Monday, 5 March 2018


மருத்துவப்படி உச்சவரம்பு

BSNL நிதிநிலையைக் காரணம் காட்டி தற்போதுள்ள மருத்துவப்படி அளவைக் குறைப்பதற்கு BSNL நிர்வாகம் உத்தேசித்துள்ளது.
 01/03/2018 அன்று  வெளியிட்டுள்ள கடிதத்தில் 
15 நாட்களுக்குள் இதுபற்றி கருத்து தெரிவிக்குமாறு
 அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
 ----------------------------------------------------------------------------------------
நிர்வாக முடிவு
தற்போதுள்ள வெளிப்புறச்சிகிச்சைக்கான
 மருத்துவப்படி ஈடுகட்டுதலை ஆண்டுக்கு 
12 நாட்கள் சம்பள அளவிற்கு குறைப்பது.
 அதேநேரம் பெருவியாதிகளுக்கான உச்சவரம்பின்மை 
எப்போதும் போல தொடரும்.

CGHS மருத்துவமனை உள்ள இடங்களில் வசிக்கும் 
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும்  மருத்துவப்படியை ரத்து செய்வது.
 ----------------------------------------------------------------------------------------
புதிய சம்பள மாற்றம் வருமுன்னே நிர்வாகம் அதனைக் கணக்கில் கொண்டு உச்சவரம்பைக் குறைக்க முயலுவதாகத் தெரிகிறது. 

வெளிப்புற சிகிச்சைக்கான ஆண்டு உச்சவரம்பு  12 நாட்கள் என்று குறைக்கப்படுவதற்கு நமது சங்கம் தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய இடங்களில்தான் CGHS மருத்துவமனைகள் உள்ளன. எனவே அங்கே வசிக்கும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படலாம். 
இந்தியா முழுவதும் 37 இடங்களில் CGHS மருத்துவமனைகள் உள்ளன. அங்கே வசிப்பவர்களுக்கு மருத்துவப்படி ரத்து செய்யப்படும். 

மேலும் மத்திய அரசு ஓய்வூதியர்கள் மாதந்தோறும் 
ரூ.1000/= மருத்துவப்படியாக தங்களது ஓய்வூதியத்துடன் சேர்த்துப் பெற்று வருகின்றார்கள். அவர்களுக்கும் கூட CGHS மருத்துவமனைகள் உள்ள இடங்களில் மருத்துவப்படி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. அதனையொட்டியே நமது நிர்வாகமும் 
மேற்கண்ட முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.

BSNLலில் இனி…
எதையும் கொடுப்பதற்கான காலம் இல்லை…
வருங்காலம்…
எதையும் கெடுப்பதற்கான காலமாகவே அமையும்….

No comments:

Post a Comment