Wednesday 31 July 2019


அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

ஆ க ஸ் ட்  2...
மத்திய அரசின் தொழிலாளர் விரோதப்போக்கைக் கண்டித்து
அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும்
தேசியத்தொழிற்சங்கங்கள் பங்கேற்கும்
நாடுதழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்
-------------------------------------------------------------------
02/08/2019 – வெள்ளி – காலை 10 மணி
ஐந்து விளக்கு – காரைக்குடி
-------------------------------------------------------------------
02/08/2019 – வெள்ளி – காலை 11.00 மணி
அரண்மனை வாசல் – இராமநாதபுரம்
-------------------------------------------------------------------
02/08/2019 – வெள்ளி - மாலை 05 மணி
நடராஜ் தியேட்டர் – மதுரை
-------------------------------------------------------------------
மத்திய அரசே...
  • முதலாளிகளுக்கு ஆதரவாகத்தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்தாதே...
  • பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்காதே...
  • அம்பானி நிறுவனத்தை  வளர்க்காதே...
  • அரசு நிறுவனமாம் BSNLஐச் சீர்குலைக்காதே...
  • சேலம் உருக்காலை உள்ளிட்ட மூன்று உருக்காலைகளை தனியார்மயமாக்காதே...
  • 41 பாதுகாப்புத் தொழிற்சாலைகளில் தனியாருக்கு இடம்கொடுக்காதே....
  • உருப்படியான இரயில்களை உருப்படாத தனியாருக்கு தாரை வார்க்காதே...
  • ICF போன்ற இரயில்பெட்டித் தொழிற்சாலைகளில் தனியாரை அனுமதியாதே...
  • மோசமான மோட்டார் வாகனச்சட்டத் திருத்தத்தை திரும்பப்பெறு...
  • குறைந்தபட்ச ஊதியம் மாதம் 18000 நிர்ணயம் செய்...
  • போராடிப்பெற்ற 8 மணி வேலை நேரத்தை மாற்றாதே...
  • போனஸ் சட்டத்தில் புரட்டுக்கள் பண்ணாதே...
  • முறைசாரா உழைப்பாளர் சமூகப் பாதுகாப்பு சட்டங்களைத் திருத்தாதே...
  • கிராமப்புற ஏழைகள் பயனடையும் 100 நாள் திட்டத்தை முடக்காதே...
------------------------------------------------------------
தோழர்களே...
போராடிப்பெற்ற உரிமைகளையும்...
தொழிலாளர் நலச்சட்டங்களையும்...
தொழிலாளர் நலனுக்கு எதிராக மாற்றியமைக்கும்...
மக்கள் விரோத... தொழிலாளர் விரோத... பொதுத்துறை விரோத
மத்திய அரசின் கேடுதரும் செயல்களைக் கண்டித்து...
அணி திரள்வீர்... ஆர்ப்பரிப்பீர்....

பணி நிறைவு வாழ்த்துக்கள்

காரைக்குடி தொலைத்தொடர்பு  மாவட்டத்தில்  
இன்று  31/07/2019 
பணி நிறைவு பெறும் தோழர்கள்

V. வேலுச்சாமி  - TT /பரமக்குடி

G.ஜோதிக்குமார் - TT/ புதுமடம்

ஆகியோரின் பணி நிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க 
அன்புடன் வாழ்த்துகின்றோம்....

Saturday 27 July 2019


கண்டன ஆர்ப்பாட்டம்

N F T E 
தமிழ்மாநிலச்சங்க அறைகூவலின்படி
சென்னைக் கூட்டுறவு சங்க கொடுமைகளை எதிர்த்து
தமிழகம் தழுவிய 
கண்டன ஆர்ப்பாட்டம்
-------------------------------------------------------------------
09/08/2019 – வெள்ளிக்கிழமை – மதியம் 12.00 மணி
சென்னைக் கூட்டுறவு சங்க கிளை அலுவலகம் 
எல்லீஸ் நகர் –  மதுரை.
-------------------------------------------------------------------
சென்னைக் கூட்டுறவு சங்க நிர்வாகமே...
உறுப்பினர்களின் வியர்வைப் பணத்தில் வாங்கப்பட்ட
  • வெள்ளனூர் நிலத்தை விற்காதே...
  • விற்ற நிலத்தைத் திரும்பப்பெறு...
  • வெள்ளனூர் நிலம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிடு...
  • கடன் விண்ணப்பித்த உறுப்பினர்களுக்கு உடனடியாக கடனைப்  பட்டுவாடா செய்...
  • இறந்த போன உறுப்பினர் வாரிசுகளுக்கு பணப்பலனை தொடர்ந்து  இழுத்தடிக்காதே....
  • ஓய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு ஓரவஞ்சனை செய்யாதே...
  • கணக்கு முடித்த உறுப்பினர்களுக்கு பணப்பட்டுவாடா தாமதம் செய்யாதே...
  • கூட்டுறவு சங்க சொத்தைக் கொள்ளையடிக்காதே...
-------------------------------------------------------------------
தோழர்களே...
ஓராண்டு காலம் உறங்கிக்கிடந்தது போதும்...
சுரண்டிக்கொழுப்பதைக் கண்டு சும்மா நாமும் இருக்கலாமா?
நம்முடைய உதிரத்தில்... வியர்வையில் உருவான..
கூட்டுறவு சங்கம் கொள்ளை போவதைத் தடுத்திட வேண்டாமா?...
வட்டிக்கு கடன் கொடுக்க வக்கில்லாத நிலை மாற்ற வேண்டாமா?...
அநீதி களைந்திட... அணி திரள்வீர்... ஆர்ப்பரிப்பீர்...
-------------------------------------------------------------------
NFTE மதுரை மற்றும் 
காரைக்குடி மாவட்டச்சங்கங்கள்

Friday 26 July 2019


ஜுலை... 27

காலத்தால் மறையாத கலாம் 


எளிமை...  இனிமை
தூய்மை...  நேர்மை
கடமை...  வாய்மை

இனியொரு மனிதன் இவர் போல் ஏது?
வணங்குவோம்... வழி நடப்போம்...

Wednesday 24 July 2019

தேர்தல் பரப்புரை துவக்கவிழா
தோழர்களே... வாரீர்...

கிளைக்கூட்டம்

N F T E
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
காரைக்குடி கிளை
கிளைக்கூட்டம்
--------------------------------------------------------------------
27/07/2019 – சனிக்கிழமை – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – காரைக்குடி
--------------------------------------------------------------------
: தலைமை : 
தோழர்.காதர்பாட்சா – கிளைத்தலைவர்
 -------------------------------------------------------------------
: ஆய்படு பொருள் :

 தலமட்டப்பிரச்சினைகள்
தேர்தல் பிரச்சார விழா பங்கேற்பு
மற்றும் இதரப்பிரச்சினைகள் 

தோழர்களே வாரீர்... 
ம. ஆரோக்கியதாஸ் - கிளைச்செயலர்

இணைந்த கூட்டம்

N F T E
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம்
மதுரை வணிகப்பகுதி
இணைந்த சிறப்புக்கூட்டம்
------------------------------------------------------------
25/07/2019 – வியாழன் – மாலை 05 மணி
NFTE சங்க அலுவலகம் – தல்லாகுளம் – மதுரை
------------------------------------------------------------
: தலைமை : 
தோழர்.சிவகுருநாதன் – மதுரை மாவட்டத்தலைவர்.

பங்கேற்பு : தோழர்கள்

பா. லால்பகதூர் – காரைக்குடி மாவட்டத்தலைவர்
வெ. மாரி – காரைக்குடி மாவட்டச்செயலர்
G. இராஜேந்திரன் – மதுரை மாவட்டச்செயலர்
G. சுபேதார் அலிகான் – மாநில அமைப்புச்செயலர்
D. செந்தில்குமார் – மாநில உதவிச்செயலர்

ஆய்படுபொருள்

8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தல்
சென்னைக் கூட்டுறவு சங்க
நெறியற்ற நடைமுறைகளை எதிர்த்து போராட்டம்
இன்னபிற...
தோழர்களே... வாரீர்...
மதுரை – காரைக்குடி மாவட்டச்சங்கங்கள்

Monday 22 July 2019


தேர்தல் சிறப்புக்கூட்டம்
N F T E
தேர்தல் சிறப்புக்கூட்டம்
01/08/2019 – வியாழன்
கோபிசெட்டிப்பாளையம் – ஈரோடு

சிறப்புரை
தோழர்.சந்தேஷ்வர் சிங்
NFTE பொதுச்செயலர்
மற்றும் தலைவர்கள்... 

தோழர்களே...
கோபியில் கூடுவோம்...
கோபத்துடன் சாடுவோம்...
எட்டாத உரிமைகள்...
கிட்டாத சலுகைகள்...
தள்ளாடும் BSNL...
தளர்வுற்ற ஊழியர்கள்...
பொறுப்பற்ற அங்கீகாரங்கள்...
பொல்லாத அரசு இயந்திரங்கள்...
எத்தனை காலம்தான் ஏமாறுவோம்...
விழிப்படைவீர்... தெளிவடைவீர்...
BSNL வளம் பெற... ஊழியர் நலம்  பெற..
இணைந்த கரங்களுக்கு... வாக்களிப்பீர்...

Friday 19 July 2019


வா ழ் த் து க் க ள் 
விஜயவாடா நகரில் நடைபெற்ற 
AIBSNLEA அதிகாரிகள் சங்க அகில இந்திய மாநாட்டில் 
AIBSNLEA  பொதுச்செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 
அருமைத்தோழர்  S. சிவக்குமார் 
அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகின்றோம்.

 அயராத உழைப்பும்... 
ஆற்றல் மிக்க ஆளுமையும்... 
இனிய தோழமையுணர்வும் கொண்ட
அன்புத்தோழர் சிவக்குமார் அவர்களின் தலைமையில் 
AIBSNLEA  வெற்றி நடைபோட வாழ்த்துகின்றோம்.

தொகுதி நிலவரம்

BSNLலில்
சங்கடங்கள் அதிகரித்துள்ளன.
சங்கங்களும் அதிகரித்துள்ளன.

8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில்
18 சங்கங்கள் களம் காண்கின்றன.
உறுப்பினர் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்ட நிலையில்
சங்கங்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.
18/07/2019 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

காரைக்குடியில் NFTE ,BSNLEU, FNTO என
மூன்றே சங்கங்கள் மட்டுமே உள்ளன.
மொத்த வாக்காளர்கள் 276

வாக்குச்சாவடி வாரியாக
காரைக்குடி 86
பரமக்குடி 47
இராம்நாட் 78
சிவகங்கை 65

8வது உறுப்பினர் சரிபார்ப்புத்தேர்தலில் போட்டியிடும் சங்கங்கள்

1.       AIBCTES
2.       BTU BSNL
3.       BTEU
4.       BSNL ATM
5.       BSNL DEU
6.       BSNL EAU
7.       BSNL EC
8.   BSNLEU
9.     BSNL MS
10.   BSNL NTSU
11.   BSNL PEWA
12.   BSNL SU
13.   BSNL WRU
14.   FNTO BEA
15. NFTE BSNL
16.   FNTO
17.   TEPU
18.   TEU BSNL


BSNL வளம் பெற... ஊழியர்கள் நலம் பெற...
வாக்களிப்பீர் வரிசை எண் : 15

Wednesday 17 July 2019


கொடுமையிலும் கொடுமை...

ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறு மாதங்களாக சம்பளம் இல்லை...
நிரந்தர ஊழியர்கள் சம்பளம் மாதாந்திரக் கேள்விக்குறி....
வாடகை கட்டிடங்களுக்குப்  பல மாத வாடகை பாக்கி...
வாடகைக்கார்கள் நிறுத்தப்பட்டு விட்டன...
மின்கட்டணம் செலுத்தப் பணமில்லை...
டீசல் வாங்க வக்கில்லை...
வளர்ச்சிப்பணிகள் முற்றாக முடக்கம்...
மருத்துவப்பில்கள் மாதக்கணக்கில் தேக்கம்...
இப்படி பல வேதனைகளும் கொடுமைகளும்
இன்று BSNLலில் சாதாரணமாகிவிட்டன....

இப்போது அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில்
அவசரத்திற்கு சிகிச்சை பெறுவதும் நின்று போனது...
இதுவே கொடுமையிலும் கொடுமையாகும்....

பல அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள்
தங்களுக்கு பல லட்சம் ரூபாய் நிலுவை இருப்பதால்
இனியும் தொடர்ந்து BSNL ஊழியர்களுக்கு மருத்துவ சிகிச்சை
அளிக்க  முடியாது என கையை விரித்து விட்டன.

மதுரைப்பகுதியில் வேலம்மாள் மருத்துவமனை,
வடமலையான் மருத்துவமனை மற்றும்
அரவிந்த் கண் மருத்துவமனை போன்றவை
BSNL மருத்துவ திட்டத்தின் கீழ சிகிச்சை அளிக்க முடியாது
என முற்றாகக்  கையை விரித்து விட்டன...

இராமநாதபுரம் பகுதியில் ஓய்வு பெற்ற
தோழர் அரியமுத்து மதுரை வேலம்மாள் மருத்துவமனையில்
மருத்துவ திட்டத்தில்  சிகிச்சை பெற்றார்.
சிலநாட்கள் கழித்து மீண்டும் தொடர்சிகிச்சைக்காக சென்றபோது
அவரை மருத்துவ திட்டத்தின் கீழ் அனுமதிக்க
மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது.

சில்லறையை கொடுத்தால் சிகிச்சை என்ற நிலைக்கு
மருத்துவமனை சென்றுவிட்டது. வேறு வழியின்றி பணம் கட்டி
சிகிச்சைக்கு சேர்ந்தார் தோழர் அரியமுத்து.
தோழர் அரியமுத்து ஓய்வூதியத்தை மட்டுமே நம்பி வாழ்பவர்.
தன்னுடைய ஓய்வூதியம் முழுமையும் மருத்துவமனைக்கு செலுத்தியும் பணம் பற்றாக்குறையானதால் மனைவியின் நகைகளை அடகு வைத்து பணம் செலுத்தியுள்ளார். தாலிமட்டுமே பாக்கி எனவும் அதுவும் கூட
பெரிய அளவிற்கு தமக்கு உதவாது எனவும்
தனது நிலையைச்சொல்லி தொலைபேசியில்
நம்மிடக் கண்ணீர் விட்டுக் கதறினார்.
நமது BSNL ஏன் இப்படி போய்விட்டது ? என
அவர் கேட்கும் கேள்விக்கு நம்மிடமோ... யாரிடமோ விடை இல்லை.

சென்றவாரம் அதே இராமநாதபுரம் பகுதியில்
குடும்ப ஓய்வூதியம் பெறும் திருமதி முத்துராக்கு
திருச்சி சென்ற வழியில் விபத்துக்குள்ளாகி தலையில் காயம் பட்டு
திருச்சி மாருதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காரைக்குடியில் இருந்து மருத்துவமனைக்கு அனுமதிக்கடிதம் கொடுக்கப்பட்டும் கூட மாருதி மருத்துவமனை நிர்வாகம்
அதனை ஏற்க மறுத்துவிட்டது.
பணத்தைக் கட்டி வைத்தியம் செய்து கொள்ளுங்கள் என்று
சாவகாசமாக கூறிவிட்டது. குடும்ப ஓய்வூதியம் பெறும்
திருமதி முத்துராக்கு மிகப்பெரிய இருப்புத்தொகையை 
தனது வங்கிக்கணக்கில் வைத்திருக்கவில்லை.
மாதாமாதம் கிட்டும் ஓய்வூதியத்தில்தான்
அவரது வாழ்க்கை வண்டி ஓடிக்கொண்டிருந்தது.
இப்போது மருத்துவ செலவிற்குத் திண்டாடும் நிலை உருவாகி விட்டது.
நமது BSNL ஏன் இப்படி போய்விட்டது ?
என அவரும் நம்மிடம் கேள்வி கேட்டார்... விடைதான்  இல்லை..

இது போன்ற சோகநிகழ்வுகள்
காரைக்குடி மாவட்டம் மட்டுமில்லை
ஒட்டுமொத்த இந்திய தேசம் முழுமையும் இருக்கத்தான் செய்யும்.
தனது ஊழியர்களுக்கு வைத்தியச்செலவு பார்ப்பதற்கு கூட
BSNL வக்கற்றுப்போய்விட்டது என்பது 
கொடுமையிலும் கொடுமையாகும்.

BSNL மறுசீரமைப்பு செய்யப்பட்டு நிலைநிறுத்தப்படும்வரை
BSNL ஊழியர்களின் உயிர்கள் நிலைநிறுத்தப்படுமா?
என்ற கேள்வி நம் நெஞ்சில் எழுகின்றது.

தற்போது தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்
அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
மாவட்டத்தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில்  
எல்லா வசதிகளும் நிறைந்துள்ளன.
போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை
என்பது மட்டுமே குறையாக உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் அரசு ஊழியர்கள்
மருத்துவ சிகிச்சைக்குப் பணம் செலுத்தி
SPECIAL WARD என்னும் சிறப்பு அறைகளில் தங்கி
தங்களது சிகிச்சையைத் தொடர முடியும்.
அந்த செலவு தொகையை நிர்வாகத்திடம் திரும்பப் பெற முடியும்.
அரசு மருத்துவமனை தரும் பில்கள் என்பதால்
அப்படியே பணம் திரும்பக் கிடைக்கும்.
எனவே நமது மாநில மாவட்ட நிர்வாகங்கள்
சம்பந்தப்பட்ட மாநில மாவட்ட மருத்துவமனை நிர்வாகங்களோடு பேசி
BSNL  ஊழியர்களுக்கு SPECIAL WARDகளில் அனுமதித்து 
சிகிச்சை அளிப்பதற்கு ஆவண செய்ய வேண்டும்.

தற்போது கூட இந்த நடைமுறை இருந்தாலும்
BSNL நிர்வாகம் மருத்துவமனை நிர்வாகத்தோடு பேசி
உரிய ஏற்பாடு செய்தால் சற்றுக் கூடுதலான கவனம்
BSNL நோயாளிகள் மீது செலுத்தப்படும்.
மாநில மாவட்ட நிர்வாகங்களுக்கு
வேண்டுகோளாக இதை வைக்கின்றோம்.

நம்முடைய கவலை எல்லாம்...
BSNLஐப் பிடித்திருக்கும் நோய்க்கு
அரசு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்...

BSNL நோயாளிகளுக்கும் அவர்களது உயிர் காக்க
உரிய சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்.
அதற்கான மாற்று வழிகள் செய்யப்பட வேண்டும்.

நிதிநிலை என்பதைக் காட்டி உயிர்களை அழிப்பது நியாயமல்ல...
நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்....