Monday, 13 November 2017

கரம் கோர்ப்போம்…களம் காண்போம்...


ஊதிய மாற்றம் அடைந்திட…
செல்கோபுரம் துணை நிறுவனம் தடுத்திட…

நாடு தழுவிய
மனிதச்சங்கிலிப் போராட்டம்

16/11/2017 – வியாழன் – மாலை 03.00 மணி
புதிய பேருந்து நிலையம் – காரைக்குடி….

அனைத்து சங்கங்களும்…
கரம் கோர்ப்போம்… களம் காண்போம்…
எழுச்சி கொள்வீர்… தோழர்களே…
13/11/1938…
பிறந்தார்… இராமசாமி… பெரியாராக…

பெண்களுக்காக குரல் கொடுத்த…
ஈ.வெ.ராமசாமிக்கு….
பெண்களே கொடுத்தனர்…
ஈடு இணையற்ற பட்டம்….
பெரியார்… பெரியார்… பெரியார்… என்று…

பெண்களுக்கு கல்வி…
பெண்களுக்கு சொத்து…
பெண்களுக்கு உரிமை…
பெண்களுக்கு சமத்துவம்… 

சட்டங்கள் ஆள வேண்டும்…
பெண்கள் ஆணுக்கு இணையாக
பட்டங்கள் பெற வேண்டும்… என
பெரியார் குரல் கொடுத்தார்…

பெண்களோ பெரியார் என்னும்
பெரும் பட்டத்தையே…
பெரியாருக்கு கொடுத்தனர்…

1938 நவம்பர் 13ம் நாள்…
சென்னை பெத்தநாயக்கன் பேட்டை…
பெண்களின் உரிமை மாநாடு…
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்…
திருவாட்டி திருவரங்க நீலாம்பிகை அம்மையார்…
மருத்துவர் தர்மாம்பாள்..
மீனாம்பாள் சிவராஜ்…
பண்டித நாராயணி அம்மையார்…
தோழியர் பார்வதி அம்மையார்…
அண்ணாவின் துணைவியார் இராணி அம்மையார்…
என விடுதலை தாகம் கொண்ட…
வீரத்திருக்கூட்டம் கூடி…

தங்கள் விடுதலைக்கு குரல்கொடுத்த…
பகுத்தறிவுப் பகலவனுக்கு…
தந்தைப் பெரியார் என
பட்டம் தந்த நாள் இன்று…

பெண்கள் விடுதலைப் போரில்…
பெரும்பங்கு கொண்ட…
பெருமை மிக்கத் தலைவனுக்கு...
பெரியார் பட்டம் பொருத்தமன்றோ…

Monday, 6 November 2017

சுதந்திரப்போர்…
தொழிலாளர் விரோத…
மக்கள் விரோத…
மானுட விரோத…
மத்திய அரசை எதிர்த்து…
மக்கள் மன்றம் முன்பு…
மாபெரும் சுதந்திரப்போர்…

நவம்பர் 9 10 11…
நாடாளுமன்றம் முன்பு கூடுவோம்…

குறைந்த பட்சக்கூலி ரூ.18000…
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.3000…
அடைந்தே  தீருவோம்….
குறைந்த பட்ச உரிமைகளை 
இழந்திட மாட்டோம்...

சுமையினுக்கு இளைத்திட மாட்டோம்…
மீண்டும் ஒரு சுதந்திரம்
அடையாமல் விடமாட்டோம்…
உரிமைப்போர் 

 நவம்பர் 9.. 10… 11
நாடாளுமன்றம் முன்பாக
உழைக்கும் வர்க்கத்தின்
உரிமைப்போர்…

மக்கள் விரோத
மத்திய அரசைக் கண்டித்து…

தொழிலாளர் விரோத
ஆளும் அரசைக் கண்டித்து…

பொதுத்துறைகளை அழித்திடும்…
பொறுப்பற்ற அரசைக் கண்டித்து…

தோழர்களே… அணி திரள்வீர்…
எல்லைகள் விரியும் NFTCL

ஒப்பந்தத் தொழிலாளரின் 
உரிமை காக்கும் இயக்கமாம் NFTCL... 

திக்குகள் தெரியாது… 
திசைவழி தெரியாது...
திகைத்து நின்ற...
திக்கற்று நின்ற...
தொழிலாளியின் துயர் துடைக்க...
எட்டுத்திக்கிலும் நாளும் பொழுதும்... 
தன் காலூன்றி வருகின்றது…

இதோ சுந்தரத்தெலுங்கினிலே… 
ஆந்திர மாநிலத்திலே...
நெல்லூர் மாவட்டத்திலே... 
05/11/2017 அன்று மிகச்சீரும் சிறப்புமாக
தனது மாநில அமைப்பை NFTCL துவக்கியுள்ளது.

NFTE சம்மேளனச்செயலர் 
தோழர்.அஞ்சையா அவர்களின் தலைமையில்…
NFTCL அகில இந்தியத் தலைவர் 
தோழர்.ஆசிக் அகமது… அவர்கள்..
NFTCL அகில இந்தியப் பொதுச்செயலர் 
தோழர்.C.K. மதிவாணன் அவர்கள்..
NFTCL அகில இந்திய சங்க நிர்வாகிகள்..
தோழர்கள்.சுப்பராயன்,அசோக்ராஜன்..
NFTCL தமிழக மாநிலச்செயலர் 
தோழர்.ஆனந்தன் ஆகியோர்  பங்கு பெற…

ஆந்திர மாநிலம் முழுவதுமிருந்து...
ஒப்பந்தத்தொழிலாளர்கள்
அலையெனத் திரண்டு வந்து
ஆந்திர மாநில அமைப்பை
அற்புதமாக துவக்கியுள்ளனர்.

கொடியேற்றம்… 
உணர்ச்சிமிகு கோஷங்கள்….
கண்கவர் கலை நிகழ்ச்சிகள்….
தலைவர்களின் கருத்தாழமிக்க உரைகள்…
ஒப்பந்த ஊழியர்களின் 
உரிமைக்கான கேள்விகள் என
நெல்லூர் NFTCL மாநில அமைப்பு மாநாடு …
நெஞ்சம் நிறைந்த மாநாடாக 
முத்திரை பதித்துள்ளது.

மாநிலத்தலைவராக தோழர்.பீரா அவர்களும்…
மாநிலச்செயலராகத் தோழர்.ஜீலானி கான் அவர்களும்
ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

அடிமட்ட ஊழியரின் அல்லல் போக்கிட…
அயராது பாடுபடும்… அனுதினமும் செயல்படும்…
அருமைத்தோழர். C.K.மதிவாணன் அவர்களின்..
அரும்பணி சிறந்திட அன்போடு  வாழ்த்துகின்றோம்..
NFTE
அகில இந்திய மாநாடு
NFTE
அகில இந்திய மாநாடு
2018 -  மார்ச் 14... 15... 16... 
அமிர்தசரஸ் – பஞ்சாப்

சிரம் நிமிர்த்திய சங்கம்…
கரம் உயர்த்திய சங்கம்…

வாழ்வு தந்த சங்கம்…
வளம் பெருக்கிய சங்கம்…

ஊணாய்… உயிராய்…
உணர்வோடு கலந்த சங்கம்…

இதயக்கோவிலாம்…. 
NFTEயின்...
அகில இந்திய மாநாடு…
பொற்கோவில் நகரிலே…
பொலிவோடு நடைபெறுகிறது…

பொற்கோவில் நகர் திணறட்டும்…
புறப்படுவீர்… தோழர்களே…

Saturday, 4 November 2017

மாபெரும் அறப்போர்

அனைத்து சங்க கூட்டமைப்பு 
மாபெரும் அறப்போர்
நவம்பர் 9 – 11 - புதுடெல்லி

இன்றைய தலைமுறை…
இன்னலின்றி வாழ்ந்திட…

நாளைய தலைமுறை…
நலமுடன் வாழ்ந்திட…

நாடாளுமன்றம்… 
நோக்கிச்செல்வோம்…

தேசம் உணரட்டும்…
வேசம் கலையட்டும்…

இது…
நம்மைக்காத்திட…
நாட்டைக்காத்திட…

எழுவீர்… தோழர்களே…