Sunday, 7 April 2013


மரண  (சோ)சாதனை

BSNL  ஊழியர்கள்
சாதாரணமாக செத்தால்   ஒரு லட்சம்..
அடிபட்டுச்  செத்தால் 2 லட்சம்..
நீத்தார் குடும்பத்திற்கு காப்பீட்டுத் தொகை - LIC
நிறைய  வாங்கித்தந்தது BSNLEU   சங்கம்..
இது BSNLEU சங்கத்தின் மாபெரும் மரண சாதனை ..

என்றொரு எட்டாண்டு சாதனைகள் பட்டியலைப்
படிக்க வேண்டிய
மரண  வேதனை நமக்கு நேரிட்டது.

INSURANCE என்பது இலவசம் அல்ல..
மாதாமாதம் பணம் பிடிக்கப்பட்டு 
மரித்த பின்போ ஓய்வுக்குப் பின்போ 
உரிய தொகை அளிக்கப்படுகின்றது.
இதில் சாதனைக்கு எங்கே இடம்?


இறப்பிலும் சாதனை சொல்லும் 
இந்தப் பாவிகளைப் பார்த்து
இறந்த ஆவிகளும் பரிகாசம் பண்ணும் ..
அவர்கள் பிடிக்கும் செங்கொடியே  
அவர்களைப் பார்த்து சிரிக்கும்..

காப்பீட்டுத்திட்டத்தில்
கணக்கின்றி அடித்த கூட்டம்
105 ரூபாய் இழப்பீட்டுத்திட்டத்தில்
35 ரூபாயை இழப்பாக்கிய   கூட்டம்

மரித்தவர்  மனைவிக்கு
மதிப்பெண் போடச்சொல்லி
மதிப்பிழந்த கூட்டம்

பாடை ஏறியவரையும்
பரலோகம் சென்றவரையும்
எட்டாண்டு  இமாலய சாதனைப் பட்டியலில்
இணைத்து வாக்கு கேட்கும்
இந்த வ(வா )க்கற்ற
நிலையை நினைக்கும்போது
மனம் நொந்து வெந்து போகின்றது..

எட்டாண்டில் செயலற்று
மரித்த நிலையில் இருந்து விட்டு
இப்போது மரித்தவருக்கு
லட்சம் வாங்கித்தந்தோம் என்று கூவுவது
நல்ல தொழிற்சங்க  லட்சணமாகுமா?


"ஏமாற்றுவதைக் காட்டிலும்
தோற்றுப்போவது மரியாதைக்குரியது"

என்ற ஆபிரகாம் லிங்கனின் பொன்மொழிகள்
BSNLEU  சங்கத்திற்கு அப்படியே பொருந்தும்..

ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட 
ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு 
ஏப்ரல் 16ல் எழுதப்படும் இறுதிச்சாசனM .


  










வன்மையாகக் கண்டிக்கின்றோம் 


2G ஊழல் மற்றும் 
ISDN இணைப்பு ஊழல் ஆகியவற்றில் 
திமுக மந்திரிகளின் தில்லுமுல்லுவை 
ஊரறிய அம்பலப்படுத்தி தொடர்ந்து போராடி வருபவர் 
நமது துணைப்பொதுச்செயலர் 
அருமைத்தோழர். மதிவாணன் அவர்கள்.
அவர் மீது அவதூறு பரப்பியுள்ளது 
தினகரன் பத்திரிகை.
தினகரனின்  திராணியற்ற செயலை 
வன்மையாக கண்டிக்கின்றோம்.

கீழ்த்தனமான தந்திரங்களினால் 
மகத்தான காரியங்கள் 
எதனையும் செய்ய முடியாது 
என்ற சுவாமி விவேகாநந்தரின் 
பொன்மொழியை 
தினகரனுக்கு நினைவூட்டுகின்றோம்.

Thursday, 4 April 2013


திருட்டுப்பூனை 



போராடிப்பெற்ற போனசை திருடிய பூனை
பதவி உயர்வைப்  பாழ்படுத்திய பூனை
5 நாள் வேலையை அடியோடு அழித்த பூனை
பரிட்சை இல்லாமல் பதவி உயர்வு என்று பாசாங்கு விட்ட பூனை
மருத்துவப்படியை மரிக்க வைத்த பூனை
78.2 IDA இணைப்பை இழுத்தடிக்கும்  பூனை
5 ஆண்டுக்கு ஒரு சம்பள உயர்வு என்று அள்ளி விட்ட பூனை
மாற்றல் விதிகளால் ஊழியரை மிரட்டி தன் சங்கத்திற்கு மாற வைத்த பூனை
தொழிலாளர் உரிமைகளை காற்றில் பறக்க விட்ட பூனை
தொழிற்சங்க மரியாதையை  மண்ணோடு  மண்ணாக்கிய பூனை

இன்று
நம்மைப் பார்த்து வெட்கங்கெட்டு  கேட்கின்றது...

"எட்டு ஆண்டுகள் இருண்ட காலமா?
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடுமா" ? என்று..

60 ஆண்டுகளாக.. 
உடன் கொல்லும் வியாதியாக 
நம்முடன்  வாழ்ந்து.. 
முன்னேற்றங்களை முடக்கி,
கண்ணை  மூடி.. கண்மூடித்தனமாக விமர்சனம் மட்டுமே செய்யத்தெரிந்த 
ஒரிஜினல் குருட்டுப்பூனைக்கு..

8  ஆண்டுகளாக ஏகப்பட்ட  சலுகைகளை, 
உரிமைகளைத்  திருடிய 
அங்கீகார, அகங்கார  திருட்டுப்பூனைக்கு 
NFTE ஐ விமர்சனம் செய்ய ஏது அருகதை?

தோழர்களே ..
ஏப்ரல் 16ல்..
கட்டுவோம் கடைசி மணியை..


JTO - தேர்வு 

வயது மற்றும் கல்வித்தகுதிக்கான விளக்கங்கள் 
CORPORATE  அலுவலகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

INSTRUMENT  மற்றும் INSTRUMENTATIONல் 
பெற்ற DIPLOMAவும்  
மற்ற  DIPLOMA கல்வித்தகுதிக்கு இணையாக கருதப்படும்.


வயது வரம்பு -  JTO காலியிடங்கள் உள்ள 
ஒவ்வொரு ஆளெடுப்பு ஆண்டின் -  RECRUITMENT YEARன் 
 ஜூலை முதல் தேதி  அன்று கணக்கிடப்படும். 

எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட 
வழக்கின் அடிப்படையில் மேற்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப்  பூர்த்தி செய்வதற்காக
 கூடுதலாக 7 முதல் 10 நாட்கள் அவகாசம் அளிக்கவும் 
BSNL உத்திரவிட்டுள்ளது.

Wednesday, 3 April 2013


தேர்தல்  பிரச்சார சிறப்புக்கூட்டம்



05/04/2013 - வெள்ளிக்கிழமை  - மாலை  5 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம்


தலைமை :  தோழர். ந. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர்

சிறப்புரை:   தோழர்கள்

P. செல்லப்பா
மாவட்டச்செயலர்  - SNATTA

S. கேசவன்
 மாநிலப்பொருளர் - SNATTA 

T. ஜெபக்குமார்
தலைவர் - NFTE  - விருதுநகர்

சங்க இலக்கியச்செல்வர்   தோழர். கடலூர் 

கோ . ஜெயராமன்
 அகில இந்தியச் செயலர் - NFTE

எட்டாண்டு தரித்திரம் துரத்துவோம்..

நூறாண்டு சரித்திரம் திருப்புவோம்.. 

போராடிப்  பெற்ற உரிமைகளை 
காற்றில் பறக்க விட்ட 
ஊதாரிகளைப் புறந்தள்ளுவோம் ..

இணைந்த கரங்களுக்கு 
வாக்களிப்போம் .

தோழர்களே!  வாரீர்!! 

தோழமையுடன் 

P. காந்தி                      V . மாரி 
கிளைச்செயலர்       மாவட்டச்செயலர் 



Tuesday, 2 April 2013




படங்காட்டி பயில்வான் 


எட்டு ஆண்டில் என்ன  சாதித்தோம்?   
எங்கே சறுக்கினோம்?
என்று சொல்ல வக்கற்றுப் போய் ..

"அகில இந்தியாவில் BSNLEU  சங்கத்திற்கு 
1,14,534  உறுப்பினர்கள். 
எனவே 51 சத வாக்குகள் பெற்று 
ஒரே சங்கமாக  வெற்றி பெறுவோம்.
எனவே.. வெற்றி பெறும் 
BSNLEU சங்க(ட)த்திற்கே வாக்களியுங்கள்.. "
 என்று  
கீறல் விழுந்த     இ(ம்)சைத்தட்டாக 

கிளை முதல் அகில இந்தியச்செயலர் வரை 
பிரச்சாரக்கூட்டங்களில் 
BSNLEU பஜனை பாடுவது போல் பாடி வருகின்றது.

 அவர்களின் இந்த பலமிழந்த பஜனைக்கும்  
வடிவேலுவின் SIX PACK 
படங்காட்டி  BODYக்கும் 
அதிக வித்தியாசமில்லை.

மார் தட்டியவர்கள், 
மமதை கொண்டவர்கள், 
மண்ணைக்கவ்விய வரலாறு 
மண்ணில்... நிறைய உண்டு.


மேற்கு வங்கத்தில் 
இப்படித்தான் சொன்னார்கள்.
 இறுதியில் மம்தாவிடம் 
மண்ணைக் கவ்வினார்கள்.


ஏப்ரல் 16ல் , 
BSNLலில் BSNLEU மண்ணைக்கவ்வும் ..
அவர்களது மண்டைக்கனம் 
மண்ணோடு மண்ணாகும்....

இது  சர்வ நிச்சயம். 
------------------------------------------
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை 
 அணியுமாம் தன்னை வியந்து 
வள்ளுவர் 
  




Monday, 1 April 2013


அபி லாசை 

என் பெயர் M. சோணகிரி TM. 
நீங்கள் நினைப்பது சரிதான்.  
நான் M சங்க உறுப்பினர்தான்.  
வெற்றி பெற்ற சங்கத்தோட இருப்பது எவ்வளவு வசதி தெரியுமா?
அதெல்லாம்  உங்களுக்கு புரியாது.  

எங்கள் சங்கத்தலைவர் ஊர்சுற்றி உலகநாதன் தொலைபேசியில் அழைத்தார்.
"தோழர்,  அகில இந்திய பொதுச்செயலர் மதுரை வருகின்றார்.  
காணக்கிடைக்காத காட்சி . நீங்கள் உடனே வரவேண்டும்"  என்றார். 
"கையில் காசில்லையே"  என்றேன். 
"அதெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம்.
மதுரையில் சேவையை மேம்படுத்த போகின்றோம் . 
எனவே உங்களுக்கு சிறப்பு விடுப்பு உண்டு, கிளம்புங்கள்  " என்றார். 

ஒரு நாள்   பொழுது போனால் சரி என்று கிளம்பினேன். 
போகும் போது மனைவி சொன்னாள்.
"ஏங்க, உங்க தலைவரிடம் இந்த வருஷமாவது போனஸ் கிடைக்குமா?
என கேட்டு வாங்க,  பக்கத்து வீட்டு தபால்காரன் பொண்டாட்டி படு கேவலமா என்னைப்  பார்க்கிறாள். 
"அப்புறம் நம்ம மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். அதுக்கு முன்னாலே அவளை எங்கேயாவது சுற்றுலா  கூட்டிப்  போக வேண்டும். 
LTC எப்போ  வரும்? என்று அதையும் கேளுங்கள். 
ஏங்க! BSNL  ரொம்ப நட்டத்திலே இருக்குனு பத்திரிகையில் படிச்சேன் . 
அதிலே இருந்து எனக்கு  PRESSURE  ஏறிப்போச்சு.
மாத்திரை செலவுக்கு காசு இல்லை. 
மெடிக்கல் பணம் எப்போ கிடைக்கும்?
அதையும் கொஞ்சம் கேளுங்கள்" என்றாள்.

ஏது?  இவள்  M குடும்ப உறுப்பினரா?  NFTE  உறுப்பினரா? 
இத்தனை கேள்வி கேட்கிறாளே?  என நினைத்துக்கொண்டு 
"அதுக்குதானே போறேன்,  கட்டாயம் கேட்டு வாரேன்"
என்று  சொல்லி கிளம்பினேன். 
மதுரையில் கட் அவுட்கள் கண்ணைப் பறித்தன.
நம் தலைவர்கள் அரசியலுக்கு ஏத்த ஆளுகதான்.
தலைவர் அபி பேச ஆரம்பித்தார். 
நம்மிடம் ஒரு லட்சத்து பத்தாயிரம்  உறுப்பினருக்கான  
சந்தா வருகின்றது. எனவே வரும் தேர்தலில் 
51 சதம் பெற்று ஒரே  சங்க  ஆட்சி முறையைக் கொண்டு வருவோம்.  
ஆனால் நிர்வாகம் நமது பந்தாவை பார்த்து இப்போது  பயப்படுவதில்லை . 
நமது சந்தாவைப் பார்த்துத்தான் பயப்படுகின்றது. 
எனவே 2 லட்சம் சந்தாவையும் நாம் பெற வேண்டும்.
தற்போதைய மாதம்  20 லட்ச ரூபாய்  சந்தாவில் சங்கம் நடத்துவது மிகவும் சிரமம். 
எனவே புரட்சிகர காரியங்களை நாம் ஆற்ற வேண்டுமானால்
மாதம் 40 லட்சம் ரூபாய்   சந்தா வேண்டும். எனவே அதற்கான காரியங்களை நீங்கள் ஆற்ற வேண்டும்"  என்று முழங்கினார்.

எனக்கோ கிளம்பும்போது என் மனைவி முனங்கியது மட்டுமே மனதில் நின்றது.  எனவே துணிந்து எழுந்து
"தோழர்    போனஸ், மெடிக்கல்,LTC என்னாச்சு?" என்று கேட்டேன். 

எனது கேள்வியை ஒட்டி சலசலப்பு உண்டானது. 
எல்லா சம்சாரங்களும் எதாவது சொல்லி அனுப்பி இருப்பார்கள் போலும். 
உடனே  உட்காருங்க! உட்காருங்க! என்று சத்தமிட்டார்கள். 
அபி அதன்பின் ஆவேசமாக சொன்னார். 
"உலகிலேயே அதிக சம்பளம் உங்களுக்கு நாங்கள் போராடி வாங்கி கொடுத்துள்ளோம். அற்ப விஷயங்களுக்காக கேள்வி கேட்காதீர்கள். 
நமது இலட்சியம் 2லட்சம்  சந்தா... 
அதற்கான வேலையைப்பாருங்கள், புரட்சி ஓங்குக!!! 
என்று கூறி கூட்டத்தை அவசரமாக முடித்தார்கள்.  

ஊழியரது  அபிலாசைகளைக் கேட்கப்போனால் 
அபி அவரது அபிலாசைகளைக் கூறுகின்றார்.
இதுதானா நாம் கண்ட தொழிற்சங்கப்  பாரம்பரியம்?

மனம் நொந்து நடந்தேன். 
வழியில் இலங்கைப்பிரச்சினைக்காக 
CPI தோழர்களின்  பொதுக்கூட்டம் நடந்து  கொண்டிருந்தது.


செல்போன் மணி அடித்தது. 
அது சிலேத்தும நாடி போல்  ஜீவன் இல்லாமல்
விட்டு விட்டு அடித்தது. 
எனது மனைவியின்  அழைப்பாக இருக்கும்.


ஆனால்.. 
பொதுக்கூட்டம்  நடத்திய தோழர்களின்  இணைந்த கரங்களில் 
எழுந்த ஒலி உற்சாகமாய்க்  கேட்டுக்கொண்டிருந்தது.
இரண்டும்  ஏப்ரல் 16ஐ எனக்கு  நினைவூட்டியது.


மனம் தெளிந்தது.


தொழிலாளியின் அபிலாசை நிறைவேற வேண்டுமானால் 
அபிகளின் ஆசை நிராசையாக வேண்டும் என்ற தெளிவு  பிறந்தது.
அதற்கான பணியினை முடிவினை ஊழியர்கள் ஏப்ரல் 16ல்
கட்டாயம்  மேற்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியமும் பிறந்தது.

நிச்சயம் உங்களுக்கு நான் உறுதி கூறுகின்றேன்.
எட்டாண்டு  காலமாக ஏமாந்த நான் 
என் பெயரைப்போல் 
இம்முறையும் ஏமாற மாட்டேன்.
இனி நான் 
சோணகிரி அல்ல..  மான கிரி... 
இது சத்தியம்...