Saturday, 13 April 2013







எட்டாண்டு  நித்திரை கலைத்திட 

தமிழ் சித்திரைப்  புத்தாண்டு 

நல்வாழ்த்துக்கள் 






Friday, 12 April 2013


DA  

BSNL  உத்திரவு 


01/04/2013 முதல் 
3.4 சத IDA  உயர்விற்கான 
BSNL உத்திரவு 
12/04/2013ல் 
வெளியிடப்பட்டுள்ளது.


BSNL ஊழியர்களின்  தற்போதைய 
ஒரே ஆறுதல் DA  மட்டுமே...

மொத்தப்புள்ளிகள் 74.9 சதம் 

Thursday, 11 April 2013


பகலும்...  இரவும்...


பகல் நேரக்காட்சி 


BSNLலில் இனி நாங்கள்தான் ஒரே சங்கம்... 
ஒரு லட்சத்து இருபதாயிரம் ஓட்டுக்களைப் பெறுவோம்...
60 சத வாக்குகளைப் பெற்று
(எதையும்) அசைக்க முடியாத சங்கமாக விளங்குவோம்...
இந்த தேர்தலுக்குப்பின் NFTE சங்கத்தை 
இருந்த இடம் தெரியாமல் ஆக்குவோம்.
காரைக்குடி NFTE மாவட்டச்செயலரை 
காஷ்மீருக்கு மாற்றுவோம்...

இரவு நேரக்காட்சி 


அம்மா.. தாயே... கதவைத் திறங்கம்மா ...
நான்தானம்மா ..
இரா.பிச்சை.. 
அங்கீகரிக்கப்பட்ட செயலர்..
கதவைக் கொஞ்சம் திறங்கம்மா...

இந்த முறை ஒரே ஒரு ஓட்டு போடுங்கம்மா.. 
உங்களுக்கு புண்ணியமா போகும்..
இல்லை என்றால் 
என் பதவிதான் போகும்...
அம்மா கொஞ்சம் கருணை பண்ணுங்கம்மா 
அம்மா.. அம்மா... அம்மா 

சே .. இவ்வளவு நேரம் 
கழுதையாய் கத்தியும்  கதவு திறக்கலியே..

எப்படி மனசு வரும்?

எட்டு வருஷமா.. ஒண்ணு...   ஒண்ணா... இழந்து  
தொழிலாளர்கள் கழுதையா கத்தினாங்க... 
நாம காதிலேயே விழாம 
கழுதையை விட மோசமா இருந்தோம்...

இப்ப தேர்தல் நேரத்திலே 
நாம கழுதையா கத்தி என்ன செய்ய?
கத்திக்கத்தி
ஏப்ரல் 16ல்.. நம்ம 
கழுத்திலே கத்தி வந்திடும் போல..

பின் குறிப்பு :
மேலே கண்டது கற்பனையோ,கதையோ..
கற்பனை கலந்த கதையோ அல்ல..
BSNLEU தோழர்கள் பகலில்
ஆத்திரத்தில் ,அபஸ்வரத்தில் முழங்குகின்றார்கள்
இரவில் வேதனையில்
ஈனஸ்வரத்தில் முனங்குகின்றார்கள்.
இதுவே உண்மை.

Wednesday, 10 April 2013



வாலிப.. அடி..   

சென்ற தேர்தல்களில்  BSNLEU சங்கம் 
அளித்த வாக்குறுதிகளும் 
செய்ததாக சொன்ன சாதனைகளும் 
இந்த  தேர்தலிலும் 
நடிகை சரோஜாதேவி போல் 
அப்படியே..
இளமை மாறாமல் உள்ளன.

பங்கு விற்பனை தடுப்பு 
தனியார் மயம்  தடுப்பு 
விருப்ப ஒய்வு தடுப்பு 
இப்படி  இவர்களுக்கு சம்பந்தமில்லாத பல 
இமாலய சாதனைகளும்,

போனஸ்,மருத்துவப்படி,
78.2 சத IDA இணைப்பு ,
அனாமலி தீர்வு,
TTA சம்பள பிரச்சினை 
அதிகாரிகளுக்கிணையான 
பதவி உயர்வு,சம்பள விகிதம் ,
5 நாள் வேலை 

என பல்வேறு  வாக்குறுதிகளும் 
வழக்கம் போல் இந்த தேர்தலிலும்
இளமை மாறாமல் உள்ளன..

பாவம் ஊழியர்கள்தான் வயதாகி 
ஒய்வு  பெற்று சென்ற வண்ணம்  உள்ளனர்.

ஆனால்..
இந்த தேர்தலில்
அவர்களது செயல்பாட்டைக் குறிக்கும் வண்ணம் 
வரிசை எண்ணில் நல்ல முன்னேற்றம்.. 
ஆம்.. வரிசை எண் 
8ல் இருந்து 9க்கு முன்னேறியுள்ளது..

எல்லோரையும் விட 
ஊழியரை ஏமாற்றும் வித்தையை 
மிக நன்றாகவே நம்பூதிரி அணி கற்றுத்தேர்ந்துள்ளது 
ஆனால் ஊழியர்கள் எந்நாளும் 
ஏமாளிகளாக இருக்க மாட்டார்கள்.

எட்டாண்டு  ஏமாந்த ஊழியர்கள் 
இவர்களது இந்த ஏமாற்று வித்தைக்கு 
ஏப்ரல் 16ல்
வலுமிக்க, வலிமிக்க,
வாலிப அடி கொடுப்பார்கள் 
அப்பொன்னாளை எதிர்நோக்கியிருப்போம்.






Tuesday, 9 April 2013

கவிழ்ந்தது போதும்.. 

கவிழ்த்து விடு..


எண்ணெய்  நிறுவன ஊழியர்கள் 
என்னைப்பார் என 
எழுந்து  நிற்கின்றார்கள் 

நிலக்கரி இந்தியா 
நிமிர்ந்து நிற்கின்றது 

தூக்கி விடுகின்றான் காலரை 
துறைமுகத் தொழிலாளி 

அடுத்த ஊதியப்பேச்சு வார்த்தை 
ஆரம்பமாகிவிட்டது.. 
வங்கியிலே பொங்குது.. மகிழ்ச்சி.. 

ஐம்பது சத கிராக்கிப்படியை 
அடிப்படைச் சம்பளத்தோடு 
இணைக்கக்கோரி 
கோரிக்கைச்  சத்தம் 
தடதடக்குது  ரயில்வேயிலே ..

ஏழாவது  ஊதியக்குழுவை 
எப்படியும்  2016ல் முடிக்க வேண்டும் என 
மார் தட்டி நிற்கின்றனர் மத்திய அரசு ஊழியர்கள் 

ஆனால்  BSNLலில் 

தாழ்ந்த நிலையில்..
தலை கவிழ்ந்து நிற்கின்றோம்..
தானென்ற அகம்பாவம்  தலைதூக்கியதால்..
அங்கீகாரம்...  அகங்காரமாக.. 
ஆட்டம்  போட்டதினால் 
தட்டிக்கேட்கும் திராணியை 
தவற விட்டதினால் 

78.2 ஐக்கூட  இன்னும் பெற முடியாமல் 
தலை கவிழ்ந்து  நிற்கின்றோம் 

தலை நிமிர்ந்து நின்ற தோழனே!
தலை நிமிர்த்து.. 
இணைந்த கரம் உயர்த்து ..

உன் தலை கவிழக் 
காரணமானவர்களின் 
கனமேறிய தலையைக்
கவிழ்த்து விடு..
ஏப்ரல்  16ல்...  




DA  உத்திரவு 

01/04/2013 
முதல்  உயர்ந்த 

3.4 சத  IDA  
உயர்விற்கான  DPE  உத்திரவு 
08/04/2013ல்  
வெளியிடப்பட்டுள்ளது.

BSNL  உத்திரவு 
விரைவில் வெளிவரும்.

Monday, 8 April 2013


தேர்தல் திருவிழா...  
           நிறைவுக்கூட்டம்

13/04/2013 - சனிக்கிழமை 
காலை 10 மணி 
கவியரசர் கண்ணதாசன் மணிமண்டபம்  காரைக்குடி .

தலைமை: தோழர். நாகேஸ்வரன்.  மாவட்டத்தலைவர் 

சிறப்புரை : தோழர்கள் 

R. கணபதிராமன் - முன்னாள்  மாவட்டச்செயலர் 
R . பூபதி - AIBSNLOA 
S. முருகன் - மாவட்ட உதவிச்செயலர் 
P. செல்லப்பா - SNATTA  மாவட்டச்செயலர் 
RM . சேதுபதி, அறந்தை 

பேருரை:  தோழர்கள் 

K. நடராஜன், மாநில உதவிச்செயலர் 
P. அழகு பாண்டியராஜா, SNATTA  மாநிலச்செயலர் 
குடந்தை ஜெயபால் 

நிறைவுரை 

தோழர். ஆர்.கே.,

தோழர்களே!  வருக!

காரைக்குடி  மாவட்டச்சங்கம்