Wednesday, 9 December 2015

இரங்கல் 

திருவாடானை 
துணைக்கோட்ட அதிகாரியாகப் பணிபுரிந்த
 திரு. இரமணையா,  SDE 
உடல் நலக்குறைவால்  
09/12/2015 அன்று இரவு மரணமடைந்தார். 

அவரது உடல் நல்லடக்கத்திற்காக 
சொந்த மாநிலமான ஆந்திராவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 

ஆந்திராவைச் சேர்ந்த தோழர்.இரமணையா 
RS.மங்கலத்தில்  JTOவாகப் பணியில் சேர்ந்தார். 
மிகுந்த கடமை உணர்வு மிக்கவர். 
இளைப்பு நோயால் இளவயது முதல் துன்பப்பட்டு வந்தார். 
காரைக்குடியில் இருந்து பல்வேறு தோழர்கள் பலவித வழிகளில் முயன்று தங்கள் சொந்த ஊருக்கு மாற்றலில் சென்ற போது... 
தோழர்.இரமணையா நேர்வழியில் நின்று.. 
நிர்வாகம் தன்னை இங்கிருந்து விடுவிக்கும் என்று நம்பி இருந்தார். 
அவரது நம்பிக்கைப் பொய்த்துப்போனது. 

தோழர்.இரமணையாவின் மறைவிற்கு 
நமது ஆழ்ந்த இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

Tuesday, 8 December 2015

கடலூருக்கு... கைகொடுப்போம் 

உடுக்கை இழந்தவன் கைபோல 
இடுக்கண் களைவதே மனிதம்...

இதோ... சென்னையிலும்.. கடலூரிலும்..
உடுக்கை இழந்து.. உணவு இழந்து.. இருக்க இடமிழந்து...
மக்கள் மலையளவு சோதனையைத்தாங்கி 
மழையுடன் போராடுகின்றனர்...
மழை இன்று பிழையாகிப் போனது...

இடர் கொண்ட மக்களின் துயர் துடைக்க 
உலகம் முழுக்க உதவிக்கரங்கள் நீளுகின்றன..
நாமும் நமது பங்கைச் செலுத்த வேண்டும்..
கடலூர் தோழர்களுக்கு தோள் கொடுத்திட வேண்டும்....

தோழர்கள் தங்கள் பங்கை 
பணமாக... உடையாக... தேவை நிரப்பும் பொருளாக 
மனமுவந்து தந்திட வேண்டுகிறோம்..
நலம் பெற வாழ்த்துவோம்...
தோழர்.பரதன் 

பொதுவுடைமை இயக்கத்தின் 
மூத்த தலைவர்  தோழர்.பரதன் 
உடல் நலக்குறைவால் 
டெல்லி GB.பந்த் மருத்துவமனையில்
 சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது உடல்  நிலையில் 
சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக 
மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருப்பினும் அபாய கட்டம் 72 மணி நேரம் 
இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

எளிய மக்களுக்காகத்
தன் வாழ்நாள் முழுக்க அர்ப்பணித்த 
தோழர்.பரதன் நலம் பெற வாழ்த்துவோம்.

Saturday, 5 December 2015

டிசம்பர் - 6
அண்ணல் அம்பேத்கார் 
நினைவு தினம் 

சுயமரியாதையே மனிதனின் 
சிறந்த அடையாளம்...

அதை இழந்து வாழ்வது 
பெரும் அவமானம்...

சுயமரியாதை போதித்த சுடரொளி 
சமத்துவம் சாதித்த அறிவொளி 

  அண்ணல் அம்பேத்கார் 
புகழ் பாடுவோம்.

Friday, 4 December 2015

உதவிக்கரம்.. நீட்டுவீர்...

தண்ணீரும்.. கண்ணீரும்...கரை புரளும் 
சென்னை மக்களின் துயர் துடைக்கும் பணியில்..
 காரைக்குடி மக்கள் மன்றமும்..
.தன் பங்கைச் செலுத்தி வருகிறது..

 உதவிட நினைக்கும் உள்ளங்கள் 
கண்ணதாசன் மணிமண்டபத்தில்... 
முகாமிட்டுள்ள மக்கள் மன்றத்தில் 

தங்கள் பங்கை 
பணமாகவோ.... உடைகளாகவோ.. 
உணவு தானியங்களாகவோ.. 
அளிக்கலாம்..

நேரடியாகச்  செல்ல முடியாதவர்கள் 
தோழர்.சுபேதார் அலிகான் (9486448333)
அவர்களிடம்  தொடர்பு கொண்டு 
தங்கள் பங்கை அளிக்கலாம்.

06/12/2015 - ஞாயிறு  வரை முகாமில் 
தோழர்கள் தங்கள் பங்கைச் செலுத்தலாம்...

Wednesday, 2 December 2015

செய்திகள் 

மழை வெள்ளத்தினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள   
தமிழகத்தின் தலைநகர்  சென்னை மாநகரில் 
BSNL  ஒரு வார காலத்திற்கு இலவச சேவை வழங்கும் எனவும்...  
BSNL  வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தாமல் இருந்தாலும் 
அவர்களது இணைப்பு துண்டிக்கப்படாது எனவும்  
தொலைத்தொடர்பு அமைச்சர் அறிவித்துள்ளார். 
-------------------------------------------------------------------------------
தொடர் மழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளுக்கும் தமிழக அரசு 2 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது.
எனவே சென்னை CGM அலுவலகத்தில் பணிபுரியும் தோழர்களுக்கு இரண்டு நாட்கள் சிறப்பு சிறுவிடுப்பு அளித்திட மாநில நிர்வாகத்தை 
நமது மாநிலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.
-------------------------------------------------------------------------------
அக்டோபர் 2015 விலைவாசிப் புள்ளி உயர்வின் அடிப்படையில் 
ஜனவரி 2016ல்   IDA  ஏறத்தாழ 4 சதம் உயர வாய்ப்புள்ளது.
-------------------------------------------------------------------------------
JTO காலியிடங்களை சரிபார்த்து உடனடியாக
  JTO  இலாக்காத்தேர்வை அறிவிக்கக்கோரி
 தோழர்.இஸ்லாம் அவர்களும் SNATTA  தலைவர்களும் 
நிர்வாகத்தை சந்தித்து  வலியுறுத்தியுள்ளனர்.
-------------------------------------------------------------------------------
MRS  மருத்துவக்கொள்கையை 
மறுபரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட குழு
 09/12/2015 அன்று கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 NFTE சார்பில் தோழர்.சந்தேஷ்வர்சிங் அவர்களும் 
BSNLEU சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் 
ஊழியர் தரப்பாக கலந்து கொள்வார்கள்.
-------------------------------------------------------------------------------
நாடு முழுவதும் உள்ள 125 விமான நிலையங்களில்
 Wi -Fi வசதி செய்து கொடுக்கும் பணி 
நமது BSNL நிறுவனத்திடம் அளிக்கப்பட்டுள்ளது.

Tuesday, 1 December 2015

ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள் 

தமிழகத்தில் தொடர்ந்து துயர் தரும் கனமழை போல..
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளும் தொடர்ந்து துயர் அளிக்கின்றன.
மாவட்டத்திற்கு மாவட்டம் கனமழையின் அளவு வேறுபடுவது போல்  ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகளும்...
மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.
 
தலமட்டங்களில்   தொடர்ந்து...
ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்  தொடர்பாக குரல் எழுப்பப்படுவதால்
ஒப்பந்த ஊழியர்   பிரச்சினைகளில் உரிய கவனம் செலுத்திட மாவட்ட நிர்வாகங்களை  தமிழ் மாநில நிர்வாகம் மீண்டும்  அறிவுறுத்தியுள்ளது.
 
  • ஒப்பந்தக்காரர்களின் பில்கள் உரிய தேதிக்குள் பட்டுவாடா செய்யப்பட வேண்டும். அதன் மூலம் ஒப்பந்த ஊழியருக்கு குறித்த தேதியில் கூலி தரப்பட வேண்டும்.
  • அடையாள அட்டை உடனே வழங்கப்பட வேண்டும்.
  • EPF மற்றும் ESI நலத்திட்டங்களுக்காக  இலாக்கா வழங்கும் தொகை  ஊழியரின் கணக்கில் உரிய முறையில் செலுத்தப்படுகிறதா என மாவட்ட நிர்வாகங்கள்  கவனம் செலுத்த வேண்டும்.
  • E - PASSBOOK எனப்படும்  மின்னணு வைப்புநிதி சேமிப்பு புத்தகம் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • ஒப்பந்தத்தில் உள்ள நிபந்தனைகள் TENDER CONDITIONS கட்டாயம் அமுல்படுத்தப்பட வேண்டும்.
என்று மாநில நிர்வாகம் மாவட்ட நிர்வாகங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
 

ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் மீது டெல்லி தலைமையகமும் தமிழக நிர்வாகமும் தொடர்ந்து அறிவுறுத்தல்கள் சொன்ன பின்னும் மாவட்டங்களில் வழக்கம் போல் தாமதம் நிலவுகிறது. இம்முறையாவது மாவட்ட நிர்வாகங்கள் சற்றே விழித்து ஒப்பந்த ஊழியர்கள் பிரச்சினைகள் தீர்வில் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்பதே நமது கோரிக்கையும்... எதிர்பார்ப்பும்...