Tuesday, 15 December 2015

ஒப்பற்ற தோழனுக்கு 
உள்ளம் கசிந்த அஞ்சலி...
மாற்றுத்திறனாளிகளின் மலர்ச்சிக்குப் பாடுபட்ட 
பொதுவுடைமைப் போராளி
தோழர்.
சிதம்பரநாதன் 

மாற்றுத்திறனாளிகளின்  மலர்ச்சிக்கான
மாநிலக்கருத்தரங்கில் கலந்து கொள்ள சென்ற போது...

தோழர்.சிதம்பரநாதன் 













தமிழக மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் 
கூட்டமைப்புத் தலைவரும்.. நிறுவனரும்...
பல்வேறு மாற்றுத்திறனாளிகள் அமைப்புக்களை நடத்தியவரும்..
சிறந்த பொதுவுடைமைப் போராளியும்...
NFTE சங்கத்தில்  முன்னணிப்பாத்திரம் வகித்த 
அருமைத்தோழியர்.தனம் அவர்களின் கணவருமான 
அன்புத்தோழர். சிதம்பரநாதன் அவர்கள் 
உடல்நலக்குறைவால் 15/12/15 அன்று 
தன்  இயக்கப்பணிகளை நிறுத்திக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளின் மறுமலர்ச்சிக்கு 
வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார்...

சிறந்த நண்பராக.. தோழராக.. 
வழிகாட்டியாக.. ஆசிரியராக...விளங்கியவர்...

1980களில் இராமநாதபுரத்தில் நடந்த சாதிக்கலவரத்தில்...
பல்வேறு எதிர்ப்புக்களையும் மீறி..
சாதியால் ஒடுக்கப்பட்டத் தொலைபேசித் தோழர்களுக்கு..
வீட்டிலே அடைக்கலம் கொடுத்து 
அவர்களை அன்போடு அரவணைத்தவர்...

மாணவர்களாக நாங்கள் இருந்தபோது...
தற்போது தமிழ்நாடு  தலைமைச்செயலகத்தில்..
தொழிலாளர் நலத்துறை உயர் அதிகாரியாகப் பணிபுரியும் 
கல்லூரித்தோழன் பாலச்சந்திரனோடு அடிக்கடி சென்று 
தோழர். சிதம்பரநாதனிடம்...
மார்க்சீய அரிச்சுவடி கற்றது..
வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்...

உருண்டோடும் வாழ்க்கையில்...
ஊனங்களைக் கண்டு தளர்ந்து விடாது..
சக்கர நாற்காலியில் உருண்டோடி..
ஊனமுற்ற தோழர்களின் உயர்வுக்குப்பாடுபட்ட..

தோழர்.சிதம்பரநாதன் 
அவர்களுக்கு வீரவணக்கம்..

--------------------------------------------------------------------------------------------------------------------------
இறுதி நிகழ்வுகள் 17/12/2015 வியாழன் அன்று
 சென்னைக் கோட்டுர்புரத்தில் நடைபெறும்.

Monday, 14 December 2015

இன்று 15/12/20152 சென்னை CGM  அலுவலகத்தில் 
அனைத்து தொழிற்சங்கத் தலைவர்களின் 
கருத்துக்கேட்புக் கூட்டம் 
OPINION LEADERS MEETING நடைபெறுகின்றது.
-----------------------------------------------------------------------------
01/01/2016 முதல் 100 நாட்களை  BSNLலில் 
கனிந்த சேவைக்காலமாக  
வாடிக்கையாளர்களுக்கு அளித்திட 
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு
 வேண்டுகோள் விடுத்துள்ளது.
-----------------------------------------------------------------------------
ஓய்வு பெற்ற தோழர்களின் 78.2 சத IDA  இணைப்பில் 
ஏற்படும் தாமதத்தைக் கண்டித்து 
22/12/2015 அன்று  நாடு முழுக்க  
கறுப்பு அட்டை அணியவும் 
கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திடவும் 
அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 
அறைகூவல்  விடுத்துள்ளது.
-----------------------------------------------------------------------------
கருணை அடிப்படை வேலைத்தேர்விற்கான 
HPC  உயர்மட்டக் குழுவில்
 SC/ST பிரிவிற்கான பிணைப்பு அதிகாரியும், 
LO (SCT) உறுப்பினராக நியமிக்கப்பட வேண்டும் என 
மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------
11/12/2015 அன்று நமது மத்திய சங்கத்தலைவர்கள் 
மனிதவள இயக்குநரை சந்தித்து 
தமிழக வெள்ள நிவாரணத்திற்கு உதவுதல், 
JTO மற்றும் JAO காலியிடங்களை கணக்கிடுதல், 
JAO தேர்வில் வெற்றி பெற்று காலியிடம் இல்லாததால் 
பயன் கிட்டாத தோழர்களுக்கு 
தற்காலிகப் பதவி உயர்வு வழங்குதல் 
ஆகியன பற்றி விவாதித்துள்ளனர். 
-----------------------------------------------------------------------------
ஒப்பந்த ஊழியர்களுக்கான சட்டங்களை 
முறையாக அமுல்படுத்தக்கோரியும், 
 ஒப்பந்தக்காரர்கள்  விதிமுறைகளை 
ஒழுங்காக பின்பற்றுகின்றர்களா 
என்பதைக் கண்காணிக்க வேண்டியும் 
மத்திய நிர்வாகம் மாநில நிர்வாகங்களை வலியுறுத்தியுள்ளது.

Sunday, 13 December 2015

உதவிடும் உள்ளத்திற்கு.. ஓய்வேது?
.வெள்ளம் பாதிக்கப்பட்ட சென்னையில்
தோழர்.ஆர்.கே., அவர்கள்
உள்ளமுவந்து உதவிகள் வழங்கிடும் காட்சி 

கெடுப்பதுவும் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே 
எடுப்பதுவும் எல்லாம் மழை...

வான்புகழ் வள்ளுவன் 
கெடுப்பதுவும் மழை... கொடுப்பதுவும் மழை என 
வான்சிறப்பிற்கு தனி அதிகாரம் அமைத்தான்..

வான் மழையால்  வாழ்வு கெட்ட மனிதனுக்கு 
வாழும் சக மனிதர்கள் கரம் கொடுத்து உதவும் காட்சியை 
நாளெல்லாம் நாம் காணும் போது 
நிலம் ஈரமானதை  விட நம் மனம் ஈரமாகிறது...

அவ்வாறு சக மனிதனின் துன்பம் காணச்சகியா மனிதர்களுள்..
மாமனிதர் தோழர்.ஆர்.கே., ஆவார்..

சென்னையில் துயரப்படும் தோழர்களுக்கு 
நம் தோழர்களுடன் சென்று உதவிக்கரம் நீட்டினார்..

கடலூர் தோழர்கள் நிவாரண வேண்டுகோள் விடுத்தபோது..
முதல் நிதியாக தனது பங்கைச்செலுத்தினார்...

ஜன்னலோரம் அமர்ந்து 
சாலையை வெறித்துப் பார்ப்பவன் மனிதனல்ல...
சங்கடத்தில் சிக்கியுள்ள 
சக மனிதனின் துன்பம்  போக்குபவனே மனிதன்...

அந்த வகையில்...
ஓய்வு பெற்றிருந்தாலும்.. ஓய்வற்று  உழைத்திடும்...
ஒப்பற்ற தலைவருக்கு நம் வாழ்த்துக்களை உரித்தாக்குவோம்...

அவர் வழியில்...
ஓய்வு பெற்ற தோழர்களும்..
உழைக்கின்ற தோழர்களும்... 
உணர்வு கொண்ட தோழர்களும்...
உதவிக்கரம் நீட்ட வேண்டுகிறோம்...
தங்கள் தடம் பதிக்க வேண்டுகிறோம்...
உதவிட்ட உள்ளங்களுக்கு நன்றி...

கடலூர் வெள்ள நிவாரண உதவியாக 13/12/2015 அன்று
ரூ.22,000/= உதவிப்பணமும் மற்றும்   உதவிப்பொருட்களும் 
முதல் தவணையாக  தோழர்கள்.காதர் பாட்சா மற்றும் சுபேதார் அலிகான் ஆகியோரால் கடலூருக்கு சென்று வழங்கப்பட்டன. 

திருமதி.இலட்சுமி, DE காரைக்குடி 
திருமதி.நீலாயதாட்சி, AGM காரைக்குடி 
தோழியர்.காந்திமதி வெங்கடேசன் 
தோழர்.செல்வகணபதி, TTA , புதுவயல் 
தோழர். இராஜேந்திரன், TSO , காரைக்குடி 
தோழர்.R.K.இராமச்சந்திரன் (பணி நிறைவு)
தோழர்.கருப்பையா, நகராட்சி காரைக்குடி 
தோழர்.பாலமுருகன், TTA  தேவகோட்டை 
ஆகியோர் பொருளுதவி வழங்கினர்...

இராமநாதபுரம் மற்றும் கீழக்கரை தோழர்கள் நிதியுதவி வழங்கினர்.

உதவி புரிந்த நல் உள்ளங்களுக்கு உளமார்ந்த நன்றிகள் உரித்தாகுக...

Saturday, 12 December 2015

பெயர் மாற்றக்குழுக்கூட்ட முடிவுகள் 


11/12/2015 அன்று டெல்லியில் பெயர் மாற்றக்குழுக்கூட்டம் 
(JOINT COMMITTEE FOR CHANGE OF DESIGNATION) நடைபெற்றது. 
ஊழியர்களுக்கான புதிய பெயர் மாற்றம் 
ஊழியர்கள் மத்தியில் உற்சாகத்தை அளித்து 
உத்வேகமுடன் பணி செய்யத்தூண்டும் என்பதையும்  
நிறுவனத்தின் பெருமை இதனால் கூடும் என்பதையும்...
கணக்கில் கொண்டு கீழ்க்கண்ட முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

1. TTA  -     JUNIOR ENGINEER  
                   இளநிலைப் பொறியாளர் எனவும்...

2. SR.TOA - NE 11 மற்றும் NE 12 சம்பள விகித்தில் உள்ளவர்கள் 
                    OFFICE SUPERINTENDENT 
                   அலுவலக கண்காணிப்பாளர் எனவும்...

3. SR.TOA - NE 10 மற்றும் NE 9 சம்பள விகித்தில் உள்ளவர்கள் 
                    ASSISTANT OFFICE SUPERINTENDENT 
                    உதவி அலுவலக கண்காணிப்பாளர் எனவும்...

4. SR.TOA - NE 8 மற்றும் NE 7 சம்பள விகித்தில் உள்ளவர்கள் 
                    SENIOR OFFICE ASSOCIATE 
                    முதுநிலை அலுவலக இணையாளர் எனவும்...

5. TELECOM MECHANIC  - 
                   TELECOM TECHNICIAN 
                   தொலைத்தொடர்பு தொழில் நுட்ப வல்லுநர் எனவும்...

6. REGULAR MAZDOOR 
                     ASSISTANT TELECOM TECHNICIAN 
                    உதவி தொலைத்தொடர்பு தொழில் நுட்ப வல்லுநர் எனவும்...

பெயர் மாற்றங்கள் செய்வதற்கு குழுவின் இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து எட்டியுள்ளது. இந்த பெயர் மாற்றத்தினால் எந்தவித சம்பள உயர்வோ சலுகையோ தொழிற்சங்கங்கள் நிர்வாகத்திடம் கேட்கக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் நிகழ்ந்தாலும் ஊழியர்கள் தற்போதுள்ள பணியையே தொடர்ந்து செய்வார்கள்.

பெயர் மாற்றக்குழுவின் மேற்கண்ட பரிந்துரை BSNL நிர்வாகக்குழு மற்றும் வாரியத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர் அமுலுக்கு வரும்.

தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி.. .
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற பாரதி வழி நின்று..
நல்லதொரு பெயர் மாற்றத்திற்கு வித்திட்டு..  
கல்யாணப் பத்திரிக்கைகளில் நம் கௌரவம் மிளிர்ந்திட...
வகை செய்த ஊழியர் தரப்பிற்கு நமது வாழ்த்துக்கள்...

Thursday, 10 December 2015

நன்று செய்த... நாகர்கோவில் 

நன்று கருது.. நாளெல்லாம் வினை செய்.. 
என்றான் நாட்டுக்குழைத்த  பாரதி...

பாரதியின் வரி பற்றி.. அவனது வழி பற்றி...
நாகர்கோவில்  மாவட்ட BSNL தோழர்கள்..
உள்ளத்தால் ஒன்று பட்டு..
வெள்ளத்தால் துயரப்பட்ட  சென்னை மக்களுக்கு 
உடமைகளாகவும்.. உணவுப்பொருட்களாகவும்..
ஒரு லட்சத்து அறுபத்தேழாயிரம்  பணமாகவும்.. 
தங்கள் பங்களிப்பை சிறப்பாகச் செய்துள்ளனர்..
நமது வாழ்த்துக்களை உரித்தாக்குகின்றோம்...

அனைத்துப்பகுதி ஊழியர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து..
முன் முயற்சி எடுத்து.. முழு முனைப்புடன்  பணியாற்றி..
அரும் செயல் செய்துள்ள 
நாகர்கோவில் பொதுமேலாளர் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...

மற்ற மாவட்டப் பொதுமேலாளர்களுக்கும்..
நாம் வாழ்த்துக்கள் தெரிவிக்க தயாராகவே உள்ளோம்...
டிசம்பர் 11
பாரதி 
பாரினில் உதித்த நாள் 


எல்லோரும் ஓர் குலம் 
எல்லோரும் ஓரினம் 
எல்லோரும் ஓர் நிறை 
எல்லோரும் ஓர் விலை 
எல்லோரும் இந்திய மக்கள் 
எல்லோரும் இந்நாட்டு மன்னர்...

உள்ளத்தால் பிளவு பட்டோர் 
வெள்ளத்தால் ஒன்று பட்டார்...

வீட்டினில் பிரிந்து கிடந்தோர்...
வீதியில் இன்று இணைந்து விட்டார்..

ஒப்பில்லாத சமுதாயம்.. 
உலகத்துக்கொரு புதுமை...

பாரத சமுதாயம்  வாழ்க... வாழ்கவே..
பாரதி சமுதாயம்  வாழ்க.... வாழ்கவே...