Wednesday, 5 November 2014

01/12/2014 முதல் 
தமிழகத்தில் ERP அமுலாக்கம் 

தமிழகத்தில்  இன்னும் பல மாவட்டங்களில் 
ERP பணிகள் முழுமை பெறாத நிலையில், 
ERP அமுலாக்கம் 01/12/2014க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 
இதற்கான அறிவிப்பை 05/11/2014 அன்று 
மாநில நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 

  • மாவட்ட மட்டத்தில் அனைத்து பணப்பட்டுவாடாக்களும் 26/11/2014க்குள் முடிக்கப்பட வேண்டும்.
  • ERP மூலம் டிசம்பர் மாத சம்பளம் தயாரிக்கப்பட்ட பின்புதான் GPF உள்ளிட்ட ஊழியர்களின் மற்ற பட்டுவாடாக்கள் வழங்கப்படும்.
  • டிசம்பர் மாதம் முழுக்க எந்த விதமான பணப்பட்டுவாடாக்களும் இருக்காது.
  •  GPF தொகைக்கு விண்ணப்பிப்பது
  • GPFஐக் கூட்டுவது - குறைப்பது
  • வருமான வரிக்காக சேமிப்பு மற்றும் வீட்டுக்கடன் கட்டிய விவரங்களை அளிப்பது
  • வீட்டு வாடகை கொடுத்த தகவல்களை அளிப்பது
  • HRMSல் தவறான தகவல் இருந்தால் உரிய திருத்தம் செய்வது 
போன்ற பிரச்சினைகளை தோழர்கள் 
நவம்பர் மாதத்திலே  செய்து முடிக்கவும்.

ERP அமுலாக்கத்தை அவசர கோலத்தில் 
அள்ளி தெளிக்க முற்பட்ட மாநில நிர்வாகத்தை 
சற்றே நிதானிக்க வைத்த 
அனைத்து சங்க கூட்டமைப்பிற்கு நமது நன்றி.

Tuesday, 4 November 2014

தேவகோட்டை 
புத்தகத்திருவிழா 
தோழர். ஸ்டாலின் குணசேகரன் 
தேவகோட்டை புத்தகத்திருவிழா

05/11/2014 புதன் மாலை 5 மணி
நகரத்தார் மேல்நிலைப்பள்ளி 
தேவகோட்டை 

சிறப்புரை 
ஈரோடு மக்கள் சிந்தனை
பேரவைத்தலைவர் 
அருமைத் தோழர். 
ஸ்டாலின் குணசேகரன் 

தலைப்பு : பெரிதினும்... பெரிது கேள்...

காத்துக்கிடக்குது கருவூலம்..
கவர்ந்து செல்லட்டும் 
தங்கள் திருவுளம்..

தோழர்களே.. வருக..

Monday, 3 November 2014

நவம்பர்  04 
முகரம் 
முகரம்
இஸ்லாமியர்களின் புது வருடம் 
முகரம்...
முஸ்லிம் சகோதரர்களின் 
முதல் மாதம்...
கர்பலா போரில்..
கடமை செய்து உயிர் துறந்த..
நபிகள் நாயகம் அவர்களின் பேரன் 
இமாம் ஹுசைனின்..
தியாகத்திருநாள்...
நினைவு கூர்வோம்...

Saturday, 1 November 2014

புத்தகத்திருவிழா 
நவம்பர் மாத நவராத்திரி....
நவம்பர் 1 முதல் 9 வரை 
NSMVPS  மேல்நிலைப்பள்ளி 
தேவகோட்டை 
அரங்கு நிறை அழியா செல்வங்கள்...
ஆன்றோர்கள் சிந்தனையுரை...
இன்னிசை நிகழ்ச்சிகள்.. 

நவ மாலைகள்...
நாள்தோறும்...மாலை 5 மணி முதல்
சிந்தை நிறைக்கும் செவிக்குணவு....

நவம்பர் 1 - சனி
நல்லி குப்புசாமி செட்டியார்..
தவத்திரு. குன்றக்குடி அடிகளார்...

நவம்பர் 2 - ஞாயிறு 
முனைவர். கணேசன்
மேனாள் அமைச்சர். வைகைச்செல்வன் 

நவம்பர் 3 - திங்கள் 
பேராசிரியர். பழனி இராகுலதாசன் 
முனைவர். சுந்தர ஆவுடையப்பன் 

நவம்பர் 4 - செவ்வாய் 
மனிதத்தேனீ  சொக்கலிங்கம் 
முனைவர். இராஜாராம் 

நவம்பர் 5 - புதன் 
முனைவர். பசும்பொன் 
தோழர். ஸ்டாலின் குணசேகரன் 

நவம்பர் 6 - வியாழன் 
முனைவர். செந்தில் வேல்முருகன் 
பேராசிரியர். அப்துல்காதர் 

நவம்பர் 7 - வெள்ளி 
செல்வி. ஷர்மிளாதேவி 
நாவுக்கரசி இளம்பிறை மணிமாறன் 

நவம்பர் 8 - சனி 
காவல்கோட்டம். வெங்கடேசன் 
முனைவர். தா.கு. சுப்பிரமணியன் 

நவம்பர் 9 - ஞாயிறு 
நீதியரசர். அரு.லெட்சுமணன் 
அருள்திரு. சூசைமாணிக்கம் 
முனைவர். சபா.அருணாச்சலம் 
வரலொட்டி ரங்கசாமி 
ஜோ மல்லூரி 

புத்தகங்கள் 
இருளில் கைவிளக்குகள்..
காலத்தின் கலங்கரை விளக்கங்கள்..

உண்ண உணவு...
உடுக்க  உடை...
படுக்க வசிப்பிடம்.. 
படிக்க புத்தகங்கள்..

புத்தகங்களை...  
நேசிப்போம்... வாசிப்போம்... சுவாசிப்போம்...
வாரீர்... தோழர்களே...

Thursday, 30 October 2014

கண்ணீ ர்...
அலைகள் ஓய்வதில்லை.. 
எல்லை தாண்டி மீன் பிடித்த ஐவருக்கு தூக்கு..  
இலங்கை இனவெறி அரசின் திமிர்த்தன போக்கு..
தமிழக மீனவன்...
தண்ணீரில் பிறந்தான்...
கண்ணீரில் கரைந்தான்...

உயிரை விற்று..

வயிறை நிரப்பும் மீனவர்கள்..
வறுமை வலையில்... 

வாழ்நாள் முழுக்க சிக்கியவர்கள்...

கருவாட்டு முள்ளெடுத்து..

குழந்தைக்கு...
காது குத்தும் கடையர்கள்..

மன்னார் வளைகுடாவிலே 

இன்று மீன்கள் சிக்குவதில்லை..
தமிழக மீனவனே சிக்குகிறான்...

இந்தியனுக்கு மச்சம் இல்லை..

இந்தியப்பகுதியிலும் மச்சம் இல்லை..
இலங்கைக்குத்தான் மொத்த மச்சமும்..

மச்சத்திற்கு ஏனோ.. 

இங்கு  வர அச்சம்..
சீர் கெட்ட சிங்களன் அதையும் 
சிறை வைத்தானோ..?

வலை வீசி செல்லும் மீனவன்..

சிங்கள வலையில் வீழ்கிறான்..

வறுமைச்சிறையிலே வாடிய  மீனவன் 

கொடுமைச்சிறையிலே தவிக்கிறான்...

சிறையிலே மீனவன் துடிக்க.. 

கரையிலே குடும்பம் துடிக்கும்..

அரசியல்வாதிகள் அறிக்கை வலையை 

அள்ளி வீசுவார்கள்..
வாக்கு மீன்களை வளைக்க...

இந்தப்பாவிகளால்தான்...

கச்சத்தீவு பறிபோனது..
கூடவே எங்கள் 
தாய்மார்களின் தாலியும்..
சேர்ந்தே போனது...

அனுமன் இன்றிருந்தால்..

அறுபட்ட தாலிக்கயிறு கொண்டு 
சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைத்திருப்பான்..

நாம் சிறுநீரை..
பொழிந்து விட்டால்.. 
அமிழ்ந்து விடும் இலங்கையென..
அங்கேயே பிறந்த எங்கள் 
தாத்தா எகத்தாளம் சொல்ல கேட்டதுண்டு..

இன்றோ..

சிறுமதி   இலங்கையால்..
நம் சகோதரர்கள்..
பெருந்துயர் படும்  அவலம்..
கேட்பதற்கோ.. நாதியில்லை..

இங்கே...

கன்னடத்து அம்மாவின்.. 
சிறைவாசம் நீங்க..
கண்மூடி உயிர்விட்டான் தமிழன்...

இன்று...

சொந்தச் சகோதரன் சாதல் கண்டும்..
சிந்தை மரத்து...
செம்மை மறந்து வாழ்கிறான்..

இம் என்ற இந்தியாவின் 

ஒரு சொல்லில்..
இடிந்து விடும்  இலங்கை..
சொல்வார்களா? என்பதுதான் கேள்வி..

இங்கே...
கங்கையை தூய்மைப்படுத்துகிறார்கள்..
கங்கை மைந்தர்களை 
துயரப்படுத்துகிறார்கள்..

இந்த..

தேசத்தைக்கண்ணுறும்போது...
"தாயைக்கொல்லும் பஞ்சத்தைத்
தடுக்க முயற்சியுறார்..
வாயைத்திறந்து சும்மா.. கிளியே... 
வந்தே மாதரமென்பார்.."
என்னும் பாரதியின் வரிகளே 
நினைவுக்கு வருகின்றன....
AITUC  
வாழிய.. வாழியவே..
அக்டோபர் 31 - 1920
அடிமைத்தளை அறுக்கப்பிறந்த 
அரிவாள்..சுத்தியல்..

அடிமட்ட உழைப்பாளியின் 
போர்ப்பறை...

பெரும் தலைவர்கள் பணி செய்த 
பாசறை...

பாரதத்தின் முதல் தொழிற்சங்கம்...
AITUC... வாழ்க... வாழ்கவே..

Wednesday, 29 October 2014

J C
னைத்து ஊழியர் 
சங்கங்கள் கூட்டமைப்பு 

போனஸ் உள்ளிட்ட 
30 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 
அனைத்து ஊழியர்கள் 
சங்க கூட்டமைப்பின் சார்பில் 

27/11/2014 அன்று 
நாடு தழுவிய 
ஒரு நாள் அடையாள 
வேலைநிறுத்தம். 

மாவட்ட மட்டங்களில் 
JAC அமைத்திட 
மாநில சங்க பொறுப்பாளர்கள் 
கலந்து கொள்ளும் 
JAC சிறப்பு கூட்டங்கள் நடத்திட 
மாநில சங்கங்கள் வேண்டுகோள்.

கோரிக்கை விளக்க 
கூட்டங்கள் 
நடத்திடுவோம்...

வேடிக்கை.. 
மனிதரைப்போல் 
வீழ்ந்திடாமல்..
கோடிக்கை  பூதமாய் 
எழுந்திடுவோம்...
கோரிக்கைகளை 
வென்றெடுப்போம்..

தயாராவீ ர்.. தோழர்களே..