மனிதச்சங்கிலி
BSNL அனைத்து தொழிற்சங்க அமைப்புக்கள்
காரைக்குடி தொலைத்தொடர்பு மாவட்டம்
---------------------------------------------------------------------------------------------------------------------------------
தோழர்களே…
BSNL அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டம்
14/11/2017 அன்று BSNLEU
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 16/11/2017 அன்று நடைபெறவுள்ள
மனிதச்சங்கிலி இயக்கத்தை வெகுசிறப்பாக நடத்துவது குறித்து
கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.
மனிதச்சங்கிலி இயக்கத்தில் அனைத்து அதிகாரிகள்,
ஊழியர்கள்,
ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள்
அனைவரையும் உணர்வுடன் பங்கு பெறச்செய்வது.
குறைந்த
பட்சம் 500 தோழர்கள்
மனிதச்சங்கிலி
இயக்கத்தில் பங்கு பெற வேண்டும்.
பரமக்குடி
மற்றும் முதுகுளத்தூர் 50 தோழர்கள்
சிவகங்கை
மற்றும் மானாமதுரை 50 தோழர்கள்
இராமநாதபுரம்,
கீழக்கரை மற்றும் இராமேஸ்வரம் 100 தோழர்கள்
காரைக்குடி,தேவகோட்டை
மற்றும் திருப்பத்தூர் 300 தோழர்கள்.
இராமேஸ்வரம், இராமநாதபுரம், பரமக்குடி மற்றும் சிவகங்கை
பகுதிகளில் இருந்து அனைத்து தோழர்களும் வேன் மூலமாக காரைக்குடி வந்து சேரவேண்டும்.
மனிதச்சங்கிலி மாலை 03 மணிக்கு காரைக்குடி புதிய
பேருந்து நிலையம் அருகேயுள்ள தேவர் சிலையில் இருந்து துவங்கி பெரியார் சிலை வரை நடைபெறும்.
மாலை 5 மணிக்கு கண்ணதாசன் மணிமண்டபம் முன்பாக மனிதச்சங்கிலி நிகழ்வு நிறைவுறும்.
தோழர்களே…
நமது
ஊதியமாற்றத்தைப் பெற்றிடவும்….
நமது
BSNL நிறுவனத்தைக் கூறு போட்டு
செல்
கோபுரங்களுக்காக தனி நிறுவனம் துவங்கத்துடிக்கும்
மத்திய
அரசின் BSNL விரோதப்போக்கை எதிர்த்தும்…
நாம்
நமது உரிமைக்குரலை ஓங்கி ஒலிக்க வேண்டும்…
அதற்கான
தருணம் இது…. அதற்கான போராட்டம் இது…
நமது
ஒற்றுமை மூலம் உரிமைகளை வெல்வோம்…
No comments:
Post a Comment