Thursday, 7 May 2015

மறக்கப்படுகிறாரா? மார்க்ஸ்..
மாறும் விதி தந்த மார்க்ஸ் 
மாறாத உலகில்..
எல்லாம் மாறும்... 
என்னும் விதி சொன்னவர் மார்க்ஸ்...

பாட்டளிகள்.. தங்கள் 
கால் சங்கிலி அகற்றி..
கழுத்துக்கு சங்கிலி அணியும்.. 
கவுரவ நிலை தந்தவர்.. 
கார்ல் மார்க்ஸ்..

மே 5 அவரது 197வது  பிறந்த நாள்..
படிக்கப் படிக்க பரவசம் தருவது 
பாட்டாளிகளின் தோழர்.மார்க்சின் வரலாறு..

மே 5 அன்று....
பத்திரிக்கைகளைப்  புரட்டிப்புரட்டிப்  பார்த்தோம்...

அநாதைக் குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் 
ஹன்சிகாவின் அடிமனசு அழகாக சொல்லப்பட்டிருந்தது..

அந்தக்கால கனவு  நாயகன் 
பி.யு.சின்னப்பாவின் பிரதாபங்கள் 
பிரமாதமாக சித்தரிக்கப்பட்டிருந்தது...

அன்புமணி ஸ்டாலின் சண்டை 
அமர்க்களப் படுத்தப்பட்டிருந்தது..

எங்கே.. நம் மார்க்ஸ்...
தேடி தேடிப் பார்த்தோம்...
எங்கும் தென்படவில்லை...

அன்பு வழி சொன்ன...
புத்தனும் ஏசுவும் இராமனும் 
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக 
துதிக்கப்படுகிறார்கள்..

சமத்துவ வழி சொன்ன 
பொதுவுடைமை நாயகன் 
போற்றப்படாமல் போனது ஏன்?

வெறுத்த  மனசோடு...
வீதியில் சென்று கொண்டிருந்தோம்..
கண்ணில் கண்ட காட்சி..
நம் நெஞ்சை நிறைத்தது...

அடிமைச்சங்கிலி அகற்றிய 
அருமைத்தோழர்.மார்க்ஸ் புகழ் வாழ்க..
புரட்சிகர  வாழ்த்துக்களோடு...
துப்புரவுத் தொழிலாளர்கள் சங்கம் - AITUC 
என்னும் சுவரொட்டிகள் வீதி நிறைத்திருந்தன..
நம் மனதையும் நிறைத்தன...

பாட்டாளி வர்க்கத்தலைவனை 
பாழும் பத்திரிக்கைகள் மறக்கலாம் 
பாட்டாளிகள் மறக்கமாட்டார்கள்...
பாட்டாளிகள் பாரினில் உள்ளவரை.. 
ஓங்கட்டும்.. உயரட்டும்... மார்க்ஸ் புகழ்.. 
மாற்றலில் விலக்கு...
IMMUNITY  FROM  TRANSFER..

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு 
அங்கீகார காலம் வரை மாற்றலில் இருந்து விதி விலக்கு அளித்து 
நிர்வாகம் ஏற்கனவே உத்திரவு வெளியிட்டிருந்தது. 

தற்போது தலமட்ட நிர்வாகங்களின் சம்மதத்தோடும்..  
நிர்வாக வசதியை முன்னிட்டும்...
 அங்கீகார காலத்திற்கு பின்னும் மாற்றலில் இருந்து 
விதி விலக்கு அளிக்கலாம் என 
BSNL தலைமையகம் உத்திரவிட்டுள்ளது.

அனைத்திந்திய சங்கம் 
மாநிலச்சங்கம் 
மாவட்டச்சங்கம் 
ஆகிய நிலைகளில் பொறுப்பில் உள்ள 
செயலர் - உதவிச்செயலர் - பொருளர் 
ஆகியோர் இந்த சலுகையை அடையலாம்.
ஒன்று படு... உயர்படு...
ஓட... ஓட... விரட்டு...
ஒற்றுமையால் மிரட்டு... 
தோழர்களே....
NFTE  கோவை மாவட்ட மாநாடு...
சிறுவாணியின் இனிமை போல் 
சிறப்புடன் நடந்தேறியுள்ளது...

ஒரு மனதாக..
ஏக மனதாக... 
முழு மனதாக.. 
தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 
புதிய நிர்வாகிகளுக்கு 
நமது மனம் நிறை வாழ்த்துக்கள்...

மாவட்டத்தலைவர்  அருமைத்தோழர். இராபர்ட் 
மாவட்டச்செயலர். அன்புத்தோழர்.சுப்பராயன் 
மாவட்டப்பொருளர்.அருமைத்தோழர்.செம்மல் அமுதம் 
ஆகியோரின் பணி சிறக்க  நமது வாழ்த்துக்கள்...

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.. 
ஒன்றாம் வகுப்பு பாடமல்ல...
என்றும் மனிதருக்கு மங்காத பாடம்...

Wednesday, 6 May 2015

ஒப்பந்த ஊழியர் சம்பளம் 

காரைக்குடி மாவட்டத்தில் ஏப்ரல் 2015 மாத 
ஒப்பந்த ஊழியர் சம்பளம் இன்று 07/05/2015 பட்டுவாடா செய்யப்படும் என உதவிப்பொதுமேலாளர்  நிர்வாகம் உறுதி அளித்துள்ளார். 
நமது முன்கூட்டிய நன்றியை உரித்தாக்குகின்றோம்.

1000 தொழிலாளர்களுக்கு கீழே வேலை செய்யக்கூடிய இடங்களில் 
ஒவ்வொரு மாதம் 7ம் தேதியும், 
ஆயிரத்துக்கும்  அதிகமானோர் வேலை செய்யக்கூடிய இடங்களில் 
பிரதி மாதம் 10ம் தேதியும் 
சம்பளம் வழங்கப்பட வேண்டும் 
என்பது தொழிலாளர் ஊதியச்சட்டமாகும். 
ஆயினும் எங்கும் இது அமுல்படுத்தப்படவில்லை.

 தொழிலாளர் மாதமாகிய மேத்திங்கள் மாதத்திலிருந்தாவது தொழிலாளர்களின் சம்பள பட்டுவாடா 
முறைப்படுத்தப்படும் என நம்புவோம். 

மேலும் காரைக்குடியில் வார விடுப்பு அளிப்பதில் சிக்கல்கள் எழுந்தன. BSNLEU  சங்கத்துடன் இணைந்து சென்று அதிகாரிகளை சந்தித்து பிரச்சினையை சாதகமாக தீர்த்துள்ளோம்.  

நிதி மற்றும் நிர்வாக அதிகாரிகளின் 
மனித நேயப்போக்கு உதவிகரமாக இருந்தது.


  • உரிய தேதியில் சம்பளம் வழங்குதல் 
  • அடையாள அட்டை வழங்குதல்,
  • ESI மருத்துவ அட்டை வழங்குதல், 
  • EPF பிடித்தம் செய்தல்...
  • EPF  UAN எண் ஒதுக்கீடு 
  • அனைவருக்கும் 8 மணி நேரப்பணி வழங்குதல்
  • போனஸ் வழங்குதல் 

ஆகிய பிரச்சினைகளை தீர்க்க கோரி 
நமது TMTCLU தமிழ் மாநிலச்சங்கம் 
மே 19 அன்று சென்னையில் 
அறப்போர் 
நடத்த அறைகூவல் விடுத்துள்ளது. 

சென்னை செல்வோம்...
நம் உரிமை வெல்வோம்...
தயாராவீர்.. தோழர்களே...

Tuesday, 5 May 2015

செய்திகள்.. 
செய்திகள்... 
செய்திகள்... 

  • நமது போராட்ட  கோரிக்கைகள் மீது இன்று 06/05/2015 தொழிலாளர் நல ஆணையர் முன்பு முத்தரப்பு சமரச பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

  • நமது  JAC கூட்டமைப்புத்தலைவர்கள்  12/05/2015 அன்று டெல்லியில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிக்கின்றார்கள்.

  • கருணை அடிப்படை வேலை வழங்குவதற்கான  உயர்மட்டக்குழு HPC  கூட்டத்தை 31/05/2015க்குள் நடத்திட வேண்டும் என மாநில நிர்வாகங்களை CORPORATE  அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.

  • MANAGEMENT TRAINEE எனப்படும் நிதி மற்றும் நிர்வாகப்பிரிவு அதிகாரிகளுக்கான ஆளெடுப்பு அறிவிப்பை BSNL நிர்வாகம் வெளியிட்டுள்ளது. வெளியில் இருந்தும் BSNLலில் பணி புரியும் குறிப்பிட்ட கல்வித்தகுதி  உள்ள ஊழியர்களில் இருந்தும் ஆளெடுப்பு நடத்தப்படும். (EXTERNAL  AND INTERNAL CANDIDATES). இதனால் முதலாம் பிரிவு STS பதவிகளில் தற்போதுள்ள பதவி உயர்வு மூலம் நமது அதிகாரிகள் அமர்வது  தடுக்கப்படுகிறது.

GPF - வைப்பு நிதி 

இம்மாதம் GPF வைப்புநிதி விண்ணப்பிக்க விரும்புவோர் 15/05/2015க்குள் ESS எனப்படும் ERP  இணையசேவை மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என மாநில நிர்வாகம் கூறியுள்ளது. இணையத்தில் விண்ணப்பித்து விட்டு விண்ணப்பத்தை அச்செடுத்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட
 கணக்கு அதிகாரி சம்பளப்பட்டுவாடாவிற்கு அனுப்ப வேண்டும். 


இது சம்பந்தமாக நமக்கு 
இரண்டு  கேள்விகள் எழுவது இயல்பே....

ஆனியிலே சேதி சொல்லி...
 ஆவணியிலே தேதி சொல்லும் மன்னவனைப்போல்... 
மாநில நிர்வாகம் GPF விண்ணப்பிக்க ஒவ்வொரு மாதமும் 
ஒரு தேதி சொல்லி வருகின்றது.  ERP தற்போது இயல்பு நிலைக்குத்திரும்பிக்கொண்டிருக்கும் நிலையில்  ஊழியர்கள் 

ஒவ்வொரு மாதமும் 15 தேதிக்குள் 
GPF விண்ணப்பிக்க வேண்டும். 
20 தேதிக்குள் GPF  பட்டுவாடா செய்யப்படும்...
 என மாநில நிர்வாகம்  குறிப்பிட்ட   தேதி  சொல்ல வேண்டும். இதன் மூலம் ஊழியர்களின் மாதாந்திர  வைப்பு நிதி வேதனை களையப்படும்.


ERP என்பது TOWARDS PAPERLESS WORLD  
என கூறப்படுகின்றது.  
தாட்களற்ற தரமான சேவை.. 
இதுவே ERPயின் தாரக மந்திரம்.

இந்நிலையில் GPF விண்ணப்பிக்கும் தோழர்கள் ERPயிலும் விண்ணப்பித்துவிட்டு அதன் அச்செடுத்து கையெழுத்திட்டு சம்பந்தப்பட்ட கணக்கு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அச்சிட்ட விண்ணப்பம் கணக்கு அதிகாரிக்கு வரவில்லையெனில் GPF விண்ணப்பம் நிராகரிக்கப்படுகின்றது. சென்ற மாதம் காரைக்குடியில் ஏறத்தாழ 
20 விண்ணப்பங்கள் ESSல் விண்ணப்பித்த பின்னும் PRINTED APPLICATION வரவில்லையென்ற காரணத்திற்காகவே நிராகரிக்கப்பட்டுள்ளது. 

மாநில நிர்வாகம் நடத்திய WEBINARலும் இதுவே  வலியுறுத்தப்பட்டுள்ளது. நம்முடைய தோழர்களில் பெரும்பாலானோர் கிராமப்புறங்களில் பணி புரிகின்றனர். அங்கெல்லாம் அச்செடுக்கும் வசதி இல்லை. பெரிய ஊர்களிலே கூட கணிணி வசதி இல்லை.. 
PRINTER அச்சு இயந்திர வசதி இல்லை. பல JCMகளில் மணிக்கணக்கில் இதுவே பெரும் பிரச்சினையாக அலசப்படுகின்றது. மேலும் குறிப்பிட்ட தேதிக்குள் ESSல் விண்ணப்பித்தாலும் அச்சு எடுத்து மாவட்டத்தலைமை அலுவலகத்திற்கு அனுப்புவதற்குள் தாமதமாகி விடுகின்றது. 

எனவே நமது கேள்வி...
இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதி வந்த பின்னும் 
தாட்களில் அச்செடுத்து அனுப்பும் முறை தொடர வேண்டுமா?

ONLINE திருமணத்திற்கு 
அய்யரும்...
அச்சிட்ட பத்திரிக்கையும் தேவையா?
நிர்வாகம் சிந்திக்க வேண்டும்...

Monday, 4 May 2015

மே 5
மாமேதை மார்க்ஸ் 
பிறந்த நாள்  
சுரண்டலை எதிர்த்தவன்
யாரும் சுரண்ட முடியாதவன்  
மண்ணுலகில்....மார்க்ஸ் பிறந்தார்...
படைப்பாளிகளாக இருந்த பாட்டாளிகள் 
படிப்பாளிகளாக மாறினார்கள்...

அரிவாள் சுத்தியல் ஏந்தினார்கள்..
அறிவால் உலகை சுத்திகரித்தார்கள்..

தத்துவத்தை  விதைத்தார்கள்..
சமத்துவத்தை வளர்த்தார்கள்...

சுதந்திரம் போற்றினார்கள்...
சுரண்டலை எதிர்த்தார்கள்..
சுய தன்மை கொண்டார்கள்..

மண்ணில் மனிதன் சுரண்டப்படும் வரை 
மார்க்ஸ் இருப்பார்...
மார்க்ஸ் உள்ளவரை..
மனிதன் இருப்பான்...
வாழ்க மாமேதை... மார்க்ஸ்..