Friday, 7 March 2014

 மார்ச் 8
மகளிர் தினம் 

சுமக்கப்பிறந்தவள் பெண் 
வயிற்றில் சுமப்பாள்.. 
முதுகில் சுமப்பாள்.. 
தோளில் சுமப்பாள்.. 
தலையில் சுமப்பாள்.. 
சுமக்கப்பிறந்தவள் பெண் 

எம்மைச்சுமந்தவளே.. 
உலகைச்சுமந்தவளே.. 
உன் பாதம் பணிகின்றோம்..
மகளிர் தின சிறப்புக்கூட்டம் 
பணி நிறைவு பாராட்டு விழா 
ஒப்பந்த ஊழியர் 
பொதுக்குழுக்கூட்டம் 

08/03/2014 - சனிக்கிழமை 
மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் - சிவகங்கை 

பாராட்டு பெறுவோர் 

தோழியர். 
J.கனகமணி 
TM - சிவகங்கை 

தோழர்.
P. பாஸ்கரன் 
TM - ஒக்கூர் 

:- பங்கேற்பு :- 
V . மாரி 
மாவட்டச்செயலர் - NFTE 
K . தமிழ்மாறன் 
மாவட்ட உதவிச்செயலர் -NFTE 
B. லால்பகதூர் 
மாவட்ட உதவிச்செயலர் -NFTE 
G. சுபேதார் அலிகான் 
மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் - NFTE 

-:சிறப்புரை:- 
P. இராமசாமி 
மாவட்டச்செயலர் - TMTCLU 

தோழர். சேது 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் -NFTE 

தோழர்களே வருக..

அன்புடன் 
B.முருகன் 
கிளைச்செயலர் - NFTE 
சிவகங்கை கிளை.

Thursday, 6 March 2014

புத்தியுள்ள மனிதரெல்லாம் 
வெற்றி காண்பதில்லை..

வீழ்ந்த பின்...
வெற்றி கொண்டான்..

வெற்றி பெற்ற பின் 
வீழ்ந்தான்..
=====================================================================
நாட்டு நடப்பை நினைக்கையிலே 
சந்திரபாபுவின் நினைவுகள்
ஓடுது.. மனத்திரையிலே..
தொழிலாளர்  வைப்பு நிதி 
EPF வட்டி அதிகரிப்பு 

2013-14 நிதியாண்டிற்கு 
EPF தொழிலாளர் வைப்பு நிதிக்கான 
வட்டி விகிதம் 8.5 சதத்திலிருந்து 
8.75 சதமாக 
உயர்த்தப்பட்டுள்ளது. 
இதற்கான அறிவிப்பை 
EPF நிறுவனம் 
இன்று 06/03/2014 வெளியிட்டுள்ளது. 

EPF வட்டி விகிதம் 
1989ல் இருந்து 2011 ஜுன் வரை
 12 சதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

கூறு கெட்ட தொழிலாளர் விரோத  அரசுகள்
அதை கொஞ்சம் கொஞ்சமாக 
8.75 அளவிற்கு குறைத்து விட்டன.

Wednesday, 5 March 2014

MTNL ஓய்வூதியம் 
அரசிதழ் அறிவிப்பு 
GAZETTE NOTIFICATION 

MTNL ஊழியர்களுக்கு 
01/10/2000 முதல் BSNL ஊழியர்களைப்போலவே 
மத்திய அரசின் ஓய்வூதியம் 
அளிப்பதற்கான ஓய்வூதிய விதி திருத்தம் 

CENTRAL CIVIL SERVICES ( PENSION) 
SECOND AMENDMENT RULES 2014 
03/03/2014 அன்று 
மத்திய அரசின் அரசிதழில் 
அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

CCS PENSION RULES 37(A )ன்படி
 MTNL ஊழியர்களுக்கும் 
BSNL ஊழியர்களைப்போலவே 
மத்திய அரசின் ஓய்வூதியம் கிடைக்கும்.
தொலைபேசிக்கட்டணம் 
நேரடி வசூல் 

வாடிக்கையாளர் சேவை மையங்கள் இல்லாத 
தொலைபேசி நிலையங்களில் உள்ள BSNL வாடிக்கையாளர்கள் 
தங்களது தொலைபேசிக்கட்டணத்தை செலுத்த நீண்ட தூரப்பயணமும்  நிறைய நேர விரயமும் செய்ய வேண்டியிருந்தது. 

துணைப்பொதுமேலாளர்(நிர்வாகம்) 
மற்றும் துணைப்பொதுமேலாளர்(நிதி) 
ஆகியோர்  நடத்திய அனைத்து தொழிற்சங்க கூட்ட முடிவின்படி   
மார்ச் மாதம் முதல் காரைக்குடி மாவட்டத்தில்
 வாடிக்கையாளர் சேவை மையங்கள் இல்லாத தொலைபேசி நிலையங்களில் மாதம் ஒருமுறை நேரில் சென்று தொலைபேசிக்கட்டணம் வசூல் செய்யும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

இந்தப்பணியில் ஈடுபடும் தோழர்களுக்கு 
உணவுப்படியாக நாளொன்றுக்கு ரூ.100/= வழங்கப்படும். 
பயணத்திற்கு இலாக்கா வாகன வசதி அளிக்கப்படும்.

நமது தோழர்கள் இந்தப்பணியில் உளப்பூர்வமாக ஈடுபட வேண்டும். 
மறுதலிப்பது மாண்புடையதல்ல.  தோழர்கள் மறுதலிக்கும் இடங்களில் நமது கிளைச்செயலர்கள் இந்தப்பணியைச் செய்திட வேண்டும். கிளைச்செயலரும் மறுதலித்தால் மாவட்டச்செயலர் தொலைபேசிக்கட்டண வசூல் பணியில் ஈடுபடுவார்.

இன்றைய சூழலில் வாடிக்கையாளர்களை வசப்படுத்துவது.. 
BSNLஐ வலுப்படுத்துவது நமது கடமையாகின்றது. 
BSNLஐகாப்போம் என்ற  மேடை முழக்கத்தோடு ..நில்லாமல் 
 களப்பணி ஆற்றுதல்.. காரியம் முடித்தல் 
என்பதனையும்  மனப்பூர்வமாக செய்து முடிப்போம்..

Sunday, 2 March 2014

இகழும் பூமியை அகழ்ந்து விடு 

மகளிர் தின சிறப்பு விழா 
பணி நிறைவு பாராட்டு விழா 
மாவட்டச்செயற்குழு 

08/03/2014 - சனிக்கிழமை 
காலை 10 மணி 
BSNL பொதுமேலாளர் அலுவலகம் 
 காரைக்குடி 

-:சிறப்புரை :-
தோழர். சேது 
மாநிலச்சங்க சிறப்பு அழைப்பாளர் 

தோழர். பழ. இராமச்சந்திரன் 
தலைவர் AITUC 

பேராசிரியர். 
முனைவர். மு.சு.கண்மணி 
சேவுகன் அண்ணாமலை கலைக்கல்லூரி 
தேவகோட்டை 


உரமூட்டும் கருத்துக்கள்..
உணர்வூட்டும் 
இயல் இசை நாடகங்கள்..

தோழியர்களே வருக..
தோழர்களே.. வருக..
NFTE மாவட்டச்சங்கம்