Thursday 28 March 2019


பணிநிறைவு நல்வாழ்த்துக்கள்

31/03/2019 அன்று காரைக்குடி மாவட்டத்தில்
பணிநிறைவு பெறும் அன்புத்தோழர்கள்...

கடமைவீர்ர்...சஞ்சார் சாரதி விருதாளர்
 t.கருப்புச்சாமி
TT/பரமக்குடி

சமத்துவ நாயகம்… சமாதான நாயகன்…
 b.போஸ் சவரிநாயகம்
TT/பரமக்குடி

பணிவானவர்…
பண்பில் நல்லவர்… பணியில் வல்லவர்…
 M.இராமச்சந்திரன்
TT/காரைக்குடி

ஆகியோரின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க
மனமார வாழ்த்துகின்றோம்.

ஒப்பந்த ஊழியர் VDA உயர்வு
----------------------------
01/04/2019 முதல்
ஒப்பந்த ஊழியர்களுக்கான
VDA உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
 ----------------------------------------------------------------
UNSKILLED ஒப்பந்த ஊழியர்களுக்கு
---------------------------------------------------------------------
A பிரிவு நகரத்தில்
நாளொன்றுக்கு ரூ.558/= என்றிருந்த நாள்கூலி 
ரூ.584/= என
நாளொன்றுக்கு ரூ.26/=  உயர்ந்துள்ளது.
---------------------------------------------------------------------
B பிரிவில்...
நாளொன்றுக்கு ரூ.466/= என்றிருந்த நாள்கூலி
ரூ.487/என
நாளொன்றுக்கு ரூ.21/= உயர்ந்துள்ளது.
 ---------------------------------------------------------------------
C பிரிவில்...
நாளொன்றுக்கு ரூ.373/= என்றிருந்த நாள்கூலி
ரூ.390/= என
நாளொன்றுக்கு ரூ.17/= உயர்ந்துள்ளது.
 ---------------------------------------------------------------------
கடந்த காலங்களில் மிகவும் சொற்பமான அளவில் உயர்ந்த 
VDA இம்முறை சற்றுக் கூடுதலாக உயர்ந்துள்ளது
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆறுதலை அளிக்கின்றது.

Wednesday 27 March 2019


அடிமேல் அடி அடித்தால் அரசும் நகரும்…

01/01/2017 முதல் BSNL மற்றும் MTNLலில் பணிபுரிந்து 
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் கோரி 
BSNL மற்றும் MTNL ஓய்வூதியர்கள் சங்க கூட்டுக்குழு மத்திய அரசிடம் 12/02/2019 அன்று கோரிக்கை மனு அளித்திருந்தது. 

08/03/2019 அன்று ஓய்வூதிய இலாக்கா ஓய்வூதிய மாற்றம் பற்றி DOTயிடம் சில விளக்கங்களைக் கேட்டுள்ளது. இது சம்பந்தமாக 14/01/2019 அன்றே DOTயிடம் சில விளக்கங்கள் கேட்கப்பட்டதும்…
 DOT இன்று வரை விளக்கம் அளிக்கவில்லை என்பதும் 
DOTயின் அலட்சியப்போக்கை அப்பட்டமாகக் காட்டுகின்றது.

DOTயிடம் கேட்கப்பட்ட விளக்கங்கள்

01/01/2017க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதிய மாற்றத்திற்கான அளவுகோல் FORMULA என்னவென்று 
DOT தெளிவாகக் குறிப்பிடவில்லை. மேலும் ஓய்வூதிய மாற்றத்தினால் உண்டாகும் நிதிச்சுமையின் அளவும் குறிப்பிடப்படவில்லை.

BSNL மற்றும் MTNL ஊழியர்களுக்கு ஊதிய மாற்றம் அளிக்கப்படாத காரணத்தினால் ஓய்வூதிய மாற்றம் அளிக்க வழி இல்லை என DOT கூறியுள்ளது.  இத்தகைய சூழலில் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டால் அவர்கள் வாங்கும் ஓய்வூதியம் கூடுதலாகவும், தற்போது BSNL/MTNLலில் பணிபுரிந்து ஓய்வு பெறுவோரின் ஓய்வூதியம் குறைவாகவும் பெறக்கூடிய சூழல் உருவாகும். அத்தகைய சூழலில் இந்த வேறுபாட்டைக் களைய DOTவசம் உள்ள திட்டம் என்ன என்பதையும் 
DOT தெளிவுபடுத்த வேண்டும்.

எனவே DOT மேற்கண்ட வினாக்களுக்கு விளக்கம் அளித்திட வேண்டும் என ஓய்வூதிய இலாக்காவின் செயலர் 
DOTக்கு கடிதம் எழுதியுள்ளார்.

ஓய்வு என்பது ஓய்ந்திருப்பதற்கல்ல… 
மாறாக உரிமைகளை வாதாடிப் போராடிப் பெறுவதற்கே 
என்று முழுமுனைப்போடு…
ஓய்வூதிய மாற்றத்தை அடைந்தே தீருவோம் என்று பாடுபடும் ஓய்வூதியர் சங்க அமைப்புக்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

முயற்சி திருவினையாக்கும்…
அடிமேல் அடி அடித்தால் 
அம்மி மட்டுமல்ல... அரசும் நகரும்...

Monday 25 March 2019


திருச்சி மாவட்ட மாநாடு 
இன்று 26/03/2019
 அறந்தாங்கியில் நடைபெறும்
NFTE திருச்சி மாவட்ட சங்கத்தின்
7வது மாவட்ட மாநாடு
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்...

Thursday 21 March 2019


மனங்கசிந்த அஞ்சலி…
 
பொதுவுடைமைப் பூங்காவில் பூத்தவர்…
இயக்கநலனே தன் நலன் என வரித்தவர்…
அடிமட்ட ஊழியருக்காகவே வாழ்ந்தவர்…
மஸ்தூர் தோழர்களின் துயரம் துடைத்தவர்…
ஒப்பந்த ஊழியர்களின் உரிமைக்கு குரல்கொடுத்தவர்…
எளிமையானவர்…. இனிமையானவர்…
தோழமையில்  எல்லை கடந்தவர்….
எல்லைக்கோடுகளை இல்லாமல் செய்திட்டவர்…
BSNLEU தமிழ்மாநில உதவிச்செயலர்…
TNTCWU ஒப்பந்த ஊழியர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவர்

அருமைத்தோழர் M.முருகையா 
அவர்களின் மறைவிற்கு செங்கொடி தாழ்த்திய…
மனங்கசிந்த அஞ்சலியை உரித்தாக்குகின்றோம்…

Thursday 14 March 2019


சஞ்சார் பவன் நோக்கிப் பேரணி 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு

மக்கள் சொத்தாம் BSNL நிறுவனத்தை
நலிவடையச் செய்யும் மத்திய அரசின்
பொதுத்துறை விரோதப்போக்கைக் கண்டித்து

05/04/2019 – வெள்ளிக்கிழமை

டெல்லி சஞ்சார் பவன் நோக்கி
மா பெ ரு ம்   பே ர ணி
அனைத்து அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்பு

டெல்லி திரள்வோம்… BSNL காப்போம்

Wednesday 13 March 2019


செ ய் தி க ள்

BSNL ஊழியர்களுக்கான பிப்ரவரி மாதச்சம்பளம் 20/03/2019 
அன்று பட்டுவாடா செய்யப்படும் என்று CMD அனைத்து சங்க கூட்டமைப்புத்தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.
 -------------------------------------------------------------
MTNL ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதச்சம்பளம் இன்று 14/03/2019 பட்டுவாடா செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  -------------------------------------------------------------
13/03/2019 அன்று BSNL BOARD கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. ஆனாலும் எந்த முக்கிய முடிவுகளும் எடுக்கப்படவில்லை. தற்போதைய நிதி நெருக்கடி பற்றி இலாக்கா அமைச்சரைச் சந்தித்து  எடுத்துரைக்க  CMD அறிவுறுத்தப்பட்டுள்ளார். அடுத்த கூட்டம் 25/03/2019 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  -------------------------------------------------------------
இன்று 14/03/2019 டெல்லியில் அனைத்து சங்க கூட்டமைப்பு கூடுகின்றது. விரைவில் CMDயுடன் அனைத்து சங்க கூட்டமைப்பு விரிவான விவாதம் நடத்தவுள்ளது.
  -------------------------------------------------------------
BSNL வங்கிக்கடன் பெறுவதற்கு ஆவண செய்திட வேண்டுமென இலாக்கா அமைச்சருக்கு அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே BSNL வங்கிக்கடன் பெறுவதற்கு விரைவில் DOT ஒப்புதல் அளிக்குமென
டெல்லித்தகவல்கள்  கூறுகின்றன.
  -------------------------------------------------------------
ஏப்ரல் மாத IDA 3.4 சதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜனவரி மாதம் 6 புள்ளிகள் உயர்ந்துள்ள நிலையில் பிப்ரவரியில் கூடுதலாக 3  புள்ளிகள் உயர்ந்தால்  3.4 சத IDAவும் புள்ளிகள் குறைந்தாலும் குறைந்தது  2.1 சத உயர்வும் 
ஏப்ரல் 2019 முதல் கிடைக்க வாய்ப்புள்ளது.
  -------------------------------------------------------------
தமிழக NFTE மாவட்டச்செயலர்கள் கூட்டம்
மதுரையில் 19/03/2019 அன்று நடைபெறுகின்றது.
  -------------------------------------------------------------
வைப்புநிதி GPF பட்டுவாடா தமிழகத்தில் இன்றோ அல்லது 
நாளையோ நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Sunday 10 March 2019


முகவை மண்ணின் பெருமைமிகு NFTE

09/03/2019 அன்று இராமநாதபுரத்தில் 
NFTE காரைக்குடி மாவட்டச்செயற்குழு..
மகளிர்தின சிறப்புவிழா...
 இராமநாதபுரம் கிளை மாநாடு...
 ஓய்வுபெற்ற தோழர்களின் பணிநிறைவு விழா..
 NFTCW ஒப்பந்த ஊழியர்கள் சங்க அமைப்பு விழா

 என ஐம்பெரும் விழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இராமநாதபுரம் பகுதியின் மறக்கவியலா தலைவர் தோழர்.சவுக்கத்அலி அவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தி நிகழ்ச்சிகள் துவங்கின.

மாநிலச்செயலர் தோழர்.நடராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். AITUC சார்பில் தோழர்.S.முருகபூபதி அவர்களும், 
AIBSNLPWA சார்பில் தோழர்.P.முருகன் அவர்களும்,
 NFTCW ஒப்பந்த ஊழியர்கள் சார்பில் தோழர்.S.முருகன் 
அவர்களும்  வாழ்த்துரை வழங்கினர். 

ஓய்வு பெற்ற தோழர்களும் ஒப்பந்த ஊழியர்களும் கலந்து கொண்டு அரங்கம் நிறைத்தனர். பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன. புதிதாக பொறுப்பேற்றுள்ள தோழர்களுக்கும் பணிநிறைவு பெற்ற தோழர்களுக்கும்  
நமது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்.
 ---------------------------------------------------------------------------------
பணிநிறைவு வாழ்த்துப் பெற்றவர்கள்
தோழர். M.அரியமுத்து JE/RND
தோழியர் N.பாலா OSP/RND
தோழர். K.சாத்தையா TT/RND
தோழர். K.அருள்நாதன் TT/UCP
தோழர். S.சீனிவாசன் TT/KKD
  ---------------------------------------------------------------------------------
இராமநாதபுரம் கிளைச்சங்க புதிய நிர்வாகிகள்
தலைவர் : தோழர். A.அப்துல் மூமின்
செயலர் : தோழர்.  R.இராமமூர்த்தி
பொருளர் : தோழர். R.முருகேசன்
  ---------------------------------------------------------------------------------
புதிய மாவட்டப்பொருளாளர்
தோழர். G.தங்கராஜ் TT/இராமநாதபுரம்
  ---------------------------------------------------------------------------------
NFTCW 
NATIONAL FEDERATION OF TELECOM CONTRACT WORKERS
ஒப்பந்த ஊழியர்கள் மாவட்ட சங்க புதிய நிர்வாகிகள்
தலைவர் : தோழர். சி.முருகன்
செயலர் :  தோழர். பா.முருகன்
பொருளர்:  தோழர். இரா.மாரிமுத்து
  ---------------------------------------------------------------------------------
காரைக்குடி மாவட்டச்சங்கத்தின்
பெருமைமிகு கிளையாய் விளங்கும்
இராமநாதபுரம் கிளைச்சங்க செயல்பாடுகள்
மேலும் சிறப்படைய வாழ்த்துகின்றோம்.

உண்ணாவிரதம் ஒத்திவைப்பு

07/03/2019 அன்று CMDயுடன் அனைத்து சங்க
கூட்டமைப்புத் தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
பேச்சுவார்த்தையின் முடிவில் CMD 
கீழ்க்கண்ட உத்திரவாதங்களை அளித்துள்ளார்…
 ------------------------------------------------------------------------------
பிப்ரவரி மாத சம்பளம் இந்த வார 
இறுதிக்குள்  பட்டுவாடா செய்யப்படும்…

பிப்ரவரி மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட
GPF, EPF, ஆயுள்காப்பீடு,வங்கிக்கடன் மற்றும் இதரவகைப் 
பிடித்தங்கள் அனைத்தும் உடனடியாக செலுத்தப்படும்…

போராட்டத்தின் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது.

அதிகாரிகள் மீது FR-17 A விதிகளின்படி நடவடிக்கை இருக்காது.
  ------------------------------------------------------------------------------
மேற்கண்டவாறு கூட்டமைப்புத் தலைவர்களிடம் CMD உறுதி அளித்ததின் பேரில் 12/03/2019 அன்று நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Thursday 7 March 2019


உழைக்கும் பெண்கள் ஆர்ப்பாட்டம் 
மார்ச் 8 மகளிர் தினத்தன்று
AITUC சார்பாக 
மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்…
08/03/2019 – வெள்ளி – மாலை 06 மணி
இராஜீவ்காந்தி சிலை அருகில் – காரைக்குடி

கோரிக்கைகள்
மத்திய அரசே…
குறைந்தபட்ச சம்பளம் ரூ.18000/- நிர்ணயம் செய்…
சமவேலைக்கு சமஊதியம் வழங்கு…
20 ஆண்டுகள் தொடர்ந்து 
மாதம் 200 ரூபாய் செலுத்தினால் மட்டுமே
3000 ரூபாய் ஓய்வூதியம் என்னும் 
மோசமான திட்டத்தினைக் கைவிடு…

குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே பணி வழங்குவது என்ற
கொத்தடிமைச்சட்டத்தைக் கைவிடு…

பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக 
தொழிலாளர் சட்டங்களைச் சிதைக்காதே…

பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுத்திடு…
பெண்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்து...

உண்ணாவிரதம் 
பிப்ரவரி மாத சம்பளம்
இன்னும் வழங்கப்படாதது  குறித்தும்
அதிகாரிகள் சங்கத்தலைவர்கள் மீது
தொடுக்கப்படும் பழிவாங்குதல் குறித்தும்…
ஊழியர்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகள் குறித்தும்…
டெல்லியில் 07/03/2019 அன்று கூடிய
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு விவாதித்தது.

கீழ்க்கண்ட முடிவுகளை அறிவித்துள்ளது.

மார்ச் 12 முதல்... 
டெல்லி தலைமையகத்தில் தொடர் உண்ணாவிரதம்…

பிரச்சினைகள் தீராவிடில்…
மாநிலங்கள் மற்றும் மாவட்டத்தலைநகர்களில்
தொடர் உண்ணாவிரதம்…

ஏப்ரல் மாதம்...
பிரதமர் அலுவலகம் நோக்கிப் பேரணி…

இதனிடையே…
இன்று மார்ச் 8 வெள்ளிக்கிழமையன்று…
தமிழக CGM அலுவலகம் முன்பாக
அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக
ஒருநாள் அடையாள தர்ணா நடைபெறும்…
என்று அறிவிக்கப்பட்டுள்ளது…

தோழர்களே…
ஊதியம் தராமல் உன்மத்தமாக நடந்து கொள்ளும்…
BSNL மற்றும் DOT நிர்வாகங்களை எதிர்த்து
நமது தலைவர்கள் மேற்கொள்ளும்
தொடர் உண்ணாவிரதம் வெற்றி பெற வாழ்த்துகின்றோம்…

பின்குறிப்பு:
தலமட்டங்களில்…
மார்ச் ஒன்றாம் தேதியில் இருந்தே
ஊழியர்களும் அவர்களது குடும்பத்தாரும்…
தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால்…
தலைவர்களைத் தொடர்ந்து
தொண்டர்களும் உண்ணாவிரதம்
இருந்திட அவசியம் இல்லை என்று கருதுகின்றோம்…

மார்ச் – 8 சர்வதேச மகளிர் தினம் 
மகிழ்ந்திடு மகளே…
இன்று ஒரு நாளாவது…
உன்னை நாங்கள்….
நினைத்துப் பார்ப்பதற்கு…
 -----------------------------------------------------------------------------
மகளிர் தின சிறப்புக்கூட்டம்
 -----------------------------------------------------------------------------


08/03/2019 – வெள்ளி – காலை 11.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தலைமை 
திரு S.இராஜேந்திரன் 
துணைப்பொதுமேலாளர்

சிறப்புரை 
பேராசிரியர். திருமதி.மு.மீனலோச்சனி
தமிழ்த்துறைத் தலைவர் 
சாரதா பெண்கள் கல்லூரி – காரைக்குடி

அனைவரும் வருக….

 -----------------------------------------------------------------------------

உயிரைக் காக்கும்
உயிரினைச் சேர்த்திடும்..
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்...
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா…
-பாரதி-

Wednesday 6 March 2019


அனைத்து சங்க கூட்டம்

இன்று 07/03/2019 டெல்லியில் காலை 11 மணிக்கு
அனைத்து சங்க கூட்டம் நடைபெறுகின்றது.
DOT மற்றும் BSNL நிர்வாகங்களின் அடாவடித்தனங்கள்  
நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகின்றன.
குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்தது போல
நமது போராட்டத்தைக் கண்டுகொள்ளாத நிர்வாகங்கள்
பிப்ரவரி மாத சம்பளத்தைப் பட்டுவாடா செய்யாமல்
நம்முடைய வயிற்றிலும் மண்ணடிக்க ஆரம்பித்து விட்டன.

அதோடு நிற்கவில்லை…
போராட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் மீது
FR-17 A என்னும் மரித்துப்போன சட்டங்கள் பாயும் 
எனவும் நிர்வாகங்கள் கொக்கரிக்க ஆரம்பித்துள்ளன.

உழைத்த ஊழியர்களின் சம்பளப்பட்டுவாடா பற்றி
இதுவரை  எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே இந்நிலை பற்றி விவாதிக்கவும் உரிய முடிவுகள் எடுக்கவும் நமது அனைத்து சங்க கூட்டமைப்பு இன்று கூடுகின்றது.
தோழர்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டு
உரிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கின்றோம்.

மகளிர் தினவிழா

மார்ச் 8  - மகளிர்தினம்

08/03/2019 – வெள்ளிக்கிழமை
காலை 11.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம்
காரைக்குடி.

தோழர்களே வருக…

Monday 4 March 2019


WE SHALL OVERCOME

ஊதிய உயர்வு இல்லை…
இன்று ஊதியமே இல்லை…
நடப்பதென்ன…
யாமறியோம்.. பராபரமே….
இப்படியே விட்டு விடுவோமா?

இல்லை… தோழர்களே…
இது அதிகார வர்க்கத்தின்...
திட்டமிட்ட ஆணவச்செயல்...
முனைப்போடு இதை
முறியடிப்பது நமது கடமை...

ஒன்றாய் நாம்... 
எழுந்து நிற்போம்...
எரிந்து விழும் சாம்பலிலும்…
எழுந்து வரும் பீனிக்ஸாக…
எழுந்து வருவோம்…
கொழுந்தென எரிவோம்…
விழுதென நிலைப்போம்…
----------------------------------------------------------------------------------
இதோ…
அருமைத்தலைவர் ஜெகன் அவர்களின்
மனம் கவர்ந்த பாடல் வரிகள் இவை…
உரிமைக்கான உணர்வுக்கான பாடல் வரிகள்….
உணர்வு கொள்வோம்… உரிமை வெல்வோம்…
----------------------------------------------------------------------------------
WE SHALL OVERCOME…

We shall overcome…
we shall overcome…
We shall overcome someday…

Oh… deep in my heart…
I do believe…
We shall overcome someday…

We're on to victory…
We're on to victory…
We're on to victory someday…
Oh.. deep in my heart…
I do believe…
We're on to victory someday…

We'll walk hand in hand…
we'll walk hand in hand…
We'll walk hand in hand someday…
Oh… deep in my heart…
I do believe…
We'll walk hand in hand someday…

We are not afraid…
we are not afraid…
We are not afraid today..
Oh… deep in my heart…
I do believe…
We are not afraid today…

The truth shall make us free…
the truth shall make us free…
The truth shall make us free someday…
Oh… deep in my heart…
I do believe…
The truth shall make us free someday…

We shall live in peace…
we shall live in peace…
We shall live in peace someday…
Oh… deep in my heart…
I do believe…
We shall live in peace someday...