Friday, 30 October 2015

NFTE  
மத்திய செயற்குழு 

நவம்பர் 1 முதல் 3 வரை 
அவுரங்காபாத் - மகராஷ்டிரா 

- : ஆய்படு பொருள் :-
  • அமைப்பு நிலை 
  • ஊழியர் பிரச்சினைகள் 
  • DELOITTE  குழு பரிந்துரை 
  • BSNL  புத்தாக்கம் 
  • MTNL - BSNL  இணைப்பு 
  • செல் கோபுரங்கள் தனி நிறுவனம் 
  • போனஸ் 
  • மற்றும் ஏனைய பிரச்சினைகள்
------------------------------------------------------------------------------------------------
காரைக்குடி மாவட்டத்திலிருந்து  
தோழர்கள். பா .லால் பகதூர் மற்றும் வெ.மாரி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ERP  அமுலாக்கத்திற்குப் பின் 
ஓய்வு பெற்ற தோழர்களுக்கும், 
மரணமுற்ற தோழர்களுக்கும் 
விடுப்புச்சம்பளம்  - LEAVE ENCASHMENT 
வழங்குவதில் மிகுந்த தாமதம் நிலவியது.  

JCM தேசியக்குழுவில் இப்பிரச்சினை விவாதிக்கப்பட்டது. 
அதனடிப்படையில் அக்டோபர் 2015ல்  இருந்து
ஊழியர்கள் ஓய்வு பெறும் மாதமே விடுப்புச்சம்பளத்தை வழங்க வேண்டும் என CORPORATE  அலுவலகம் உத்திரவிட்டிருந்தது.

இம்மாதம் ஓய்வு பெற்ற தோழர்களுக்கும், 
மரணமுற்ற ஊழியர்களின் வாரிசுகளுக்கும் 
விடுப்புச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில சங்கங்களுக்கும் 
மத்திய மாநில நிர்வாகங்களுக்கும் 
நமது நன்றி உரித்தாகுக.

என்னதான் உத்திரவுகள் மேலிருந்து இடப்பட்டாலும்... 
அதை நடைமுறைப்படுத்துவது தலமட்ட அதிகாரிகள்தான்.
அந்த வகையில்...
கடமை உணர்வோடு செயல்பட்டு
விடுப்புச்சம்பளம் இம்மாதமே கிடைப்பதற்கு பணி செய்த 
கணக்கு அதிகாரி அன்புத்தோழர்.சொக்கலிங்கம்  
அவர்களுக்கும் நமது நன்றிகள் பல...
---------------------------------------------------------------------------------------------------------------------

தோழர்களே...
இணைய தளத்தில்...
ஊழியர்களின் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவது.. 
துயர் தீருவதற்கேயல்லால் ...
பெயர்  வாங்குவதற்கு அல்ல...

துயரங்களையும், தவறுகளையும்  சுட்டிக்காட்டுபவன்.. 
பேர் என்றும் ரிப்பேர்  என்பது  நாமறிந்ததே...

Thursday, 29 October 2015

பணி நிறைவு  வாழ்த்துக்கள் 

31/10/2015 
பணி நிறைவு பெறும் 
அடக்கமும்  அமைதியும் மிக்க 
கடமையில் கருத்தூன்றிய 
அருமைத்தோழர். 
R.வெங்கட்ராமன் 
STS- இராமநாதபுரம் 

ஆற்றலும் அன்பும் மிக்க 
அன்புத்தோழர்.
A.இரத்தினம் 
TM/சிங்கம்புணரி 
ஆகியோரின் 
பணி நிறைவுக்காலம் 
சிறப்புடன் விளங்க 
வாழ்த்துகின்றோம்.
மத்திய சங்க கடிதங்கள் 

நமது மத்திய சங்கம் 
கீழ்க்கண்ட பிரச்சினைகளை வலியுறுத்தி 
BSNL  நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளது.


  • இந்த ஆண்டு வருமானம் 800 கோடி உயர்ந்துள்ளதால் BSNL   ஊழியர்களுக்கு உடனடியாக போனஸ் வழங்க வேண்டும்.
  • BSNLலில் பணியமர்த்தப்பட்ட நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள் அளிப்பதற்கான கொள்கை உடனடியாக வகுக்கப்பட வேண்டும்.
  • TTA  மற்றும் TELECOM MECHANIC  தோழர்களுக்கு புதிய தொழில் நுட்பத்தில் பயிற்சி அளிக்க வேண்டும். அதிகாரிகள் தாய்லாந்து சென்று பயிற்சி எடுத்து வருவது போல் ஊழியர்களுக்கு தாய்நாட்டில் பயிற்சி அளிக்க வேண்டும்.
  • 78.2 சத  IDA  அடிப்படைச் சம்பளத்தின் அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கப்பட வேண்டும்.
  • DELOITTEE குழு அமுலாக்கத்தின் போது உபரியாகும் ஊழியர்களை அந்தந்த மாவட்டங்களிலேயே விற்பனைப்பிரிவு போன்ற பகுதிகளில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
மருத்துவக் கொள்கை  மறுபரிசீலனைக்குழு 

தற்போதுள்ள மருத்துவ திட்டத்தை 
மறுபரிசீலனை செய்வதற்காக
 குழு ஓன்று அமைக்கப்பட வேண்டும் என்பது
  JCM  தேசியக்குழு கோரிக்கை.  

அதன் அடிப்படையில் 
NFTE மற்றும் BSNLEU  சங்கங்களிடம் 
BSNL  நிர்வாகம் ஆலோசனைகளைக் கேட்டுள்ளது. 

மேலும் சங்கத்திற்கு ஒருவர் வீதம் 
குழு உறுப்பினரை நியமனம் செய்யவும் 
நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

மரித்துக்கொண்டிருக்கும் மருத்துவ திட்டம் 
மறுவாழ்வு பெற்றால் நமக்கு மகிழ்ச்சிதான்.

Wednesday, 28 October 2015

வேதாளமும்..விக்கிரமாதித்தனும் 

கேள்விகளும்... பதில்களும்...
  
 தங்கள் நிர்வாகத்தில் உள்ள காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டத்தில் குத்தகை அடிப்படையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்கின்றார்களா? 
                                                YES 
  ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய பண்டிகை விடுப்பு வழங்கப்படுகின்றதா? மாதம் ஒரு நாள் சிறுவிடுப்பு வழங்கப்படுகின்றதா? ஆண்டிற்கு ஒரு முறை ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகின்றதா? மறுக்கப்படுகிறதெனில் ஏன்? எதற்காக?

  NO 

 ஒப்பந்த ஊழியர்களிடமிருந்து அவர்கள் பங்காக EPF பிடித்தம் செய்யப்படுகிறதா? 
YES 

 ஒப்பந்த ஊழியர்களுக்கு EPF என்னும் வைப்புநிதி பங்களிப்பு செய்யப்படுகிறதா? 
  NO

 EPF குத்தகைக்காரர்கள் மூலம் கட்டப்பட்டால் அது தங்களால்  உறுதிப்படுத்தப்படுகிறதா? 
YES  

   UAN  எனப்படும் UNIVERSAL ACCOUNT NUMBER வழங்கப்பட்டுள்ளதா? 

   NO
  
   ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுகின்றதா? அவ்வாறெனில் எவ்வளவு தொகை வழங்கப்படுகிறது? இல்லையெனில் ஏன்?

   Instructions have been issued to the contractors.

  ஒப்பந்த ஊழியர்களுக்கு அடையாள அட்டை  வழங்கப்படுகின்றதா? ESI என்னும் மருத்துவஅட்டை வழங்கப்படுகின்றதா? இல்லையெனில் ஏன்?


Instructions have been issued to the contractors.

 குத்தகைக்காரர்கள் EPF கட்டவில்லையெனில் தங்கள் அலுவலகம் எடுத்த நடவடிக்கை என்ன? EPF கட்டாத குத்தகைக்காரர்களிடமிருந்து அதற்கீடான காப்புத்தொகை பிடித்தம் செய்யப்பட்டுள்ளதா? அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்டிருந்தால் எந்த எந்த குத்தகைக்காரர்களிடமிருந்து எவ்வளவு தொகை எந்த காலங்களுக்குப் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது? பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை சம்பந்தப்பட்ட ஊழியர்கள் கணக்கில் வரவு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இல்லையெனில் ஏன்?


    Information is exempted from disclosure under RTI Section 8(1)(e)

   ஒப்பந்த ஊழியர்கள் யாரேனும் உயிரிழந்துள்ளார்களா? 


Yes.  Shri.Arockiasamy Labour of Assistance to Infra mtce contract.

  இறந்தவர் குடும்பத்தினருக்கு EPF தொகை, ஆயுள் காப்பீட்டுத்தொகை மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட்டுள்ளதா?

The information is not available.

   ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் மாவட்ட ஆட்சியர் நிர்ணயத்த கூலியின்படி வழங்கப்படுகின்றதா? அல்லது மத்திய அரசு நிர்ணயித்த கூலியின் பேரில் வழங்கப்படுகின்றதா? அந்த சம்பளம்  எந்த தேதியில் வழங்கப்படுகின்றது? அந்த சம்பளம் மாதச்சம்பளமாக வழங்கப்படுகின்றதா? தினச்சம்பளமாக வழங்கப்படுகின்றதா? மாதச்சம்பளமெனில் அவர்களுக்கு சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு இதுவரை வழங்கப்பட்டதா? வார விடுப்பு மறுக்கப்படுகிறதெனில் எதனால் மறுக்கப்படுகிறது?

       a.    Minimum wages is being paid as per Ministry of labour and        
            employment Notification.

     b.    Payment is made on monthly basis and weekly off is being given.

     c.     Minimum Rate of wages includes also the wages for 
         weekly days of rest.

தோழர்களே...

மேலே நீங்கள் படித்தது 
வேதாளம் விக்ரமாதித்தன் கேள்வி பதில் அல்ல...
வேதனையில் உழலும்.. 
ஒப்பந்த ஊழியர்கள் சம்பந்தமாக..
தகவல் அறியும் சட்டத்தில்..
நாம் கேட்ட கேள்விகளும்.. 
நிர்வாகத்தின் பதில்களும்...

விக்கிரமாதித்தர்கள் என்றோ மறைந்து விட்டார்கள்...
பிணந்தின்னும்... வேதாளங்களோ..
இன்னும் இங்கே உலவுகின்றன...
இந்த உண்மையைத்தான்...
மேலே நீங்கள் படிக்கும் பதில்கள் உரைக்கும்...

மத்திய  நிர்வாகமும்..
மாநில நிர்வாகங்களும்..
என்னதான் உத்திரவு மேல் உத்திரவு இட்டாலும்...
தொழிற்சங்கங்கள் தொண்டை கிழியக் கத்தினாலும்..
தலமட்ட அதிகாரிகள்   திருந்தாதவரை...
ஈரத்தை நெஞ்சில் இருத்தாதவரை..
காரியங்கள் எதுவும் நடக்கப் போவதில்லை..
கடைமட்ட ஊழியர்கள் கடைத்தேறப் போவதில்லை..
ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வு மலரப் போவதில்லை...

Tuesday, 27 October 2015

ஓய்வூதியர்களின் மருத்துவ பில்கள் 

ஓய்வு பெற்ற தோழர்களின் மருத்துவ பில்கள் 
மிகுந்த தாமத்திற்குப் பின்பு பட்டுவாடா செய்யப்பட்டு வந்தது. 
எனவே பாதிக்கப்பட்ட தோழர்கள் தங்களது குறைகளை 
மத்திய அரசின்  கவனத்திற்கு  பொதுமக்கள் குறைதீர்க்கும் 
இணையம் மூலமாக கொண்டு சென்றனர். 

அதனையொட்டி நமது BSNL CORPORATE  அலுவலகம் 
ஓய்வு பெற்ற ஊழியர்களின் மருத்துவ பில்களை 
ஒரு மாத காலத்திற்குள் பட்டுவாடா செய்ய வேண்டும் என 
மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது. 

ஓய்வு பெற்ற  ஊழியர்களும் 
ஒப்பந்த ஊழியர்களும் 
தங்களது குறைகளை,  துயரங்களை 
www.pgportal.gov.in 
என்ற இணையதள முகவரி மூலம் 
மத்திய அரசிற்குத் தெரியப்படுத்தலாம்.

Monday, 26 October 2015

இலஞ்ச  ஒழிப்பு - விழிப்பு வாரம் 
அக்டோபர் 26 - 31 

நாடு முழுக்க அக்டோபர் 26 முதல் 31 வரை
 இலஞ்ச ஒழிப்பு விழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. 

இலஞ்ச ஒழிப்புக்கு எதிராக 
நெஞ்சுக்கு நேரே கையை நீட்டி 
உறுதிமொழி எடுத்த சில நிமிடங்களில்..
மேஜைக்கு கீழே கையை நீட்டி 
கூச்ச நாச்சமின்றி 
இலஞ்சம் வாங்கிய கொடுமை
 தமிழகத்தில்  அரங்கேறியுள்ளது.

கடலூரில் மாவட்டத்தில் 
துணை ஆட்சியராகப் பணிபுரியும் தாஸ் என்ற
 நேர்மைத்திறமற்ற ஒரு மனித உருவம்..

தமது அலுவலகத்தில் 
இலஞ்ச ஒழிப்புக்கு எதிராக 
உறுதி மொழி எடுத்த சில நிமிடங்களில் 
முத்திரைத்தாள் மதிப்பைக் 
குறைத்து மதிப்பிடுவதற்காக 
ரூ.11,500/= லஞ்சம் வாங்கிய செய்தி 
பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ளது. 

நேர்மையாக இருப்போம் என்ற 
உறுதியும்... உறுதிமொழியும்...   
உள்ளத்தில் இருக்க வேண்டும்.

கள்ள மனம் கொண்டவர்கள் 
இலஞ்சம் வாங்க மாட்டேன் என்று 
உறுதிமொழிக்கு பின்பாட்டு  பாடி விட்டு..
பின் இலஞ்சத்திற்கு வாய்ப்பாட்டு   
பாடுவது வேதனைக்குரிய செயல்.

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் 
திருட்டை ஒழிக்க முடியாது 
என பட்டுக்கோட்டை பாடினான்...

திருடர்களாகப்  பார்த்து திருந்தாதவரை 
VIGILANCE  AWARENESS WEEK  என்பது 
இந்த தேசத்தில்...
VIGILANCE AWARENESS WEAK 
ஆகவே இருக்கும்..

Sunday, 25 October 2015

GPF  விண்ணப்பங்களுக்கு  இன்னும் மாவட்ட அளவில் பட்டுவாடாவிற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை. ஒரு வேளை இன்று 26/10/2015 ஒப்புதல் அளிக்கப்பட்டால் நாளையோ மறுதினமோ அல்லது சம்பளத்துடனோ பட்டுவாடா நடக்க வாய்ப்புள்ளது.
===============================================================
TM பயிற்சி முடித்து பதவிகள் இல்லாத காரணத்தால் இன்னும் TM பதவி உயர்வு பெறாத தோழர்களை பதவி உயர்வு,இறப்பு மற்றும் பணி ஓய்வு ஆகியவற்றால் காலியாகும் இடங்களில் பணியமர்த்தவும், அருகாமையில் உள்ள மாவட்டங்களில் சென்று TM ஆகப்பணி புரிய அவர்களின் சம்மதங்களை கேட்கவும்  CORPORATE அலுவலகம் மாநில நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. 
===============================================================
ஓய்வூதியம் பெறும் தோழர்கள் ஒவ்வொரு நவம்பர் மாதமும் தாங்கள் உயிரோடு இருப்பதாக உயிர்ச்சான்றிதழ் LIFE CERTIFICATE வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற தோழர்கள் வேறு இடங்களில் வசித்து வந்தால் அந்தந்த இடங்களில் உள்ள வங்கிக்கிளைகளில் தங்களது LIFE CERTIFICATEஐ வழங்கி ஒப்புகை பெற்றுக்கொள்ளலாம் என நிதி அமைச்சகம் உத்திரவிட்டுள்ளது.
===============================================================
LEASED LINE மற்றும் CIRCUIT பழுதுகளை உடனுக்குடன் நீக்குமாறும் இதனால் ஏற்படும்  வருமான இழப்பை தடுத்து நிறுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநில நிர்வாகங்களை CORPORATE அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.
===============================================================
JTO இலாக்காத்தேர்வு மற்றும் நேரடித்தேர்வுகள்  OUTSIDERS விரைவில் நடத்தப்படும்.  தேர்வுகள் நடத்துவதற்கான பணிகள் விரைந்து நடந்து வருகின்றன.
===============================================================
BSNL மருத்துவ திட்டத்தை மறு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக சங்கங்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
===============================================================
நாலுகட்டப்பதவி  உயர்வில் உள்ள குளறுபடிகளை நீக்கக்கோரி BSNLEU சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. குறிப்பாக இலாக்காத் தேர்வு மூலம் அடைந்த பதவி உயர்வை நாலுகட்டப்பதவி உயர்வில் ஒன்றாக கருதக்கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இப்போதாவது நாலுகட்டப்பதவி உயர்வில் உள்ள குளறுபடிகள் புரிந்ததே....
===============================================================

Thursday, 22 October 2015

கனவுகள்  + கற்பனைகள்  = காகிதங்கள் 

அக்டோபர் மாதம்... 
நமது மண்ணின் மைந்தர் 
கவிஞர்  சிவகங்கை மீரா பிறந்த மாதம்...
அவரது.. 
கனவுகள்  + கற்பனைகள்  = காகிதங்கள் 
அந்தக்காலத்து காதலர்களின் வேதப்புத்தகம்..

காதலர்களுக்கு பொருந்திய  தலைப்பு..
தோழர்களுக்கும் இன்று பொருந்தி வருகிறது...
இதில் வருந்தி என்ன செய்வது?...

  • தீபாவளி விடுமுறை 10/11/2015க்கு மாற்றப்பட்டுள்ளது.
  • மிலாடி நபி விடுமுறை 23/12/2015க்கு மாற்றப்பட்டுள்ளது..
  • அக்டோபர் 2015 முதல் பணி  நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் அந்த மாதமே வழங்கப்பட வேண்டும் என CORPORATE  அலுவலகம் உத்திரவிட்டுள்ளது.
  • மனிதவள இயக்குநராகப் பணிபுரியும் திருமதி.சுஜாதாராய்  காலியாக உள்ள  DIRECTOR FINANCE  இயக்குநர் நிதிப் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.
  • ஒரு மாத போனஸ் உச்சவரம்பான ரூ.3500/-ஐ ரூ.7000/-மாக உயர்த்துவதற்கும், போனஸ் பெறுவதற்கான மாத ஊதியத்தை ரூ.10,000/-லிருந்து ரூ.21,000/-மாக  உயர்த்துவதற்கும்  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது மிக நீண்ட நாள் பிரச்சினையாகும். நமது செப்டம்பர் 2 வேலை நிறுத்தக் கோரிக்கைகளுள் ஒன்றாகும்.
  • 5வது தமிழ் மாநில மாநாட்டிற்கான வரவேற்புக்குழு வேலூர் தோழர்களால் அமைக்கப்பட்டுள்ளது.
  • பத்தாண்டுகளாக JTO பதவியில் தற்காலிகமாகப் பதவி வகிக்கும் TTA தோழர்களுக்கு மீண்டும் பயிற்சி என்பது தேவையற்றது என தமிழ் மாநிலச்சங்கம் மாநில நிர்வாகத்திடம் வலியுறுத்தியுள்ளது.
  • RELIANCE , AIRCEL மற்றும் MTS தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ஒரே நிறுவனமாக இணைவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவ்வாறு இணைப்பு ஏற்பட்டால் தொலைத்தொடர்பில் மூன்றாவது பெரிய நிறுவனமாக புதிய நிறுவனம் அமையும்.
AIBSNLPWA 
78.2 -  ஆர்ப்பாட்டம் 

அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் 
பேணித் தமராக் கொளல்...

மூத்தவர்களைப்  பேணுதல்.. 
அவர்களது தேவைகளை நிறைவேற்றுதல் 
அவர்களைத் தன் வசப்படுத்துதல்..
ஆகிய செயல்கள் ..
அரிய செயல்களுள் அரியது.. 
என்றார் வள்ளுவர்..

ஆனால் BSNLலில்..
மூத்த குடிமக்களின் 
நீண்ட நாள் கோரிக்கையான 
78.2 சத IDA  இணைப்பு 
28 மாதங்கள் ஆகியும் 
இன்னும் அமுல்படுத்தப்படவில்லை...

விளக்கங்கள் கேட்டே 
காலங்கள்  வீணாக்கப்படுகிறது...
மூன்று அமைச்சகங்கள் 
ஒப்புதல் அளித்த பின்னும் 
நிதி அமைச்சகம் ஒப்புதல் அளிக்கவில்லை..
நிதி அமைச்சகம் 
DOTயிடம் கேட்கப்பட்ட   சில கேள்விகளுக்கு 
விளக்கங்கள் இன்னும் கொடுக்கப்படவில்லை..

எனவே இந்த கால தாமத்தைக் கண்டித்து 
 78.2 சத IDA  இணைப்பை 
உடனடியாக அமுல்படுத்தக்கோரி 
AIBSNLPWA   - அகில இந்திய ஓய்வூதியர்கள் சங்கம் 


நவம்பர் 5 அன்று 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

நடத்த அறைகூவல் விடுத்துள்ளது.
நமது மூத்தோர்களுக்கு 
நம் ஆதரவை நல்கிடுவோம்...

காற்றுள்ள போதே...தூற்றிக்கொள் என்பது பழமொழி..
நமது ஓய்வு பெற்ற மூத்த தோழர்களின் 
நீண்ட நாள் கோரிக்கையான 78.2சத இணைப்பு ..
அவர்களின்  மூச்சுக்காற்று உள்ளபோதே..
நிறைவேறிட வேண்டும்...
மத்திய அரசு நிறைவேற்றிட வேண்டும்..
இதுவே நமது எதிர்பார்ப்பு...

அஞ்சல் பாலுவிற்கு 
அஞ்சலி... 

NFPE - P 3 அஞ்சல் மூன்றின் 
முன்னாள் மாநிலச்செயலர் 
அருமைத்தோழர். 
N . பாலசுப்பிரமணியன் 
அவர்கள் உடல்நலக்குறைவால் 
20/10/2015 அன்று 
இயற்கை எய்தினார்.

19 ஆண்டுகள் மாநிலச்செயலராக 
திறம்பட செயல்பட்டவர். 
NFTE சங்கத்துடன் மிகுந்த 
தோழமை கொண்டவர்.
அவரது மறைவிற்கு 
நமது அஞ்சலி உரித்தாகுக....

Monday, 19 October 2015

N F T E  
தமிழ் மாநில மாநாடு 
வரவேற்புக்குழு அமைப்புக்கூட்டம் 
20/10/2015 - செவ்வாய் - வேலூர் 

-: பங்கேற்பு :-

தோழர். பட்டாபிராமன் -  மாநிலச்செயலர் 
தோழர். காமராஜ் - அகில இந்திய அழைப்பாளர் 
தோழர்.லட்சம் - மாநிலத்தலைவர் 

மற்றும் மாவட்டச்செயலர்கள்...
போனஸ்... தர்ணா 

அக்டோபர் 19 அன்று காரைக்குடியில் 
அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் 
போனஸ் கோரி தர்ணா நடைபெற்றது.

கூட்டமைப்பின் தலைவர் 
தோழர்.வெ.மாரி NFTE தலைமையேற்க 

கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்
 தோழர்.மகாலிங்கம் BSNLEU  சிறப்புரையாற்றினார்.

தோழர். பூமிநாதன்  BSNLEU 
தோழர்.முருகன்  NFTE 
தோழர்.மோகன்தாஸ்  AIBSNLEA
தோழர்.சண்முகம் SNEA 
தோழர்.சிவகுமார்  FNTO 
ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தோழர்.நாகராஜன் நன்றியுரைத்தார்.

குறைந்த பட்ச போனஸ் 
என்ற நமது கோரிக்கை போலவே 
ஊழியர்களின் உணர்வு நிலையும்..  எண்ணிக்கையும்.. 
குறைந்த பட்ச நிலையிலேயே இருந்தது...

Saturday, 17 October 2015

அக்டோபர்  - 17
கவிஞர். கண்ணதாசன்  நினைவு நாள்  

நதியில் விளையாடி... 
கொடியில் தலை சீவி... 
நடந்த இளந்தென்றலே...

காலத்தால் அழியாத 
காவியப்பாடல்கள் தந்த 
கண்ணதாசன்  நினைவு நாளன்று 
முனைவர். பழனி இராகுலதாசன் தலைமையில் 
காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் 
கவியரசு  கண்ணதாசன்  சிலைக்கு 
தோழர்கள்  மலர் மாலை சூட்டி 
அஞ்சலி செலுத்திய காட்சி...

Friday, 16 October 2015

JCM தேசியக்குழு கூட்ட முடிவுகள் 

JCM தேசியக்குழு 16/10/2015 அன்று டெல்லியில்
 மனிதவள இயக்குநர் திருமதி.சுஜாதா ராய் 
அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

1.  மின்விபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்தவர்களின்   குடும்பங்களுக்கு கருணை அடிப்படை பணிகளில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தப்பட்டது. மேலும் தற்போதுள்ள அளவுகோல்களைத் தளர்த்தவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. நிர்வாகம் சாதகமாக பரிசீலிக்க ஒத்துக்கொண்டுள்ளது.

2. 01/01/2007 முதல் 07/05/2010 வரை பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு TTA  தோழர்களுக்கு வழங்கப்பட்டது போலவே ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கும் முடிவு பரிசீலிக்கப்படும்.

3. அகன்ற அலைவரிசை பழுது நீக்கும் பணி சோதனை அடிப்படையில் சில குறிப்பிட்ட நகரங்களில் தனியாருக்குத்  தாரை வார்க்கப்படும்.

4. 78.2 சத IDA இணைப்பில் 01/01/2007 முதல் நிலுவை வழங்குவது பற்றி மீண்டும் நினைவூட்டல் கடிதம் DOTக்கு  அனுப்பப்படும்.

5.CASUAL ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்குவது  பற்றி 
BSNL வாரியக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

6. ஊழியர்களின்  வாடகை இல்லா குடியிருப்புத்தொலைபேசியில் 
இரவுநேர இலவசங்களை  அளிப்பது பற்றி பரிசீலிக்கப்படும்.

7. TTA ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் பற்றி  ஊழியர் தரப்பு இரண்டு    வாரங்களுக்குள் தங்களது கருத்துக்களை அளிக்க வேண்டும்.

8. DELOITTE குழு அமுலாக்கத்தில்  மாவட்டங்கள் இணைக்கப்படும் போது BUSINESS AREA எனப்படும் வியாபார வட்டத்தில் சம்பளம் மற்றும்  நிர்வாகப் பொறுப்புக்களும்,  ஊழியர் மாற்றங்கள் SSA அளவிலும் இருக்கும்.

9. MDF மற்றும் பழுது பதியும் தொலைபேசிகளை கட்டணமில்லா தொலைபேசி சேவையாக மாற்றுவது பற்றி பரிசீலிக்கப்படும்.

10.இலாக்காத் தேர்வுகள்  அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. திருத்தங்கள் இருந்தால் மீண்டும் வெளியிடப்படும்.

11.சீருடை சம்பந்தமாக புதிய கொள்கை உருவாக்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

12.CORPORATE  அலுவலகப் பணியாளர்களுக்கு தலைமையகப்படி  
HQ ALLOWANCE வழங்குவது ஏற்கப்படவில்லை.

13. தவறுதலாக  வழங்கப்பட்ட பட்டுவாடாவை மீண்டும் பிடித்தம் செய்யக்கூடாது என்ற உச்ச  நீதிமன்ற உத்திரவின் அடிப்படையில் அத்தகைய பிடித்தங்கள் இருந்தால் நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

14. பணி நிறைவு பெறும் தோழர்களுக்கு விடுப்புச்சம்பளம் பணி நிறைவு நாளன்றே வழங்குவது, TA மற்றும் மருத்துவ முன்பணம் வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும்.

15. விதி 8ன் கீழ் ஊழியர்களுக்கு மாற்றல் வழங்குவதற்கு நிர்வாகத்தால் தடையாணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று நிர்வாகத்தரப்பு கூறியுள்ளது.

16. மிகுதி நேரப்படியை உயர்த்துவது பற்றி பரிசீலிக்கப்படும் எனவும்  ஏனைய படிகள் உயர்வு பற்றி பரிசீலிக்க இயலாது எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.

17. JCM நிலைக்குழுவில் விவாதிக்கப்பட்ட  பிரச்சினைகள் அமுலாக்கம் பற்றி 19/10/2015 அன்று கூட்டம் நடைபெறும்.

18. பதவிகளின் பெயர் மாற்றப் பரிந்துரை BSNL நிர்வாகக்குழுவிற்கு அனுப்பப்பட்டுள்ளது. விடுபட்ட கேடர்களுக்கும் பெயர் மாற்றுதல் பற்றி பரிசீலிக்கப்படும்.

தோழர்களே...
JCM கூட்டத்தில் போனஸ் வழங்குவது,
 JAO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள்
 மேற்கொள்வது ஆகியவையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. 
பல முடிவுகள் ஆகட்டும் பார்க்கலாம் 
என்ற பாணியிலேயே உள்ளன. 

குறிப்பாக போனஸ் வழங்குவதில் நிர்வாகம் தொடர்ந்து ஊழியரை ஏமாற்றுவது ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
OFFICIATING JTO - நிரந்தரம் 

JTO ஆளெடுப்பு விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதையொட்டி  JTO பதவியில் நெடுங்காலமாக OFFICIATING  செய்து வரும் TTA தோழர்களை நிரந்தரம் செய்வது பற்றி டெல்லி தலைமையகம் மாநில நிர்வாகங்களுக்கு சில  குறிப்பிட்ட  வழிகாட்டுதல்களை வழங்கியதோடு அவை 31/10/2015க்குள்  முடிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

  • 31/03/2016 அன்று JTO  காலியிடங்கள் கணக்கீடு செய்தல்.
  • தற்போது OFFICIATING  செய்து வரும் TTA தோழர்களின் எண்ணிக்கை கணக்கீடு.
  • தேவையான  JTO காலியிடங்களின்  கணக்கீடு.
  • மேற்கண்ட தோழர்கள் PHASE I பயிற்சிக்கும் களப்பயிற்சிக்கும்  FIELD TRAINING அனுப்புதல்.
  • PHASE I பயிற்சி மற்றும்  களப்பயிற்சி முடித்தவர்களை நிரந்தரப்படுத்துதல்.

JTO  OFFICIATING  தோழர்களின் நிரந்தரம் பற்றிய பிரச்சினை தற்போதுதான்  நிரந்தரமான தீர்வை நோக்கி நடைபோடுகிறது. 

Thursday, 15 October 2015

நல்வரவு ஆகுக...
இன்று 16/10/2015 
காரைக்குடிக்கு வருகை தரும் 
பொதுமேலாளர் அவர்களை 
வருக வருக என 
வரவேற்பதில் 
பெருமகிழ்வு அடைகிறோம்.
ஆர்ப்பாட்டம் 

ஒப்பந்த ஊழியர்களுக்கு 
போனஸ் 
வழங்கக்கோரி 

சம்பளத்துடன் கூடிய 
வார ஓய்வை மீண்டும் 
வழங்கக்கோரி..

மாவட்ட ஆட்சியர் 
நிர்ணயித்த கூலி 
வழங்கக்கோரி 

NFTE - BSNLEU 
TMTCLU - TNTCWU 
இணைந்த ஆர்ப்பாட்டம் 

16/10/2015 - வெள்ளி - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

தோழர்களே... வாரீர்... 

Wednesday, 14 October 2015

அக்டோபர் - 15  அப்துல் கலாம்  பிறந்த நாள் 

தீவில் பிறந்த  தீப ஒளி... 
நாவில் நன்னயம் பெருக்கிய அறிவொளி...

நல் வழி  காட்டும் கலங்கரை விளக்கு...
நானிலம் போற்றும் ஞான விளக்கு...

எளிமை சொன்ன புத்தன்.. 
வலிமை சொன்ன சித்தன் ..

அப்துல் கலாம் புகழ் போற்றுவோம்...
அவர் அடிச்சுவடு பற்றுவோம்...


*****************************
அப்துல் கலாம் 
பிறந்த தின 
சிறப்புக்கூட்டம் 
*****************************

15/10/2015 - வியாழன் - மாலை 5 மணி 
சங்க அலுவலகம் - காரைக்குடி.

-: சிறப்புரை :-  
முனைவர். மு. பழனி இராகுலதாசன் 

தோழர்களே... வருக...
JTO  ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் 

நமது மத்திய சங்கத்தின் முழு முயற்சியால் 
14/10/2015 அன்று   JTO  ஆளெடுப்பு விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

அவற்றில் சில...

இலாக்கா ஊழியர்கள் வயது  55க்கு கீழ்  இருக்க வேண்டும்.
13600-25420 என்ற சம்பள விகிதத்தில்
5 ஆண்டுகள் சேவை முடித்திருக்க வேண்டும்.

கல்வித்தகுதி  - BE தேர்ச்சி அல்லது 3 ஆண்டு  DIPLOMA  தேர்ச்சி அல்லது  
BSc., ELECTRONICS  அல்லது  BSc., Computer Science 
அல்லது BSc. பட்டப்படிப்பில்  
PHYSICS  அல்லது MATHEMATICS படித்திருக்க வேண்டும்.

JTO Screening தேர்வு எழுதிய தோழர்களும்  
JTO Phase - I  பயிற்சி முடித்த  தோழர்களும்
JTO பதவியில்  நிரந்தரமாகப் பணி அமர்த்தப்படுவர்.
                           TTA  பயிற்சி வகுப்பு 

      07/06/2015 அன்று நடைபெற்ற TTA  இலாக்காத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தோழர்களுக்கான TTA  பயிற்சி வகுப்பு 26/10/2015 அன்று சென்னை RGMTTC பயிற்சி மையத்தில் துவங்குகிறது.  தற்போது 40 தோழர்களுக்கு பயிற்சிக்கு செல்ல உத்திரவிடப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள தோழர்கள்  ஜபல்பூர் மத்திய பயிற்சி மையத்தில் இருந்து ஒப்புதல் வந்தபின் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்.

காரைக்குடி மாவட்டத்தில் இருந்து பயிற்சிக்கு செல்லும் 
கீழ்க்கண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

1. M. விவேகாநந்தன் - TM - பாம்பன் 
2. M. முத்துக்குமாரவேலு - SR. TOA  - பரமக்குடி 
3. K.இராஜா  - TM - சிவகங்கை.

Tuesday, 13 October 2015

தொடருது... தூவானம் 

மழை விட்டாலும்... தூவானம் விடவில்லை...
 என கிராமப்புறப் பகுதிகளில்
 நமது பெரியவர்கள் சலித்துக்கொள்வார்கள். 
ERP  பிரச்சினையில் அதே சலிப்புத்தான் 
தற்போது நமக்கும் தோன்றுகிறது. 
ERP என்னும் எவருக்கும் பயன்படாத 
பேய்மழை... பெருமழை பெய்து ஓய்ந்த பின்னும்... 
தூவானங்கள் இன்னும் தொடரவே செய்கின்றன. 

ஒரு சில தூவானத்துளிகள்...

நவம்பர் மாதம் JTO பயிற்சி வகுப்பு துவங்குகிறது. பயிற்சிக்கு செல்லும் தோழர்கள் TA முன்பணம் விண்ணப்பிக்க முடியாதாம். ஒரு மாதம் கழித்து TA பில்லைக்கொடுத்து மறுமாதம் பணம் பெற்றுக்கொள்ள வேண்டுமாம். முன்பணம் என்பது ஆண்டாண்டு கால நடைமுறை. 
இதை நிறுத்துவது என்ன நியாயம்?

பல காலம் பணி செய்த   நமது தோழர்கள் ஓய்வு பெறப்போகும் காலத்தில் LTC செல்ல ஆசைப்பட்டால் அவர்களும் LTC  முன்பணம் விண்ணப்பிக்க முடியாது. LTC சென்றுவிட்டு ஒருவேளை திரும்பி வந்தால் 
LTC BILL விண்ணப்பிக்கலாமாம். 

வாடிக்கையாளர் சேவை மையங்களிலும் மாவட்ட அலுவலகங்களிலும் காசாளர் பணி செய்யும் தோழர்கள்  வசூலாகும் பணத்தை வங்கியில் தங்கள் சொந்தப் பொறுப்பில் கொண்டு போய் செலுத்துகிறார்கள். அவர்களுக்கு CONVEYANCE ALLOWANCE அலைச்சல் படி கொடுக்கப்படவில்லை. ஓராண்டு காலமாக  இப்பிரச்சினை தேங்கிக்கிடக்கிறது. அலைஞ்சு திரிஞ்சாலும் அலைச்சல் படி கிடைக்காதாம்...

 பணி நிறைவு பெறும் தோழர்களின் விடுமுறைச்சம்பளம் அவர்கள் பணி நிறைவு பெறும் நாளன்று வழங்கப்பட்டு வந்தது. தற்போது அதிலும் மண் விழுந்து விட்டது. ஒய்வு பெற்ற தோழர்களும், இறந்து போன தோழர்களின் பாவப்பட்டக் குடும்பங்களும் விடுமுறைச் சம்பளத்திற்கு வீங்கி நிற்கும்... ஏங்கி நிற்கும் காலமே தற்போது நடைபெறுகிறது. 

ஓய்வு பெற்ற மற்றும் மரணமுற்ற தோழர்களின் வங்கிக்கடன்  பாக்கி  மற்றும் கூட்டுறவு சங்கப்பாக்கி ஆகியவை அவர்களது ஓய்வூதியப் பலன்களில் கழிக்கப்பட்டு DOT CELL மூலம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு வரைவோலையாக  அனுப்பப்படுகிறது. ஆனால் இந்த பாக்கித்தொகை வங்கிகளுக்கும், கூட்டுறவுச்சங்கங்களுக்கும்  உரிய காலத்தில் போய்ச்சேர மறுக்கிறது.  பாக்கித்தொகை போய்ச்சேருவதற்குள் இறந்தவருக்கு ஆண்டுத்திதியும், 
இருப்பவருக்கு ஆண்டு விழாவும் வந்து விடுகிறது.

இப்படி எத்தனையோ...
தொடரும் தூவானத் துன்பங்கள்... 
இன்னும் ERPயில் இருக்கத்தான் செய்கின்றன...
உரியவர்கள் உரிய நடவடிக்கை.. உரிய காலத்தில் எடுப்பது 
ஊழியருக்கு உபயோகமாக இருக்கும்.

செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க 
செய்யாமை யானும் கெடும்... 
என்பது வள்ளுவர் வாக்கு..