அலுவலகம், தூத்துக்குடி

சரிபார்ப்பு தினங்கள் : 11/01/2021, 12/01/2021 மற்றும் 13/01/2021 

15.   வேலூர்

197 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி –திரு. சீனிவாசுலு, SDE

தொழிலாளர் அதிகாரி – திரு. சங்கரராவ், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : PGM அலுவலகம், வேலூர்

சரிபார்ப்பு தினங்கள் : 06/01/2021  மற்றும் 07/01/2021 

16.   சேலம்

398 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – திரு. ரூபன் விஜயசிங், AGM

தொழிலாளர் அதிகாரி – திரு. சங்கரராவ், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : DGM PLANNING அலுவலகம், சேலம்

சரிபார்ப்பு தினங்கள் : 18/01/2021, 19/01/2021 மற்றும் 20/01/2021 

17.   தருமபுரி

372 ஒப்பந்த ஊழியர்கள்

BSNL அதிகாரி – சங்கீதா, SDE

தொழிலாளர் அதிகாரி – திரு. சங்கரராவ், LEO

சரிபார்ப்பு நடக்கும் இடம் : GM அலுவலகம், தருமபுரி.

சரிபார்ப்பு தினங்கள் : 21/01/2021, 22/01/2021 மற்றும் 23/01/2021

-------------------------------------------------

மொத்தம் தமிழகத்தில் 5167 ஒப்பந்த ஊழியர்கள்.

17 மையங்களில் சரிபார்ப்பு நடைபெறுகிறது.

அந்தந்த மாவட்ட வாரியான ஒப்பந்த ஊழியர்கள் பட்டியல்

BSNL நிர்வாகத்தால் வெளியிடப்படும்.

ஒப்பந்த ஊழியர்கள் ஆதார் கார்டு மற்றும் வங்கி சேமிப்புக்கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் அசல் – ORIGINAL பிரதிகளோடும், கையொப்பமிட்ட ஒரு நகல் பிரதியோடும் வரவேண்டும்.

சரிபார்ப்பின்போது தொழிலாளர் அதிகாரி, மற்றும் நியமனம் செய்யப்பட்ட BSNL அதிகாரி, குத்தகைக்காரரின் பிரதிநிதி மற்றும் TMTCLU & TNTCWU ஒப்பந்த ஊழியர் சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள். 

தீபாவளி சமயத்தில் நடந்த பட்டுவாடா முழுமையான முறையில் நடைபெறவில்லை. எனவே உரிய முறையில் நீதிமன்றத்தில் வழக்கை எடுத்துரைத்து சரியான சரிபார்ப்பிற்கு உத்திரவிட பெரும் முயற்சி எடுத்த நமது TMTCLU வழக்கறிஞர் அருமைத்தோழர் N.K.சீனுவாசன் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகள் பல.

ஒப்பந்த ஊழியர்கள் தவறாமல் இந்த சரிபார்ப்பில் கலந்து கொள்ள வேண்டும். இதனைத் தவறவிட்டால் வேறேதும் வாய்ப்பில்லை...

Saturday 2 January 2021

 RULE  32 CCS ஓய்வூதிய விதிகள் 1972

RULE  32 CCS ஓய்வூதிய விதிகள் 1972

மேற்கண்ட ஓய்வூதிய விதியின்படி

மத்திய அரசுப்பணியில் 25 ஆண்டுகள் சேவை முடித்த அல்லது ஓய்வு பெறுவதற்கு இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே சேவை உள்ள ஊழியர்களின் சேவைக்காலம் சரிபார்க்கப்பட்டு அவர்களுக்கு FORM 24 என்னும் படிவத்தில் அவர்களது சேவைக்காலம் பற்றிய குறிப்பு தெரிவிக்கப்பட வேண்டும். பல இடங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படாமல் இருந்தது.

தற்போது BSNLலில் 58 வயதைக் கடந்த ஊழியர்களின் சேவைக்குறிப்பேட்டை ஆய்வு செய்து அவர்களின் சேவைக்காலம் மற்றும் சம்பள நிர்ணயங்களை சரிபார்த்திடக்கோரி DOT கடிதம் அனுப்பியுள்ளது. சம்பந்தப்பட்ட CCA அலுவலகங்கள் 3 மாத காலத்திற்குள் மேற்கண்ட பணியினை செய்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட கடிதத்தைப் படித்த பலருக்கு 58 வயதுக்கு மேலே உள்ளவர்களை வீட்டுக்கு அனுப்ப உள்ளனர் என்ற வழக்கமான பயம் என்னும் வியாதி வந்து போவதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.