Friday, 9 January 2015

ஆர்ப்பாட்டம் விலக்கம் 

இன்று 09/01/2015 துணைப்பொதுமேலாளர்  நிர்வாகத்துடன் 
BSNLEU மற்றும்  NFTE  மாவட்டச்சங்கங்கள் நடத்திய 
பேச்சு வார்த்தையின் அடிப்படையில் 
இன்று மாலை நடைபெறவிருந்த 
ஆர்ப்பாட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.

  • ஜனவரி 21 அன்று GM அவர்கள் காரைக்குடி வந்து ஊழியர் பிரதிநிதிகளை சந்தித்து தேங்கியுள்ள பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
  • JCM, பணிக்குழு, நலக்குழு விரைவில் நடத்திட உத்திரவாதம் தரப்பட்டுள்ளது.
  • சுட்டிக்காட்டப்பட்ட ஊழியர் பிரச்சினைகள் உடனடியாக தீர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
  • அவசர பிரச்சினைகள் எந்நேரமும் கவனிக்கப்படும் என்ற உறுதிமொழியும் நிர்வாகத்தால் முன்மொழியப்பட்டுள்ளது.

நல்ல நிர்வாகத்தில்...
ஊழியர் பிரச்சினைகள் உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டும்...
உரிய முறையில் தீர்க்கப்பட வேண்டும்..
BSNL  வளர்ச்சிக்கான பணிகள் தடையின்றி நடக்க வேண்டும்..
தேவைப்படும் வழிகாட்டுதல்கள் திறம்பட தரப்பட வேண்டும்...

காரைக்குடியிலும் நல்ல நிர்வாகம் நடைபெறும் என்று நம்புவோம்...

Thursday, 8 January 2015

BSNL காக்க...பொதுத்துறை  காக்க...தேசம் காக்க....

இராமநாதபுரம் மாவட்டத்தில்..
ஒரு கோடி கையெழுத்து 
இயக்கம் துவக்கம் 

10/01/2015 - சனிக்கிழமை - மாலை 5 மணி 
தொலைபேசி நிலையம் - இராமநாதபுரம் 

தலைமை: தோழர்.V.மாரி 
கூட்டமைப்புத்தலைவர்.

வரவேற்புரை: தோழர்.P .மகாலிங்கம் 
கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர். 

கையெழுத்து இயக்கம் துவக்கி வைப்பவர் 
தோழர்.ஆர்.கே

பங்கேற்பு : தோழர்கள்

A.S.இராஜன் - AITUC இராமநாதபுரம் மாவட்டச்செயலர் 
S.கார்வண்ணன் - AITUC சிவகங்கை மாவட்டச்செயலர் 
M. சிவாஜி - CITU இராமநாதபுரம் மாவட்டச்செயலர் 
H.ஜான் சவுந்தரராஜ்  - மின்வாரிய சங்க மாநில துணைத்தலைவர் 
D.மெய்யப்பன் கிறிஸ்டோபர் - BSNLEU மாநில அமைப்புச்செயலர் 
V.மோகன்தாஸ் - AIBSNLEA  மாவட்டச்செயலர் 
S.பிரான்சிஸ் - SNEA  மாவட்டச்செயலர் 
R. இராமமூர்த்தி - AIBSNLOA மாவட்ட உதவிச்செயலர் 
P.செல்லப்பா - SNATTA மாவட்டச்செயலர் 
M.பூமிநாதன் - BSNLEU மாவட்டத்தலைவர் 
S.முருகன் - NFTE மாவட்டத்தலைவர் 


மற்றும் முன்னணித்தோழர்கள்...

தோழர்களே... வருக.. வருக...

BSNL அனைத்து ஊழியர்கள் அதிகாரிகள் 
சங்க கூட்டமைப்பு - காரைக்குடி.
சிவகங்கை...
ஒரு கோடி கையெழுத்து இயக்கம்...
தொடர் நிகழ்ச்சி...

அதிகார வர்க்கத்தின் செவிப்பறையில்
நம் கோரிக்கைகள் சென்றடைந்திட
அதிகாரிகள் சங்கச்செயலர் கையெழுத்திடும் காட்சி.. 

சிவகங்கைச் சீமையில்...
ஒரு கோடி கையெழுத்து தொடர் நிகழ்ச்சி 
தொலைபேசி நிலையத்தில் 08/01/2015 அன்று 
சிறப்புடன் நடைபெற்றது.
AIBSNLOA மாவட்டச்செயலர் தோழர்.குமார் அவர்கள் 
கூட்டத்தலைமையேற்று முதல் கையெழுத்திட்டு 
கையெழுத்து தொடர் நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்...
NFTE, BSNLEU  மாவட்டச்செயலர்கள் கலந்து கொண்டனர்.
SNEA  சார்பாக தோழர்.முருகானந்தம்,DE
BSNLEU சார்பாக தோழர்கள்.பன்னீர்செல்வம்,மனோகரன்
NFTE சார்பாக தோழர்கள்.விநாயகம்,ஆனந்த்,முருகன் 
இளைஞரணி  சார்பாக தோழர்கள்.சுபேதார் அலிகான்,தமிழ்மாறன் 
ஓய்வு பெற்ற தோழர்கள் சார்பாக தோழர்.சந்திரன் 
ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
ஒப்பந்த ஊழியர்கள் உணர்வுடன் கலந்து கொண்டனர்.
அனைவருக்கும் நமது வாழ்த்துக்களும்.. நன்றிகளும்...

AIBSNLOA சங்கம் கூட்டமைப்பில் இல்லாத நிலையிலும் 
அதன் மாவட்டச்செயலர் தோழர்.குமார் போராட்டத்திற்கு 
ஆதரவு தெரிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரியது. 
கூட்டமைப்பு தலைவர்கள் AIBSNLOA சங்கத்தை அகில இந்திய அளவில் அணுகி கூட்டமைப்பில் சேர்க்க வேண்டும் என்பது நமது எதிர்பார்ப்பு.
அணில்கள் கூட  அநீதிக்கு எதிராய் 
ஆர்ப்பரித்து பணி புரிந்த கதை இங்குண்டு...
அணில்களைக்கூட ஆண்டவன் ஒதுக்கவில்லை...
அணிகளை நாம் ஒதுக்கலாமா?

Wednesday, 7 January 2015

ஜனவரி 9
ஆட்கொணர்வு  ஆர்ப்பாட்டம் 
காணாமல் போன காரைக்குடி GM 

25/10/2014 அன்று காரைக்குடிக்கு வந்துதித்த..
காரைக்குடி GM ஐ.. 
இன்று வரை காணவில்லை...

JCM முடங்கிப்போச்சு... 
அது நடந்து ஆறு மாதமாச்சு..
பணிக்குழு படுத்துப்போச்சு....
நலக்குழு நலிந்து போச்சு...
ஊழியர் பிரச்சினை உறங்கிப் போச்சு...
BSNL சேவை போயே போச்சு..

தலைமை இல்லா மாவட்டமாக 
தறிகெட்டு கிடக்கும் 
காரைக்குடி மாவட்ட  நிலை பாரீர்...

பொறுப்புள்ள அதிகாரிகள்...
வாரம் ஒரு முறையாவது 
வந்து போகக்கோரி...

BSNLEU - NFTE  இணைந்த 
ஆட்கொணர்வு 
ஆர்ப்பாட்டம் 
09/01/2015 - வெள்ளிக்கிழமை 
மாலை 5 மணி 
(ஆளில்லா) பொதுமேலாளர் அலுவலகம் 
காரைக்குடி .
தோழர்களே.. வாரீர்...
பற்றியெரிந்த கரித்துண்டு 
நிலக்கரித்தொழிலாளர் போராட்டம்  
அரசியல் பாராமல் ஒன்று பட்டு அணிசேர்ந்து போராடிய
நிலக்கரித்தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

கரியைக்கூட விட்டு வைக்காத 
காவியரசின் தனியார் மோகம் எதிர்த்து...
40 ஆண்டுகளாக போராட்டத்  தீ காணாத  
கரித்துண்டுகள்.. 
ஜனவரி 5/6 இரண்டு நாட்களாக..
அனல் கொண்டு பற்றியெரிந்தன...

சிவப்பு என்றும் காவி என்றும்
சிந்தனை செய்யாது...
சேர்ந்து ஒன்றாய்  போராடி 
ஒற்றுமைக்கு வலு சேர்த்த 
COAL INDIA தோழர்களுக்கு..
நமது வீர வாழ்த்துக்கள்...

சின்னச்சின்ன சங்கதிகள்...

01/01/2015 முதல் 2.2 சத IDA  உயர்விற்கான 
DPE உத்திரவு 05/01/2015 அன்று வெளியிடப்பட்டுள்ளது. 
நூறு முறையாவது நாம் கத்தினால்தான் 
நூறு  சத இணைப்பை பற்றி நிர்வாகம்  
ஒரு சதமாவது உற்று நோக்கும்.
--------------------------------------------------------------------------------------------------------------
27/01/2015 அன்று போனஸ் குழுக்கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2011-12 முதல் 2014 செப்டம்பர் வரை CFA/CM பிரிவுகளில் நாம் எட்டிய இலக்குகள் பற்றிய புள்ளி விவரங்களும் நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டுள்ளது.
நிர்வாகம் அள்ளி  விடும் புள்ளி விவரங்களைப் பார்த்தாலே அடுத்த ஆண்டும் போனஸ் கிடைக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. 
-----------------------------------------------------------------------------------------------------------------
05/01/2015 அன்று நமது 30 அம்சக்கோரிக்கைகள் மீது தொழிலாளர் ஆணையருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 
நிர்வாகத்தரப்பில் இருந்து உருப்படியாக ஒரு வார்த்தை கூட வராததால்  பேச்சுவார்த்தை 
வழக்கம் போல் பலனின்றி முடிந்தது.
--------------------------------------------------------------------------------------------------------------------
09/01/2015 அன்று பதவிகள்  பெயர் மாற்றக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 ஊழியர்களுக்கு  உருப்படியான பெயர் 
வைக்கின்றார்களோ இல்லையோ.. 
பெயர் மாற்றக் கமிட்டிக்கு 
பெயர் மாற்றாக்கமிட்டி 
என நாம் இப்போதே பெயர் சூட்டி விடுவது நல்லது.
-------------------------------------------------------------------------------------------------------------------
25/02/2015 அன்று டெல்லியில் நடைபெற உள்ள பாராளுமன்றம் நோக்கிய பேரணியில் NFTE  சார்பாக 500 தோழர்கள்  கலந்து கொள்வது 
என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையே 
500க்கு மேல்.. என்பது குறிப்பிடத்தக்கது.
--------------------------------------------------------------------------------------------------------------------
தேவகோட்டை 
ஒரு கோடி கையெழுத்துத் தொடர் நிகழ்ச்சி 
சுட்டு விரலில் மக்களுக்கு  மை தடவி
செங்கோட்டையில் ஆட்சி  பிடித்த  ஆட்சியாளருக்கு
 நம் கோரிக்கையை சுட்டிக்காட்டும் அன்றாடக்கூலி.

07/01/2015 அன்று தேவகோட்டையில் 
ஒரு கோடி கையெழுத்து இயக்கத்தின் தொடர் நிகழ்ச்சி  
NFTE  மாவட்டத்தலைவர்  தோழர்.முருகன்
 தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. 

NFTE  மற்றும் BSNLEU  மாவட்டச்செயலர்கள் பங்கேற்றனர். 
கையெழுத்து தொடர் நிகழ்ச்சியை வாழ்நாள் ஒப்பந்த ஊழியர் தோழர்.நாகராஜன் துவக்கி வைத்தார்.

NFTE  கிளைச்செயலர் தோழர். பாலமுருகன், 
தோழர்கள்.ஞானம், சுபேதார் அலிகான், தமிழ்மாறன், நாகநாதன்,ஜான்சன்,மணிவாசகம் மற்றும் சுப்பையா 
ஆகியோர்  சிறப்புரையாற்றினர். 

 நாம் கோரிக்கை முழக்கம் எழுப்பியபோது FNTO தோழர் ஒருவர் கூட்டத்திலே  குறுக்காக வண்டி ஓட்டியது,  இந்தப் போராட்டத்தில் குறுக்குச்சால் ஓட்டும் அவரது சங்கத்தை நமக்கு நினைவூட்டியது. 

குறுக்குச்சால் ஓட்டுபவர்களும் மார்ச் 17 அன்று
 மனசாட்சி உந்திட மறுக்காமல் மறக்காமல் நமது வாழ்வாதாரப் போராட்டத்தில் பங்கு பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.  

5000 கையெழுத்து அவசியம் பெற்றுத்தர   உறுதி சொன்ன 
தேவகோட்டை தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.