Sunday, 7 July 2013

.

தொலைத்தொடர்பில் 100 சத 
அந்நிய முதலீட்டைக்  கண்டித்து 
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில் 

ஆர்ப்பாட்டம் 
09/07/2013 - செவ்வாய்க்கிழமை - மாலை 5 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி 

தோழர்களே..
சுதேசி இயக்கம் அன்று..
விதேசி மயக்கம் இன்று..
வெள்ளையனை வெளியேறச்சொன்னது அன்று...
விரைந்து அழைப்பது இன்று..

அன்றைய ஆட்சியாளர்களுக்கு வெள்ளை மனசு 
இன்றைய ஆட்சியாளர்களுக்கு வெள்ளையர் மனசு..
சுதந்திர நாட்டிலே..
தலைப்பாகை கட்டிய  அடிமைகள்..
இந்தியத்தாலி அறுக்கும் இத்தாலிகள் ..

இந்நிலை மாற்றிட..
தொழிலாளி வர்க்கமே.. தூக்கம் கெடு..

Friday, 5 July 2013

.

DA - DPE  உத்திரவு 

01/07/2013 முதல் 4 சத IDA உயர்விற்கான
 DPE உத்திரவு 04/07/2013 அன்று 
வெளியிடப்பட்டுள்ளது.

BSNL உத்திரவு விரைவில் வெளிவரும்.

Thursday, 4 July 2013

-

செய்திகள் 

JTO இலாக்காத் தேர்வில் தவறுதலாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய மதிப்பெண் வழங்க BSNL நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

உத்தர்கண்ட் வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளம் வழங்க BSNL ஊழியர்களுக்கு CMD வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உடல் ஊனமுற்றோரின் குடும்ப ஓய்வூதிய நடைமுறைகளை எளிமைப் படுத்தி ஓய்வூதியம் அவர்களுக்கு விரைந்து கிடைக்கும் வகையில் ஓய்வூதிய இலாக்கா உத்திரவிட்டுள்ளது.

USO நிதியிலிருந்து BSNLக்கு 1500 கோடி மானியம் அளித்து அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

VODOFONE  நிறுவனம் NATIONAL ROAMINGல் இருப்போருக்கு 
 நாளொன்றுக்கு 5 ரூபாய் என்ற  கட்டண விகிதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Wednesday, 3 July 2013

04/07/2013

 சுவாமி விவேகானந்தர் 
நினைவு நாள் 

தொண்டனாக இருக்க கற்றுக்கொள்..
தலைமைப்பதவி தானே வரும்..

.

கைபேசி வாங்க இனி 
கைரேகை வேண்டும்

SIM cardகள் வாங்குவோர் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும். அவர்களது முகவரி உறுதிப்படுத்தபட்ட பின்பே SIM CARD செயல்படுத்தப்பட வேண்டும்.. என்றெல்லாம் விதிகள்  இருந்தாலும் கடுமையான போட்டி காரணமாக 
இவை முறையாக கடைப்பிடிக்கப்படவில்லை. 

சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் 490 simcardகளை எந்த வித ஆவணங்களும் இன்றி ஒரே நபருக்கு விற்பனை செய்துள்ளது. எனவே தேச பாதுகாப்பு கருதி இனிமேல் SIMCARD வாங்குவோர்களின் கைரேகையையும் பதிவு செய்யுமாறு 
உள்துறை அமைச்சகம் DOTஐக் கேட்டுக்கொண்டுள்ளது.

.

தீயா.. வேலை.. செய்யணும்..
தோழர்களே..
இது ஜூலை மாதம்.. 
புது உறுப்பினர்களை சேர்க்கும் மாதம்.
ஜூலை 15க்குள் புது உறுப்பினர்களின் பட்டியலை
நிர்வாகத்திடம் நாம் அளித்திட  வேண்டும்.

அதற்கு முன்..
கடந்த தேர்தல் முடிவுகளை சற்று அலசிட வேண்டும்.
மற்றைய தேர்தல்களை விட இந்த தேர்தலில் நமது வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்பதை மனதில் இருத்த வேண்டும்.
100 சத குறைபாடுகள் இருந்தாலும்  BSNLEU சங்கம் 
50 சத உறுப்பினர் எண்ணிக்கையை தொட்டுக்கொண்டிருக்கின்றது  
என்ற உண்மையை நாம் மறந்திடல் ஆகாது.
எட்டாண்டுகளுக்குப் பின் இரண்டாவது சங்க அங்கீகாரம் நமக்கு கிட்டியுள்ளது . இந்த 3 ஆண்டுகளில் மிக மிக கடுமையாக நாம் உழைக்க வேண்டும். பெரும்பகுதி ஊழியரின் ஆதரவைப் பெற்று 
முதற்சங்கம் என்னும் நிலையை மீண்டும் அடைய வேண்டும்.
இல்லையேல்,  BSNLEU சங்கம் 50 சதம் அடைந்து 
ஒரு சங்க தொழிற்சங்க முறை மீண்டும் தலையெடுக்கும்..

எனவே தோழர்களே..
கிடைத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்துவோம்.
உள்குத்து,வெளிக்குத்து விவகாரங்களைக்  களைந்தெறிவோம்..
மாண்புமிக்க NFTE சங்கத்தை மீண்டும் முதன்மைச்சங்கமாக்கிட 
தீயவற்றை ஒதுக்கிடுவோம்..
தீயா வேலை செய்திடுவோம்..

Monday, 1 July 2013

.

நெய்வேலி நிலக்கரி நிறுவன
பங்கு விற்பனையை எதிர்த்து 

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக 
இணைந்த ஆர்ப்பாட்டம் 

04/07/2013 - வியாழன் - மாலை - 5 மணி 
GM அலுவலகம் - காரைக்குடி. 

சிறப்புரை : தோழர்கள் 

பழ. இராமச்சந்திரன் AITUC 

மு. காசிநாதன் CITU 

தோழர்களே.. வருக ..