Friday, 13 November 2015

நவம்பர் - 14
குழந்தைகள் தினம் 

குழந்தையைத் தெய்வமாய்க் கொண்டாடிய தேசமிது...
தெய்வத்தைக் குழந்தையாய் வாரியணைத்த பூமியிது...

இன்றோ...
பால்  மணம் மாறா பச்சிளம் பிஞ்சுகள்
பாலியல் துன்பத்திற்கு ஆளாகும் கொடுமை..

பிஞ்சுகளை சிதைக்கும் நஞ்சுகள்...
பெண்டாளத் துடிக்கும் சண்டாளப்பேய்கள்...


கொடுமைகளை  எதிர்த்து நிற்க..
கொள்கையில் நிலைத்து நிற்க... 
குழந்தைகளைச் செதுக்குவோம்...

அவர்கள்.. இந்த உலகைச் செதுக்கட்டும்...
அவர்களால்.. இந்த உலகம் சிவக்கட்டும்...

பிஞ்சுகளுக்கு நம் நெஞ்சு நிறை வாழ்த்துக்கள்...
அண்ணாச்சிக்கு...75

அண்ணாச்சி என அனைவராலும் 
அன்போடு அழைக்கப்படும் 
சாகித்ய அகாடமி விருதாளர் 
தோழர்.ஜீவாவின் அடியொற்றி 
அன்புத்தோழர். பொன்னீலன் 
அவர்களின் 75வது 
--------------------------------------------------------------------------
பவள விழாக்கொண்டாட்டம் 
பொன்னீலன்  - 75
-----------------------------------------------------------------------
15/11/2015 - ஞாயிறு - மாலை - 4 மணி 
நகர் மன்றம் - புதுக்கோட்டை.
--------------------------------------------------------------------------
-: பங்கேற்பு :- 
தவத்திரு.குன்றக்குடி அடிகளார் 
பேராசிரியர். மு.பழனியப்பன் 
எழுத்தாளர்.  சந்திரகாந்தன் 
மருத்துவர் இளங்கோவன் 
அறந்தை கவிஞர்  பாவா
செம்பை மணவாளன் 
கவிதைப்பித்தன் 
கோவில் குணா 
மற்றும் தோழர்கள்

மனிதனை நேசிக்கும்..
மனிதத்தை சுவாசிக்கும்.. 
மறக்கவியலா அண்ணாச்சியின் 
அன்புமொழி கேட்க... 
அன்புமழையில் நனைய...
அனைவரும் வாரீர்...

தோழமையுடன் அழைக்கும்... 
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்... 
தொலைத்தொடர்புத்துறை தோழர்கள்...
புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி.

அண்ணாச்சிக்கு வாழ்த்துச் சொல்ல: 9443791644

Monday, 9 November 2015

தீப ஒளித்திருநாள் 
நல்வாழ்த்துக்கள் 

துன்ப இருளே... தூரப்போ...
இன்ப ஒளியே... தொடர்ந்து வா...

வதம் செய்யும் கிருஷ்ணர்கள்...
வலுவிழந்து விட்டதாலே...
அதம் செய்யும் அரக்கர்கள்..
நிதம் இங்கே பெருகுகிறார்கள்...

நலிந்த மனிதன் வயிற்றில் அடிக்கும் 
நரகாசூரன்களை வீழ்த்துவோம்...

மதம் என்னும் இருள்  மாய்ப்போம்...
மனிதம் என்னும் ஒளி பரப்புவோம்...

அனைவருக்கும்  இனிய 
தீபாவளித் திருநாள் 
நல்வாழ்த்துக்கள்...
பணி சிறக்க...வாழ்த்துக்கள்


மாநிலச்செயலர்  
தோழர்.பட்டாபி அவர்கள் 
விடுப்பில் சென்றுள்ளதால் 
மூத்த மாநில உதவிச்செயலர். 

தோழர்.சென்னக்கேசவன்...அவர்கள் 

 பொறுப்பு மாநிலச்செயலராகச் 
செயல்படுகிறார்.
அவரது பணி சிறக்க  நல்வாழ்த்துக்கள்...

அலைபேசி எண் : 9486103979

Sunday, 8 November 2015

போனால் வராது..
பொழுது பட்டால் கிடைக்காது...



NFTE - BSNLEU 
இணைந்த  ஆர்ப்பாட்டம்

தீராத...ஒப்பந்த ஊழியர்கள் 
பிரச்சினைகள் தீர்விற்காக 

NFTE - BSNLEU 
இணைந்த  
கோரிக்கை முழக்கத்தொடர் 
 ஆர்ப்பாட்டம்

09/11/2015 - திங்கள் - பகல் 01.00 மணி 
பொதுமேலாளர் அலுவலகம் - காரைக்குடி.

-: கோரிக்கைகள் :-

மாவட்ட நிர்வாகமே... 
  •  ஒப்பந்த ஊழியர்களுக்கு போனஸ் வழங்கு...
  • தேசிய விடுமுறை நாட்களுக்கு சம்பளம் வழங்கு...
  • சனி...ஞாயிறு.. இரவு.. பகல் என பாராது பணி செய்யும் கேபிள் பகுதி தோழர்களுக்கு முழுமையான சம்பளம் வழங்கு...
  • அக்டோபர் 2015 முதல் உயர்ந்துள்ள VDA வழங்கு...
  • வார ஓய்விற்கு சம்பளம் வழங்கு....
  • குறைந்த பட்சக்கூலியான மாதம்  26 நாள் சம்பளம் வழங்கு...
  • அடையாள அட்டை வழங்கு...
  • மருத்துவ அட்டை வழங்கு 
  • EPF - வைப்புநிதி  UNIVERSAL ACCOUNT NUMBER  வழங்கு...

இது வழக்கமானது...
ஆனாலும்...
வேறு வழியில்லாதது...

இது ஒரு தொடர்கதை....
ஆனாலும்... 
தொடரக்கூடாத துயரக்கதை...

தோழர்களே... வாரீர்... 

Saturday, 7 November 2015

அவுரங்காபாத் மத்திய செயற்குழு 
தீர்மானங்கள்... 


போனஸ் 

போனஸ் வழங்குவதற்கான  வரையறைகளை  போனஸ் குழு இறுதி செய்யாத நிலையில்.. தீபாவளிக்குள் தற்காலிக  போனஸ் வழங்கிடக்கோரி அகில இந்தியத்தலைவர்களும்.. மாநில மட்டத்தலைவர்களும் காலவரையற்ற உண்ணாவிரதத்தை மேற்கொள்ளுமாறு மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

வைப்புநிதி - GPF

வைப்புநிதி பட்டுவாடா செய்வதில் நிகழும் தாமதங்களை வருத்தத்துடன் செயற்குழு உற்று நோக்குகிறது. வைப்பு நிதிக்கான நிதியை BSNLக்கு உடனுக்குடன்  DOT அனுப்ப வேண்டும் எனவும்.. தற்போது நிலவும் தாமதங்களை தீர்ப்பதற்கு BSNL  நிர்வாகம் முயல வேண்டும் எனவும் மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

78.2சத IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி 

12/06/2012 வேலை நிறுத்த உடன்பாட்டின்படி 01/04/2013 முதல் HRA  வாடகைப்படி  78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வழக்கம் போல் நிர்வாகம் தனது உறுதிமொழியை நிறைவேற்றவில்லை. எனவே BSNL நிர்வாகம்  உடனடியாக 78.2 சத  IDA சம்பள அடிப்படையில் வீட்டு வாடகைப்படி வழங்கிட வேண்டும்.

நேரடி நியமன  ஊழியர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள்.

BSNLலில் நிரந்தரம் பெற்ற ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என 12/06/2012 வேலை நிறுத்தத்தின் போது உடன்பாடு  எட்டப்பட்டது.  ஆனால் ஆண்டுகள் 3 கழிந்த போதும் எந்த அசைவுமில்லை. எனவே உடனடியாக BSNL நிர்வாகம் நேரடி நியமன ஊழியர்களுக்கு 12 சத பங்களிப்பின் அடிப்படியில் புதிய ஓய்வூதியத்திட்டத்தை அறிவிக்க வேண்டும்.

ஓய்வூதியப் பங்களிப்பு 

BSNL உருவாக்கத்தின் போது ஊழியர்களுக்கான ஒய்வூதிய நிதியை  அரசே வழங்கும் என உடன்பாடு போடப்பட்டது. ஆனால் 15/06/2006 அன்று அரசு 60 சத நிதிச்சுமையை மட்டுமே ஏற்கும் என்றும்..  40 சத நிதிச்சுமை BSNL  நிர்வாகத்தால் ஏற்கப்பட வேண்டும் எனவும் உத்திரவு இடப்பட்டுள்ளது. இந்த ஊழியர் விரோத உத்திரவு உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். இதற்கான போராட்டங்களில் அனைத்து சங்கங்களையும் இணைத்து போராட மத்திய செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

DELOITTE குழு அறிக்கை 

ஒரு லட்சம் ஊழியர்களை உபரியாக்கும் முயற்சியில் இறங்கியுள்ள ஊழியர் விரோத DELOITTE குழு அறிக்கை முழுமையாக ரத்து செய்யப்பட  வேண்டும். அகன்ற அலைவரிசை BROAD BAND பழுதுகளை தனியாருக்கு விட எத்தனிக்கும் முயற்சி கைவிடப்பட வேண்டும்.  BSNLன் வளர்ச்சிக்கு குந்தகமான  இத்தகைய மோசமான முடிவுகளை எதிர்த்து போராட்டக்களம் காண மத்திய செயற்குழு அறைகூவல் விடுக்கிறது.

செல் கோபுரம் தனி நிறுவனம் 

செல் கோபுரங்களைத் தனியாகப் பிரித்து துணை நிறுவனம் ஏற்படுத்த முயற்சிக்கும் அரசின் போக்கை செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. இதனால் ஏற்படும் செலவினங்கள் மற்றும் ஊழியர் பிரச்சினைகளை நிர்வாகம் கணக்கில் கொள்ளவில்லை.  மேலும் இதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஊழியர் தரப்பில் இருந்து யாரும் நியமிக்கப்படவில்லை. எனவே தனி செல் கோபுர நிறுவன உருவாக்கத்தால் உருவாகும் தீய விளைவுகளை எதிர்த்து ஒன்றுபட்ட போராட்டம் காண செயற்குழு வேண்டுகோள் விடுக்கிறது.

மாற்றல் கொள்கை 

மாற்றல் கொள்கையில் கிராமப்புற பகுதிகளுக்கு 3 வருட கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . இது ஏற்புடையதல்ல. 3 ஆண்டுகள் என்பது அதிகமான காலமாகும். எனவே 3 ஆண்டுகளுக்கு முன்னேயே சூழல்களைப் பொறுத்து மாற்றல் இடுவதற்கு உரிய திருத்தங்கள் மாற்றல் கொள்கையில் கொண்டு வரப்பட வேண்டும்.