![]() |
மாண்புற நடந்த மணிவிழா... |
![]() |
வைரிகளும் வாழ்த்திய வைர விழா |
வைரத்துண்டுகளாக்கி...
வையத்தலைமை கொள்ள வைத்த
NFPTEயின் வைர விழா..
உற்சாக நகராம் புதுவையிலே..
உணர்வுடன் நடந்தேறியது...
எல்லா சங்கத்தலைவர்களும்
எங்களின் ஏவாள் NFPTE
என எடுத்துரைக்க...
1968 போராட்டத் தோழர்கள்
NFPTE எங்களின் போர்வாள்..
என பெருமிதம் கொள்ள...
இன்றும் வாழும் தலைவர்களும்..
இன்றையத் தலைவர்களும்...
NFPTE எங்களின் கூர்வாள்..
என முழக்கமிட...
அடக்குமுறை கண்டு...
ஒடுக்குமுறை வென்று...
பிரிந்த கரங்களை பிணைத்து..
இணைந்த கரங்களாய் உயரச்செய்த
NFPTEயின் வைரவிழா...
வாழும் நாளெல்லாம்
நம் நெஞ்சில் வாழும் விழா...
NFPTE புகழ் பாடிய..
புதுவைக்கும்.. மாநிலச்சங்கத்திற்கும்..
நமது மனமுவந்த வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment