Tuesday, 6 January 2015

06/01/2015
காரைக்குடி..
முப்பெருங்காட்சிகள் 
தோழர்.குப்தா
இரண்டாம் ஆண்டு
நினைவஞ்சலி
 

ஒரு கோடி கையெழுத்து இயக்கம்
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர்
தோழர்.குணசேகரன் துவைக்கி வைத்தல் 
கூட்டமைப்பின்
நாடு தழுவிய தர்ணா
கோரிக்கை முழக்கம் 

06/01/2015 அன்று காரைக்குடியில் 
தோழர் .குப்தா அவர்களின் 
நினைவேந்தல் நிகழ்ச்சி 
நெகிழ்ச்சியுடன் நடந்தேறியது.
சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் 
அன்புத்தோழர்.குணசேகரன் அவர்கள் 
மலரஞ்சலியுடன் தோழர் குப்தாவிற்கு 
புகழஞ்சலி செலுத்தினார்.

BSNL நிறுவனம் காக்க..
பிரதமருக்கு ஒரு கோடி கையெழுத்துக் 
கோரிக்கை விடும் இயக்கத்தை 
சிவகங்கை மாவட்டத்தில் எழுச்சியுடன் துவக்கி வைத்தார்.

கூட்டமைப்பின் தர்ணா போராட்டத்தை 
BSNLEU மாநில உதவிச்செயலர் 
தோழர்.செல்வின் சத்தியராஜ் துவக்கி வைத்தார். 
சிறப்புரையாற்றிய சிவகங்கை சட்ட மன்ற உறுப்பினர் 
தபால் தந்தி தொழிற்சங்க இயக்கத்தின் மாண்பையும்,
தலைமையின் பண்பையும் பெருமை பட எடுத்துரைத்தார். 
இந்த ஒன்று பட்ட இயக்கம் 
பொதுத்துறை காக்கும் இயக்கமாக, 
மக்கள் சொத்தைக் காக்கும் இயக்கமாக, 
தேசம் காக்கும் இயக்கமாக 
சமூகக்கடமை நிறைந்த இயக்கமாக 
பரிணமிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச்செயலர் தோழர்.நா.சாத்தையா, 
மாதர் சங்கத்தலைவர் தோழியர்.மஞ்சுளா, 
AITUC தலைவர் தோழர்.பழ.இராமச்சந்திரன்,
AITUC மாவட்டச்செயலர் தோழர்.கார்வண்ணன்,
CITU மாநிலக்குழு உறுப்பினர் தோழர்.சிவாஜி, 
CITU மாவட்டத்தலைவர் தோழர்.வீரையா, 
ஓய்வு பெற்றோர் சங்கங்களின் சார்பாக
தோழர்கள்.நாகேஸ்வரன், சுப்பிரமணியன், ராதாகிருஷ்ணன் 
மற்றும் கூட்டமைப்பின் தலைவர்கள்,
பங்கேற்று தர்ணாவைச் சிறப்பித்தனர்.

அனைவருக்கும் கூட்டமைப்பின் சார்பாக 
நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.

Monday, 5 January 2015

ஜனவரி 6
தோழர்.குப்தா 
நினைவு தினம் 

புத்தனுக்குப்பின் அன்பில்லை... 
பார்த்தனுக்குப்பின் அம்பில்லை..

கர்ணனுக்குப்பின் கொடையில்லை..
கம்பனுக்குப்பின்  கவிதையில்லை..

தொழிற்சங்க உலகிலே...
குப்தாவுக்கு எவரும் இணையில்லை...

சிறியோரை மேம்படுத்தினான் 
வலியோரை வசப்படுத்தினான்...

அவையத்து நம்மை முந்த வைத்தான் 
நம் அவயத்துள் என்றும் குடி கொண்டான்...

தனிவழி தவிர்த்தான்..
பொதுவழி படைத்தான்...

அவன் சொன்ன வழியில் ஒன்றுபட்டு நின்று..
அதிகாரி தொழிலாளி கைகோர்த்து இன்று...

அவன் சொன்ன பொதுவழி அல்லால்..
அல்லல் தீர புதுவழி ஏதுமில்லை இங்கு...

சிந்தனையில் சீர்மிகு சிற்பியவன்... 
சிலையாகி விட்டான்..இன்று..
சிறியன நாட்டில் நடப்பது கண்டு...

தன்னந்தனி  தனிவழி தவிர்ப்போம்...
இணைந்து செல்லும் பொதுவழி புகுவோம்....
இன்னல் தீர்க்கும் பொதுமை வழி கொள்வோம்...

அதுவே..
அவனுக்கு நாம் செய்யும்..
ஆகப்பெரும் அஞ்சலி..
நாசம் போகும் பொதுத்துறை காக்க... 
நலிவுறும் BSNL  காக்க... 
மோசம் போகும் தேசம் காக்க...
இராமநாதபுரத்தில் 
ஒரு கோடி கையெழுத்து இயக்கம் 
துவக்கி வைப்பவர் 
தோழர்.ஆர்.கே.,

10/01/2015 - சனிக்கிழமை - மாலை 4 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 

நாம் பிறந்த தேசம் காத்திட.. 
நாம் வளர்த்த BSNL காத்திட..
தோழர்களே... அணி திரள்வீர்..

அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் கூட்டமைப்பு 
காரைக்குடி.

Sunday, 4 January 2015

BSNL
அனைத்து சங்க
கூட்டமைப்பு 
மார்ச் 2015
அகில இந்திய வேலை நிறுத்தம்
 -: 21 அம்சக் கோரிக்கைகள் :- 

மத்திய அரசே.. BSNL நிர்வாகமே..
  • காலியாக உள்ள CMD மற்றும் இயக்குனர் காலியிடங்களை நிரப்பு..
  • BSNL  துணை நிறுவனங்களை  ஏற்படுத்தாதே..
  • கிராமப்புற தரைவழி தொலைபேசி   சேவைக்கான   சன்மானம் வழங்கு.. 
  • BSNL வளர்ச்சிக்கான உரிய உபகரணங்கள் வழங்கு.. OFC வழித்தடங்களில் கவனம் செலுத்து
  • BSNLன் அனைத்து சொத்துக்களையும் BSNLக்கே  வழங்கு...
  • BSNL - MTNL இணைப்பு  முடிவை நிறுத்து...
  • SPECTRUM  அலைவரிசை வர்த்தகத்தில் BSNLக்கு உரிய சலுகை  வழங்கு..
  • PENSION CONTRIBUTION  ஓய்வூதிய பங்களிப்பை வாங்கும் சம்பளத்தில் கணக்கிடு...
  • BSNL வசம் உள்ள 900 MHZ  அலைவரிசையை தனியாருக்கு தாரை வார்க்க துணை போகும் TRAI  முடிவை ரத்து செய்...
  • ஊழியர் விரோத BSNL  விரோத DELOITTEE குழு பரிந்துரையை ரத்து செய்...
  • அலைவரிசை ஒதுக்கீட்டை  BSNLக்கு கட்டணமின்றி வழங்கு...
  • BSNL வளர்ச்சிக்கு உரிய நிதி ஆதாரம் வழங்கு...
  • அகன்ற அலைவரிசை துணை நிறுவனமான  BBNL  நிறுவனத்தை BSNL உடன் இணை...
  • 4G தொழில் நுட்பம் வழங்கும் வசதியை BSNLக்கு கட்டணமின்றி வழங்கு...
  • அலைவரிசை வசதி திருப்பி ஒப்படைக்கப்பட்ட பகுதிகளுக்கான கட்டணத்தை உடனே  வழங்கு..
  • ஓய்வு பெற்ற தோழர்களுக்கு  78.2 IDA இணைப்பை உடனே அமுல்படுத்து..
  • புதிய ஊதிய மாற்றம் ஏற்படும்போது ஓய்வூதிய மாற்றமும் ஏற்படுத்திட உத்திரவிடு..
  • புதிய ஊழியர்களை பணியில் அமர்த்து...
  • மத்திய,மாநில,பொதுத்துறை அரசு நிறுவனங்களில் BSNL சேவையைக்  கட்டாயமாக்கு..
  • ITI நிறுவனம் மூலம் உபகரணங்கள் வாங்குவதை  கட்டாயமாக்காதே...
  • BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30 சத ஓய்வூதியப்பலன் வழங்கிட முடிவு செய்த  மத்திய அமைச்சரவையின் முடிவை அமுல்படுத்து...

BSNL அனைத்து ஊழியர்கள்
அதிகாரிகள் கூட்டமைப்பு 
காரைக்குடி 
தட்டினால் திறப்பது அந்தக்காலம்..
முட்டினால் திறப்பது இந்தக்காலம் ..
நாடு காக்க 
நமது BSNL  காக்க 
நாடு தழுவிய தர்ணா 
மற்றும் 
ஒரு கோடி கையெழுத்து இயக்கம் 

முதல் கையெழுத்திட்டு 
இணைந்த போராட்டத்தை 
துவக்கி வைப்பவர் 
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சி 
சிவகங்கை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் 
தோழர் S.குணசேகரன் - MLA 
வாஜ்பாய்  துவக்கிய BSNL துறையை..
வாஜ்பாயின் வாரிசுகள்..
வளமாக்கிட.. வலுவாக்கிட  
வகை செய்யக்கோரி...

அனைத்து சங்க 
த ர் ணா 
06/01/2015 - செவ்வாய்க்கிழமை 
காலை 10 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள் 
  • கார்வண்ணன் - AITUC மாவட்டச்செயலர் 
  • M .சிவாஜி  - CITU  மாநிலக்குழு உறுப்பினர் 
  • V,K. பரமசிவம் - AIBSNLEA அகிலஇந்திய ஆலோசகர் 
  • C .செல்வின் சத்தியராஜ் - BSNLEU மாநில உதவிச்செயலர் 
  • S .பிரான்சிஸ் -SNEA  மாவட்டச்செயலர் 
  • V .மோகன்தாஸ் -AIBSNLEA மாவட்டச்செயலர் 
  • P .செல்லப்பா - SNATTA மாவட்டச்செயலர் 
  • K .குமார் -AIBSNLOA  மாவட்டச்செயலர் 
  • S .முருகன் - NFTE மாவட்டத்தலைவர் 
  • M .பூமிநாதன் - BSNLEU மாவட்டத்தலைவர் 
  • N .நாகேஸ்வரன் - AIBSNLPWA மாவட்டத்தலைவர்
  • V .சுப்பிரமணியன் - AIBDPA  மாவட்டச்செயலர் 
மற்றும் தலைவர்கள்...

தோழர்களே...
நாம் வாழும் நாடு காக்க.. 
நாம் உழைக்கும் BSNL காக்க..
உறுதி கொள்வீர்.. ஒன்று படுவீ ர்..

தோழமையுடன்...

V .மாரி                                                 P.மகாலிங்கம் 
கூட்டமைப்புத்தலைவர்                 கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர்.
மாவட்டச்செயலர் - NFTE                மாவட்டச்செயலர் - BSNLEU 

Friday, 2 January 2015

செய்திகள்

ERP  மூலம் போடப்பட்ட சம்பளப்பட்டுவாடாவில் 
நிகழ்ந்த குளறுபடிகளை மாநில நிர்வாகத்திடம் 
மாநிலச்சங்கம் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில்,
 மாநில நிர்வாகம்  02/01/2015 அன்று 
மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. 

 அதன்படி மாவட்ட மட்டத்தில் சரி செய்யப்பட
 வேண்டிய பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட 
AO(DRAWL) கணக்கு அதிகாரி  
தீர்த்து வைக்க வேண்டுமெனவும், 

மாநில மட்டத்தில் தீர்க்க வேண்டிய 
பிரச்சினைகளை மாநில நிர்வாகத்தின்
 கவனத்திற்கு கொண்டு வர  வேண்டுமெனவும் 
PGM FINANCE  அறிவுறுத்தியுள்ளார். 
பிரச்சினைகள் தீருமென நம்புவோம்.
==============================================================
போன் மெக்கானிக் தேர்வு எழுதி 
தேர்ச்சியுற்ற 42 தோழர்களுக்கு 
4 வார  TM பயிற்சி வகுப்பு 19/01/2015 அன்று 
சென்னையில் துவங்குகின்றது.
===============================================================
போன்மெக்கானிக் தேர்வு எழுதி தோல்வியுற்ற 
SC/ST  தோழர்களின் தேர்வு முடிவை பரிசீலிப்பது பற்றி 
டெல்லி தலைமையகம் கீழ்க்கண்ட வழிகாட்டுதலை 
02/01/2015 அன்று வெளியிட்டுள்ளது.

  • ஒரு தேர்வில் SCST காலியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டால், அதன்பின் தோல்வியுற்றவர்களின் தேர்வு முடிவுகளை பரிசீலிக்க அவசியமில்லை.
  • குறைந்த பட்ச 20 மதிப்பெண்கள் பெற்று  தோல்வியுற்றவர்களின் முடிவுகளை மட்டுமே பரிசீலிக்க வேண்டும்.
  • தேர்வு முடிவுகள் வெளிவந்த 3 மாதங்களுக்குள் முடிவுகள் பரிசீலிக்கப்பட வேண்டும்.
  • பரிசீலனையில் தேர்ச்சி பெற்ற SC/ST  தோழர்கள் சேவைப் பட்டியலில் எல்லோருக்கும் இளையவராக கருத்தப்படுவர்.
  • இது வருங்கால தேர்வுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
============================================================
01/01/2007க்குப்பின் பணிக்கு வந்த இளம் TTA  தோழர்களின் 
சம்பள நிர்ணயத்தில் ஏற்பட்ட குளறுபடியால் 
அவர்களுக்கு சம்பள இழப்பு உண்டானது. மிக நீண்ட நாட்களாக இப்பிரச்சினை பேசப்பட்டு வந்தது. தற்போது இப்பிரச்சினை தீர்க்கப்பட்டு அந்த தோழர்களுக்கு 2007  முதல் ஒரு ஆண்டு உயர்வுத்தொகை கூடுதலாக அளித்து உரிய நிலுவையும் அளித்திட 
BSNL நிர்வாகக்குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக 
நமது  மத்திய சங்கம் கூறியுள்ளது. 
==============================================================
30/12/2014 அன்று தோழர்.இஸ்லாம் தலைமையில்
 நடைபெற்ற அனைத்து சங்க கூட்டத்தில் 
ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தையும், 
ஜனவரி 6/7/8 நாடு தழுவிய தர்ணாவையும், 
பாராளுமன்றம் நோக்கிய பேரணியையும் 
திறம்பட நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.
===============================================================

Thursday, 1 January 2015

ERP.. வாழ்த்துக்களும்... வருத்தங்களும்... 

டிசம்பர் மாத சம்பளம் ERP மூலமாக தமிழகத்தில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நமது அதிகாரிகள் குறிப்பாக கணக்கு அதிகாரிகள் இரவு பகலாக உழைத்து எப்போதும் போல் ஊழியர்களுக்கு மாதக்கடைசியில் சம்பளம் கிடைப்பதற்கு வழி செய்துள்ளனர். 
அதற்காக அவர்களுக்கு நமது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். நேற்று இணைய தளத்தில் டிசம்பர் மாத சம்பள பட்டியலை இறக்குமதி செய்து பார்த்த பின் வாழ்த்துக்களோடு சில வருத்தங்களையும் நாம் சொல்ல வேண்டியுள்ளது. அவை சரி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கோடு சிலவற்றை சுட்டிக்காட்டுகின்றோம்.

  • குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டு தோழர்கள் பெற்று வந்த PERSONAL PAY  "கட்"  பண்ணப்பட்டு விட்டது. குடும்பக்கட்டுப்பாட்டுத்தொகையில் கூடுதல் கட் எதற்கு?

  • உடல் ஊனமுற்ற தோழர்களுக்கு குறைந்தபட்ச போக்குவரத்துப்படி மாதம் ரூ.1000/= வழங்கப்படுகின்றது. இராமேஸ்வரத்தில் வாய் பேச முடியாத DEAF AND DUMB தோழர்.S .ஆரோக்கியதாஸ்,TM அவர்களுக்கு ரூ.400 மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. காரணம் கேட்டால் ERP சட்டங்களின் படி ஊமை என்பது உடல் ஊனமில்லையாம். . ஊமைகளுக்கு... உயர்த்தப்பட்ட போக்குவரத்துப்படி பொருந்தாது என உத்திரவு இருந்தால் அந்த உத்திரவு திருத்தப்பட/கிழிக்கப்பட வேண்டும். ஆரோக்கியதாஸ்  ஊமையாக இருக்கலாம்.     நாம் ஊமையாக இருக்க முடியாது.

  • கையிருப்பு பணம் TAKE HOME PAY கூடுதலாக சிலருக்கு காட்டப்பட்டுள்ளது. காரணம் மொத்தப் பிடித்தம் DEDUCTION தொகையின் கூட்டலில் குளறுபடி. LKG  படிக்கும் நமது குழந்தைகளே அதைக்கூட்டி விடுவார்கள். இதற்கு எதற்கு ERP?


  • கையிருப்பு தொகையைக் கூடுதலாக காட்டியிருந்தாலும் வங்கிக்கணக்கில் சரியான தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக கையிருப்பு தொகை ரூ.10854/= என்று சம்பள பட்டியலில் காட்டப்பட்டிருந்தது. ஆனால் வங்கிக்கணக்கில் ரூ.9554/= சரியான தொகை வரவு வைக்கப்பட்டிருந்தது. மனைவியிடம்/கணவனிடம்  சம்பளப்பட்டியலைக் காட்டி சம்பளத்தையும் ஒப்படைக்கும் தோழர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் குழப்பம் வர நேரிடலாம்.

  • GPF BALANCE வைப்பு நிதி கணக்குத்தொகை 0.00  என்று காட்டப்பட்டிருந்தது. பல லட்சங்களை GPFல் சேமித்து வைத்திருந்த நமது தோழியர் ஒருவருக்கு அதைப்பார்த்தவுடன்  ரத்த அழுத்தம் BP 200.00 என்று ஆகி விட்டது. 

  • HRMSல் கிடைக்கப்பெற்ற சில கூடுதல் விவரங்கள் இதில் கிடைக்கவில்லை. உதாரணமாக ஊழியர் உறுப்பினராக உள்ள சங்கப்பெயர், வங்கிப்பெயர், LIC/PLI POLICY விவரங்கள், எந்த வங்கியில் எவ்வளவு பிடித்தம் என்ற வங்கிக்கடன் விவரம். மேம்படுத்தபட்ட தொழில் நுட்பத்தில் உருவான ERP கூடுதல்  விவரங்களை தருவதுதான் நியாயமாக இருக்கும்.

  • வருமான வரிக்கணக்கில் கூடுதலான குளறுபடிகள். ஊழியர்கள் அளித்த பல விவரங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பழைய புள்ளி விவரங்களின்  அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டுள்ளதாக நிர்வாகக்குறிப்பு கூறுகின்றது. 

  • வாடகை வீட்டில் குடியிருப்போர் கொடுத்த வாடகை ரசீது கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. காரணம் வீட்டு சொந்தக்காரரின் வருமான வரி கணக்கு எண் PAN வேண்டுமாம். வீட்டுக்காரரிடம் கேட்டால்  முதலில்  வீட்டைக்காலி செய்யுங்கள் என்று அவர் விரட்டுகின்றார். நிர்வாகத்திற்கு சந்தேகம் வந்தால் நமது துப்பறியும் அதிகாரிகளை வைத்து துப்பு துலக்கி உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். அது விடுத்து வீட்டுக்காரரின் PAN எண்ணைக் கேட்பது நியாயமற்றது. 

  • உடல் ஊனமுற்ற தோழர்களுக்கு சிறப்பு வரிச்சலுகை உண்டு. அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.

  • வீட்டுக்கடன் பெற்ற சில தோழர்களுக்கு  அவர்கள் கட்டிய வட்டி மற்றும் அசல் அவர்களது  வருமான வரி கணக்கிற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. அதிலும் இரண்டு வீடு கட்டியவர்களுக்கு சிக்கலோ சிக்கல். மற்றுமொரு வீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் என்ன? என்ற கேள்வி எழுப்பப்படுகின்றது. இரண்டு வீடு என்றாலே சிக்கல்தான் போலும்.

  • HRMSல் சம்பந்தப்பட்ட நிதியாண்டின் இறுதி வரை சேமிக்கப்படும் சேமிப்புத்தொகை SAVINGS கணக்கில் கொள்ளப்பட்டு வருமான வரி கணக்கிடப்படும். ERPயில் சம்பந்தபட்ட மாதம் வரை மட்டுமே சேமிப்பு கணக்கிடப்படுகின்றது. 

தோழர்களே.. இது நேற்றைய நிலவரம்..
இன்றைய நிலவரம் இனிமேல்தான் தெரியும்..
எனவே வருத்தங்கள் தொடரும்....