Wednesday, 31 July 2013

வருமான வரித்தாக்கல் 

வருமான வரிதாக்கலுக்கான கடைசி தேதி 
05/08/2013 என 
நிதி அமைச்சகம் இன்று 31/07/2013 அறிவித்துள்ளது.

ON LINE முறையில் இதுவரை 92 லட்சம் பேர் 
வரித்தாக்கல் செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Tuesday, 30 July 2013

காரைக்குடி மாவட்ட JCM 
தலமட்டக்குழு உறுப்பினர் நியமனம் 

காரைக்குடி மாவட்ட NFTE  JCM  உறுப்பினர் நியமனத்தை மத்திய சங்கம் அங்கீகரித்து மாவட்ட நிர்வாகத்திற்கு நியமனக் கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய சங்கத்திற்கும், மாநிலச் சங்கதிற்கும் நமது நன்றிகள் .

விரைந்து JCM கூட்டத்தை நடத்த 
மாவட்ட நிர்வாகத்தை வலியுறுத்தியுள்ளோம்.

JCM  உறுப்பினர் விவரம் 

1.  V. மாரி, AO  - NFTE    மாவட்டச்செயலர்
2. P. செல்லப்பா, TTA , SNATTA  மாவட்டச்செயலர்
3. S . முருகன், STS, NFTE மாவட்ட உதவிச்செயலர்
4. A. கணேசன், TM, NFTE மாவட்ட உதவிச்செயலர்
5. V. சுப்பிரமணியன், TM, NFTE மாவட்ட உதவிச்செயலர்.

Monday, 29 July 2013

NFTE 
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
தேவகோட்டை 

கிளை மாநாடு 
09/08/2013 - வெள்ளிக்கிழமை - மாலை  5 மணி 
தொலைபேசி நிலையம் - தேவகோட்டை 
------------------------------------------------------------------------------------------
தலைமை: தோழர். நாகசுந்தரம் 
வரவேற்புரை : தோழர். பன்னீர்செல்வம் 
------------------------------------------------------------------------

-:நிகழ்ச்சி நிரல்:- 
செயல்பாட்டறிக்கை 
நிதியறிக்கை 
அமைப்புநிலை 
புதிய நிர்வாகிகள் தேர்வு 
தீர்மானங்கள் 
இன்ன பிற..
-----------------------------------------------------------------------------------------------------------

சிறப்பு அழைப்பாளர் 
தோழர் K. சேதுராமலிங்கம் 

வாழ்த்துரை : தோழர்கள் 
நா. நாகேஸ்வரன் - மாவட்டத்தலைவர் 
வெ. மாரி - மாவட்டசெயலர் 
சி. முருகன் - மாவட்ட உதவிசெயலர் 
க. சுபேதார் அலிகான் - இளைஞர் அமைப்பு 
மற்றும் தோழர்கள் 

அனைவரும் வருக... 
அன்புடன் அழைக்கும் 

M. நாகசுந்தரம்                          N. பாலமுருகன் 
கிளைத்தலைவர்                        கிளைச்செயலர்

Sunday, 28 July 2013

மரபு மாறா 
மதுரை மாவட்ட  மாநாடு 

மதுரை மாவட்ட மாநாடு 28/07/2013 அன்று மதுரையில் 
தோழர். விஜயரங்கன் தலைமையில் 
அனைத்து தொழிற்சங்கத்தலைவர்களின் வாழ்த்துரையுடன்,
அக்கம்பக்கம் மாவட்டச்செயலர்களின் பங்கேற்புடன், 
பொதுமேலாளர் திருமதி.இராஜம் அவர்களின் சீரிய சிறப்புரையுடன், 
 மாநிலச்செயலர் தோழர். பட்டாபி அவர்களின் தொலைதொடர்பின் இன்றைய நிலை பற்றிய ஆழமான கருத்துரையுடன் 
சீராக சிறப்பாக நடைபெற்றது.

கூடல் நகரில் நிர்வாகிகள் தேர்வில் ஊடல் வந்திடுமோ 
என்ற அர்த்தமற்ற ஐயப்பாடுகளை களைந்தெறிந்து 
தலைவராக தோழர்.முருகேசன், 
செயலராகத்தோழர். சிவகுருநாதன் 
பொருளராக தோழர். ராஜேந்திரன் 
ஆகியோர்  ஒருமனதாக ஒரே மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

"தலைமைப்பொறுப்பில் யார்  இருந்தாலும் இல்லாவிட்டாலும் 
தானே இயங்கக்கூடிய சாசுவத இயக்கங்களை நாம் உருவாக்க வேண்டும்" 
என்ற விவேகானந்தரின் பொன்மொழிக்கு ஏற்ப
  
சாசுவத இயக்கமாம் NFTEன் மரபு காத்திடும் கூட்டமாக மதுரை மாவட்டம் விளங்க நமது மனப்பூர்வ வாழ்த்துகளை உரித்தாக்குகின்றோம்.

Saturday, 27 July 2013

செய்திகள் 

ஜூலை 30 டெல்லியில் அனைத்து தொழிற்சங்க கூட்டம்.

மத்தியப்பிரதேசத்தில்   NFTE   அகில இந்திய மாநாடு பணிகள் துவக்கம்.

JAO பதவிகள் அதிகம்  காலி இருப்பதால்  JAO தேர்வில் குறைந்த மதிப்பெண்ணில்  வாய்ப்பை நழுவ விட்ட  தோழர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி அவர்களுக்கு வாய்ப்பு வழங்கிட   
மத்திய சங்கம் கோரிக்கை.

மாதாந்திர வேதனையாகிவிட்ட GPF பட்டுவாடாவை 
முறைப்படுத்திட மத்தியசங்கம் கோரிக்கை.

31/03/2013 காலாண்டில்  BSNL வாடிக்கையாளர்களுக்கு  
தரம் மிக்க சேவை தர தவறியதற்காகவும் 
சேவைத்தர அளவீடுகளைக் கடைப்பிடிக்க தவறியதாலும் 95 லட்சம் நிதிக்குறைப்பு செய்வதற்காக TRAI - தொலைதொடர்பு  ஒழுங்கு முறை ஆணையம் BSNLக்கு SHOW CAUSE NOTICE கொடுத்துள்ளது.

Friday, 26 July 2013

வாழ்த்துக்கள் 

28/07/2013 -  ஞாயிறு 
மதுரையில் நடைபெறும் 
NFTE 
மாவட்ட மாநாடு 
வெற்றி பெற வாழ்த்துகின்றோம்.

Thursday, 25 July 2013

அனைத்து தொழிற்சங்க 
கூட்டமைப்பின் சார்பாக 
BSNL 
சீரமைப்புக்கருத்தரங்கம் 



ஆகஸ்ட் 3 சனிக்கிழமை 
மாவ்லங்கர் அரங்கம் 
புதுடெல்லி 

பங்கேற்பு :   தோழர்கள் 

குருதாஸ்  தாஸ் குப்தா - AITUC

சுதேஷ் தேவ் ராய் - CITU

BN. ராய் - BMS

TKS. இளங்கோவன், LPF  

மற்றும் 
அனைத்து  BSNL 
தொழிற்சங்க பொதுச்செயலர்கள்

கருத்தால் ஒன்றுபடுவோம்.. 
கரத்தால் ஒன்றுபடுவோம்.. 
BSNL காப்போம்...