Saturday, 12 January 2019


தேசிய இளைஞர் தினம்

ஜனவரி - 12
சுவாமி விவேகாநந்தர் பிறந்த தினம்
 தேசிய இளைஞர் தினம் 

இந்திய நாடு…
இளைஞர்கள் நிறைந்த நாடு…
இளமை பொங்கும் நாடு…
இருபது வயதுக்கு கீழே இருப்பவர் கோடி..
இருபது ரூபாய் வருமானத்துக்கும் கீழே
இருப்பவர்களும் பல கோடி…
இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு…
இனிக்க இனிக்க செய்த தேர்தல் காலத்து அல்வா…
இன்றோ இந்திய தேசத்தில் படித்து விட்டு
இன்னும் வேலை கிடைக்காதோர் பதினொரு கோடி…
இளமையில் துயரம் கொண்ட அன்றாடக்கூலிகள் 15 கோடி….

இன்று… ஜனவரி 12
இந்திய இளைஞர் தினம்…
இளைஞர்களை வாழவிடாத...
இந்திய தேசத்து ஆட்சியாளர்களை சுவாமி மன்னிப்பாரா?

Thursday, 10 January 2019

நினைவேந்தல் நிகழ்வு 

 NFTE  இயக்கத்தின் முகவைத்தளபதி
காரைக்குடி NFTE  முன்னாள் மாவட்டச்செயலர்
அருமைத்தோழர். சவுக்கத் அலி
நினைவேந்தல் நிகழ்வு

10/01/2019 – வியாழன் – மாலை 05 மணி
தொலைபேசி நிலையம் – இராமநாதபுரம்

தலைமை
வெ.மாரி NFTE மாவட்டச்செயலர்

நினைவேந்தல் சிறப்புரை
தோழர்.K.சேது…

அடிமட்டத் தோழர்களின் உயர்விற்காக
வாழ்ந்து மறைந்த தலைவனின் புகழ் போற்ற
அணி திரள்வீர்…. தோழர்களே…

Monday, 7 January 2019


மாபெரும் வேலை நிறுத்தம்…


மாபெரும் மறியல் போர்
மற்றும் வேலை நிறுத்தம்…
 மத்திய அரசின்…
மக்கள் விரோத..
தொழிலாளர் விரோத..
விவசாயிகள் விரோத…
பொதுத்துறை விரோத…
மதநல்லிணக்க விரோத…
கொள்கைகளை… 
கொடுமைகளைக் கண்டித்து..
 --------------------------------------------------------------------------------
ஜனவரி 8 – 9
அனைத்து தொழிற்சங்கங்கள் இணைந்த
இந்திய தேசம் தழுவிய…
உலகின் மாபெரும் வேலைநிறுத்தம்
--------------------------------------------------------------------------------
08/01/2019 – செவ்வாய்க்கிழமை – காலை 10 மணி
ஐந்து விளக்கு – காரைக்குடி
அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்
  --------------------------------------------------------------------------------
09/01/2019 – புதன்கிழமை – காலை 10 மணி
காரைக்குடி கல்லுக்கட்டி அண்ணாசிலை
BSNL தொலைபேசி நிலையம் முன்பாக
அனைத்து சங்க மறியல் போர்
 --------------------------------------------------------------------------------
தோழர்களே… தேசம் காத்திட…
உழைப்போர்.. உரிமை காத்திட...
உணர்வுடன்.. திரண்டு வாரீர்…

Sunday, 6 January 2019


 வீரவணக்கம்

இராமநாதபுரம் பகுதியின்
தன்னலமற்ற தன்னிகரற்ற
தொழிற்சங்கத்தலைவர்
ஓய்வு பெற்ற அன்புத்தோழர்
S.சவுக்கத் அலி

அவர்கள்  நேற்று 06/01/2019  
உடல் நலக்குறைவால்
இயற்கை எய்தினார்.

நமது இதயங்கசிந்த
அஞ்சலியையும்
வீரவணக்கத்தையும்
உரித்தாக்குகின்றோம்…

கண்ணீர் அஞ்சலி

அருமைத்தோழர்..
G.பாலசுப்பிரமணியன்
CAO காரைக்குடி அவர்கள்
மாரடைப்பு காரணமாக
06/01/2019 ஞாயிறு
மாலை மரணமடைந்தார்.

நமது ஆழ்ந்த துயரத்தை 
உரித்தாக்குகின்றோம்.

 தோழர்.பாலு அவர்கள் ஆழ்ந்த
அறிவும் தெளிவும் உடையவர்.
நமது மாவட்டத்தில் பல தோழர்களைக்
கணக்கு அதிகாரியாக உருவாக்கியதில்
அவரது பங்கு மறக்க இயலாதது.

நல்லடக்கம் 07/01/2019 திங்கள்கிழமை
மதியம் 3 மணிக்கு மேல் நடைபெறும்.

Thursday, 3 January 2019

இணைந்த ஆர்ப்பாட்டம் 

ஜனவரி 8 9 – 2019
மாபெரும் தேசம் தழுவிய 
பொதுவேலை நிறுத்தம்

கோரிக்கைகளை விளக்கி…
கோபக்கைகளை உயர்த்தி…

NFTE – BSNLEU – TEPU – BSNLMS இணைந்த
வாயிற்கூட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம்

05/01/2019 – சனிக்கிழமை – பகல் 12.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி.

பங்கேற்பு : தோழர்கள்
V.மாரி - NFTE
S.முருகன் - NFTCE
K.கருப்பசாமி – CITU
M.பூமிநாதன் - BSNLEU
PL.இராமச்சந்திரன் – AITUC
N.நாகேஸ்வரன் - AIBSNLPWA

தோழர்களே…. அணி திரள்வீர்…

காவியத்தலைவன்…
06/01/2019 - தோழர்.குப்தா நினைவு நாள்
காலத்தால் அழியாத.. காவியத்தலைவன்…
ஓய்வூதியம் தந்த… ஓய்வூதியத்தந்தை…
தோழர். ஓ.பி.குப்தா
புகழ் பரப்பும்…
புகழஞ்சலிக் கூட்டங்கள்…
 04/01/2019 – வெள்ளி – மாலை 05 மணி
தொலைபேசி நிலையம் – காரைக்கால்


தலைமை
தோழர்.இருதய சவுரிராஜ்

பங்கேற்பு : தோழர்கள்
M.விஜய் ஆரோக்கியராஜ்
குடந்தை மாவட்டச்செயலர்
V.மாரி
காரைக்குடி மாவட்டச்செயலர்
 ----------------------------------------------------------------------------
05/01/2019 – சனிக்கிழமை – காலை 11 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தலைமை
தோழர்.லால்பகதூர்

பங்கேற்பு : தோழர்கள்
N.நாகேஸ்வரன்
AIBSNLPWA மாவட்டச்செயலர்
V.மாரி
NFTE மாவட்டச்செயலர்
S.முருகன்
ஒப்பந்த ஊழியர் மாவட்டத்தலைவர்.
  ------------------------------------------------------------------------
05/01/2019 – சனிக்கிழமை மாலை 05 மணி
தல்லாகுளம் மனமகிழ் மன்றம் – மதுரை. 


தலைமை
தோழர்.சிவகுருநாதன்

பங்கேற்பு : தோழர்கள்
G.இராஜேந்திரன்
மதுரை மாவட்டச்செயலர்
V.மாரி
காரைக்குடி மாவட்டச்செயலர்
G.சுபேதார் அலிகான்
மாநில அமைப்புச்செயலர்
  ----------------------------------------------------------------------------
தோழர்களே…
தொழிற்சங்க இமயம்…
தோழர் குப்தா புகழ் போற்றுவோம்…
வாரீர்… வாரீர்… வாரீர்...