Monday, 31 August 2015

போனஸ் குழுக்கூட்டம் 

31/08/2015 அன்று தலைநகர் டெல்லியில் 
போனஸ் குழுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துளிகளில் சில...
  • NFTE சார்பில் தோழர்.இஸ்லாம் அவர்களும், BSNLEU  சார்பில் தோழர்.அபிமன்யு அவர்களும் கலந்து கொண்டனர்.
  • பண்டிகைக்காலம் நெருங்குவதால் தற்காலிக போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
  • உற்பத்தியோடு  இணைக்கப்பட்ட போனஸ் PRODUCTIVITY LINKED BONUS   என்ற பதங்களையே கடிதப்போக்குவரத்தில் குறிப்பிடப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
  • உற்பத்தியோடு  இணைக்கப்பட்ட போனஸ் என்பது தொழிலாளருக்கு மட்டுமே பொருந்தும். அதிகாரிகளுக்குப் பொருந்தாது.
  • போனஸ் அடைவதற்கான இலக்கு TARGET  என்பது மிகவும் கடினமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனை CFA தரைவழித் தொலைபேசிப்பிரிவுடன் பேசி மாற்றியமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • இலக்கு குறியீடுகளில் FAIR என்ற குறியீடு இல்லாதது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • போனஸ் சம்பந்தமாக இன்னும் உரிய  விளக்கம் அளிக்காத DOT யின் செயல்பாடு கண்டிக்கப்பட்டது.
  • போனஸ் குழுக்கூட்டங்களை இழுத்தடிக்காமல் உரிய இடைவெளியில் நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment