Friday 27 November 2020

 பணி நிறைவு வாழ்த்துக்கள்

30/11/2020 பணி நிறைவு பெறும் 

அன்புத்தோழர்

A. மரிய நட்சத்திரம்

TELECOM TECHNICIAN, பாம்பன்

அவர்களின் பணிநிறைவுக்காலம் சிறப்புடன்

விளங்க வாழ்த்துகின்றோம்.

------------------------------------------------

விருப்ப ஓய்வு என்னும் பெருவெள்ளத்தில் அடித்துச் செல்லப்படாமல் மிச்சம் இருந்த பத்து மாதங்களும் பணி செய்து  BSNL வளர்ச்சிக்கு தனது பணிக்காலம் முழுமையும் பயனுறச்செய்த தோழர்.மரியநட்சத்திரம் அவர்களுக்கு நமது அன்பான வாழ்த்துக்கள்.

------------------------------------------------

பணி நிறைவு பாராட்டு விழா

------------------------------------------------

29/11/2020 – ஞாயிறு – காலை 10 மணி

தொலைபேசி நிலையம் – பாம்பன்

தோழர்களே... வருக....

Tuesday 24 November 2020

 மாபெரும் மனிதப்போராட்டம்


30 கோடி தொழிலாளர்கள் பங்கு பெறும்

உலகின் மாபெரும் வேலை நிறுத்தம்

26/11/2020 நாளை இந்திய தேசத்தில் நடைபெறுகிறது.

அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்...

ஆனால்  இதயமற்ற அரசு இம்மியும் நகராது...

எத்தனை தடவை போராடினாலும்....

என்னதான் கத்தினாலும்...

செவிடன் காதில் ஊதிய சங்குதான்...

ஆனாலும்...

தொடர்ந்து போராடுவோம்...

போராட்டம் இல்லாமல் யாராட்டமும் செல்லாது...

அநீதி கண்டு வெகுண்டெழுந்து

ஆர்ப்பரித்துப் போராடாமல்

அநீதி களைய முடியாது...

தொழிலாளருக்கு... விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட

அநீதி களைய ஆர்ப்பரித்துப் போராடுவோம்...

அணி திரள்வீர் தோழர்களே...

Monday 23 November 2020

 IDA முடக்கம் எதிர்த்து ஆர்ப்பாட்டம்


01/10/2020 முதல் 30/06/2021 வரை 9 மாதங்களுக்கு

 IDA விலைவாசிப்படியை  முடக்கி வைத்த 

மத்திய அரசின் ஊழியர் விரோதப் போக்கைக் கண்டித்து

நவம்பர் – 24 

நாடு தழுவிய

கண்டன ஆர்ப்பாட்டம்

 --------------------------------------------------------------------------

24/11/2020 – செவ்வாய் – காலை 10 மணி

பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தொலைபேசி நிலையம் – இராமேஸ்வரம்

தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

தொலைபேசி நிலையம் – பரமக்குடி

தொலைபேசி நிலையம் – சிவகங்கை

  --------------------------------------------------------------------------

நிரந்தர ஊழியர்களும்... ஓய்வு பெற்ற ஊழியர்களும் 

திரளாகக் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Saturday 21 November 2020

 IDA முடக்கம்

 

கொரோனா காலத்து நிதி நெருக்கடியை முன்னிட்டு...

மத்திய அரசு தனது பொதுத்துறை ஊழியர்களுக்கு 01/10/2020 முதல் வழங்கப்பட வேண்டிய IDA விலைவாசிப்படி உயர்வை முடக்கி உத்திரவிட்டுள்ளது.  இதற்கான உத்திரவை DPE இலாக்கா 19/11/2020 அன்று வெளியிட்டுள்ளது.

மேற்கண்ட ஊழியர் விரோத உத்திரவில் கீழ்க்கண்ட அநீதிகளை மத்திய அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு இழைத்துள்ளது.

01/10/2020 முதல் வழங்கப்பட வேண்டிய 5.5 சத IDA விலைவாசிப்படி உயர்வு முடக்கப்படுகிறது.

அக்டோபர் 2020 IDA மட்டுமின்றி...

ஜனவரி 2021 மற்றும் ஏப்ரல் 2021ல் வழங்கப்பட வேண்டிய IDA விலைவாசிப்படி உயர்வும் முடக்கப்படும். மொத்தம் 9 மாதங்களுக்கு IDA முடக்கப்படும். 

01/07/2021 அன்று அரசு மீண்டும் பரிசீலனை செய்து IDA வழங்க உத்திரவிட்டால் 01/07/2021 முதல் மீண்டும் IDA வழங்கப்படும். 

01/10/2020 , 01/01/2021 மற்றும்  01/04/2021 ஆகிய காலாண்டுகளில் கிடைக்கக்கூடிய  மொத்த IDA உயர்வு  கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு 01/07/2021 முதல் மொத்தமாக IDA வழங்கப்படும்.

ஆனால் 01/10/2020 முதல் 30/06/2021 வரையிலான 9 மாத காலத்திற்கு IDA நிலுவை வழங்கப்படாது. 

மேற்கண்ட IDA முடக்க உத்திரவு... 2017, 2007, 1997, 1992 மற்றும் 1987ம் ஆண்டுகளில் ஊதிய மாற்றம் பெற்ற அனைவருக்கும் பொருந்தும். 

மேற்கண்ட ஊழியர் விரோத உத்திரவைக் கண்டித்து

NFTE தமிழ் மாநிலச்சங்கம் NFTE சம்மேளன தினமான 24/11/2020 அன்று தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

தோழர்கள் தவறாது பங்கு கொள்ள வேண்டும்...

Wednesday 18 November 2020

ஒன்றுபட்ட போராட்டம்


நவம்பர் 26 நாடு தழுவிய 

பொதுவேலை நிறுத்தத்தில்

BSNL ஊழியர் சங்கங்கள் பங்கேற்பு...


பொது வேலை நிறுத்தம் செய்வோம்...

போராடிப்பெற்ற உரிமைகள் காப்போம்...

Friday 13 November 2020

 ஒளி பெருகட்டும்...


எளியோர் வலிகள் குறையட்டும்...

ஏற்றமிகு வாழ்வு  பிறக்கட்டும்...

இருளில் தொலைந்த இதயங்கள்...

இன்ப ஒளியில் மீளட்டும்...

அனைவருக்கும் 

தீபத்திருநாள்

நல்வாழ்த்துகள்...

Tuesday 10 November 2020

 நிர்வாகத்துடன் சந்திப்பு

NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் மற்றும் பொருளர் தோழர்.ராஜ்மவுலி ஆகியோர் இன்று 10/11/2020 DIRECTOR (HR) மனித வள இயக்குநரைச் சந்தித்து இலாக்கா வளர்ச்சி மற்றும் ஊழியர் சார்ந்த பிரச்சினைகள் பற்றி விவாதித்தனர். கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன.

-------------------------------------------

JTO, JE  மற்றும் TT கேடர்களுக்கு விரைவில் இலாக்காத் தேர்வு நடத்திட கோரிக்கை எழுப்பப்பட்டது. விருப்ப ஓய்விற்குப்பின் உள்ள காலியிடங்களுக்கு BSNL வாரியத்திடம் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் தேர்வு அறிவிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------

டெலிகாம் டெக்னீசியனுக்கு இணையான MTS கேடர் உருவாக்கிட கோரிக்கை வைக்கப்பட்டது. உயர் மட்டத்தில் விவாதிக்கப்பட்டு   

                  புதிய கேடர் உருவாக்கம் பற்றி முடிவு எடுக்கப்படும் என்று பதில் அளிக்கப்பட்டது.

-------------------------------------------

கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஊழியர்களுக்கு சிறப்பு விடுப்பு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பப்பட்டது. சாதகமான முடிவு எடுப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------

விருப்ப ஓய்வில் சென்ற ஊழியர்கள் தொடர்ந்து குடியிருப்புக்களில் வசித்திட அனுமதி அளித்திடவும், குடியிருப்பு வாடகை மிக அதிகமாக உயர்த்தப்பட்டதால் ஊழியர்களுக்கு மிக்க சிரமம் ஏற்பட்டுள்ளதையும் தலைவர்கள் சுட்டிக்காட்டினர். வாடகை உயர்வைப் பற்றி மறுபரிசீலனை செய்வதாக மனிதவள இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.

-------------------------------------------

குஜராத் மாநிலத்தின் தலைமை அதிகாரி NFTE சங்கத் தலைவர்களைச் சந்திப்பதில்லை என்ற தவறான செயல்  சுட்டிக்காட்டப்பட்டது. அவர் தற்போது விடுப்பில் இருப்பதாலும், அவர் பணிக்குத் திரும்பியபின் உடனடியாக சந்திப்பு நடைபெறும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Friday 6 November 2020

நவம்பர் 26 பொதுவேலை நிறுத்தம்

BSNL கோரிக்கைகள்


4G சேவை உடனே வழங்கு...


01/01/2017 முதல் 3வது ஊதிய திருத்தம் அமுல்படுத்து...


ஒப்பந்த ஊழியர்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்கு...


ஒப்பந்த ஊழியர்களைப் பணியை விட்டு நீக்காதே...


01/01/2017 முதல் ஓய்வூதிய மாற்றம் அமுல்படுத்து...


ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வுக் கொள்கை அமுல்படுத்து...


இலாக்காத் தேர்வுகளை உடனடியாக நடத்து...


கொரோனாவால் உயிரிழந்த ஊழியர்களுக்கு நிவாரணம் வழங்கு...


அதிகாரிகளைப் போல் ஊழியர்களுக்கு GROUP TERM INSURANCE காப்பீடு வழங்கு....


BSNL  நேரடி ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப் பலன்களை அமுல்படுத்து...


தற்காலிக ஊழியர் CASUAL LABOUR கூலி உயர்வை அமுல்படுத்து...

Thursday 5 November 2020

 செய்திகள்

அக்டோபர் சம்பளம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதச்சம்பளத்தை உடனடியாக வழங்கிடக்கோரி மத்திய சங்கம் இயக்குநர் நிதியிடம் கோரிக்கை விடுத்தது. அதனடிப்படையில் அக்டோபர் மாதச்சம்பளம் நவம்பர் 10க்குள் பட்டுவாடா செய்யப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.  தீபாவளிக்குப் போனஸ் கேட்டது அந்தக்காலம். சம்பளத்தையாவது கொடுங்கள் என்பது இந்தக்காலம். கொடுங்காலம்.

-----------------------------------------------

இலாக்காத் தேர்வுகள்

மிக நீண்ட நாட்களாக இலாக்காத் தேர்வுகள் 

நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றன. விருப்ப

 ஓய்வுக்குப்பின் BSNLலில் எல்லாப் பதவிகளும் 

காலியாகிவிட்டன. எனவே  ATT  பதவியில்  இருந்து TT

 என்னும் போன்மெக்கானிக், TT பதவியில் இருந்து 

TTA என்னும் JE பதவி,    JE பதவியில் இருந்து JTO 

மற்றும் JAO பதவிகளில் இலாக்கா காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எனவே உடனடியாக இலாக்காத் தேர்வுகளை நடத்தக்கோரி மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளது. விரைவில் இலாக்காத் தேர்வுகள் அறிவிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. தகுதியுள்ள தோழர்கள் தயாராகவும்.

-----------------------------------------------

FTTH இணைப்புக்கள்

BHARAT FIBRE என்னும் FTTH இணைப்புக்களுக்கு 

மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் 

கேபிள் போன்ற பொருட்கள் இல்லாததாலும், குத்தகைக்காரர்களின் நியாயமற்ற அணுகுமுறையாலும் இணைப்புக்கள் கொடுப்பதில் மிகுந்த தாமதம் நிலவுகின்றது. குத்தகைக்காரர்களை மட்டுமே நம்பி இராமல் இணைப்புக்கள் கொடுப்பதில் BSNL முனைப்பு காட்டிடக்கோரி NFTE அகில இந்தியத் தலைவர் தோழர்.இஸ்லாம் அகமது அவர்கள் நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளார்.

-----------------------------------------------

வைப்பு நிதி வட்டிக்குறைப்பு

7.9 சதமாக இருந்த GPF வைப்புநிதி வட்டி ஏப்ரல் 2020 முதல் செப்டம்பர் 2020 வரையிலான 6 மாத  காலத்திற்கு 7.1 சதமாக குறைக்கப்பட்டது. 

தற்போது மீண்டும் அக்டோபர் 2020 முதல் டிசம்பர்  2020 வரையிலான காலத்திற்கும் 7.1 சத வட்டியே தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது. சேமிப்பை ஊக்கப்படுத்துவதற்காக 2000ம் ஆண்டு 12 சத வட்டி வழங்கப்பட்டது. கழுதை தேய்ந்த கதையாக தற்போது வட்டி 7.1 சதத்திற்கு வந்து விட்டது.

-----------------------------------------------

EX GRATIA நான்காவது பட்டுவாடா

விருப்ப ஓய்வில் சென்ற தோழர்களுக்கு அருட்கொடை எனப்படும்  EX GRATIA கடைசிக்கட்டப் பட்டுவாடா செய்வதில் தொடர்ந்து தாமதம் நிலவுகிறது. பல தோழர்களின் அடிப்படைச்சம்பளம் மற்றும் பல்வேறு பிரச்சினைகளில் முரண்பாடு  நிலவுவதாலும், அவை சரிசெய்யப்படாததாலும்  தேக்க நிலை நிலவுகிறது.

 பொதுவேலை நிறுத்தம்

விவசாயிகள் விரோத...

தொழிலாளர் விரோத...

மக்கள் விரோத...

மத்திய அரசைக் கண்டித்து

நவம்பர்... 26

நாடு தழுவிய

பொதுவேலை நிறுத்தம்...

------------------------------------------

மத்திய அரசே...

வருமான வரி கட்டும் அளவுக்கு வருவாய் இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும், மாதம் ரூ.7500/= வீதம் நிவாரணத் தொகை வழங்கு...

ஒரு நபருக்கு மாதம் ஒருமுறை 10 கிலோ அரிசி... கோதுமை வழங்கு...

குறைந்தபட்சக்கூலி நாளொன்றுக்கு ரூ.600/=வழங்கு....

மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டத்தில்  ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்கு...

அந்த திட்டத்தை நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்...

வங்கி, காப்பீடு, BSNL உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயப் படுத்துவதை நிறுத்து...

ரயில்வே , பாதுகாப்புத்துறை தொழிற் சாலைகள், துறைமுகங்கள் போன்ற அரசுத்துறை  நிறுவனங்களை கார்ப்பரேட்டாக மாற்றுவதைக் கைவிடு...

அரசு மற்றும் பொதுத்துறை பணியாளர்கள் ஓய்வு வயது மூப்படையும் முன்பாகவே, கட்டாய ஓய்வு தருவதற்கான கொடூரமான அரசு நிர்வாக சுற்றறிக்கையை திரும்பப் பெறு...

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்...

பழைய ஓய்வூதிய திட்டப்படி அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கு....

EPF உடன் இணைந்த  EPS-95 ஓய்வூதியத்தை அதிகரித்து மேம்படுத்து...

--------------------------------------------------------

தோழர்களே...

தொழிலாளர் விரோத.... விவசாயிகள் விரோத...

மக்கள் விரோத... ஜனநாயக விரோத...

மனிதநேய விரோத மத்திய அரசைக்கண்டித்து...

அணிதிரள்வோம்... களம் காண்போம்...

Wednesday 4 November 2020

 ஒப்பந்த ஊழியர் சம்பளம் முதல் தவணை

இன்று 05/11/2020 ஒப்பந்த ஊழியர் சம்பளம் பற்றிய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

31/10/2020க்குள் 25 சத சம்பளம் பட்டுவாடா செய்யப்படவேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்திரவின் அடிப்படையில் 15 கோடி ரூபாய் அதற்காக உருவாக்கப்பட்ட புதிய வங்கிக்கணக்கில் நிர்வாகத்தால் செலுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே மேற்கண்ட சம்பளப்பணத்தை தங்களுடைய கணக்கில் செலுத்த வேண்டும் என ஒப்பந்தகாரர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளதாகத் தெரிகிறது. 

கடந்த காலங்களில் ஒப்பந்தகாரர்களின் கணக்கில் பணம் செலுத்தப்பட்டு அது யானை வாயில் போன கரும்பாக ஆன கதை நமக்குத் தெரிந்ததுதான்.  எனவேதான் நீதிமன்றம் தொழிலாளர் ஆணையரிடம் சம்பளத்தைப் பட்டுவாடா செய்யும் பணியை ஒப்படைத்தது. 

மாவட்ட நிர்வாகங்கள் ஏற்கனவே வேலைசெய்யும் ஒப்பந்த ஊழியர்களின் வங்கிக்கணக்கு, ஆதார் எண் உள்ளிட்ட தேவையான விவரங்களை மாநில நிர்வாகத்திற்கு அனுப்பியுள்ளன. 

எனவே சம்பளத்தை தொழிலாளர் ஆணையர் சம்பந்தப்பட்ட ஒப்பந்த ஊழியர்களின் வங்கிக்கணக்கில் செலுத்துவதில் சிக்கல் எதுவும் இருக்காது. 

இருப்பினும் இன்றைய விசாரணையில் நீதிமன்றத்தின் நடவடிக்கையைப் பொறுத்தே அடுத்த கட்ட நகர்வுகள் நடைபெறும். 

எப்படியாயினும் தீபாவளிக்கு முன்பாக ஒப்பந்த ஊழியர்களுக்கு குறைந்தது இரண்டு மாத சம்பளங்கள் முதல் தவணையாகப்பட்டுவாடா செய்யப்படும் என்பதில் ஐயமில்லை.