Wednesday, 11 October 2017

NFTE
தொலைத்தொடர்பு ஊழியர்கள் சங்கம் 
காரைக்குடி மாவட்டச்சங்கம்.
மாவட்டச்செயற்குழு

14/10/2017 – சனிக்கிழமை – காலை 10 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

தலைமை
தோழர்.லால்பகதூர் – மாவட்டத்தலைவர்.

பங்கேற்பு : தோழர்கள்
 K.அசோகராஜன்
NFTE தமிழ்மாநில சிறப்பு அழைப்பாளர்
NFTCL அகில இந்தியத்துணைத்தலைவர்

G.இராஜேந்திரன்
NFTE மதுரை மாவட்டச்செயலர்
 G.சுபேதார் அலிகான்
NFTE மாநில அமைப்புச்செயலர்
 B.முருகன்
NFTCL மாவட்டச்செயலர்
 S.முருகன்
NFTCL மாவட்டத்தலைவர்
  P.முருகன் 
AIBSNLPWA மாவட்டச்செயலர்

  • பணி நிறைவு பாராட்டு…
  • அனைத்து சங்கப்போராட்டம்..
  • நிரந்தர ஊழியர் பிரச்சினைகள்…
  • ஒப்பந்த ஊழியர் பிரச்சினைகள்…
  • மாவட்டச்சங்க அமைப்பு நிலை விவாதம்…
  • தஞ்சை தமிழ்மாநில செயற்குழு முடிவுகள்…
  • விஜயவாடா மத்திய செயற்குழு  முடிவுகள்…
  • தலமட்டக்குழு, பணிக்குழு மற்றும் நலக்குழு…
  • மதுரை மாவட்ட சங்கப்போராட்டத்தில் பங்கேற்பு…


கிளைச்செயலர்களும்… 
மாவட்டச்சங்க நிர்வாகிகளும்… 
மற்றும் முன்னணித்தோழர்களும்
தவறாது கலந்து கொள்ளவும்.

அன்புடன் அழைக்கும்...
பா.லால்பகதூர்             வெ.மாரி
மாவட்டத்தலைவர்         மாவட்டச்செயலர்

Monday, 9 October 2017

கோரிக்கை தினம் 

NFTCL 
ஒப்பந்தத் தொழிலாளர் சம்மேளனம் 
தமிழகம்.

10/10/2017 - செவ்வாய் 
தமிழகம் தழுவிய...
கோரிக்கை தினம் 
மற்றும் 
கறுப்பு அட்டை அணிதல் 
தோழர்களே... வெற்றிகரமாக்குவீர்...
கோரிக்கை ஆர்ப்பாட்டம் 

Sunday, 8 October 2017

அவனொரு ஏசுபிரான்…
அக்டோபர் – 9
தோழர்.சே குவேரா
50வது நினைவு தினம்
  
அர்ஜென்டினாவில் பிறந்தான்…
மருத்துவர் பட்டம் பெற்றான்….
மனித நோயை விட..
மானுட நோயே கொடியதென..
மனதில் உறுதியாய்த் தெளிந்தான்…

லத்தீன் அமெரிக்காவை வலம்வந்தான்…
அடிமை நோயை விரட்டிட….
அல்லும் பகலும் உழைத்தான்…
கியூபாவை விடுவித்தான்…
பதவிகளைத் துச்சமெனெ துறந்தான்…
காங்கோவில் களமிறங்கினான்…
காலம் அவனுக்கு கைகொடுக்கவில்லை…
பொலிவியாவில் போருக்குச் சென்றான்…

தலைவர்களால் கைவிடப்பட்டான்…
தரித்திரங்களால் காட்டிக்கொடுக்கப்பட்டான்….

1967 அக்டோபர் – 9…
பொலிவிய மண்ணில்…
தன் புகழுடம்பு சாய்த்தான்…

எங்கெல்லாம் அநீதி எழுகிறதோ….
அங்கெல்லாம் புரட்சி எழட்டும்….
எனப் புரட்சிக்குரல் கொடுத்த…
சென்ற நூற்றாண்டின் மகத்தான
தலைவன்… புரட்சியாளன்…
சேகுவேரா நினைவைப் போற்றுவோம்…

Saturday, 7 October 2017

 எங்கே செல்கிறது...நாடு?

கருத்தரங்கம்

08/10/2017 – ஞாயிறு – மாலை 05 மணி
கண்ணதாசன் மணிமண்டபம் – காரைக்குடி.

பங்கேற்பு

தோழர்.தா.பாண்டியன்
இந்தியப் பொதுவுடமைக் கட்சி

தோழியர்.அருள்மொழி
திராவிடர் கழகம்

குடிநீர்க்காவலர் பழ.கருப்பையா

கருத்தரங்கம்…
களிப்பூட்ட அல்ல…
கருத்தூட்டுவதற்கு…

தோழர்களே… வாரீர்…
IDA  உயர்வு உத்திரவு

01/10/2017 முதல் 5.3 சத 
IDA உயர்விற்கான DPE உத்திரவு 
05/10/2017 அன்று வெளியாகியுள்ளது. 
BSNL உத்திரவு விரைவில் வெளியாகும்.

01/10/2017 அன்று 
மொத்த IDA 124.3 சதம்.

Thursday, 5 October 2017

எரிதழல் ஊர்வலம்…
04/10/2017 அன்று டெல்லியில்
BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு
3வது ஊதியக்குழு அமுலாக்கத்தை வலியுறுத்தி
AIBSNLEA தலைமையில் அனைத்து சங்கங்களின் சார்பாக மெழுகுவர்த்தி ஏந்தி எரிதழல் ஊர்வலம் நடைபெற்றது. 
NFTE பொதுச்செயலர் தோழர்.சந்தேஷ்வர்சிங் கலந்து கொண்டார்.
 கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்...