Monday, 5 October 2015

ஒப்பந்த ஊழியர்களுக்கான 
VDA - விலைவாசிப்படி உயர்வு 

             தினக்கூலி அடிப்படையில் பணி புரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கான VDA - VARIABLE  DEARNESS ALLOWANCE - விலைவாசிப்படி 01/10/2015 முதல் கீழ்க்கண்டவாறு உயரந்துள்ளது. இதற்கான உத்திரவை CLC முதன்மைத் தொழிலாளர் ஆணையம் 30/09/2015 அன்று டெல்லியில்  வெளியிட்டுள்ளது.

=================================================
பிரிவு                      A  நகரம்                             B  நகரம்           C   நகரம் 
=================================================
UNSKILLED                    353                             294                        236
WATCH AND WARD       390                            333                    276
WITHOUT ARMS  
WATCH AND WARD       430                            390                    333
WITH ARMS 
=================================================
                                  
நிரந்தர ஊழியர்களுக்கு 01/10/2015  முதல்
 IDA அதிகபட்சமாக 5.3 சதம் உயர்ந்துள்ளது. 
 ஆனால் அன்றாடக்கூலிகளாகப் பணி புரியும்
 தொழிலாளர்களுக்கு  மிகக் குறைந்த அளவே 
VDA கூடியுள்ளது.  
C பிரிவு நகரில் ஒரு நாள் கூலி 
ரூ.233/=ல் இருந்து ரூ.236/= ஆக ஒரு நாளைக்கு
ரூ.3/= மட்டுமே உயர்வடைந்துள்ளது. 

மேலும் ஒப்பந்த ஊழியர்கள் எந்தவிதமானப் பணி 
செய்தாலும் அனைவருக்கும் UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. 
குறிப்பாக காவல் பணியிலும், கேபிள் தோண்டும் பணியிலும்  
ஒப்பந்த ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவர்களுக்கும் 
UNSKILLED சம்பளமே வழங்கப்படுகிறது. 
இது அடிமட்ட ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும்.

உறிஞ்சப்படும் ஒப்பந்த ஊழியர்கள் 
தங்கள் உரிமை பெறுவது எந்நாளோ? 

Sunday, 4 October 2015

அக்டோபர் - 6
போனஸ் வழங்கக்கோரி 
நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் 

BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு 
போனஸ் வழங்கக் கோரி 
நாடு தழுவிய  ஆர்ப்பாட்டம் 

06/10/2015 - செவ்வாய் - மாலை 5 மணி 
பொது மேலாளர் அலுவலகம் 
காரைக்குடி.

இழப்பதற்கு ஏதுமில்லை...
அடைவதற்கோ போனஸ் உண்டு.. 
போனஸ் நமது உழைப்புரிமை...
போனஸ் நமது போராட்ட உரிமை 
ஓன்று படுவோம்...
போராடுவோம்...
போனஸ் பெறுவோம்...
வாரீர்.. தோழர்களே...


BSNL அனைத்து அதிகாரிகள் 
ஊழியர்கள் கூட்டமைப்பு 
காரைக்குடி .
அக்டோபர்  - 4
சுடரொளித்தியாகி
சுப்பிரமணிய சிவா  
பிறந்த நாள் 

தொழுநோய் பற்றிய போதும்...
துயரங்கள் துரத்திய போதும்...
அன்னை தேசத்தின் விலங்கொடிக்க.. 
அயாராது போரிட்டு 
அருமை உயிர் போக்கிய 
அணையா விளக்கு.. 
சுடரொளித்தியாகி 
சுப்பிரமணிய சிவாவைத் 
தொழுதிடுவோம்.. 
நினைந்திடுவோம்...

Friday, 2 October 2015

கம்பன் கழகம்  
சிறப்புக்கூட்டம் 

03/10/2015 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
கிருஷ்ணா திருமண மண்டபம் 
கல்லுக்கட்டி தொலைபேசி நிலையம் அருகில் 
காரைக்குடி.

- : பங்கேற்பு :-

தினமணி ஆசிரியர் 
திரு. கே.வைத்தியநாதன்..

முனைவர்.பேராசிரியர் 
இ.சா.பர்வீன் சுல்தானா 

தோழர்களே.. வாரீர்...
செய்திகள் 

33வது அகில இந்திய JCM கூட்டு ஆலோசனைக்குழு டெல்லியில் 16/10/2015 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

01/10/2000 ஊதிய திருத்தத்திற்குப் பின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு ஏற்பட்ட சம்பளக்குறைபாடு.. PAY ANOMALIES  மற்றும் 
PAY ABERRATIONS குறித்து உரிய தகவல்கள் பல மாநில நிர்வாகங்களிடமிருந்து டெல்லி அலுவலகத்திற்கு வந்து சேரவில்லை. இவற்றை உடனடியாக அனுப்பி வைக்குமாறு மாநில நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 அனைத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு 
12/10/2015 அன்று டெல்லியில்  கூடுகிறது.

AIRTEL நிறுவனத்தின்  4G விளம்பரம் மக்களைத் தவறாக வழி நடத்துவதாகவும்.. அதனால் அந்த விளம்பரத்தை திரும்ப பெறவேண்டும் என மத்திய அரசு AIRTEL நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டுள்ளது.

01/08/2014க்குப்பின் BSNL நிறுவனத்தில் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள LICயின் காப்பீட்டு வசதி மாற்றப்பட்டு புதிய ஆயுள் காப்பீட்டு வசதி அமுல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்காக 01/08/2014க்குப்பின் பணியில் 
சேர்ந்தவர்களின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. 
பட்டிமன்றம்

02/10/2015  காந்தி பிறந்த நாளன்று...
 தேவகோட்டை பகுதியில்   
BSNL சேவை சீரழிவுக்கு  யார் காரணம்?  
மாவட்ட நிர்வாகமா?  தலமட்ட நிர்வாகமா?
என்ற பட்டிமன்றம் நடைபெறும் என அறிவித்திருந்தோம். 

தேவகோட்டை கோட்டப்பொறியாளர்
 திருமதி.லெட்சுமி அவர்களின் வேண்டுகோளின் பேரில்  நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.  
தேவகோட்டை கிளைச்செயலர் தோழர்.பாலமுருகன், 
GM அலுவலக கிளைச்செயலர் தோழர்.சுபேதார் அலிகான், 
புறநகர்க்கிளைச்செயலர் தோழர்.ஆரோக்கியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  தோழர்.சண்முகம் SDE பேச்சுவார்த்தையின் போது 
உடன் இருந்து உதவினார். 

தேவகோட்டைப் பகுதி மனித வளம் குறைவான பகுதியாகும். 
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓரிரு நிரந்தர ஊழியர்களின் உழைப்பில்தான் நமது சேவை  நடைபெறுகிறது. 
தேவகோட்டைப் பகுதியை ஆட்சி செய்யும் 
துணைக்கோட்ட அரசர்கள்...மன்னிக்கவும்..  அதிகாரிகள்  
இருக்கின்ற ஓரிரு ஊழியர்களையும் துன்புறுத்துவதும், 
 அவர்களைத் தரக்குறைவாக நடத்துவதும், 
ஒப்பந்த ஊழியர்களின் வயிற்றில் அடிப்பதும், 
அவர்களுக்கு கிடைக்கும் கூலியில் இருந்து பிடுங்கித் 
தங்கள் தேவைக்குப் பயன்படுத்துவதுமான செயலிலும்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இத்தகைய இழிநிலை மாறவேண்டும் 
என சுட்டிக்காட்டியுள்ளோம்.

காரைக்குடியில் மாவட்ட நிர்வாகம் 
என்ற பெயரில் எதுவும் தென்படவில்லை.
தலமட்ட அதிகாரிகள் தானடித்த மூப்பாக
 தறிகெட்டு வலம் வருகிறார்கள்.  இதற்கு முன்பு இருந்த தேவகோட்டையின் பொறுப்பு அதிகாரி 
முழுக்க முழுக்க REAL ESTATE பணி மட்டும்தான் செய்தார் 
என்பது அனைவரும் அறிந்த உண்மை.

தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது..  என்ற நிலை இங்கில்லை.  மாறாக.. தட்டுக்கெட்ட நிலைதான் இங்கு நிலவுகிறது. 
உழைக்கிற ஊழியர்களுக்கு உரிய வசதிகள்  செய்து கொடுப்பதில்லை. கால் பிடிப்பவர்கள் மட்டுமே
 இங்கே காலத்தைத்  தள்ள முடியும்.  
இத்தகைய  அவலங்களை  சுட்டிக்காட்டியுள்ளோம். 

தேவகோட்டைப் பகுதியில் நமது சேவை மேம்பட வேண்டும். 
ஊழியர்களோ.. அதிகாரிகளோ..  வக்கிரச்செயல்கள் விடுத்து  
வாங்கும் சம்பளத்திற்கு வேலை செய்ய வேண்டும். 
இதுவே நமது கோரிக்கை...

Thursday, 1 October 2015

அக்டோபர் - 2
அண்ணல் காந்தி 
பிறந்த நாள் 

அண்ணல் காந்தி 
அமரர் ஜீவா 
நினைவுக்குழு சர்பாக

தோழர்.ஜீவாவை காந்தியடிகள் 
சந்தித்த சிராவயலில்...

அண்ணல் காந்தி பிறந்த நாள் விழா 
மற்றும் 
சமத்துவப் பொதுவிருந்து 
============================================
02/10/2015 - வெள்ளிக்கிழமை - காலை 10 மணி
சோமசுந்தரம் செட்டியார் நடுநிலைப்பள்ளி 
சிராவயல். 
=================================================================
-: தலைமை :- 
அருட்திரு. கோவிந்தானந்தா சுவாமிகள் 

-: சிறப்புரை :- 
தவத்திரு.குன்றக்குடி அடிகளார் 

- : பங்கேற்பு  :-

தோழர். பழ.இராமச்சந்திரன் 
முனைவர்.பழனி இராகுலதாசன் 
சிவத்திரு.பிச்சைக்குருக்கள் 
திரு. உடையப்பன் - EX. MP 
திரு.  இராஜசேகரன்  - EX.MLA 
திரு. சுப்புராம் - EX.MLA 
திரு. சுந்தரம் - EX.MLA 
திரு. உமாதேவன் - EX.MLA 
திரு. அருணகிரி - EX.MLA 
தோழர்.குணசேகரன் - ஆசிரியர் 
தோழர். சி.முருகன் - NFTE 
தோழர். வெ.மாரி  - NFTE 
மற்றும் ஆன்றோர்களும்... சான்றோர்களும்...

- : விழா அமைப்பு :-  
திரு.திருநாவுக்கரசு 
தலைவர்  - அண்ணல் காந்தி அமரர் ஜீவா நினைவுக்குழு

தோழர்களே... வருக..