Thursday, 29 March 2018


போராட்டமே ஒரே வழி… 
BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு
செல்கோபுரம் துணை நிறுவனம் எதிர்த்து
தொடர் போராட்டம்

27/03/2018 அன்று கூடிய BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு செல்கோபுரங்களைப் பிரிக்க முயற்சிக்கும் அரசின் முடிவிற்கெதிராகத் தொடர்ந்து ஒன்றுபட்டுப் போராடுவது என முடிவெடுத்துள்ளது.

12/04/2018  அன்று டெல்லித்தலைமையகம்...
 மாநிலத்தலைநகர்கள் மற்றும்
 மாவட்டத்தலைநகர்களில் நாடு தழுவிய 
மாபெரும் பெருந்திரள் தர்ணா…

19/04/2018 அன்று மாநிலத்தலைநகர்களில் 
ஆளுநர் மாளிகை நோக்கிப் பேரணி.

மே மாதம் டெல்லியில் 
நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கும் 
சிறப்புக் கருத்தரங்கம்..

இத்தனைக்கும் பிறகு 
அரசு அசையவில்லை என்றால்…
காலவரையற்ற வேலைநிறுத்தம்….

தோழர்களே…
கரையான்களின் புற்றில்…
கருநாகங்களை அனுமதியோம்…
நம் உழைப்பில்  உருவாகிய
மக்கள் சொத்தாம் BSNLஐ…
என்ன விலை கொடுத்தும் காப்போம்…
தயாராவீர் தோழர்களே….

Tuesday, 27 March 2018


பல்லாண்டு வாழ்க…. 
பயனுற வாழ்க…

பணிநிறைவு வாழ்த்துக்கள்

31/03/2018 காரைக்குடி மாவட்டத்தில்  
பணிநிறைவு பெறும்  தோழர்களின் பணிநிறைவுக்காலம்
சிறப்புடன் விளங்க  அன்போடு வாழ்த்துகின்றோம்.
--------------------------------------------------------------------------------------------------------------------
அருமைக்கவிஞர்…  அயராத எழுத்தர்…
கணக்கு அதிகாரிகளின்
கடமைமிகு… கண்ணியமிகு… கட்டுப்பாடுமிகு தளபதி…

N.சிதம்பரம்
OS - அலுவலகக்கண்காணிப்பாளர் – காரைக்குடி
--------------------------------------------------------------------------------------------------------------------

எழுத்திலும்… பணியிலும்… இயக்கத்திலும்…
நட்பிலும்… அன்பிலும்… செயலிலும்…
தனக்கென தனி முத்திரை பதித்த…
இராமநாதபுரம் NFTE கிளைத்தலைவர்
R.அமலநாதன்
OS - அலுவலகக்கண்காணிப்பாளர் – இராமநாதபுரம்
--------------------------------------------------------------------------------------------------------------------
சங்கத்தில் என்றும் நாணயமிகு பொருளாளர்….
இலாக்காவில் என்றும் உண்மைமிகு உழைப்பாளர்…
C.கோபிநாதன்
JE - இளநிலைப்பொறியாளர் - இராமநாதபுரம்
--------------------------------------------------------------------------------------------------------------------
மதங்களைக்கடந்தவர்…
மனிதநேயம் மிகுந்தவர்…
P.பஞ்சவர்ணம்
TT - தொழில் நுட்பவியலாளர் – போகலூர்
--------------------------------------------------------------------------------------------------------------------
மனமகிழ் மன்றத்தின் நேர்மைமிகு பொருளாளர்…
 மகிழ்ச்சிமிகு இதயங்களின் மனங்கவர் தோழர்….
C.சுப்பையா
TT - தொழில் நுட்பவியலாளர் – காரைக்குடி
--------------------------------------------------------------------------------------------------------------------
வலுத்தவருக்கு வாழ்வுண்டு…
BSNLலில் இளைத்தவருக்கும் இடமுண்டு…  
BSNL நிழலில் என்றும் இளைப்பாறிய… 
M.காளிமுத்து
TT - தொழில் நுட்பவியலாளர் – தொண்டி
--------------------------------------------------------------------------------------------------------------------
கல்லல் பகுதியின் கண்ணியமிகு தோழர்…
 இலாக்கா சேவையின் காப்பாளர்…
M.ஜோசப்
TT - தொழில் நுட்பவியலாளர் – கல்லல்
--------------------------------------------------------------------------------------------------------------------
 நீடு... வாழ்க... நிறைந்து வாழ்க...

Monday, 26 March 2018


கண்டன ஆர்ப்பாட்டம்

BSNL ஊழியர்களின் தொடர் எதிர்ப்பையும்....
 போராட்டத்தையும் மீறி...

BSNLன் செல்கோபுரங்களைத் தனியாகப்பிரித்து
துணை நிறுவனம் அமைக்கத் துடிக்கும்...

DOT மற்றும் மத்திய அரசின் 
BSNL விரோதப்போக்கினைக் கண்டித்து

 டெல்லி சஞ்சார் பவன் முன்பாக...
மாநிலத் தலைநகரங்களில் மற்றும்
 மாவட்டத்தலைநகர்களில்...

அனைத்து தொழிற்சங்க 
கூட்டமைப்பு சார்பாக

நாடு தழுவிய மதிய வேளை
கண்டன ஆர்ப்பாட்டம்


27/03/2018 – செவ்வாய் பகல் 12.00 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி
தோழர்களே… அணி திரள்வீர்…

Saturday, 24 March 2018


அனைத்து சங்க ஆர்ப்பாட்டம்

BSNL நிறுவனத்தின் எதிர்காலத்தைக் கணக்கில் கொள்ளாது
BSNL ஊழியர்களின் உணர்வைப் பொருட்படுத்தாது
செல்கோபுரங்களைத் தனிநிறுவனமாக்கிடத் துடிக்கும்
BSNLஐத் தனியார்மயமாக்கிடத் தவிக்கும்
DOT மற்றும் மத்திய அரசின்
பொதுத்துறை விரோதப்போக்கினைக் கண்டித்து...
செல்கோபுரங்கள் தனி நிறுவன உருவாக்கம் எதிர்த்து...

BSNL அனைத்து சங்கங்களின் சார்பாக
மார்ச் – 27 செவ்வாய் அன்று

டெல்லி சஞ்சார்பவன் முன்பு ஆர்ப்பாட்டம்
மற்றும்
மந்திரியிடம் கோரிக்கை மனு அளித்தல்

மாநிலம் மற்றும் மாவட்டத்தலைநகரங்களில்
கண்டன ஆர்ப்பாட்டம்
தோழர்களேஅணி திரள்வீர்

Thursday, 22 March 2018

மார்ச் – 23 மாவீரன்
பகத்சிங் நினைவுதினம்  
தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றம்
வழங்கும்

பகத்சிங் நினைவேந்தல் சிறப்புக்கூட்டம்

23/03/2018 – வெள்ளிக்கிழமை – மாலை 05 மணி
பொதுமேலாளர் அலுவலகம் – காரைக்குடி

 -: சிறப்புரை :-
 தோழர்.பழ. இராமச்சந்திரன் AITUC

பேராசிரியர். செ.நாகநாதன்
தமிழ்க்கல்லூரி – காரைக்குடி

தோழர்களே…. வருக...

Wednesday, 21 March 2018


ஊழியர் நலக்குழு கூட்ட முடிவுகள்

காரைக்குடி மாவட்ட STAFF WELFARE BOARD ஊழியர் நலக்குழுக் கூட்டம் 19/03/2018 அன்று பொதுமேலாளர் தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களின் சார்பாக கீழ்க்கண்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

·         NFTE -  தோழர்.சங்கரன் OS
·         BSNLEU – தோழர்.பூமிநாதன் AOS
·         AIBSNLEA – தோழர்.மோகன்தாஸ் CAO
·         SNEA – தோழர்.கணேசன் SDE

விரிவான விவாதங்கள் நிகழ்த்தப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

·         திருமணக்கடன் ரூ.50,000/-லிருந்து ரூ.75,000/- ஆக உயர்வு.
·         திருமண அன்பளிப்பு ரூ.101/-லிருந்து ரூ.501/- ஆக உயர்வு.
·         மரணமுறும் ஊழியர் நிவாரண நிதி ரூ.5000/- ஆக உயர்வு.
·         மூக்குகண்ணாடி செலவு ஈடுகட்டுதல் ரூ.1800/-ஆக உயர்வு
·         MOBILE அலைபேசிக்கடன் ரூ.8000/=
·         LAPTOP மடிக்கணிணிக் கடன் ரூ.20,000/=
·         25 ஆண்டு சேவை முடித்தவர்களுக்கு ரூ.2000/= அன்பளிப்பு
·         மனமகிழ் மன்றங்களுக்கு நிதியுதவி
·         இன்பச்சுற்றுலா செலவு ஈடுகட்டுதல்.
·         சேவையில் இருமுறை மருத்துவப்பரிசோதனை
·         நிதியாதாரத்தை மேம்படுத்த நலநிதி
    சந்தா ரூ.60/- ஆக உயர்வு.

ஊழியர் நலன் கருதி பல்வேறு சாதகமான முடிவுகளை 
அறிவித்த மாவட்டப்பொதுமேலாளருக்கு நமது நன்றிகள்.


Sunday, 18 March 2018


பணிக்குழு… சேமநலக்குழுக்கூட்டங்கள்

காரைக்குடி மாவட்ட
பணிக்குழு – WORKS COMMITTEE மற்றும்
சேமநலக்குழு – WELFARE COMMITTEE கூட்டங்கள்
இன்று 19/03/2018 காலை 11 மணியளவில்….
காரைக்குடி பொதுமேலாளர் தலைமையில் நடைபெறும்.
பணிக்குழுத்தோழர்களும்…. சேமநலக்குழுத்தோழர்களும்…
தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தோழர்.சந்திரபிரகாஷ் மறைவு

தஞ்சை முன்னாள் மாவட்டச்செயலரும்…
அடிமட்ட ஊழியர்களின் வாழ்விற்காகப் போராடியவரும்….
NFTE இயக்கத்தின் தஞ்சைப்பகுதியின்
தன்னிகரற்ற தலைவருமான
தோழர்.L.சந்திரபிரகாஷ் 
அவர்கள் 18/03/2018 அன்று தனது 
64வது வயதில் இயற்கை எய்தினார்.
அவரது மறைவிற்கு நமது ஆழ்ந்த 
இரங்கலை உரித்தாக்குகின்றோம்.

அமிர்தசரஸ் 5வது அகில இந்திய மாநாடு

நமது NFTE சங்கத்தின் 5வது அகில இந்திய மாநாடு 
மார்ச் 14..15..16.. தேதிகளில் பஞ்சாப் மாநிலம்
 அமிர்தசரஸ் நகரில் அற்புதமாய் நடந்தேறியது.

AITUC பொதுச்செயலர் தோழியர்.அமர்ஜித்கெளர் அவர்கள் 
மாநாட்டைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 ஆயிரக்கணக்கான சார்பாளர்களும் பார்வையாளர்களும் கலந்து கொண்டனர். பொற்கோவில் நகரம் நமது சங்கத்தோழர்களால் புடைசூழப்பட்டது. புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாடு ஒற்றுமையுடன் நடந்தேற 
தனது பங்கினை முழுமையாகச் செலுத்திய
 தோழர்.மதிவாணன் அவர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

புதிய நிர்வாகிகள்

தலைவர் : தோழர்.இஸ்லாம் அகமது
பொதுச்செயலர்: தோழர்.சந்தேஷ்வர் சிங்
துணைப்பொதுச்செயலர் : தோழர்.சேஷாத்திரி
பொருளர் : தோழர்.ராஜ்மெளலி

சென்னைத்தொலைபேசியின் சார்பாக
துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
தோழர்.C.K.மதிவாணன் அவர்களுக்கும்…

தமிழகத்தின் சார்பாக
துணைத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
திருச்சித் தோழர்.பழனியப்பன் அவர்களுக்கும்..
செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட…
தோழர்.காமராஜ் அவர்களுக்கும்..

சிறப்பு அழைப்பாளர்…
கோவை தோழர்.செம்மல் அமுதம்
 அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

காரைக்குடி மாவட்டத்தின் சார்பாக 
4 மகளிர் உட்பட 31 தோழர்கள் கலந்து கொண்டனர். 
நிரந்தர ஊழியர்கள்… ஓய்வு பெற்ற ஊழியர்கள்...ஒப்பந்த ஊழியர்கள் என அனைத்துப் பிரிவிலும் இருந்து தோழர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட தோழர்களுக்கு நமது வாழ்த்துக்கள்.

Wednesday, 7 March 2018



முனைந்திடு…    முன்னேறிடு…

உயிரைக் காக்கும்
உயிரினைச் சேர்த்திடும்
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா
-மகாகவி பாரதி-
------------------------------------------------------------------------------------------
உயிரினும்... மேலான...
உயிரினும் உன்னதமான...
உயிரினும் பெரிதான..
பெண்மைக்கு வணக்கங்கள்... 
அனைவருக்கும்  
மகளிர் தின
நல்வாழ்த்துக்கள்

Tuesday, 6 March 2018


புறப்படு தோழா….

NFTE
அகில இந்திய மாநாடு

மார்ச் 14…15…16… 
அமிர்தசரஸ் – பஞ்சாப்

அடைந்தவை ஏராளம்…
இழந்தவை ஏராளம்…

இழந்ததை மீட்டிட…
இயக்கம் காத்திட…

புறப்படு தோழா….
பொற்கோவில் நோக்கி..
------------------------------------------------------------------------------------------
காரைக்குடி மாவட்டத்திலிருந்து 30 தோழர்கள் பங்கேற்பு...

Monday, 5 March 2018


மருத்துவப்படி உச்சவரம்பு

BSNL நிதிநிலையைக் காரணம் காட்டி தற்போதுள்ள மருத்துவப்படி அளவைக் குறைப்பதற்கு BSNL நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
 01/03/2018 அன்று  வெளியிட்டுள்ள கடிதத்தில் 
15 நாட்களுக்குள் இதுபற்றி கருத்து தெரிவிக்குமாறு
 அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
நிர்வாக முடிவு
தற்போதுள்ள வெளிப்புறச்சிகிச்சைக்கான
 மருத்துவப்படி ஈடுகட்டுதலை ஆண்டுக்கு 
12 நாட்கள் சம்பள அளவிற்கு குறைப்பது.
 அதேநேரம் பெருவியாதிகளுக்கான உச்சவரம்பின்மை 
எப்போதும் போல தொடரும்.

CGHS மருத்துவமனை உள்ள இடங்களில் வசிக்கும் 
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்  மருத்துவப்படியை ரத்து செய்வது.
 ----------------------------------------------------------------------------------------
புதிய சம்பள மாற்றம் வருமுன்னே நிர்வாகம் அதனைக் கணக்கில் கொண்டு உச்சவரம்பைக் குறைக்க முயலுவதாகத் தெரிகிறது. 

வெளிப்புற சிகிச்சைக்கான ஆண்டு உச்சவரம்பு  12 நாட்கள் என்று குறைக்கப்படுவதற்கு நமது சங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில்தான் CGHS மருத்துவமனைகள் உள்ளன. எனவே அங்கே வசிக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படலாம். 
இந்தியா முழுவதும் 37 இடங்களில் CGHS மருத்துவமனைகள் உள்ளன. அங்கே வசிப்பவர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படும். 

மேலும் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மாதந்தோறும் 
ரூ.1000/= மருத்துவப்படியாக தங்களது ஓய்வூதியத்துடன் சேர்த்துப் பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கும் கூட CGHS மருத்துவமனைகள் உள்ள இடங்களில் மருத்துவப்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனையொட்டியே நமது நிர்வாகமும் 
மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

BSNLலில் இனி…
எதையும் கொடுப்பதற்கான காலம் இல்லை…
வருங்காலம்…
எதையும் கெடுப்பதற்கான காலமாகவே அமையும்….

Sunday, 4 March 2018


இது ஒரு தொடக்கமே…

 ஆட்குறைப்பை எதிர்த்து… 
ஆற்றல் மிகு ஆர்ப்பாட்டம்


02/03/2018  அன்று சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள
BSNL தமிழக முதன்மைப் பொதுமேலாளர் அலுவலகத்தில்
ஆட்குறைப்பை எதிர்த்து… ஆற்றல் மிகு ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த ஊழியர்களின் ஒப்பற்ற சங்கமாம் NFTCL இயக்கத்தால்
உணர்வோடு… உரமோடு… உரிமை முழக்கத்தோடு… நடத்தப்பட்டது.

மாநிலத்தலைவர் தோழர்.பாபு, 
செயல்தலைவர் தோழர்.மாரி ஆகியோர் தலைமை வகித்தனர். 
மாநிலச்செயலர் தோழர்.ஆனந்தன் துவக்கவுரையாற்றினார்.

அகில இந்திய துணைப்பொதுச்செயலர் 
தோழர்.சுப்பராயன் சிறப்புரையாற்றினார்.
அகில இந்தியப் பொதுச்செயலர் தோழர்.மதிவாணன் அவர்கள்
உரிமைமிகு….உணர்ச்சிமிகு…  எழுச்சிமிகு… உரையாற்றினார்.

தலைமை அலுவலகத்திலே… தாராளமாய் எடுபிடிகள்……
அன்று நமக்கோ ஏராளமாய் கெடுபிடிகள்…
காலையிலேயே வாயில் கதவுகள் மூடப்பட்டன…
காக்கிச்சட்டைகள் வழியெங்கும் தென்பட்டன…

தடைகளைத் தாண்டி… தன்மான உணர்வோடு தோழர்கள்
உணர்ச்சிக்கனலோடு… உரிமைக்குரலோடு…
தலைமை அலுவலகத்தில் சாரைசாரையாய்க் குவிந்தனர்…

சென்னைத்தொலைபேசித் தோழர்கள்…
தமிழகம் முழுவதுமிருந்து தோழர்கள் என…
ஒப்பந்த ஊழியர் படை பெருத்தது…
CGM அலுவலகம் சிறுத்தது….
  
அடிமட்ட ஊழியர்களின் வாழ்வாதாரத்தைக் கெடுப்பவர்கள்…
ஆகப்பெரும் அதிகாரிகளாக இருக்கலாம்…
ஆளவட்டம் போடும் தலைவர்களாக இருக்கலாம்…
அவையாவும் வஞ்சிக்கப்பட்ட வயிறுகளின்
பற்றியெரியும் பெருநெருப்பிலே
பொசுங்கிடும்…. புகைந்திடும்…
இதுவே வரலாறு….
 ஒடுக்கப்பட்ட ஊழியர்கள்…
சுரண்டப்படும் ஒப்பந்த ஊழியர்கள்…
வாழ்வு காத்திட வரலாறு படைப்பார்கள்…
02/03/2018 நிகழ்வு தமிழக வரலாற்றில் ஒரு தொடக்கமே…